Wednesday, August 6, 2008

நாங்கள் TCS ல் வேலை செய்த காலமெல்லாம்...... காதல் கதை

.
நா
னும், பரணியும் அப்போது அம்பத்தூர் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால் வந்துவிடும். என்னுடனேயே தங்கி இருக்கும் பரணியும், நானும் ஒன்றாகவே வேலைக்கு சென்று திரும்புவோம்.

பரணி என்னை மாதிரி இல்லை. எப்பவும் ஆள் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவான். “நம்மை எப்பவும் நான்கு பெண்கள் திரும்பி பார்க்க வேண்டும்” என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பான். நெல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு ஊர்க்காரன். ஆள் கொஞ்சம் ஃபீலிங் பார்ட்டி வேறு. எதற்கெடுத்தாலும் எமோசனல் ஆகி விடுவான். அவனது ரசனைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும்.

இருந்தாலும் “என்னைப் பொறுத்த வரை TCS ல் வேலைக்கு வரும் பெண்கள் என்றால் அது உயரிய கல்ச்சர். அதுக்கும் நமக்கும் தொடர்பு கிடையாது” என்று சொல்லிக் கொள்வான். மாலை 6 மணிக்கு வேலை முடிந்ததும் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் யாரிடமாவது கடலை போடுவான். மாலை நேரத்தில் அவனுக்கு தோதுவாக நிறைய பேர் கார்மெண்ட்சில் வேலை முடிந்து வருவார்கள். அதனால் இரவு 8 வரை அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் ‘ஜே' 'ஜே' என்று இருக்கும்.

வேலை முடிந்ததும் அறைக்கு வர முடியும் என்றாலும் நான் நண்பனுக்காக காத்திருப்பேன். கடைசியில் கிடக்கும் பஸ்சில் அமர்ந்து கொள்வேன். அந்த பஸ் கிளம்பினால் இறங்கி அடுத்த பஸ். அப்போது தான் அவனிடம் அந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்தது.

TCS ல் புதிதாக ஸ்ரீதேவி என்று ஒரு பெண் வேலைக்கு சேர்ந்திருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் பரணிக்கு ஃபீலிங் அதிகமாகி விட்டது. ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருப்பது போல் பிதற்ற ஆரம்பித்தான். அந்த பெண்ணும் சுருட்டை முடியுடன், குதிரை வால் கொண்டை போட்டு அழகாவே இருந்தார் என்றே நினைக்கிறென். அதுவுமில்லாம் வட இந்தியர்களுக்கே உரித்தான கோதுமை நிறத்தில் இருப்பார். அப்போது இதை எல்லாம் ஆராய்ச்சி செய்யும் அறிவு இருந்ததில்லை. அதுவுமில்லாமல் நண்பன் சைட் அடிக்கும் பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்ற பொது புத்தியும் இருந்தது.

நாங்கள் வேலை செய்தது இரண்டாவது மாடியில். ஸ்ரீதேவிக்கு வேலை முதல் மாடியில். இதனால் பரணிக்கு அந்த பெண்ணைப் பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கீழ்த் தளத்தில் இருந்த கேண்டீன் தான். ஸ்ரீதேவி வரும் நேரத்தை சரியாக அறிந்து அவனும் அந்த நேரத்தில் கேண்டீனுக்கு வந்து விடுவான். துணைக்கு என்னையும் இழுத்துக் கொண்டு வருவான்.

அந்த பெண்ணும் தனது சோடா புட்டி தோழியுடன் தான் வரும். பரணி நம்மிடம் அந்த சோடா புட்டியை சைட் அடிக்க வலியுறுத்தியும் கண்ணாடி போட்ட பெண் தேவையில்லை என ஒதுங்கி இருந்ததை இங்கு சொல்லிக் கொள்கிறென். ஸ்ரீதேவிக்கு குலோப் ஜாமுன் மிகவும் பிடிக்கும் என்பதால் பரணிக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது. ஓசியில் கிடைத்ததால் நமக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது.

சில தினங்களில் வேலை முடிந்து திரும்பும் போது அந்த பெண்னை பின்தொடர்வது வாடிக்கை ஆகி இருந்தது. அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடிக்கு வர வேண்டிய நாங்கள் அந்த பெண்ணிற்காக அம்பத்தூர் - ஆவடி மெயின் ரோடை விட்டுவிட்டு கழுத்தை சுற்றி மூக்கைத் தொடுவது போல் HVF டாங்க் பேக்டரி இருக்கும் வழியாக 20 நிமிடம் விரயம் செய்து வர ஆரம்பித்தோம். HVF ல் தான் ஸ்ரீதேவியின் அப்பா வேலை பார்ப்பதாக பரணி கூறிக் கொண்டான்.

அது காதலுக்கு மரியாதை படம் வந்திருந்த நேரம். பரணி அந்த படத்தை பத்து தடவைகளுக்கும் மேல் பார்த்து ஃபீலிங்கோபோபியா வியாதி பிடித்து அலைய ஆரம்பித்திருந்தான். நானும் “ நண்பா! உன்னுடைய காதல் தெய்வீகமானது. அவள் அப்பா போலீஸாக இருந்தால் என்ன, மிலிட்டரியாக இருந்தால் என்ன? உன் காதலுக்கு முன் அவையெல்லாம் இந்த மிலிட்டரி டேங்க் எல்லாம் தடையே கிடையாது. பரித்தமாக காதல் நிச்சயம் ஜெயிக்கும்டா” என்று சொல்லி வைத்தேன். அவன் கண்கள் கலங்க “தேங்க்ஸ்டா நண்பா” என்றான். ஆனால் அந்த பெண் இவனை பார்த்ததையோ, இவனிடம் பேசினதையோ ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை.

அப்போதுதான் அந்த செய்தி இடி போல் வந்தது. எங்கள் இருவரையும் சோழிங்க நல்லூர் (குமரன் நகர்) TCS கிளைக்கு மாற்றி விட்டதாக. அப்போது தான் துளிர்க்கத் தொடங்கிய நண்பனின் காதல் முளையிலேயே அழிந்து விடுமோ என்று எனக்கும் கவலையாகி விட்டது. பரணியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஃபீலிங் ஆப் மகாத்மாவாகவே ஆகி விட்டான்.

வேறு வழி இன்றி காலையில் சீக்கிரமே எழுந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த இடமும், சோழிங்கநல்லூரும் சென்னை இரு வேறு துருவங்கள். வேலைக்கு சென்று திரும்புவதற்குள் தாவு தீர்ந்து விடும். அந்த பெண்ணைப் பார்க்காமல் பரணியின் ஃபீலிங் வேறு அதிகமாகி இருந்தது. இரவில் தூக்கத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி என்று புலம்ப வேறு ஆரம்பித்திருந்தான்.

திடீரென்று மாலை நான்கு மணிக்கே வேலைக்கு கட் அடித்து விட்டு ஸ்ரீதேவியைப் பார்க்கப் போவதாக கூறினான். நானும் “காதலுக்காக இதெல்லாம் தியாகத்தின் ஒரு சதம் தான். சென்று வா” என ஆசி கூறி அனுப்பி வைத்தேன். மீண்டும் வீடு வரை விட்டு விட்டு வரும் படலம் ஆரம்பமானது.
சில நாட்களில் தனது தெய்வீகக் காதலை அந்த பெண்ணிடம் சொல்லப் போவதாக கூறிக் கொண்டு ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டான். காதலில் வெற்றி என்றால் குல தெய்வத்துக்கு மொட்டை அடிப்பதாக வேறு வேண்டிக் கொண்டான். நான் அன்று எப்போதும் போல் வேலைக்கு போய் விட்டு இரவு 8:30 மணிக்கு அறைக்கு திரும்பினேன். அதுவரை பரணி அறைக்கு திரும்பவில்லை. இரவு 11 மணிக்கு மேல் தான் வந்தான். சட்டை கிழிந்து, உதடு, கன்னம், கைகளில் காயங்களுடன், ஆங்காங்கே பேண்டேஜ்களுடன் பஞ்சராகி வந்திருந்தான்.
“என்னடா ஆச்சு” என்று கேட்ட போது ஏதும் சொல்ல மறுத்து விட்டான்.

சில நாட்கள் கழித்து என்னிடம் வந்து “ தமிழ்! ஸ்ரீதேவியிடம் ஒன்றும் அழகோ அறிவோ இருப்பது போல் தெரியலைடா! நம்மோடு சைதாப் பேட்டையில் இருந்து பஸ்ஸில் வருதே பிரியா, அந்த பொண்ணுதான் எனக்கு சரியான ஜோடி மாதிரி தெரியுதுடா! அந்த பொண்ணைப் பார்த்ததும் எனக்கு உண்மையான காதல் ஃபீலிங் வருவது போல் இருக்குடா” என்று சொன்னான். நானும் “ ஆமாம்டா! அந்த ஸ்ரீதேவி வடக்கத்தி பொண்ணூடா! நமக்கு தோது வராதுடா. இதை முதலிலேயே சொல்லனும்னு நினைச்சேன். நம்ம தமிழ் கலாச்சாரத்தில் உள்ள பிரியா தான்டா உனக்கு சரியான ஜோடி. கொஞ்ச நாள் நல்ல மாதிரி நடந்துகிட்டு உன் காதலைச் சொல்லுடா... உன் காதல் பரிசுத்தமாக தெய்வீகக் காதல். கண்டிப்பா ஜெயிப்படா. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொன்னேன்.
என் நண்பன் பரணி கண்கள் கலங்கியவனாக “தேங்க்ஸ்டா நண்பா” என்று கை கொடுத்தான்

66 comments:

ஆயில்யன் said...

:)))

:(

Natty said...

:)) neengalum tcs'a... ultimatix'le namakku thaniya oru link kaekalam pola irukkae :))

சூர்யா said...

”காதலுக்கு மரியாதை” படம் வந்த சமயத்தில் நானும் TCS-ல் அம்பத்தூர் பிரிவில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கும் சோழிங்கனல்லூருக்கு மாற்றலானது. ஸ்ரீதேவி னு ஒரு பொண்ணு வேல செஞ்சது.
என்ன ஒரு ஒத்தும..

ஹீ..ஹீ.. ஆனாப் பாருங்க--எனக்குத் பரணியத் தெரியாது..

குசும்பன் said...

//குதிரை வால் கொண்டை போட்டு அழகாவே இருந்தார் என்றே நினைக்கிறென். //

இருந்தாங்களா இல்லையா? டவுட்டா எல்லாம் சொல்ல கூடாது.
சுகுரா சொல்லிடனும்.

குசும்பன் said...

//நண்பன் சைட் அடிக்கும் பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்ற பொது புத்தியும் இருந்தது.//

யாதும் பிகரே யாவரும் பாரீர் என்று தத்துவம் உங்களுக்கு தெரியாதா?

லவ்ஸ் உட்டாதான் பார்க்க கூடாது சைட் அடிக்கும் பெண்கள் என்றால் வேறு யாரை நாம சைட் அடிப்பது.:(((

இல்லை என்றால் தீஸ் பீஸ் மேரா பிளேஸ் என்று கோடு போட்டுதான் சைட் அடிக்கனும் போலவே!!!

நிஜமா நல்லவன் said...

ஏங்க...நானும் காதலுக்கு மரியாதை படம் அம்பத்தூர் ராக்கில ஓடினப்ப அம்பத்தூர் எஸ்டேட்டில் தான் வேலை பார்த்திட்டு இருந்தேன்.....தெரியாம போச்சே....:)

நிஜமா நல்லவன் said...

நீங்க முன்னாடி உங்க ப்ரோபைல மதுரை சரவணன் மாதிரி இருக்கிற உங்க படத்தை போட்டு இருந்தப்ப இவரை எஸ்டேட் பஸ் ஸ்டேண்டில் பார்த்த மாதிரி இருக்குகேன்னு மைல்டா ஒரு டவுட் இருந்துச்சி.....இப்ப தானே தெரியுது அது நீங்க தான்னு:)

VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்... இது புனைவு என்பதை கவனியாமல் உண்மையாது என கருதி படித்துவிட்டேன்...

மங்களூர் சிவா said...

சூப்பர்ப்

புகழன் said...

பிரியா கிட்ட லவ்வ சொல்லி அடி வாங்குனத அடுத்த பகுதியா போடுவீங்களா?

மங்களூர் சிவா said...

/
சூர்யா said...

”காதலுக்கு மரியாதை” படம் வந்த சமயத்தில் நானும் TCS-ல் அம்பத்தூர் பிரிவில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கும் சோழிங்கனல்லூருக்கு மாற்றலானது. ஸ்ரீதேவி னு ஒரு பொண்ணு வேல செஞ்சது.
என்ன ஒரு ஒத்தும..

ஹீ..ஹீ.. ஆனாப் பாருங்க--எனக்குத் பரணியத் தெரியாது..
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//குதிரை வால் கொண்டை போட்டு அழகாவே இருந்தார் என்றே நினைக்கிறென். //

இருந்தாங்களா இல்லையா? டவுட்டா எல்லாம் சொல்ல கூடாது.
சுகுரா சொல்லிடனும்.

மங்களூர் சிவா said...

யாதும் பிகரே யாவரும் பாரீர் என்று தத்துவம் உங்களுக்கு தெரியாதா?

மங்களூர் சிவா said...

/
VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்... இது புனைவு என்பதை கவனியாமல் உண்மையாது என கருதி படித்துவிட்டேன்...
/

இல்லை விக்னேஷ்வரன் உண்மைய உண்மையா படிச்சிருக்கீங்க
:)

மங்களூர் சிவா said...

/
ஸ்ரீதேவிக்கு குலோப் ஜாமுன் மிகவும் பிடிக்கும் என்பதால் பரணிக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது. ஓசியில் கிடைத்ததால் நமக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது.
/

இத படிச்சி எனக்கும் குலோப் ஜாமூன் பிடிச்சி போச்சுங்க

:))

மங்களூர் சிவா said...

/
அவள் அப்பா போலீஸாக இருந்தால் என்ன, மிலிட்டரியாக இருந்தால் என்ன? உன் காதலுக்கு முன் அவையெல்லாம் இந்த மிலிட்டரி டேங்க் எல்லாம் தடையே கிடையாது. பரித்தமாக காதல் நிச்சயம் ஜெயிக்கும்டா” என்று சொல்லி வைத்தேன். அவன் கண்கள் கலங்க “தேங்க்ஸ்டா நண்பா” என்றான்.
/

இதைத்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்குறதுன்னு சொல்லுறாய்ங்களோ!?!?

மங்களூர் சிவா said...

/
இரவு 11 மணிக்கு மேல் தான் வந்தான். சட்டை கிழிந்து, உதடு, கன்னம், கைகளில் காயங்களுடன், ஆங்காங்கே பேண்டேஜ்களுடன் பஞ்சராகி வந்திருந்தான்.
/

லவ் வொர்க்கவுட் ஆகீடுச்சு போல
:)))

மங்களூர் சிவா said...

/
சில நாட்கள் கழித்து என்னிடம் வந்து “ தமிழ்! ஸ்ரீதேவியிடம் ஒன்றும் அழகோ அறிவோ இருப்பது போல் தெரியலைடா! நம்மோடு சைதாப் பேட்டையில் இருந்து பஸ்ஸில் வருதே பிரியா, அந்த பொண்ணுதான் எனக்கு சரியான ஜோடி மாதிரி தெரியுதுடா! அந்த பொண்ணைப் பார்த்ததும் எனக்கு உண்மையான காதல் ஃபீலிங் வருவது போல் இருக்குடா” என்று சொன்னான். நானும் “ ஆமாம்டா! அந்த ஸ்ரீதேவி வடக்கத்தி பொண்ணூடா! நமக்கு தோது வராதுடா. இதை முதலிலேயே சொல்லனும்னு நினைச்சேன். நம்ம தமிழ் கலாச்சாரத்தில் உள்ள பிரியா தான்டா உனக்கு சரியான ஜோடி. கொஞ்ச நாள் நல்ல மாதிரி நடந்துகிட்டு உன் காதலைச் சொல்லுடா... உன் காதல் பரிசுத்தமாக தெய்வீகக் காதல். கண்டிப்பா ஜெயிப்படா. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொன்னேன்.
என் நண்பன் பரணி கண்கள் கலங்கியவனாக “தேங்க்ஸ்டா நண்பா” என்று கை கொடுத்தான்
/

திரும்ப மொதல்ல இருந்தா?????????

:))))))))))))

தமிழன்... said...

நல்லா இருங்கண்ணே..:)

தமிழன்... said...

எனக்கு உங்களை மாதிரி ஒரு பிரண்டு இல்லாம போயிட்டானே...:)

தமிழன்... said...

///ஸ்ரீதேவி என்று ஒரு பெண் ///

ஐ நல்ல பேரு...

தமிழன்... said...

///அந்த பெண்ணும் தனது சோடா புட்டி தோழியுடன் தான் வரும். பரணி நம்மிடம் அந்த சோடா புட்டியை சைட் அடிக்க வலியுறுத்தியும் கண்ணாடி போட்ட பெண் தேவையில்லை என ஒதுங்கி இருந்ததை இங்கு சொல்லிக் கொள்கிறென்.///

ஆமா இப்ப நீங்க கண்ணாடி போட்டிருக்கிங்கல்ல...

தமிழன்... said...

///கொஞ்ச நாள் நல்ல மாதிரி நடந்துகிட்டு உன் காதலைச் சொல்லுடா... உன் காதல் பரிசுத்தமாக தெய்வீகக் காதல். கண்டிப்பா ஜெயிப்படா. எனக்கு நம்பிக்கை இருக்கு///

அப்ப இதுதானா தெய்வீகக்காதல்...!எனக்கு தெரியாமப்போச்சே...

தமிழன்... said...

///அதுவுமில்லாம் வட இந்தியர்களுக்கே உரித்தான கோதுமை நிறத்தில் இருப்பார். அப்போது இதை எல்லாம் ஆராய்ச்சி செய்யும் அறிவு இருந்ததில்லை.///

அப்ப, இப்ப இந்த ஆராய்ச்சிதான் நடக்குதா நல்லா இருங்க...

தமிழன்... said...

புனைவு மாதிரி நிஜங்கள் நல்லாருக்கு...

வடகரை வேலன் said...

அடப்பாவிகளா,

இப்படி எத்தன பேத்த உசுப்பெத்தி உடம்ப ரணகளமாக்கினீங்களோ?

பாரதி said...

நானும் அந்த பகுதில் வேலை பார்க்கும் போது, அம்பத்தூர் எஸ்டேட் பஸ் டெபோவில் மாலை நேர பனி முடித்து வருபவர்கள் ஜோடிகள் தனியாக இருக்கும்(பஸ் விளக்கு அணைக்கப்பட்ட)பஸ்களை பார்த்த பழைய நினைவு வருகிறது.

கயல்விழி said...

ROFTL

ரொம்ப நல்ல பதிவு தமிழ் பிரியன், நன்றி. :)

துர்கா said...

:D

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அவருக்கு உண்மை நண்பரா நீங்கன்னே சந்தேகம்வருதே..?

Jeeves said...

நல்ல நட்பு. அப்புறம் பிரியாவுக்காக நீங்க வாங்குன அடியெல்லாம் சொல்லலாமே :-?

Sri said...

:-)))))) அண்ணா நல்லா இருக்கு..!! :-))))))))))))

M.Saravana Kumar said...

//குசும்பன் said...

//நண்பன் சைட் அடிக்கும் பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்ற பொது புத்தியும் இருந்தது.//

யாதும் பிகரே யாவரும் பாரீர் என்று தத்துவம் உங்களுக்கு தெரியாதா?

லவ்ஸ் உட்டாதான் பார்க்க கூடாது சைட் அடிக்கும் பெண்கள் என்றால் வேறு யாரை நாம சைட் அடிப்பது.(

இல்லை என்றால் தீஸ் பீஸ் மேரா பிளேஸ் என்று கோடு போட்டுதான் சைட் அடிக்கனும் போலவே!!!//

ரிப்பீட்டு..

M.Saravana Kumar said...

//என் நண்பன் பரணி கண்கள் கலங்கியவனாக “தேங்க்ஸ்டா நண்பா” என்று கை கொடுத்தான்
/

திரும்ப மொதல்ல இருந்தா?????????

:))))))))))))//

ரிப்பீட்டு..

தமிழ் பிரியன் said...

எல்லாரிடமும் மாப்பு கேட்டுக்கிட்டு பதில் சொல்றேன்..... லேட்டானதுக்கு தான்... :)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

:)))

:(////
ஆயில்யன்... நல்லா சிரிச்சுட்டு தான சோகமானீங்க.. பரவாயில்லை... :)

தமிழ் பிரியன் said...

///Natty said...

:)) neengalum tcs'a... ultimatix'le namakku thaniya oru link kaekalam pola irukkae :))///
Natty, TCS ல் வேலை செய்ததெல்லாம் புனைவு சொல்லும் முறை... நமக்கும் அதற்கும் வெகு தூரம்.. உள்ளேயே விட மாட்டாங்கன்னா பார்த்துக்கங்க... ;)

தமிழ் பிரியன் said...

//சூர்யா said...
”காதலுக்கு மரியாதை” படம் வந்த சமயத்தில் நானும் TCS-ல் அம்பத்தூர் பிரிவில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கும் சோழிங்கனல்லூருக்கு மாற்றலானது. ஸ்ரீதேவி னு ஒரு பொண்ணு வேல செஞ்சது.
என்ன ஒரு ஒத்தும..

ஹீ..ஹீ.. ஆனாப் பாருங்க--எனக்குத் பரணியத் தெரியாது.///

சூர்யா! 1997 - 1998 ல் அம்பத்தூரில் ஒரு ஸ்ரீதேவி தான் வேலை செய்தாங்க... வேற யாரும் இல்லை... அப்ப அவங்க தான் அது.. ;)

தமிழ் பிரியன் said...

///குசும்பன் said...

//குதிரை வால் கொண்டை போட்டு அழகாவே இருந்தார் என்றே நினைக்கிறென். //

இருந்தாங்களா இல்லையா? டவுட்டா எல்லாம் சொல்ல கூடாது.
சுகுரா சொல்லிடனும்.///
ஹிஹிஹிஹி அப்ப பார்த்தேன்.,.. ஆனா பார்க்கலை.. இருந்தாங்க ஆனா இல்லை.. இது புனைவுங்கோ.. :D

தமிழ் பிரியன் said...

///குசும்பன் said...
//நண்பன் சைட் அடிக்கும் பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்ற பொது புத்தியும் இருந்தது.//

யாதும் பிகரே யாவரும் பாரீர் என்று தத்துவம் உங்களுக்கு தெரியாதா?
லவ்ஸ் உட்டாதான் பார்க்க கூடாது சைட் அடிக்கும் பெண்கள் என்றால் வேறு யாரை நாம சைட் அடிப்பது.:(((
இல்லை என்றால் தீஸ் பீஸ் மேரா பிளேஸ் என்று கோடு போட்டுதான் சைட் அடிக்கனும் போலவே!!///

அந்த ஸ்ரீதேவியை விட ஒரு நல்ல பிகர் நம்ம ரூட்டில் இருந்தது. அதனால கண்ணு மண்ணு தெர்லீங்கோ... ;)))

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...
ஏங்க...நானும் காதலுக்கு மரியாதை படம் அம்பத்தூர் ராக்கில ஓடினப்ப அம்பத்தூர் எஸ்டேட்டில் தான் வேலை பார்த்திட்டு இருந்தேன்.....தெரியாம போச்சே....:)///

அமப்த்தூரா? ராக்கியா? என்ன இதெல்லாம்? எங்க இருக்கு? தெர்லீங்கோ.. நிஜமாவே.. ;))

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...
நீங்க முன்னாடி உங்க ப்ரோபைல மதுரை சரவணன் மாதிரி இருக்கிற உங்க படத்தை போட்டு இருந்தப்ப இவரை எஸ்டேட் பஸ் ஸ்டேண்டில் பார்த்த மாதிரி இருக்குகேன்னு மைல்டா ஒரு டவுட் இருந்துச்சி.....இப்ப தானே தெரியுது அது நீங்க தான்னு:)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... அப்ப அந்த பஸ்ஸில் ஏறி ஏறி இறங்கும் கோஷ்டியில் நீயுமாய்யா இருந்தா?... :(

தமிழ் பிரியன் said...

/// VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்... இது புனைவு என்பதை கவனியாமல் உண்மையாது என கருதி படித்துவிட்டேன்..///
இன்னுமா என்னை நம்புறிங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...

சூப்பர்ப்///
நன்றி தல!

தமிழ் பிரியன் said...

///புகழன் said...
பிரியா கிட்ட லவ்வ சொல்லி அடி வாங்குனத அடுத்த பகுதியா போடுவீங்களா?///
ஆளாளுக்கு கிளம்பிட்டீங்களாப்பு... நாங்க யாரிடமும் அடி வாங்கலைங்கோ... :)

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
யாதும் பிகரே யாவரும் பாரீர் என்று தத்துவம் உங்களுக்கு தெரியாதா?///
அண்ணே! அந்த போட்டோ பார்த்தாலே தெரியலையா? நான் அப்பாவி சிறுவன் என்று

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...

/
VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்... இது புனைவு என்பதை கவனியாமல் உண்மையாது என கருதி படித்துவிட்டேன்...
/

இல்லை விக்னேஷ்வரன் உண்மைய உண்மையா படிச்சிருக்கீங்க
:)///

மீண்டும் சொல்றேன்.. என்னை நம்புங்க.. நிஜமாவே நான் தான் நல்லவன்

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
/
ஸ்ரீதேவிக்கு குலோப் ஜாமுன் மிகவும் பிடிக்கும் என்பதால் பரணிக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது. ஓசியில் கிடைத்ததால் நமக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது.
/
இத படிச்சி எனக்கும் குலோப் ஜாமூன் பிடிச்சி போச்சுங்க
:))///

இப்பவும் நமக்கு குலோப் ஜாமுன் பிடிக்குமுங்கோ

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
இதைத்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்குறதுன்னு சொல்லுறாய்ங்களோ!?!?///
தல அதெல்லாம் நம்ம கடமை... பலன் கிடைப்பது அவனவன் தலையெழுத்து பாருங்க

தமிழ் பிரியன் said...

/// மங்களூர் சிவா said...
/
இரவு 11 மணிக்கு மேல் தான் வந்தான். சட்டை கிழிந்து, உதடு, கன்னம், கைகளில் காயங்களுடன், ஆங்காங்கே பேண்டேஜ்களுடன் பஞ்சராகி வந்திருந்தான்.
/
லவ் வொர்க்கவுட் ஆகீடுச்சு போல
:)))///
நல்லாவே ஒர்க் அவுட் ஆகிப் போச்சு

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

நல்லா இருங்கண்ணே..:)///
நன்றி தமிழன்!

தமிழ் பிரியன் said...

//தமிழன்... said...
எனக்கு உங்களை மாதிரி ஒரு பிரண்டு இல்லாம போயிட்டானே...:)///

எதுக்கு அடி வாங்கித் தரவா? அவ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

///அந்த பெண்ணும் தனது சோடா புட்டி தோழியுடன் தான் வரும். பரணி நம்மிடம் அந்த சோடா புட்டியை சைட் அடிக்க வலியுறுத்தியும் கண்ணாடி போட்ட பெண் தேவையில்லை என ஒதுங்கி இருந்ததை இங்கு சொல்லிக் கொள்கிறென்.///
ஆமா இப்ப நீங்க கண்ணாடி போட்டிருக்கிங்கல்ல...///

கண்ணாடி இல்லாமலேயே நமக்கு எக்ஸ்ரே கண்ணு தமிழன்,... :)

தமிழ் பிரியன் said...

/// தமிழன்... said...

புனைவு மாதிரி நிஜங்கள் நல்லாருக்கு..///
நிஜமெல்லாம் இல்லீங்கோ... இது புனைவே தான்... :)

தமிழ் பிரியன் said...

///வடகரை வேலன் said...
அடப்பாவிகளா,
இப்படி எத்தன பேத்த உசுப்பெத்தி உடம்ப ரணகளமாக்கினீங்களோ?///

வேலன் சார், சும்மா விளையாடாதீங்க... இந்த கலையெல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தது தானே... :))

தமிழ் பிரியன் said...

////பாரதி said...
நானும் அந்த பகுதில் வேலை பார்க்கும் போது, அம்பத்தூர் எஸ்டேட் பஸ் டெபோவில் மாலை நேர பனி முடித்து வருபவர்கள் ஜோடிகள் தனியாக இருக்கும்(பஸ் விளக்கு அணைக்கப்பட்ட)பஸ்களை பார்த்த பழைய நினைவு வருகிறது.///
ம்.... அதெல்லாம் ஒரு காலம் பாரதி... என்னத்த சொல்ல... :)

தமிழ் பிரியன் said...

///கயல்விழி said...

ROFTL

ரொம்ப நல்ல பதிவு தமிழ் பிரியன், நன்றி. :)////

நன்றி கயல்விழி அக்கா!

தமிழ் பிரியன் said...

///துர்கா said...

:D ////

வந்தமா கொஞ்சம் கும்மியடிச்சமான்னு இல்லாம இதென்ன ஒரு எழுத்து கமெண்ட்... நல்லா இல்லை... சொல்லிப்புட்டேன்

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

அவருக்கு உண்மை நண்பரா நீங்கன்னே சந்தேகம்வருதே..?////

அக்கா! உண்மையாக நட்பு இருந்ததால் தான் அடுத்த ரவுண்டுக்கு ஐடியா கொடுத்தது மட்டுமில்லாமல் காயங்களுக்கு ஒத்தடமெல்லாம் கொடுத்தேனே?... ;)

தமிழ் பிரியன் said...

///Jeeves said...

நல்ல நட்பு. அப்புறம் பிரியாவுக்காக நீங்க வாங்குன அடியெல்லாம் சொல்லலாமே :-?///
ஹிஹிஹிஹி அதெல்லாம் தனியா மெயிலில் கேட்டுக்குங்க.,.. இப்படியா பொதுவில் வைத்து மானத்தை வாங்குவது.... :(

தமிழ் பிரியன் said...

///Sri said...

:-)))))) அண்ணா நல்லா இருக்கு..!! :-))))))))))))///
நன்றிம்மா தங்காச்சி! ஆமா எதுக்கு இம்புட்டு சிரிப்பு.. அண்ணாத்தே அடி வாங்காம தப்பியதற்கா....... அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///M.Saravana Kumar said...
//என் நண்பன் பரணி கண்கள் கலங்கியவனாக “தேங்க்ஸ்டா நண்பா” என்று கை கொடுத்தான்
/
திரும்ப மொதல்ல இருந்தா?????????
:))))))))))))//
ரிப்பீட்டு..///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆகா, என்ன ஒரு அருமையான பதிவு...
இந்த பதிவின் மூலம் தாங்கள் ஒரு சிறந்த பதிவர் என்பது மீண்டும் நிரூபனமாகிறது...

தாங்கள் சேவை தமிழுக்கு தேவை...

நாணல் said...

;) ”எவ்வளவோ பன்னிட்டோம் இதைப் பன்ன மாட்டோமா?” Ganesh Kumar மாதிரியா உங்க பரணி...

நான் ஆதவன் said...

:-)))))))

LinkWithin

Related Posts with Thumbnails