Friday, July 30, 2010

சமிக்ஞைகளும், குடும்ப ரகசிய மொழியும்

குடும்பத்தில் சமிக்ஞைகள்(Signals) ரொம்ப முக்கியமானவை. பல நேரங்களில் இதன் முக்கியத்துவம் தெரிய வரும். சமிக்ஞைன்னா என்னவா? அதைத் தானே சொல்லப் போறோம்.... பொதுவா பொதுவெளியில் பேசும் போது எல்லாருக்கும் புரியக் கூடிய மொழியில் பேசினால் அது செய்தி ஆகி விடும். பொதுவெளியில் பேச, தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அது நம்மைத் தவிர மற்றவர்களுக்குப் புரியக் கூடாது. அதான் நாம் பேசுவது, தெரிவிப்பது என்கிரிப்ட் (Encrypt) முறையில் இருக்க வேண்டும். இதுதான் லாஜிக்.

இதன் அவசியம் என்னவென்று பார்த்தால்.... வெளியே நாம் செல்லும் போது, மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது அல்லது இணைய வழியாக மிக முக்கிய ரகசியங்கள் உள்ள மின்னஞ்சல் அனுப்பும் போது இதைப் பயன்படுத்தலாம். இது படிப்பவர்களைத் தவிர யாருக்கும் புரியாது.

எங்கள் வீட்டில் எந்த அறிவியலும் கற்றுக் கொடுக்காமலேயே இந்த முறையை பல காலமாக கையாண்டு வருகின்றோம். எங்கள் பாரம்பரியம் திருநெல்வேலி மாவட்டத்துடன் தொடர்புடையது. எங்கள் தாத்தா,பாட்டி திருமணம் முடிந்து எங்கள் பெரியப்பா பிறக்கும் வரை வாசுதேவநல்லூர் என்ற எங்கள் பரம்பரை ஊரில் இருந்து இருக்கின்றார்கள். பின்னர் பிழைப்புக்காக இப்போது இருக்கும் ஊருக்கு வந்து இருக்கின்றார்கள். வரும் போது எதையும் கொண்டு வரவில்லையென்றால் பல பழக்க வழக்கங்களை எங்கள் குடும்பத்துக்கு என்று மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.

சமிக்ஞை இரண்டு வகை. ஒன்று உடல் மொழி இரண்டாவது சொற்கள் வழியிலான மொழி. உடல் மொழி நிறைய பேருக்கு தெரிந்தது தான். கண் பார்வை, கை அழுத்தம், கால் மிதி போன்றவை. ஏதாவது ஒரு விஷயம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நாம் அவரைப் பார்த்தால் திடீரென்று அப்பா கண்ணை இறுக மூடித் திறப்பார். அதாவது அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இவருடன் பேசக் கூடாது என்றுஅர்த்தம். அப்பாவுடனும், மற்றவர்களுடனும் பேசிக் கொண்டு இருப்போம். திடீரென்று அப்பா நம் கையைப் பற்றி உள்ளங்கையில் ஒரு அழுத்து அழுத்துவார். இனி நாம் பேசக் கூடாது அல்லது நாம் தான் பேச வேண்டும்.. இது போல் இன்னும் சில குறியீடுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் வரும். சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் அர்த்தம் மாறும். சில சமயம் இதில் தவறு நடக்கும் போது வீட்டிற்கு வந்ததும் விளக்கம் கிடைக்கும்.

சில நேரங்களில் எதிராளி நம்மை விட கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால் நமது சமிக்ஞைகள் புரிந்து விட வாய்ப்பு இருக்கின்றது. அல்லது தூரமாக இருந்தாலோ, அப்பாவை நேரடியாக பார்க்கும் விதத்தில் இல்லாமல் இருந்தாலோ அந்த சூழலில் இரண்டாவது மொழி பயன்படும். இது இந்தி போல் வேறு மொழியா என்றால் அதுதான் இல்லை. எங்கள் வீட்டில் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. அப்புறம் அது என்ன மொழி? அதுதான் ரகசிய மொழி. சுமார் 25, 30 வார்த்தைகள் தான் இருக்கின்றன இம்மொழிக்கு. இது எந்த மொழியுடன் தொடர்பு இல்லாத வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நேரத்திற்கு தகுந்தாற் போல் சங்கேத தகவல்களைத் தெரிவித்து விடலாம்.


ரொம்ப முக்கியமானது எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஆட்களுக்கு இம்மொழி தெரியாது. இதை நாமே உருவாக்கலாம். உங்கள் குடும்பத்திற்கான சங்கேத மொழியை நீங்களே உருவாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்து பழக்கலாம். நல்லது, கெட்டது, கொடு, கொடுக்காதே, பணம், கெட்டவன், நல்லவன், கண்டுகொள்ளாமல் இரு, இவன், அவன் இன்னும் இது போன்ற பொதுவாக வெளியில் சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு சங்கேத வார்த்தை இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு நல்லது , கெட்டது என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். கயழி, பசிறு என்ற வார்த்தைகளை இவைகளுக்கு முறையே சங்கேத வார்த்தையாக பாவித்துக் கொள்வோம். கடையில் இருக்கிறோம். பொருள் நல்ல பொருள் என்று தெரிகின்றது. நாம் ‘கயழி போல இருக்கு’ என்று நமக்குள் பேசிக் கொண்டால் கடைக்காரருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. எனவே நாம் பேரம் பேசும் போது நம்முடைய உணர்வு அவருக்குப் புரியாது. அதாவது பிடித்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமா?, இல்லையா? என்று அவர் திணறுவார். அதைப் பயன்படுத்தி பேரத்தைக் குறைக்கலாம்.

அதே போல் வேறு ஒரு இடத்தில் இருக்கிறோம். நம் முன் இருக்கும் ஆள் சரியில்லை போல் தோன்றுகின்றது. நம்முடன் இருக்கும் மனைவிக்கோ, மகனுக்கோ உணர்த்த வேண்டும். ‘ ஆள் பசிறு’ என்று எங்கோ பார்த்து நாம் சொன்னால் உடனே அவர்கள் புரிந்து கொண்டு கவனமாக இருக்கலாம். எதிராளிக்கும் நாம் என்ன சொன்னோம் என்பது புரியாது.

இதில் மிக முக்கியமானது சங்கேத வார்த்தைகளை நாம் பேசும் போதும், கேட்கும் போது மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாகப் பேசக் கூடாது. கொஞ்சம் கம்மலாக பேச வேண்டும். அதோடு முக பாவம் ரொம்ப முக்கியம். நல்லதுக்காக முகம் மலர்ந்தும் சொல்லக் கூடாது, கெட்டதுக்காக முகத்தை சுறுக்கியும் சொல்லக் கூடாது. சங்கேத வார்த்தைகள் தயாரித்தலும், அதைப் பழக்குப்படுத்தலும், உடல் மொழியை உணர வைத்தலும், முக பாவத்தை ஒழுங்குபடுத்துதலும் ஏதோ படிக்க, கேட்க பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் இது மிக மிக சுலபமானது. கிட்டத்தட்ட நம் இணையத்தில் சாட்டில், டிவிட்டரில், பஸ்ஸில் பேசிக் கொள்ளும் சங்கேத வார்த்தைகள் போல் தான். எங்கள் வீட்டில் பண விபரம் குறித்து பேசும் போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆங்கில எண் வைத்துத் தான் பேசுவோம்.

இதே போல் நமது குடும்பத்தினருக்கு மட்டும் புரியும் வண்ணம் ஒரு சிறு அகராதியை உண்டாக்கி வாரத்திற்கு இரு வார்த்தைகள் என்ற வீதத்தில் பேசிக் கொண்டே வந்தால் சில மாதங்களில் அதில் நிபுணத்துவம் அடைந்து விடலாம்.

எங்கள் வீட்டில் சில நேரங்களில் இது பிரச்சினையாகும். எப்படி? வீட்டிற்கு புதிதாக மருமகள் வந்தால் அவர்களுக்கு இந்த மொழிகள் எல்லாம் புரியாது. அவர்களுக்கும் கொஞ்ச நாட்களில் இந்த மொழியைக் கற்றுக் கொடுத்து விடுவோம். வேறு வழி இல்லாத கட்டாயத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். எனக்கும் கூட திருமணமான புதிதில் சில நேரங்களில் திண்டாட வேண்டி வந்தது. பின்னர் என் மனைவிக்கு இவைகளை விளக்கி கற்றுக் கொடுக்க வேண்டி வந்தது. இப்போது என் அம்மாவுடன், அக்காவுடன் வெளியே சென்றால் என் மனைவியும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள்.

நீங்களும் உங்கள் வீட்டில் இப்படியான ஒரு அகராதியை உருவாக்குங்கள். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தத்துடன் தொடர்பு இருக்கக் கூடாது. முதலில் சுவாரஸ்யமாக ஜாலியாக பழகுங்கள். பின்னர் பழக்கத்தில் வந்து அதுவே நல்ல பலன் தரும்.

டிஸ்கி : இதில் குறிப்பிட்டு இருக்கும் சில வார்த்தைகள் எங்கள் அகராதியில் இலலாதவை. எடுத்துக்காட்டுக்காக மட்டும் பயன்படுத்தி உள்ளேன்.

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கயழி ஐடியா தமிழ்... :)

pudugaithendral said...

nalla iruke

ஆயில்யன் said...

[ ]

ஆயில்யன் said...

//எங்கள் வீட்டில் எந்த அறிவியலும் கற்றுக் கொடுக்காமலேயே இந்த முறையை பல காலமாக கையாண்டு வருகின்றோம். ///

அவ்வ்வ்வ்வ் ஊருக்கு வாங்கன்னு கூப்பிட்டு இந்த மாதிரி சொன்னா - நான் யோசிக்கிறேன்! :))

ஆயில்யன் said...

என்கிரிப்ட் செய்த வார்த்தைகளை உபயோகிப்பது ஒரு புறம் இருக்க, ஒலியின் அளவினை அறவே குறைத்துக்கொண்டு வாயசைத்தலும் காற்றின் வெளிப்பாட்டிலும் பேசும் ரகசியங்கள் சேதிகளை கேட்பதில் எனக்கு அலாதி ப்ரியம் :)

nis said...

ரசித்தேன்

கானா பிரபா said...

பயங்கர தில்லாலங்கடி நீங்க தான் பாஸ் ;)

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

பயங்கர தில்லாலங்கடி நீங்க தான் பாஸ் ;)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

அன்புடன் அருணா said...

/அதோடு முக பாவம் ரொம்ப முக்கியம். நல்லதுக்காக முகம் மலர்ந்தும் சொல்லக் கூடாது, கெட்டதுக்காக முகத்தை சுறுக்கியும் சொல்லக் கூடாது/
ஹிந்திக்காரர்கள் முன்னால் தமிழில் பேசினாலும் இப்படி முகபாவம் மாற்றிச் சொல்வது வழக்கம்!!!

கண்ணகி said...

நல்லாத்தான் ஐடியா கொடுக்கறிங்க...நல்லா இருங்க...

சந்தனமுல்லை said...

என்ன கொடுமை பாஸ்!! யாராவது வேற பாஹையிலே கெட்ட வார்த்தைன்னு திட்டிவிடப்போறாங்க...:)))

அப்துல்மாலிக் said...

உருப்படியான ஐடியா தல, நிச்சயம் இதை அமுல்படுத்தவேண்டும்.

நட்புடன் ஜமால் said...

நண்பன் சென்னையில் கையேந்தி பவன் வச்சிருந்தான்,

அங்கே வாரம் ஒரு முறை சாப்பிட செல்வோம் சில சமயம் முத நாள் மீதமுள்ளது இருக்கும் அப்போ

ஒரு சங்கேத வார்த்தை சொல்வான் நாங்கள் விளங்கி விலகிடுவோம்

------------

அடுத்தவரை புண்படுத்தாது நமக்கு உபயோகமாக உபயோகிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் ...

Unknown said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

Jerry Eshananda said...

amazing.

நானானி said...

தமிழ்பிரியன்,
நல்லாருக்கே!!!

நாங்கெல்லாம், ஒரு கண் சிமிட்டல், சின்ன தலையாட்டல், கையில் ஒரு கிள்ளல், இல்லையென்றால் காலால் ஒரு மிதி. இவ்வளவுதான் தெரியும். வாக்கியங்களின் ஊடே சங்கேத வார்த்தைகள்!!!!!சூப்பர்!

ரொம்ப நாளாச்சே? நலமா மகனே?