Thursday, June 26, 2008

????????????? (அ) ???????????????? (அ) சிலந்தி

.முன் டிஸ்கி : நான் இன்னும் தசாவாதாரம் படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை. ஒரு தமிழ் பதிவருக்கான இலக்கணத்தை இது மீறுவதாக அமைவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதைப் பற்றி எனக்கு இம்மியும் கவலையில்லை. ஆனாலும் ஒரு விமர்சனம் இங்கு எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சமீபத்தில் பார்த்த ஒரு படம் தான் ‘சிலந்தி'. முன்னா, மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை இயக்கியவர் ஆதி. கால் சென்டர், ஐடி பெண்கள் மீது என்ன கோபமோ இயக்குனருக்கு. அந்த கலாச்சாரத்தின் பாதிப்புகளை கிளாமர் கலந்த ஒரு த்ரில்லர் கதை மூலம் சொல்லியிருக்கிறார்.

அறிமுக நாயகன் முன்னா, பெயரளவுக்கு தான படத்தில் ஹீரோ. மற்றபடி, மோனிகாவும், அவரது தாராள கவர்ச்சியும் தான் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதுமணத் தம்பதிகளான முன்னா- மோனிகா ஜோடி தேனிலவுக்காக ஓர் உல்லாச தீவுக்குள் செல்கின்றனர். வயாக்ரா வாங்குவதற்காக முன்னா தீவைவிட்டு வெளியே வர, மோனிகாவை ஒரு உருவம் பயமுறுத்துகிறது.

இதற்கிடையே, மோனிகாவின் தோழிகள் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர்.

தீவுக்கு திரும்பிவரும் முன்னாவிடம் மர்ம உருவம் குறித்து சொல்கிறார் மோனிகா. முதலில் நம்ப மறுக்கும் முன்னாவே, பிறகு அந்த உருவத்தை கண்டு அலற, அந்த மிரட்டல் உருவம் ஏன், எதற்காக அவர்களை துரத்துகிறது என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஒரு சஸ்பென்ஸ் கதையை எப்படி சொல்லக் கூடாது என்று தெளிவாக விளக்கிய படம் என்று கூட சொல்லலாம். சஸ்பென்ஸ் என்ற கருமத்தை இடைவேளையிலேயே உடைத்து விடுகிறார்கள். அதற்கு பிறகு படம் சுவாரஸ்யமே இல்லாமல் போகின்றது. பாதி படம் இருட்டில் வேறு செல்வதால் எதையும் பார்க்கக் கூட இயலவில்லை.

பேசாமல் இதற்கு மோகினிகளின் மோக இராத்திரி அல்லது அஜால் குஜால் சுந்தரிகள் என்று பெயரிட்டு சகீலா படத்தையும் போஸ்டரில் இட்டிருந்தால் (போஸ்டரில் இருப்பவர்கள் எல்லாம் படத்திலும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தனி சட்டப் பிரிவு) படம் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். நமது பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ராம் ( இடிச்சிட்டாங்களாமே..... ஃப்லோல வருதுங்க..... கண்டுக்காதீங்க) தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாவாவது சேர்ந்து இருக்கும்.

பின் டிஸ்கி : இமேஜை உடைக்கும் முயற்சி. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் கண்டுக்காதீங்க....

10 comments:

தமிழன்... said...

me the first!

தமிழன்... said...

இருங்க வந்துட்டேன்...

தமிழன்... said...

///முன் டிஸ்கி : நான் இன்னும் தசாவாதாரம் படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை. ஒரு தமிழ் பதிவருக்கான இலக்கணத்தை இது மீறுவதாக அமைவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதைப் பற்றி எனக்கு இம்மியும் கவலையில்லை///

நானும்தான் தல எழுதல அத விடுங்க ஆமா அது என்ன முன் டிஸ்கி...

VIKNESHWARAN said...

//பாதி படம் இருட்டில் வேறு செல்வதால் எதையும் பார்க்கக் கூட இயலவில்லை.//

அப்படி எதைப் பார்க்க வேண்டுமேன நினைத்து பார்க்க முடியாமல் போனது...

தமிழன்... said...

///அறிமுக நாயகன் முன்னா, பெயரளவுக்கு தான படத்தில் ஹீரோ. மற்றபடி, மோனிகாவும், அவரது தாராள கவர்ச்சியும் தான் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.///

நானும் ஸ்டில்ஸ் பாததேன் தல மோனிக்காவா இதுன்ற மாதிரி கலக்கியிருக்காங்க !p:)

தமிழன்... said...

///கால் சென்டர், ஐடி பெண்கள் மீது என்ன கோபமோ இயக்குனருக்கு. அந்த கலாச்சாரத்தின் பாதிப்புகளை கிளாமர் கலந்த ஒரு த்ரில்லர் கதை மூலம் சொல்லியிருக்கிறார்.///

அவரும் பாதிக்கப்பட்டிருப்பாரோ...?

தமிழன்... said...

///நமது பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ராம் ( இடிச்சிட்டாங்களாமே..... ஃப்லோல வருதுங்க..... கண்டுக்காதீங்க) ///

"நமது" என்ன ஒரு உரிமையோட சொல்லியிருக்கிங்க தல
(கண்டுக்கலை விட்டுட்டோம்...)

தமிழன்... said...

///"????????????? (அ) ???????????????? (அ) சிலந்தி"///


"????????ஏன்????? இப்படி ?????? தலைப்பபு??????வச்சிங்க"

தமிழன்... said...

///பின் டிஸ்கி : இமேஜை உடைக்கும் முயற்சி. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் கண்டுக்காதீங்க....///


அதான் மோனிக்கா தனக்கிருந்த ஹோம்லி இமேஜை உடைச்சிட்டாங்களே..

டிஸ்கி: நான் இன்னும் படம் பாக்கலை

(இந்த டிஸ்கியை எப்பிடி சொல்ல தல..)

நிஜமா நல்லவன் said...

நல்லா உடைக்குறாங்கப்பா இமேஜை:))

LinkWithin

Related Posts with Thumbnails