Saturday, July 17, 2010

படைப்புக்கும் படைப்பாளிக்குமான தொடர்பு துண்டிக்கப்படுவது எப்போது ?
முஸ்கி 1: இந்த பதிவுக்கும், எந்த நுண்ணரசியலுக்கும் சம்பந்தமில்லை. இதில் வரும் வசனங்களும், குறிப்புகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

முஸ்கி 2 : இது ஒரு நல்ல சமையல் குறிப்பு. வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிக நல்லது. இதை உண்டவர்கள் தங்கள் சொந்த வீடாக இருந்தாலும் அதை இரண்டு நாள் அனுகாமல் இருப்பது மிக நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் காற்றால் வீட்டுச் சுவரோ, கான்க்ரீட்டோ உடையும் அபாயம் இருக்கலாம் அல்லது உங்கள் நாற்றம் தாங்காமல் உங்கள் மனைவி உங்களை விவாகரத்து செய்து உங்களை தப்பிக்க வைக்கலாம்.

இனி பதிவு..

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

நன்றி : வெப்உலகம்.காம்

இனி பூண்டு குழம்பு செய்வது எப்படி ?

 • 1. பூண்டு - 15 பல்
 • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
 • 3. தக்காளி - 2
 • 4. புளி தண்ணீர்
 • 5. தேங்காய் பால் - 1 கப்
 • 6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
 • 7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
 • 8. கறிவேப்பிலை, கொத்தமல்லி
 • 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • 10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 • 11. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
 • 12. உப்பு

 • வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
 • பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
 • இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
 • பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

Note:

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.நன்றி : அறுசுவைடாட்காம்.

டிஸ்கி 1 : பூண்டு குழம்பு செய்து கொண்டு இருக்கும் போதோ, காற்றைப் பிரித்து விடும் போதோ யாராவது உங்களைத் திட்டினால் போடா நாயே என்று அவர்களை திட்டாதீர்கள்.
டிஸ்கி 2 : நாற்றம் தாங்காமல் யாராவது திட்டினால் த்தூ என்று இடப்புறம் ஒரு முறை துப்பி விட்டு சென்று விடுங்கள்.
டிஸ்கி 3 : இந்த பதிவில் நாய், த்தூ போன்ற வார்த்தைகள் இருப்பதால் இதை புனைவு என்றோ, நாய்ப்பதிவு என்றோ, சொற்சித்திரம் என்றோ சொன்னால் அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது.
டிஸ்கி 4 : மேலே உள்ளவைகளை எழுதி காப்பி\பேஸ்ட் செய்து எழுதி முடித்ததும் அதற்கும் எனக்குமான உறவு முடிந்து விடுகின்றது. இனி படைப்புகளுடன் மட்டும் பேசிக் கொள்ளவும்.
......
....
..
.

9 comments:

ஆயில்யன் said...

//இனி படைப்புகளுடன் மட்டும் பேசிக் கொள்ளவும்.//

இது என்ன மேட்டர் பாஸ் படைப்புக்களுடன் பேசிக்கொள்ளவும் படைப்புக்களுடன் பேசிக்கொள்ளவும்?

திங்கதானே முடியும்!

வெண்பூ said...

வ‌ர‌ வ‌ர‌ ப‌திவுக‌ளை விட‌ டிஸ்கி எல்லாம் டெர்ர‌ரா வ‌ருது.. நீங்க‌ளும் இற‌ங்கிட்டீங்க‌ளா???? :))

சென்ஷி said...

:)

super..

ஆயில்யன் said...

முஸ்கி 1: அல்லது முஸ்கில்லா பாஸ்

இப்படிக்கு

ஹிந்தி கற்றுக்கொள்ளதுடிக்கும் ஆர்வமுடன் ஆயில்யன்

soundr said...

அட அட அடடா, இந்த படைப்பாளிங்களோட தொல்ல தாங்கமுடியலடா சாமி.....
:)

http://vaarththai.wordpress.com

வடகரை வேலன் said...

இது உங்க சொந்த ரெசிபியா?

இல்லை எவனோ ஒருத்தன் எழுதுனத போட்டிருக்கீங்களா?

அப்ப அவன் தளத்துலயும் இது வருமா?

காத்து நிறையப் பிரியுமே?

சின்ன அம்மிணி said...

நேத்து நண்பர் வீட்ல பூண்டு வத்தல் குழம்புதான் சாப்பிட்டேன். அருமையா இருந்தது.

சி. கருணாகரசு said...

மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு.... பூண்டுப்பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

முஸ்கி அதிரடிகள். அப்புறம் எழுதி என்ன எழுதி.? முக்காவாசி காபி பேஸ்ட்டாகிவிட்டதே? அப்புறம் என்ன.?

LinkWithin

Related Posts with Thumbnails