முதல் பதிவைப் படித்து விட்டு இதைத் தொடருங்கள்.........
முதலில் நந்தினி வீரபாண்டியனின் காதலி/மனைவி என்பதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.
ஆதாரம் 1 - வீரபாண்டியன் கொலைக்களம்.
ஆதித்தன் கூறுவது
/// நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.
'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி. ///
ஆதாரம் 2 - சிறுவனுக்கு காட்டில் மன்னர் பட்டம் கட்டுமிடம்
/// நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள். சிறுவன் அவளையும் தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான்.
"நீ தானே என் அம்மா? இவள் இல்லையே" என்று கேட்டான்.
"ஆம், கண்மணி!"
"இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்?"
"அவள் உன்னை வளர்த்த தாய்!"
"நீ ஏன் என்னை வளர்க்கவில்லை? ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை? இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?"
"கண்மணி! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்!" ///
ஆதாரம் 3 - ரவிதாசன் தனது கூட்டாளியிடம் கூறுமிடம்
"பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று சொல் வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா? வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா?
ஆதாரம் 4 - ஆதித்தன் வந்தியதேவனிடம் சொல்வது
(நந்தினியைத் தனது சகோதரி என்று நினைத்து)
என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது.
ஆதாரம் 5 - ஆதித்தன் கொலைக்கு சற்று நேரத்திற்கு முன் நந்தினி தனியாக குழம்பிப் பேசுவது
திடீரென்று நந்தினியின் உடம்பு முழுவதும் ஒரு தடவை சிலிர்த்தது. வெறிக்கனல் பாய்ந்த கண்களினால் மேல் நோக்காகப் பார்த்தாள்."ஆகா! நீ வந்துவிட்டாயா? வா! வா! சரியான சமயத்திலேதான் வந்தாய்! என் அன்பே! என் அரசே! வா! வீர பாண்டியன் தலையே! ஏன் கூரை ஓரத்திலேயே ......................................................................................... எல்லாரும் எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய்! அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை... என்ன? மாட்டேன் என்கிறாயா? சரி
ஆதாரம் 6 - ஆதித்தன் நந்தினியுடன் அவனுடன் உரையாடும் போது
'இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள்;
ஆதாரம் 7 - வந்தியதேவன் ரவிதாசனிடம் மாட்டிய போது நடக்கும் உரையாடல்
"இன்னுமா உனக்குத் தெரியவில்லை? பாண்டிமாதேவிதான். பெரிய பழுவேட்டரையரின் வீட்டில் வந்திருக்கும் வீர பாண்டிய சக்கரவர்த்தியின் வீரபத்தினி நந்தினி தேவிதான்!"
ஆதாரம் 8 - ஆதித்தன் நந்தினியுடன் கடைசியாக 'இருவரும் எங்காவது சென்று மணம் செய்து கொள்ளலாம்' எனும் போது 'அது நமக்குள் இயலாது' என்று மறுதலிக்கும் போது
///ஆயினும் சொல், நந்தினி! என்னுடன் வருவதற்கு, - நம் இளம் பிராயத்து ஆசைக் கனவு நிறைவேறுவதற்கு - தடையாயிருக்கும் உண்மையான காரணம் என்னவென்று சொல்!///
மேலே உள்ள காரணங்களைப் பார்க்கும் போது
ஆதாரங்கள் 2,3,7 ஆகியவையின் மூலம் ரவிதாசன் உள்ளிட்ட கூட்டாளிகள் முன் வீரபாண்டியன் நந்தினியை தனது பட்டத்து மகிஷியாக ஏற்றுக் கொண்டுள்ளான் என தெளிவாக் விளங்குகின்றது.
ஆதாரங்கள் 1 மற்றும் 4 ன் படி ஆதித்தன் இரண்டு இடங்களில் வீரபாண்டியன் தான் நந்தினியின் காதலன் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.
ஆதாரங்கள் 5 மற்றும் 6 ன் படி நந்தினியே தன்னை வீரபாண்டியனின் காதலியாக தெளிவாக காட்டிக் கொள்கிறார். அதிலும் தனியாக புலம்பும் காட்சியில் வீரபாண்டியனின் தலையைப் பார்த்து அன்பே என்று விளிக்கின்றாள். மேலும் சுவர்க்கத்தில் பல பெண்கள் இருப்பார்களே அவர்களை ஏற்றுக் கொண்டு அங்கே போக வேண்டியது தானே? என்று கேட்டுவிட்டு உடனே இல்லை உனக்கு நான் தான் வேண்டும் போல் என்ற தோரணையில் பேசுவாள்.
இவைகளின் மூலம் மிகத் தெளிவாக நந்தினி வீர பாண்டியனின் காதலி தான் என்பது தெளிவாகின்றது.
வீர பாண்டியன் ஆட்டத்தில் இருந்து விலகி விட்டாலும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் வந்தியதேவன் கூறிய கூற்றுக்களை முதல் பதிவில் பார்த்தோம். இனி வரும் அடுத்த பதிவில் அவர்களின் கூற்றை ஆராய்ந்து விளக்கலாம். அதற்கு அடுத்து நந்தினியின் தந்தை யாராக இருக்க முடியும், ஜி அவர்கள் கூறியது போல் பைத்தியக்காரன் தந்தையாக இருக்க எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பனவற்றை விரிவாக பார்க்கலாம்.
9 comments:
மீ தி பர்ஸ்ட்டு
இருப்பா பதிவ படிச்சிட்டு வரேன்.
Good Post!!!
நான்தான் செக்கன்டு....
எனக்குள் தொன்றுவது...
நந்தினியை வீரபாண்டியன் ஊமை ராணி என நினைத்து மயக்கி இருக்க வேண்டும்.
ஊமை ராணியும் முதிய வயதிலும் இளமையோடுதானே இருந்தால்.
என்ன இருந்தாலும் நந்தினி கற்பனை கதா பாத்திரம் தானே.
அவளைப் பற்றிய தொடர் வேறு நாவல்களில் இருப்பதாக தெரியவில்லை.
//வந்தியதேவன் ரவிசங்கரிடம் மாட்டிய //
வந்தியத்தேவன் நம்ம ரவிசங்கரிடம் மாட்டிக்கொண்டாரா? யாரு மாதவிப்பந்தல் ரவிசங்கரா? :-))
இந்த நந்தினி வீரபாண்டியன் உறவில் ஒரு திருப்பமும் உண்டு தெரியுமா?
பூதத்தீவில் சுந்தரசோழருடன் மந்தாகினி தேவியின் குடித்தனம் நடத்துகிறார். பின்னர் அதே இடத்தில் வீரபாண்டியனாரையும் சந்திக்கின்றார். இப்பொழுது அவருக்கு இரண்டு குழந்தைகள். நந்தினி தேவி மற்றும் மதுராந்தகத் தேவர். இவர் பின்னர் வீரபாண்டியனின் வாரிசாக அமரபுயங்கப் பாண்டியனாக பட்டமேற்றதாக இந்தக் கதையிலேயே சொல்லப்படுகிறது.
கொஞ்சம் சிக்கலான விசயம்தான். வீரபாண்டியனின் காதலி மந்தாகினி தேவியா அல்லது நந்தினியா என்பது.
அப்ப நான் இரண்டாவது இல்லையா சரி சரி......??
தல... நீங்க இங்க சொல்லியிருக்கிற படி காதலி என்று சொல்லக்கூடியதன் ஆதாரம் வலுவாகத்தானே இருக்கிறது....
Post a Comment