Thursday, March 25, 2010

நைஜீரியாவில் இருந்து ஜெமோவும்., ஸீமமெண்டா என்கோசீயும்

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஆயிரத்தின் ஒருவன் ஆண்டிரியா போல் ஒரு பிகருடன் ஜெமோவும் நைஜீரியாவிற்கு புதைப் பொருள் ஆராய்ச்சிக்கு கிளம்பிவிட்டதாக எண்ணி விட வேண்டாம்... இதுவும் அதுபோல் தான்.. ஆனால் ஒரு வித்தியாசமான புதிர்... புதிருக்குப் போகலாமா?

புதிர் : 1
கீழ்க்கண்ட பாராவில் இருக்கும் பின்நவீனத்துவ கூறுகளையும், ஞானமரபின் விளைவுகளையும் இரண்டு பின்னூட்டங்களுக்கு மிகாமல் விளக்கவும்..

ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்க்கிழமை திருடன் வந்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்குப் போனான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்

பரிசு: முந்தாநாள் சுட்ட புளித்த இட்லியும், கெட்டி சட்னியும் ஒரு பார்சல்

புதிர் : 2

முதலில் கீழே உள்ள பாராவைக் கவனமாகப் படிக்கவும்.
ஸீமமெண்டா அடிச்சி என்பவர் எழுதிய நைஜீரியா பற்றிக் கட்டுரை உண்மையின் உரைகல் என அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்டது அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி விடயங்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன. ..................
மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள். ஸீமமெண்டா அடிச்சி மேல் நாட்டு ஊடகங்களின் தயாரிப்பு. மேற்கத்திய நாடுகளின் ஏடுகளில் சொல்லப்பட்ட, அவர்களுக்கு உகந்த கட்டுக்கதைகளை மட்டுமே வைத்து ஸீமமெண்டா அடிச்சி இதை எழுதியுள்ளார்.. நைஜீரியாவில் உள்ளவர்களே இக்கதைகளைக் கேட்டு நொந்து சிரிக்கும் நிலை தான் இருக்கின்றது.


மேலே உள்ள பாராவில் இருப்பவற்றில் ஸீமமெண்டா அடிச்சி என்ற பெயரை நீக்கி விட்டு அந்த இடங்களில் ஜெமோ என்பதை உள்ளீடு செய்து பின்னூட்டமாக இட வேண்டும். ctrl+f போட்டு கண்டுபிடிக்கக் கூடாது..

பரிசு : ஞானச்சுவடு இதழ் அடுத்த ஒரு வருடத்திற்கு இலவசமாக சந்தா இன்றி அனுப்பப்படும்.

17 comments:

ஆயில்யன் said...

இது ஒரு ஆவேசப்பதிவா? அல்லது கும்மி பதிவா பாஸ்?


எது ஆவேசப்பதிவு எது கும்மிபதிவு என்று குழம்பியிருக்கும்

சாதா”ரண மொக்கை” பதிவர் !:))

எம்.எம்.அப்துல்லா said...

ஒரு ஆக்கத்தின் நோக்கத்தினை அதற்கான கூறுகளின் வழிநின்று நுண்ணோக்கி அணுகாது மேல்மட்டமாக உணர்ந்து அதன் திரிபுகளின் திசைகளையும்,இயல்புகளையும் தன் இயல்பில் இருந்து விலகி நீங்கள் அணுகி உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

(ம்ம்ம்ம்.முடியலை )

எம்.எம்.அப்துல்லா said...

ஜோக் அபார்ட் அண்ணாச்சி..

கடந்த 4 மாதத்தில் நான் பார்த்த இடுகைகளில் மிகச் சிறந்த இடுகை இதுதான். வாட் எ சட்டையர் :)))

Robin said...

Super!

நட்புடன் ஜமால் said...

பு1

வெள்ளி முதல் ...

ஹுஸைனம்மா said...

இன்னிக்கு அமாவாசையா, பௌர்ணமியா? பாவம்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் நண்பரே !

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

Monks said...

தங்களின் சென்ற இடுகைக்கான தலைப்பையே
இதற்கும் வைத்திருக்கலாம் ஒரு சின்ன மாற்றத்தோடு
'இந்தியாவிலிருந்து நைஜீரியாவுக்கு' என்று.

என்ன 'நச்' சுன்னு சொல்லாமல் புனைவாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஓ அவரு 'புனைவுப்' பூனை என்பதாலா?

கானா பிரபா said...

புனைவுப் பூனை தமிழ்ப்பிரியன் வாழ்க

V.Radhakrishnan said...

வித்தியாசமான பார்வையில் பதிவு மிளிர்கிறது.

நிஜமா நல்லவன் said...

/This blog does not allow anonymous comments.
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author./


நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு..இது எதுக்கு??

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...சாதா”ரண மொக்கை” பதிவர் !:))/

special mokkai yaaru????

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

புனைவுப் பூனை தமிழ்ப்பிரியன் வாழ்க/

boss...ivaru poonai illa Peruchaali:)

நிஜமா நல்லவன் said...

திருட்டு சந்நியாசி வெளியில் புறப்பட்டு விழுந்து செத்தான் ஞாயமா???? இது கூட புதிர் தான் தல...எங்க என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்:))

இராகவன் நைஜிரியா said...

கலக்கலோ கலக்கல்...

அண்ணே எப்படிங்க இதெல்லாம்..

சந்தனமுல்லை said...

/கானா பிரபா on March 25, 2010 5:54 PM said...

புனைவுப் பூனை தமிழ்ப்பிரியன் வாழ்க
/

:)) ரிப்பீட்டு!

அஹமது இர்ஷாத் said...

அவசியமான அலசல். ஆமா நீங்கள் தோஹாவிலா நானுந்தான் தோஹாவில்.....

LinkWithin

Related Posts with Thumbnails