Tuesday, February 19, 2008

பணத்தை திருடிய மாணவனை கண்டுபிடிக்க தன்னைத்தானே பிரம்பால் அடித்த ஆசிரியை

பணத்தை திருடிய மாணவனை கண்டு பிடிக்க
தன்னைத்தானே பிரம்பால் அடித்த மீனாட்சி குட்டி ஆசிரியைக்கு விருது

பொது கல்விதுறை சார்பில் வழங்கப்பட்டது

இடுக்கி,பிப்.19-
பணத்தை திருடிய மாணவனை கண்டுபிடிக்க தன்னைத்தானே பிரம்பால் அடித்த மீனாட்சி குட்டி ஆசிரியைக்கு பொது கல்வி துறை விருது வழங்கியது.
தன்னைத்தானே அடித்த ஆசிரியை
இடுக்கி நகரில் உள்ள அரசு மாடல் ரெசிடன்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருப்பவர் மீனாட்சி குட்டி. இவர் சமீபத்தில், பள்ளிக்கூடத்தில் பணத்தை திருடிய மாணவனை கண்டு பிடிக்க தன்னைத்தானே பிரம்பால் அடித்து கொண்டார். ஆசிரியை தன்னைத்தானே பிரம்பால் அடித்ததை பார்த்த, ஒரு மாணவன் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த மாணவன் ஆசிரியை மீனாட்சி குட்டியிடம் மன்னிப்பு கேட்டார்.
விருது
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனை திருத்த ஆசிரியை மீனாட்சி குட்டி கையாண்ட யுத்தி மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணமாக கருதப்பட்டது. இந்நிலையில் ஆசிரியை மீனாட்சி குட்டி செயலை பாராட்டி பொதுகல்விதுறை சார்பாக செருதோணி நகரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பொது கல்வித்துறை இயக்குனர் அனிலாஜார்ஜ் கலந்து கொண்டு ஆசிரியை மீனாட்சி குட்டிக்கு ஸ்டூடன்ஸ் பிரெண்ட்லி டீச்சர் என்ற விருதை வழங்கி கவுரவித்தார். விழாவில் தனக்கு வழங்கிய விருதையும், பாராட்டையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிப்பதாக ஆசிரியை மீனாட்சி குட்டி கூறினார்.
செய்தி : தினத்தந்தி

1 comment:

Anonymous said...

கலோ சார் அந்த அந்த ஆசிரியைக்கு விரதுவழங்குவதைவிட்டுவிட்டு அந்த ஆசிரியைக்க என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க பாருங்கையா!
தன்னைத்தானே வதைத்தல் யுக்தியல்ல. வருத்தம். பாவம் ரீச்சர். அந்த வருத்தம் எனக்கும் இருக்கு.

அது இயலாமையின் வெளிப்பாடு. ஒருவகை உளவியல் நோய்