Sunday, August 9, 2009

அரைக் கிறுக்கன் - உயிரோடைக்காக எழுத நினைத்தது.

இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்பொழுதெல்லாம் என்னைக் கண்டதும் அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. மார்க்கெட் போய் வரும் வழியில் தான் அவன் வேலை செய்யும் மளிகைக் கடை இருக்கின்றது. மூட்டைகளை அடுக்கி வைப்பது, அட்டைப் பெட்டிகளை கட்டி வைப்பது, கடைக்கு முன்னால் பெருக்குவது என்று ஏதாவது செய்து கொண்டு இருப்பான். நல்ல ஆடைகளும் உடுத்தி இருக்கின்றான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சில நேரங்களில் பரிதாபமும், இன்னும் சில நேரங்களில் பெருமிதமும் ஏற்படுகின்றது.


தூரத்தில் வரும் போது என்னைப் பார்க்கும் அவன் அருகில் வந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை அவனுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எல்லோரும் அவனை அரைக் கிறுக்கு என்றே கூப்பிடுகின்றனர்.

அவனை முதன் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. இப்பொழுது இருப்பது போல் இல்லை அன்று அவன். கிழிந்த சட்டையும், பின்பக்கம் கிழிந்திருந்த டவுசருமாக உடல் முழுவதும் அழுக்காக, பரட்டைத் தலையுடன் வீட்டு கேட்டருகே நின்று கொண்டிருந்தான். சில சிறுவர்கள் கல்லை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தில் என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்து இருக்கின்றான். பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் இருங்கள்…. தெருவைக் கடப்பதற்கு முன் இந்த பகுதியைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பற்றி பார்க்கலாம். இந்த தெருவில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களாம். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பத்தினி ஒருநாள் என் வீட்டு முன் நின்று கத்திக் கொண்டு இருந்த போது கூறியது இது. நான் தெருவில் செல்லும் போது ஜொள்ளு வடிப்பது ஆண்களுக்கும், பொறாமையில் முகத்தை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்வது பெண்களுக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது என் நிலைமையாகி விட்டது.

நான்… என்னைப் பற்றி என்ன சொல்ல?… பாலியல் தொழிலாளி என்று சொல்லவா? அல்லது தெருவில் பேசுவது போல் அசிங்கமான வார்த்தைகளில் சொல்லவா? ஒரு காஸ்ட்லியான விபச்சாரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இடமும், சுற்றுப்புறமும் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

கோபம், தாபம், காமம், குரோதம், அகங்காரம், சோகம், விருப்பம், வெறுப்பு, தவிப்பு என பல மனநிலையில் வருபவர்களை இங்கு காணலாம். மனிதர்களில் பல வகை. சிலருக்கு அவசரத்திற்கு, சிலருக்கு கோபத்தைக் காட்ட, சிலருக்கு வெறுப்பை வெளிப்படுத்த, இன்னும் சிலருக்கு தங்களை பரீட்சார்த்த முயற்சிகளை சோதித்துப் பார்க்க… சரி போதும் அவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறுவர்களை விரட்டி விட்டு அவனைப் பார்த்தேன். ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டு இருந்தான். சிறுவர்கள் அரைக் கிறுக்கன் என்று கத்திக் கொண்டு சென்றதில் தவறில்லையோ என்று தோன்றும் உருவம். தண்ணீர் என்று மெதுவாக முனங்குவது கேட்டது. வீட்டில் இருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். இங்கு வருபவர்களை இவன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தண்ணீரை நெஞ்சில் சிந்த சிந்தக் குடித்தான். கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. மூன்றாம் நாள் வந்து விட்டான். அதே கோலத்தில்.. இப்போது பசிக்குது பசிக்குது என்றான். சாப்பாடு போட்டேன். அன்று முதல் என் வீட்டின் முன் அமர்ந்து விட்டான். என் வீட்டிற்கு இரவில் வந்து செல்பவர்களை மலங்க மலங்கப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான்.சில நேரங்களில் மீதமான உணவைப் போடுவேன். எவனோ வந்து விட்டுவிட்டுப் போன வேட்டி சட்டையையும் கொடுத்தேன். சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு வேட்டியை அவன் உட்காரும் இடத்தில் விரித்து வைத்துக் கொண்டான்.

என்னிடம் வந்து விட்டு செல்லும் சிலர் அவனுக்கு 10, 20 என்று கொடுப்பார்கள். இங்கு வந்து செல்பவர்கள் தர்ம பிரபுக்களாக மாறி விடுகின்றனர். அவனைப் பற்றி கூறும் போது அச்சுதனைப் பற்றி கூறியே ஆக வேண்டும். அச்சுதனுக்கு 50,55 வயது இருக்கும். ஆலந்தூர் பக்கம் இரும்புக் கடை வைத்திருக்கிறார். கேரளாவின் ஒரு மூலையில் குடும்பம் இருக்கின்றது. எப்போது சென்று வருவார் என்று தெரியாது. ஆனால் என் வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இரவுகளில் வருவார்.

வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மனித ஜந்துக்களில் ஒருவர். அச்சுதன் வரும் போதெல்லாம் அவனுடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவன் ஏதும் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான். மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கும் அவன் அச்சுதன் கொடுப்பதை மட்டும் வாங்கவே மாட்டான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பதற்றமடைவதைக் காண முடியும். சில நேரங்களில் வரும் போது பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து அவனுக்கு தருவார். அவர் திரும்பும் போது எதிரில் இருக்கும் குப்பைத் தொட்டியில் பிரிக்கப்படாத பிரியாணி பொட்டலம் கிடைக்கும். அச்சுதனை அவன் மிகவும் அழுத்தமாகப் பாதித்து இருந்தான். எப்படியாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது அச்சுதனுடைய ஆசை.

அன்று அச்சுதன் என்னிடம் உன்னுடன் அவனைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதைக் கேட்டதும் என்னால் அதிர்ச்சி தாங்க இயலவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வந்து தினசரி அமைதியாக அமர்ந்து கொண்டு இதையே சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் கோபமாக இருந்தாலும், சில நாட்களில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அன்று அச்சுதன் வரும் போதே அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். அச்சுதன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் வரை வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பல நிமிடங்கள் நிறைய காரியங்களை செய்ய வேண்டி இருந்தது. அவன் வீட்டிற்குள் வந்த 55 வது நிமிடம் என் மீது சீராக இயங்கிக் கொண்டு இருந்தான். அச்சுதன் சிறிது தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் உச்சத்தை அடைந்து இருந்தேன். அவனது இயக்கம் வேகமாகி இருந்தது. அச்சுதனை பார்த்த போது கைகால்கள் நடுங்க உட்கார்ந்து இருந்தார். முகம் முழுவதும் வெளிறிப் போய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி இருந்தது. சிறிது நேரத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து இருந்தார். இதை எதையும் கவனிக்காமல் அவன் தனது எல்லையை அடைந்து இருந்தார்.

சில வினாடிகள் கண்களை மூடி இருந்த அவன் வேகமாக என்னை விட்டு எழுந்து வெளியேறினான். ஜன்னல் வழியே பார்த்த போது வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது. அச்சுதனும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அன்றைக்குப் பிறகு அவர்கள் இருவருமே என் வீட்டிற்கு வருவதே இல்லை. எங்காவது என்னைக் காண நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்..... ஒரு வித நடுக்கத்துடன்.

7 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :)

ஆயில்யன் said...

//இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.//
:((

:))

நட்புடன் ஜமால் said...

அந்த கவிதையையும் போட்டுங்க ‘தல’

Raju said...

நல்ல வார்த்தை பிரயோகம்.
"இயங்கிக் கொண்டிருந்தான்" , இன்னும் சில இடங்களில்..!
கதை நல்லாருக்கு ஜின்னா அண்ணே.

சென்ஷி said...

நண்பர் முத்துவேலின் கவிதையை நானும் படிச்சுருக்கேன். கவிதை வரிகள்ல விலைமகள்ன்னு வந்ததால உங்க கதைக்கருவும் அதைச் சுற்றியே புனையப்பட்டிருக்குது.

விலைமகளுக்கான குறியீட்டுத்தன்மை ஆண்களோட காமமா மாத்திரம் இருக்குறது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய விசயமாத்தான் மனசுக்கு படுது.

தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும்,நடக்கட்டும்..
ரொம்ப யோசிச்சிருப்பிங்கன்னு தெரியுது.

சுசி said...

அடுத்த தடவை தைரியமா போட்டிக்கு அனுப்பிடுங்க. இதையே இல்ல வேற எழுதி.