Saturday, February 27, 2010

வெள்ளைத் தோலும், செங்குருதியும்



எந்த நட்சத்திரமும் தெரியாத கான்க்ரீட் வானத்தில்
எதையோ தேடியவனாக
வீட்டுப் படுக்கையில் சயனித்திருந்த போது
ஒரு மூலையில் இருந்து அது வெளியேற ஆரம்பித்து
சின்னதாய்.. வெறும் தோலாய்..
கணிணி மானிட்டரின் மெல்லிய வெளிச்சத்தில்
ராக்கெட் எஞ்சினின் பாதையைக் கணக்கிடும்
விஞ்ஞானி போல அதைப் பின் தொடர்ந்தேன்.

எரிச்சலாக இருந்தது.. வழக்கம் போல்
தமிழ் மணத்தில் F5 தட்டி பார்த்த போது
இன்னும் எரிச்சல் கூடி இருந்தது..
இப்போது மீண்டும் மோட்டு வளையில் பார்வை
எருமையை விட பெரும் பொறுமை தேவைப்பட்டது
மெல்ல மெல்ல அது நகர்ந்தது
என் படுக்கையை ஒட்டி சுவரில் ஊறியது.

ஆங்காங்கே ஒட்டி இருந்த
மாஸ்க்கிங் டேப் தடைகளைக் கடந்து
200 அடித்த சச்சின் போல பொறுமையாக
என் படுக்கைக்கு அருகில் வந்து இருந்தது
ஏனோ சுவாரஸ்யம்.. அதிகமாகி இருந்தது

அதை ஈர்க்க ஏனோ மனம் துடித்தது.
கையை மெதுவாக நகர்த்தி
அழுக்காகி இருந்த சுவற்றின் அருகே வைத்தேன்.
மிக மெதுவாக இறங்கி என் கையை முகர்ந்தது
வெள்ளையாய் இருந்த தோள்களில் சிவப்பு நிறம்
எந்த சிக்கலும் இல்லாமல் இரத்தம் உறிஞ்சுதல்
மகிழ்வில் உடம்பு புடைத்த அந்த அறைவாசி
தன் பாதை வழியே திரும்பிப் போனது.


டிஸ்கி: ஒரு முட்டைப்பூச்சி கடித்ததை கவிதையா எழுத நினைத்தேன்... ஹிஹிஹி இப்படி தான் வருது.. நான் என்னசெய்யட்டும். நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கன்னா திரும்ப இது மாதிரி நடக்காது.. நல்லா இல்லைன்னு சொன்னா அப்புறம் கரப்பான் பூச்சி, பல்லி, பாச்சான், தேள், பூரான் எல்லாத்தையும் கவிதையில் வர வைக்க வேண்டி இருக்கும். பூனை மட்டும் பி.ந.வாதிகளுக்கானது என்பதால் விட்டு வைப்போம்.

20 comments:

சென்ஷி said...

நல்லா இருக்குண்ணே...

அப்துல்மாலிக் said...

எப்படி தல, மூட்டைப்பூச்சி கடிச்சி எரிச்சலும், தூக்கமின்மையிலும் துடிப்பதிலிருந்து இப்படியெல்லாம் எழுதி அந்த கோவத்தை எங்களீடமும் காண்பிக்கனுமா

இருந்தாலும் ரசிச்சேன்

ஆயில்யன் said...

பூனை தானே பர்ஸ்ட்டுன்னு ப்ளான் பண்ணியிருந்துச்சு ???

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு!

ஒரு மூட்டை மூட்டை பூச்சி பார்சல் வந்துக்கிட்டே இருக்கு...உங்களுக்கு! :-))

ராமலக்ஷ்மி said...

நல்லா இருக்குது தமிழ் பிரியன்:)!

gulf-tamilan said...

நல்லா இருக்கு!!!
வேற வழியில்ல எங்களுக்கு :)))
/அப்புறம் கரப்பான் பூச்சி, பல்லி, பாச்சான், தேள், பூரான் எல்லாத்தையும் கவிதையில் வர வைக்க வேண்டி இருக்கும்/
இவங்க எல்லாம் உங்க ரூம்மேட்டா??

ஷாகுல் said...

நல்ல வேளை மூடை பூச்சிக்கு படிக்க தெரியாது. நல்ல வேளை பிழைச்சிடுச்சி :))))))))

கண்மணி/kanmani said...

ம்ம்ம் கவிதை நல்லாத்தான் இருக்கு.ஆமா வெள்ளைத்தோல் எப்படி இருக்கும் பொறுமையான எருமைக்கு:))))))))))))))


சுத்தமான தமிழிலேயே எழுதியிருந்தால் கனம் கூடியிருக்கும் மூட்டைப் பூச்சிக்கு....

கண்மணி/kanmani said...

//நல்ல வேளை மூடை பூச்சிக்கு படிக்க தெரியாது. நல்ல வேளை பிழைச்சிடுச்சி :))))))))//

செம கிழீஈஈஈஈஈஈஈஈஈஈஈ

சிவாஜி சங்கர் said...

:)

*இயற்கை ராஜி* said...

//ஒரு மூட்டை மூட்டை பூச்சி பார்சல் வந்துக்கிட்டே இருக்கு...உங்களுக்கு! :-//


Repeatu:-)

*இயற்கை ராஜி* said...

oh.. nalla iruku nnu solla maranthuteno... mm.. nalla irukku
:-)

cheena (சீனா) said...

மூட்டப்பூச்சி கடிக்கறத வச்சி ஒரு கவிதையா - வாழ்க தமிழ் பிரியன்

நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

மாஸ்க்-கிங் டேப்புன்னவுடன் ஞாபகம் வந்தது மூட்டை பூச்சி தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விசயபூர்வமான நல்ல கவிதை..

ஏன்னா பூச்சி என்ன கலரில் இருக்கும் அது எப்படி நிறம் மாறுதுன்னு தெரியவருது..

உங்கள் வள்ளல் தன்மைய நாளைக்கு பாடத்தில் சேர்க்கனும்.. மூட்டைக்கு ரத்தம் தந்த தமிழன்னு .. :)
வாழ்க உம் பெருமை.

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு தல :))

தமிழன்-கறுப்பி... said...

வெள்ளைத்தோலா???

இதை வெள்ளைன்னா அப்ப வெள்ளையை..?!


;)

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

vidivelli said...

good........
supper.......... supper....!!!

மதுரை சரவணன் said...

நல்லா வந்திருக்கு கவிதை . தூக்கம் போன துக்கம் கவிதை தந்தது நாங்கள் ரசிக்க.வாழ்த்துக்கள்