Wednesday, August 4, 2010

பழைய காதல் கோட்டை ஒன்று

அப்ப ஊரில் கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். காலையில் 7 மணிக்கு நான் தான் கடையைத் திறக்கனும். வழக்கம் போல் அன்றும் கடையைத் திறந்து சாதனங்களை எல்லாம் வெளியில் வைத்து விட்டு முன் பகுதியை விளக்குமாற்றால் கூட்டிக் கொண்டு இருந்தேன். கடை ஓனர் 8:30 க்குத் தான் வருவார் என்பதால் கடையைத் திறந்து சுத்தம் செய்து வைக்கும் வேலை என்னுடையது. எல்லாம் முடிந்ததும் ஒரு டீயும், மசால் வடையும் சாப்பிடலாம். பேவரைட் அயிட்டம் அது. அதனால் வேகமாக பெருக்கிக் கொண்டு இருந்தேன்.

அப்பத் தான் நம்ம பரணி வந்து சேர்ந்தான். பரணியைத் தெரியாதவங்க இங்க போய் தெரிஞ்சுக்கங்க.. தெரிஞ்சவங்க மேல படிக்கலாம். காலை ஏழு மணிக்கே அவன் வந்தது ஏனோ ஒரு வில்லங்கம் போல இருந்தது. என்னடானு கேட்டால் மென்னு முழுங்குறான். கையில் ஒரு பேக் வேற வச்சு இருக்கான். பக்கத்து தெரு லாவண்யாவோட ஓடிப் போகும் ப்ளான் ஏதும் வச்சு இருக்கானோன்னு ஒரு டவுட்டு வேற மைல்டா ஓடுது. ஆனாலும் அந்த புள்ளைக்கு இருக்கும் தைரியத்தில் 100 ல் ஒரு மடங்கு கூட இந்த பயலுக்கு இருக்காது என்பதால் அதை கூட்டிய விளக்குமாற்றாலேயே அழித்து விட்டேன்.

சரி.. உட்காருடான்னு சொல்லி ஒரு டீயும் ஆர்டர் கொடுத்து குடிக்கச் சொல்லியாச்சு.. உறிஞ்சி உறிஞ்சி குடிக்கிறேன். முழியே சரியில்லை. நல்ல நேரத்திலேயே திருட்டு முழி... இப்ப பேய் முழி வேற... பயபுள்ள கையில் இருக்கும் பேக் எங்காயவது ஆட்டையைப் போட்டதா இருக்குமோன்னு ஒரு டவுட்டு. பக் னு ஆயிடுச்சு... ஆகா நம்மளையும் சேர்த்து மாட்டி விட்டுடுவானோன்னு பயம் வேற.. டீக்கிளாஸை பிடிங்கிட்டு விரட்டிலாமான்னு யோசனை வேற.. என்ன ஆனாலும் பரவாயில்லை விசாரிக்கலாம்னு விசாரிச்சா உண்மையை கக்கிட்டான்.

பேக் உண்மையில் திருடப்பட்டதாம். ஆனாலும் திருடியது அவன் இல்லையாம். கேப்பையில் நெய் வடியுது பழமொழி நினைவில் வந்தாலும் பரணி நம்மிடம் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. எங்கள் ஊரைக் கடந்து போகும் ஒரு பஸ்ஸில் இருந்து இந்த பேக்கை ஆட்டையைப் போட்டுள்ளான் ஒரு X . அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டான். பேக்கில் ஒரு பெண்ணின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களும் இன்னும் சில முக்கிய தஸ்தாவேஜ்களும் இருக்க அவன் இவனிடம் கொடுத்துள்ளான். இந்த நல்லவன் அதை இங்கு கொண்டு வந்து விட்டான்.

அந்த X எவன்டா என்றால் சொல்ல மாட்டேன் என்கின்றான். அவன் இவனிடம் மிரட்டி சத்தியம் வாங்கி விட்டானாம். பெரிய சத்தியவான், அரிச்ச்ந்திரன் பரம்பரை.. பிட் படத்திற்கு போகும் போது மட்டும் ஆயிரத்தெட்டு பொய் சொல்லிட்டு வருவான். சரி கொண்டாடான்னு சர்டிபிகேட்களைப் பார்த்தால் அது ஒரு மலையாளப் பெண்ணுடையது. திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் அதன் சொந்த ஊர் தொடுபுழா. திண்டுக்கலில் இருந்து தொடுபுழா செல்ல எங்கள் ஊர் வழியா சென்று இருக்கின்றது. அந்த கேப்பில் எவனோ பேக்கை சுட்டு இருக்கின்றான்.



இரண்டு மேதாவிகளும் சேர்ந்து யோசித்த போது T.Meena என்ற அந்த மல்லுவின் சோகமான அழும் முகம் தான் நினைவில் வந்தது. பாவம் சர்டிபிகேட்டை தொலைத்து விட்டு எங்கே அழுது கொண்டு இருக்கின்றதோ என்று எங்கள் இருவருக்கும் ஒரே ஃபீலிங். காலேஜ் படிக்க முடியாம கடையில் அதை நினைத்து ஃபீல் பண்ணும் எங்களுக்கு இந்த ஃபீலிங் புடிச்சி இருந்தது. சரி அந்த பெண்ணோட கண்ணீரைத் துடைக்கனும்னு முடிவு செய்தாச்சு.

அட்ரஸ் இருக்கு... போன் நம்பர் ஏதும் இல்லை. திண்டுக்கல் ஹாஸ்டல் அட்ரஸூக்கும், தொடுபுழா வீட்டு அட்ரஸூக்கும் தந்தி கொடுக்கலாம்ன்னு ரெண்டு நல்லவிங்களும் ஏகமனதா முடிவு பண்ணிட்டோம். கடை ஓனர் வந்ததும் வெளியே போறதா சொல்லிட்டு நேரா வள்ளுவர் சிலை அருகில் இருக்கும் தலைமை தபால்-தந்தி அலுவலகத்திற்கு போயாச்சு.. அங்க இருந்த ஆபிஸரு ஃப்ரம் அட்ரஸ் வேணும்னு சொல்லிட்டார். வீட்டு அட்ரஸ் கொடுத்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு எங்க கடை அட்ரஸ் கொடுத்தாச்சு.

கடைக்கு வந்தா ஓனரு லெப்ட் ரைட் வாங்குறாரு... கடை அட்ரஸை ஏன்டா கொடுத்தீங்கன்னு... சாயங்காலம் ஆச்சு.. ரெண்டு அம்பாஸிடர் காரில் தடிதடியா 5,6 சேட்டனுங்க கடைக்கு வந்து இறங்குறாங்க... அதுவரை என் கூட உட்காந்து காதல் கோட்டை கற்பனை பண்ணிக்கிட்டு இருந்த பரணி பயல் எஸ்கேப் ஆயிட்டான். பேக் எல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு சர்டிபிகேட் எல்லாம் கரெக்டா இருந்ததில் திருப்தி. ஆனால் அதில் இருந்த ஒரு தங்க மோதிரமும், கொஞ்சம் பணமும் மிஸ்ஸிங்காம். பேக் எப்படி எங்களுக்கு கிடைச்சதுன்னு பெருமையா விளக்கம் வேற கொடுத்தேன்.

எத்தனை மணிக்கு கிடைச்சதுன்னு கேட்டப்ப 7 மணிக்கு கொண்டு வந்ததைக் கணக்கில் வச்சு 6 மணிக்கு ரோட்டில் கிடந்ததுன்னு சொல்லியாச்சு.. அதில் ஒரு சேட்டன் .. தம்பி உங்க ஊரை மீனா வந்த வண்டி 6:30 த்தான் கடந்து இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிட்டார். எனக்கு வதக்கு ஆயிடுச்சு.. நல்ல வேளை வேற ஒன்னும் சொல்லாம பேக்கை எடுத்துட்டு போய்ட்டாங்க.. ஒரு பத்து ரூவா கூட கொடுக்கல..

சரி நம்ம அட்ரஸூக்கு மீனாகிட்ட இருந்து லெட்டர் ஏதாவது வரும்னு ரொம்ப நாள் பரணி காத்துக்கிட்டு இருந்தான்.. ம்ஹூம் ஒன்னு கூட வரலை.. நானும் காத்துக்கிட்டு இருந்து விட்டுட்டேன். இப்ப திடீர்னு நினைவு வந்து ஆர்குட், பேஸ்புக் எல்லாம் தேடிக்கிட்டு இருக்கோம் ரெண்டு பேரும்.. இன்னும் கிடைக்கலை. கிடைச்சா சொல்லுங்க பாஸ் பேரு T.மீனா.. ஊரு தொடுபுழா.. காலேஜ் படிச்சது திண்டுக்கல். நன்றி வணக்கம்.

24 comments:

நட்புடன் ஜமால் said...

மென்னு முழுங்குனாரா ...

வாயில் வடையோ # டவுட்டு

நட்புடன் ஜமால் said...

மல்லு ஃபிகர்ன்னா ஜொள்ளு விடாம விடுவியளா அதுவும் ஆயில்ஸ் இருக்கும் கத்தாரில் இருந்து கொண்டு

( பழைய ஜொள்ளை இப்ப மீண்டும் விட்டியள்ள அதத்தேன் ஜொள்ளுதேன்)

சென்ஷி said...

ஆஹா.. ரெண்டு அம்பாசிடர் கேப்புல ஒரு காதல் கோட்டை படம் மிஸ்ஸாகிடுச்சே பாஸ் # மீ த ஜோகம்.. :(

ஆயில்யன் said...

எம் இனிய டமிள் டுமீல் ப்ளாக்கர்களே உங்களின் பாசத்துக்கு உரிய/உரியல் அல்லாத தாடி பிரியன் தரமான நினைவலைகளோடு உங்களை தேடி நாடி வந்துகொண்டிருக்கிறார் ரேஞ்சுக்கு எங்கே தம்பி அந்த மீனாவா பாக்க கெளம்பியாச்சா? #வெளங்கிடும்

ஆயில்யன் said...

//அப்ப ஊரில் கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம்//

அதெல்லாம் அந்த காலம் பாஸ் !

பொன்னெழுத்துக்களில் பொறிச்சு எடுக்கப்படவேண்டியவை!

ஆயில்யன் said...

//காலையில் 7 மணிக்கு நான் தான் கடையைத் திறக்கனும்.//

ஸோ அப்ப தம்பி எண்ட்ரீ போட்டா வாட்சுல டைம் 7ன்னு திருத்தி வைச்சுக்கிடலாம் #பில்ட்-அப்

ஒரு ஏழரை
ஏழு
மணிக்கு
கடையினை
திறக்கிறதே ! [அடடே ஆச்சர்யகுறி]

ஆயில்யன் said...

//எல்லாம் முடிந்ததும் ஒரு டீயும், மசால் வடையும் சாப்பிடலாம்//

அட ! நம்ம அரபிக்காரன் கேரக்டர் போல அந்த ஓனரூ! வெரிகுட்! வெரிகுட்!

ஆயில்யன் said...

//அதனால் வேகமாக பெருக்கிக் கொண்டு இருந்தேன்//

ஆஹா சிங்கிள் வடையை போட்டு
சிம்பிளா வேலை வாங்கியிருக்காருய்யா அந்த ஓனரூ! பிரில்லியண்ட்தான்!

ஆயில்யன் said...

//அப்பத் தான் நம்ம பரணி வந்து சேர்ந்தான். பரணியைத் தெரியாதவங்க இங்க போய் தெரிஞ்சுக்கங்க//

எலேய்ய்ய்ய் அந்த பயபுள்ளையை கொண்டாந்து இங்க விட்டதே தப்பு அதுவுமில்லாம எங்களையும் தொரத்துறீயால்லே!

ஆயில்யன் said...

//காலை ஏழு மணிக்கே அவன் வந்தது ஏனோ ஒரு வில்லங்கம் போல இருந்தது.//

ம்ஹுக்கும் நீங்க வந்ததுக்கே கடை ஓனரு ஃபீல் பண்ண மாட்டிக்கிடறாரு நீங்க மட்டும் ஏன் பாஸ் பீலிங்க்?

ஆயில்யன் said...

//பக்கத்து தெரு லாவண்யாவோட ஓடிப் போகும் ப்ளான் ஏதும் வச்சு இருக்கானோன்னு ஒரு டவுட்டு வேற மைல்டா ஓடுது//

தம்பி நல்லா யோசிச்சு பாருங்க! அது டவுட்டா இருக்காது ஆதங்கம் or ஆத்திரம் or படபடப்பு or பொறாமை திங்கிங்

ஆயில்யன் said...

//ஆனாலும் அந்த புள்ளைக்கு இருக்கும் தைரியத்தில் 100 ல் ஒரு மடங்கு கூட இந்த பயலுக்கு இருக்காது //

ஏன் முன்னாடியே உமக்கு “ஓடிப்போலாம் வாங்க”ன்னு ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தாங்களா

ஆயில்யன் said...

//விசாரிக்கலாம்னு விசாரிச்சா உண்மையை கக்கிட்டான்.//

அதான் பன்னுமாதிரி தொண்டைக்குள்ள வைச்சு மென்னிருந்திருக்கு பயபுள்ள?

ஆயில்யன் said...

//எங்கள் ஊரைக் கடந்து போகும் ஒரு பஸ்ஸில் இருந்து இந்த பேக்கை ஆட்டையைப் போட்டுள்ளான் //

ஒரு பஸ்ஸு ஊருக்கு நிம்மதியா வந்து போக முடியலயே ச்சே என்ன தேசம்ய்யா இது?

ஆயில்யன் said...

//அந்த மல்லுவின் சோகமான அழும் முகம் தான் நினைவில் வந்தது.///

மல்லு புடிக்கலைன்னா புடிக்கலன்னு சொல்லிட்டு போறது அதை விட்டுட்டு என்னாது பெரிய மனுசத்தனமா....?!

ஆயில்யன் said...

//கடை ஓனர் வந்ததும் வெளியே போறதா சொல்லிட்டு நேரா வள்ளுவர் சிலை அருகில் இருக்கும் தலைமை தபால்-தந்தி அலுவலகத்திற்கு போயாச்சு//

ஆமாம் இதுக்கு கடை ஓனர்க்கிட்ட வெளியே போறேன்னுத்தானே சொல்லணும்! #ஒரே குழப்பமா இருக்கே?!

ஆயில்யன் said...

//நானும் காத்துக்கிட்டு இருந்து விட்டுட்டேன். இப்ப திடீர்னு நினைவு வந்து ஆர்குட், பேஸ்புக் எல்லாம் தேடிக்கிட்டு இருக்கோம் ரெண்டு பேரும்//

அடி சக்கை ! அதானா சேதி ரைட்டு!

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

கொசு வத்தியா - புனைவா - எதாக இருந்தாலும் அருமை

பத்ரி பாவம்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது படம் வரதுக்கு முன்னயா பின்னயா.. முன்னன்னா உங்க கதைய காப்பி செய்தவங்களை சும்மா வா விட்டீங்க..?

கானா பிரபா said...

தொடுப்புழா போற அவசரத்துல பரணி பத்தி லிங்கு கொடுக்க மறந்ததற்கு இந்த வாரக்குட்டு

கானா பிரபா said...

பரணிக்கு(ம் உமக்கும்) இதே வேலையா இருந்திருக்கு போல ;)

அப்துல்மாலிக் said...

தல இப்புடி எத்தன பேரு கிளம்பிருக்கிய? அந்த பொண்ணும் இப்போ பேரன் பேத்தி எடுத்திருக்குமே பரவாயில்லியா :)))

ரசிகன் said...

//நம்ம அட்ரஸூக்கு மீனாகிட்ட இருந்து லெட்டர் ஏதாவது வரும்னு ரொம்ப நாள் பரணி காத்துக்கிட்டு இருந்தான்.. ம்ஹூம் ஒன்னு கூட வரலை.. நானும் காத்துக்கிட்டு இருந்து விட்டுட்டேன்//

நீங்களுமா ???:)))))))))

செவத்தப்பா said...

எந்த விடயத்தையும் விட்டு வைப்பதாக உத்தேசமில்லை, அப்படித்தானே? :) ரொம்ப நாளாச்சு, தலீவரோட பதிவுகள வாசிச்சு; இன்னிக்குத்தான் நேரம் கெடச்சுதுங்க; நீங்க நல்லா கீறீங்களா தலீவரே? முடிஞ்சா ஜிடாக்ல பேசிக்கிடுவோம்! நன்றி!