Friday, July 16, 2010

பகுத்தறிவும், தனி மனித ஒழுக்கமும்

வள்ளுவர் ஒழுக்கம் குறித்து கூறும் போது " ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் "
என்று கூறினார். உயிரை விட மதிப்பு மிக்கதாக ஒழுக்கத்தை குறிப்பிடுகின்றார். ஒழுக்கத்திற்கான வரைமுறை என்ன ? இது காலம், இடம், கலாச்சாரத்தை பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டுக்காக சொல்வதானால் மிக குறைந்த ஆடையுடன் நடமாடும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன், நமது மதுரைப் பெண்களை ஒப்பிட முடியாது. இது போல இன்னும் சில உதாரணங்களைக் கூறலாம்... இதை விட்டு விடுவோம். எனவே ஒழுக்கத்திற்கான அடையாளங்களை புறக்காரணங்களைக் கொண்டு கணக்கிட இயலாது.

தற்போதைக்கு அகத்தூய்மையை மட்டும் எடுத்துக் கொள்வோம். எப்படி? ஒரு மனிதனுடைய செயலால் அவனை சுற்றியுள்ளவர்கள், அல்லது சுற்றியுள்ளவைகள் பாதிக்கப்படாமல் இருக்குமானால் அதுவே தனி மனித ஒழுக்கத்தின் முதல் படி. இப்படி எடுத்துக் கொள்ள இயலுமா ? தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் இருக்கின்றது. பேருந்தில், தியேட்டரில், பொது இடத்தில் மது அருந்தி விட்டு வருகின்றவர்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தபட்டவரிடம் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது என்று விளக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து கேட்டால் அது தனது பர்சனல் விஷயம். இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வார். அவரது உடலை கெட்டுப் போக வைக்கும் விஷயம் குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அல்லது கவலைப்படுவதில்லை என்பதைப் போல நடிக்கின்றார்.

மது அருந்துவது, புகை பிடிப்பது.. அது பொது இடமாக இருந்தாலும் தனி இடமாக இருந்தாலும் உடலுக்கு தீமை என வரும் போது தவறானதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உடலைப் பேணிப் பாதுகாப்பது மனிதனின் கடமைகளில் ஒன்று. இவை தீமை என்று அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையெனில் ??? இனி தான் புதிதாக கேள்விகள் பிறக்கின்றன.

ஒழுக்கமின்மையை தீர்மானிக்கும் காரணிகள் அல்லது கட்டுப்படுத்த விழையும் காரணிகள் எவை? மனிதன் பல விடயங்களுக்கு கட்டுப்படுகின்றான். தனது சமூகத்திற்கு, மதத்திற்கு, நீதி நூல்களுக்கு, தனது பாரம்பரியத்திற்கு, சட்டத்திற்கு என்று பல வகைகளில் கூறலாம்.

சமூகம் எதை எல்லாம் தீமை என்று ஒதுக்கி வைத்திருக்கின்றதோ அதற்கு... தெருவில் போகும் போது ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது சமூகத்தின் நியதி. எனவே சமூகம் கூறும் அந்நியதிக்கு தன்னைத் தானே உட்படுத்திக் கொள்கின்றான். மதங்கள் கூறும் கட்டுப்பாடுகளையும் ஒரு சாரார் கடைபிடிக்கின்றனர். பல சமூக கோட்பாடுகளுக்கும் கட்டுப்படாதவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டி நேர்கின்றது.

இவை எதற்கு கட்டுப்படாமல் இருப்பவர்கள் இருக்கின்றார்களா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விடையாக இல்லை. ஆனாலும் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதித்துக் கொள்ள அல்லது கட்டுப்பாட்டுக்குள் வராமல் தன் மனதிற்குபட்டதை சரி என செய்யும் சிலரும் இருக்கின்றனர். இவர்களுக்கான கட்டுப்பாடுகளை எது தீர்மானிக்கின்றது ?

குறிப்பாக பகுத்தறிவு பேசக் கூடியவர்கள். பகுத்தறிவு என்பது மிக சிறப்பான ஒன்று. ஆனால் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் பகுத்தறிவு என்பதை கடவுளை மறுப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது போன்ற ஒரு மாயையை நிலைநிறுத்த ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். நன்மை, தீமை எது என்பதை முதலில் விளங்கினால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.

நன்மை, தீமையை எது விளக்குவது? பகுத்தறிவு பேசுபவர்களுக்கான நன்மை தீமைக்கான அளவுகோல் எது? ஏன் நன்மை செய்ய வேண்டும் ? ஏன் தீமை செய்யக் கூடாது? ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கான நன்மை, தீமை சட்டங்கள் இருக்கின்றன. கடவுள் நம்மை கண்காணிக்கின்றார் என்ற பயம் இருக்கும். அதே போல் இறப்புக்குப் பின் இருக்கும் வாழ்க்கை குறித்து பயம் இருப்பவர்களும் தவறு செய்ய தயங்குவார்கள்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மதம் தவறு, பாவம் என்று சொன்னதையே தைரியமாக செய்யக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தங்கள் மதத்தின் மீது நம்பிகை இருந்தாலும் மனபலவீனத்தின் காரணமாக தவறு செய்கின்றனர். மனதளவில் தவறு என்பது அவர்களுக்கு தெரிந்து தான் இருக்கின்றது.

இவை எல்லாவற்றையும் விட பெரிய வியாதி இருக்கின்றது.. அது எவருக்கும் கட்டுப்பட மறுக்கும். கேள்வி கேட்பது என்பது ரொம்ப முக்கியமான விடயம்.. ஆனால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது என்பது ஒரு வகை மனோ வியாதி. நம் பதிவுலகிலேயே சிலரைப் பார்க்கலாம்.. அவர்களுக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. பொது இடங்களில் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் நடக்கலாம். பிறரைப் பற்றி அவர் விரும்பாத வகையில் பொதுவெளியில் விமர்சனம் என்ற பெயரில் திட்டலாம். கடவுளைத் திட்டலாம். தனி மனிதனைத் திட்டலாம். கேட்டால் அவர்களை எதுவும் கட்டுப்படுத்தாது.

அவர்களுக்கான ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவர்களிடம் இருப்பதில்லை. எந்த நீதி நூலுக்கும் கட்டுப்படுவதில்லை. எந்த மதக் கோட்பாடுக்கும் கட்டுப்படுவதில்லை. அனைவரும் கட்டுப்படும் மனசாட்சி என்பதற்கும் கட்டுப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களுக்கு சரியாகப் படுகின்றது. அவர்களது நண்பர்களும் இதே போல் தான் தோன்றித்தனமானவர்களாக இருப்பதால் இது அவர்களுக்கு ஊக்கமானதாக மாறி விடுகின்றது.

இவர்கள் எல்லாம் சமூகத்தில் ஒரு வியாதி போன்றவர்கள். கொலை செய்வது என்பதும் இவர்கள் பார்வையில் சில நேரங்களில் தவறாக மாறி விடுகின்றது. கொள்ளை அடிப்பதும், அடுத்தவரின் உரிமையில் தலையிடுவதும், அடுத்தவரின் மனதைப் புண் படுத்துவதும் இவர்களது அகராதியில் ஒன்றாகி விடுகின்றது.. பொதுவாக எதற்கும் கட்டுப்படாதவைகளை காட்டெருமைக்கு ஒப்பிடுவார்கள்.. இவர்களும் அது போன்ற கால்நடை பிராணிகள் போன்றவர்கள் தான். வேண்டாம் பாவம் அந்த காட்டெருமைகள்.. அவைகளுக்கு என்று அவைகளுக்குள் ஒரு ஒழுங்கு இருக்கும்... அது கூட இவர்களுக்கு இருக்காது.

இவர்களின் கிறுக்குத்தனம் எப்போது ஒழியும் என்று பார்த்தால் எப்போதும் ஒழியாது.. ஏனெனில் நல்லவர்களுக்கு எடுத்துக்காட்டு சொல்லும் அதே நேரத்தில் கெட்டவர்களுக்கான எடுத்துக்காட்டாக காட்ட இவர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் அதை எடுத்துச் சொன்னால் கூட ஆமாம் நாங்கள் அப்படித்தான் என்பார்கள்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும், விலகியே இருக்க வேண்டியதும் இது போன்ற மனித ஜென்மங்களுக்கு அப்பாற்பட்ட விலங்கினங்களை விட கேவலமான எண்ணங்களை உடையவர்களிடம் தான்.

7 comments:

நட்புடன் ஜமால் said...

விலகி இருப்பதே மேல் ...

எம்.எம்.அப்துல்லா said...

உண்மைதான்.

ஆயில்யன் said...

//ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கான நன்மை, தீமை சட்டங்கள் இருக்கின்றன. கடவுள் நம்மை கண்காணிக்கின்றார் என்ற பயம் இருக்கும். அதே போல் இறப்புக்குப் பின் இருக்கும் வாழ்க்கை குறித்து பயம் இருப்பவர்களும் தவறு செய்ய தயங்குவார்கள்.//

ரொம்ப கரீக்ட்டு!

Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க தமிழ்ப்ரியன்

anbarasan said...

read and see video.

ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்

======

Thamizhan said...

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

ஒழுக்கம் என்பது என்னவோ மதவாதிகளினால் தான் பரப்பவோ கடைப்பிடிக்கவோ படுகிறது என்பது உலக் அளவிலே பொய்ப்பிக்கப் பட்டுள்ளது. காஞ்சி சுப்புணி, நித்யானந்தா,கத்தோலிக்கப் பாதிரியார்கள் என்று எல்லா மதத்தலைவர்களின் வெட்ட வெளிச்சச் செயல் நன்றாகக் காட்டி விட்டது.
பகுத்தறிவாளர்களும்,கடவுள் மறுப்பாளர்களும் பலர் மனித நேயத்தின், ஒழுக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்குகிறார்கள்.
உலகின் தலை சிற்ந்த செல்வந்தர்கள் பில் கேட்சும், வாரன் பவ்வேட்டும் பில்லியன்களையும் தங்கள் நேரத்தையும் த்ந்துள்ள ஒழுக்கமானவர்கள்.கடவுள் மத மறுப்பாளர்கள்.
கடவுளுக்கு வரும் நன்கொடையே மதவாதிகளின் ஊழல் கடவுளையே விலைக்கு வாங்குகிறது என்பது தான் உண்மை,அவர்கள் செய்யும் ஒழுக்கக் கேட்டிற்கு விலை பேசுகிறார்கள்.

Thamiz Priyan said...

\\\@ Thamizhan said...\\
மதம் நேர்மையைப் போதிக்கின்றதா இல்லையா என்பதைப் பற்றி இதில் பேசவில்லை... கடவுளை மறுப்பவனாக இருந்தாலும், தான் செய்வது தான் சரி என்று தான் தோன்றித்தனமாக சமூகம் தவறான நடத்தைகள் என்று ஒதுக்கி வைத்து இருப்பவைகளைச் எந்த கூச்சமும் இன்றி செய்துவரும் சமூகக் கேடுகளைக் குறித்து தான் பேசியுள்ளேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழன்!