உலக சாதனையை அந்த வினாடிகளில் அனுபவித்த சுவாரஸ்யம் இருக்கா? பரபரப்பான அந்த கணங்களில் டிவி முன்னால் அமர்ந்து கொண்டு முழு மேட்சையும் ரசிக்கும் பாக்கியம் அல்லது கொடுப்பினை.. அல்லது சமூக அறிஞர்களின் கூற்றுப்படி தெண்டமாப் பொழுதைப் போக்கும் முட்டாள்த்தனம் இப்படி ஏதாவது சொல்லிக்கலாம்... ஆனா பாருங்க அப்படி மறக்க இயலாத கணங்கள் ரெண்டு இருக்கு... ரெண்டுமே ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த சாதனை தான்.. முதலாவது சயீத் அனவ்ரின் 194 , ரெண்டாவது சச்சினின் 200.
1997 மே மாதம் 21 ந்தேதி.. சென்னையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் ஆட்டம்.. எப்படியாவது அதை நேராக பார்க்க வேண்டும் என்று ஒரு ஆவல்.. அப்போது கடையில் இருந்ததால் 2 டிக்கெட்டுக்கு காசு சேர்த்து சென்னையில் இருந்த என் நண்பன் ஒருவனிடம் (நண்பனா அவன்.. துரோகி.. ;-)) ) கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லி இருந்தேன். பஸ்ஸூக்கு போக வர கூட பணம் ரெடி செய்தாகி விட்டது. ஆனால் அவன் டிக்கெட் எடுத்து அனுப்பவில்லை. ஏமாற்றி விட்டான்.
ஏமாற்றத்தை மறைக்க அந்த நாளைக் கொண்டாடுவது என்று முடிவு செய்து, வீட்டிற்கு வெளியே டிவி வைத்து கிரிக்கெட் பார்ப்பது என்று முடிவு. எங்கள் வீடு ஒரு சந்திற்குள் இருக்கும் என்பதால் டிவி வைத்துப் பார்ப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. பகல்\இரவு ஆட்டம் என்பதால் கொஞ்சம் வெயில் குறைந்ததும் வீட்டிற்கு வெளியே டிவியை வைத்து பார்த்தோம். சயீத் அனவர் பவுண்டரிகளை அடித்துத் தள்ளினார். உலக சாதனையான 189 இந்திய அணி அந்த ஆட்டத்தில் தோற்றும் போனது. என்னோட ஆல்டைம் பேவரைட் டிராவிட் செஞ்சுரி அடித்ததும் வீணானது.
சில தினங்கள் மாதிரி இருக்கு.. இதோ கடந்து விட்டது.. 12 வருடம்.. பிப்ரவரி 24 .. குவாலியரில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே இரண்டாவது ஆட்டம். ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த அணியான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கின்றது இந்தியா. மொக்கையான வேகப்பந்து வீச்சாளர்கள், புரொபஷனல் சுழல்பந்து வீச்சாளர்கள் இல்லாத, சொதப்பும் பீல்டர்களைக் கொண்ட இந்திய அணி. பேட்டிங்கை மட்டுமே நம்பி இருக்கும் இந்திய அணி.
அன்றைக்கு வேலைக்கு போகவில்லை... அதைப் பற்றி விரைவில் ஒரு பதிவு வரும்.. வெயிட் அண்ட் சீ.. ;-)))) சோம்பலான அந்த நாளில் இணைய வழியில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சாச்சு... ஆரம்பமே சறுக்கல்.. வழக்கம் போல் தேவையில்லாத ஷாட் அடித்து சேவாக் அவுட். அடுத்த கார்த்திக்கும், சச்சினும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த தினேஷ் கார்த்திக்கைப் பார்க்கும் போது சரியான மாங்காடா இவன் என்று தோனும். நல்ல ஆட்டக்காரர்.. ஆனால் தவறான ஷாட் அடித்து அவுட் ஆவதில் வல்லவர். சமீபத்தில் செம ஃபார்மில் இருக்கிறார். துலிப் டிராபி பைனலில் இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி போட்டார்.. (அதே ஆட்டத்தில் யூசுப் பதானும் இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி போட்டு தனது அணியை வெற்றி பெற வைத்தார்). சச்சினுடன், இணைந்து நல்ல ஆட்டம்.. ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்ததில் நல்ல பலன் கிடைத்தது. ரன் வேகமாக வந்தது. நல்ல பிட்ச்.. நல்ல மைதானக் களம். பந்து வேகமாக எல்லையைத் தொட்டுக் கொண்டு இருந்தது.
சச்சின் செஞ்சுரியை எட்டிய வேகத்தில் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருந்தது. யூசுப் பதான், அவரை அடுத்து வந்த தோனியும் ரன் மழையை பொழிய வைக்க ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சச்சின் 150 யைக் கடக்க எனக்குள் உலக சாதனை ஆசை துளிர் விட்டது.. அதிரடியைத் தொடர்ந்த சச்சின் கடைசி கட்டத்தில் அமைதியானது கொஞ்சம் சோகம் என்றாலும் 50 ஓவர்கள் வரை நின்று ஓடி ரன் சேர்த்தது அவரை சோர்வாக்கி இருக்கும் என்பதை உணர முடிந்தது.. அற்புதமாக ஆடி சயீத் அன்வரிம் உலக சாதனையை முறியடித்தார். அதனை அடுத்து 200 ஐ அடைவதற்கு பொறுமை போய் விட்டது. தோனியை திட்டவும் செய்தாகி விட்டது... :-)
* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை * 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4 ஓவரில் ஒரு ரன் எடுத்த சச்சின் 199ஐ எட்டினார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.
அன்றையப் பொழுதை மகிழ்வுடன் கழித்த மகிழ்ச்சியில் தூங்கச் சென்று இருந்திருக்கலாம் தான்... மறுநாள் இருந்த டிரைவிங் டெஸ்ட்டை நினைவில் வர வைக்காமல் இருந்திருந்தால்.. :(
7 comments:
நல்லா போட்டு இருக்கீங்க பதிவு ...!
சச்சின் சச்சின்தான் ..!
அன்வரின் சாதனையை நான் நேரடியாக ஸ்டேடியத்தில் பார்த்தேன்...!
//மறுநாள் இருந்த டிரைவிங் டெஸ்ட்டை நினைவில் வர வைக்காமல் இருந்திருந்தால்.. :(//
ஹைய்ய்ய்ய் இதை பத்தி உடனே சொல்லுங்க பாஸ் ஜாலியா இருக்கும் படிக்கிறதுக்கு! :)))
//(நண்பனா அவன்.. துரோகி.. ;-)) ) கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லி இருந்தேன். பஸ்ஸூக்கு போக வர கூட பணம் ரெடி செய்தாகி விட்டது. ஆனால் அவன் டிக்கெட் எடுத்து அனுப்பவில்லை. ஏமாற்றி விட்டான்.//
அச்சச்சோ:(!
நீங்க ---- ஆனதை பதிவு மூலம் கும்மி அடிக்க ஆயில்ஸுக்கு என்னா ஆசை பாருங்க.
சில தினங்கள் மாதிரி இருக்கு.. இதோ கடந்து விட்டது.. 12 வருடம்]]
வாழ்க்கையில் பல இப்படித்தான் ‘தல’
உங்களின் விமர்சனம் மிகவும் அருமை !
தெரியாத விசயம் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !
Post a Comment