Friday, July 9, 2010

நிஜமா நல்லவன் பதிவுக்கு வரிக்கு வரி காரமான எதிர்வினை

\\\\ துளித் துளியாய் சேகரித்து
மெழுகினில் புகுத்தி இனிமை சேர்க்கும்
அழகிய தேன் கூட்டை
சிதறித் தெளிக்கிறது ஒற்றைக் கல்!

உயிர்ப்பச்சை நீர்த்து வாடிய பயிர்களில்
எதிர்பாராமல் சூல் கொள்ளும் மேகங்கள்
இயற்கை இருப்பை நிலை நிறுத்தி
சொட்டு சொட்டாய் நிரம்பும் உயிர் நீர்!

மேகங்களின் நகர்வில் மிதந்திடும் நிலவை
விழியோர புருவங்களால் வளைத்தெடுக்க
குறும்பை கொப்பளிக்கும் இமைகள்
வரைந்திடும் எழிலோவியங்கள் விழித்திரையில்

நிறைவேறா கணங்களின்
நிறங்கள் குழைத்து
சிறகில் தெளித்து
சிறகடிக்கிறது
கனவுப் பறவை!

வண்ணங்கள் களவோடு
எண்ணங்கள் விரிய
நிறங்கள் உமிழ்ந்து
நிறமிழக்கின்றன விழிகள்
விழிநிலையில்!
\\\

பாஸ்.. நீங்க பெரிய கவிஞரா இருக்கலாம்..
ஆனால் இதை எல்லாம் வாசிச்சா
எங்களுக்கு ஒன்னும் புரியல..
கண்ணுல பச்சை மிளகாயை
வச்சு தேய்ச்சு,
மூக்குல மிளகாய்
பொடியை திணிச்சு,
காதுல மிளகாய்
பொடியை நுழைச்சு,
வாயில மல்லிப்
பொடியை அள்ளிக் கொட்டி,
உடம்பு பூரா
புளிய விளாரால் விளாசி
உப்பு வச்சு தேய்ச்சு
விஜயோட மசாலா படம் பார்த்த பீலிங் தான் வருது..
நாங்க இன்னும் இலக்கிய
உலகை கரைச்சுக் குடிக்கல.

டிஸ்கி: இப்ப எல்லாம் எதிர்பதிவு காரமா இருந்தா தான் மவுசாம்.. அதனால் தான் கொஞ்சம் மசாலா தூவி இருக்கோம்.

7 comments:

Thamiz Priyan said...

எதிர் பதிவுன்னு ஓட்டை அள்ளிக் குத்தும் கனவான்கள் உடனே ஓட்டுக்களைப் போட்டு தமிழ்மண முகப்பில் வர வைக்கும் படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆயில்யன் said...

ஹிஹிஹிஹிஹிஹி
[ஹய்யோ! ஹய்யோ!!]

ஜெகதீசன் said...

:))

சென்ஷி said...

:))))

கானா பிரபா said...

ஹாஹாஹா ஹேஹேஹே ஹோஹோஹோ

இதற்கு நல்லவரின் எதிர்வினையை எதிர்ப்பார்க்கிறோம்
(சாலமன் பாப்பையா குரலில்) வாங்கய்யா நல்லவரு வந்து பதில் சொல்லும்யா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கானாவை வழிமொழிகிறேன்!

ரெத்தம் வர்ற அளவுக்கு கும்முங்க போதும்!

அதுக்கும் மேல கும்முனியன்னா மெய்யாலுமே நல்லவரை(இப்ப பேரு மாத்தியாச்சு) ஆதரிக்க வேண்டி வரும்னு எச்சரிக்கிறேன்!

:)))

நட்புடன் ஜமால் said...

இப்ப எல்லாம் எதிர்பதிவு காரமா இருந்தா தான் மவுசாம்]]

விசைபலகை ???