Tuesday, July 28, 2009

Tribute to Mohammed Rafi

பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளைப் பார்க்க மாட்டோம். ஏனெனில் எங்க வீட்டில் தமிழ் தவிர வேற மொழி தெரியாது. அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி படம், பாட்டு என்றால் வேப்பங்காய் தான். நான் இந்தியாவில் பார்த்த ஒரே ஹிந்தி படம் ஹம் ஆப் கே ஹைன் கெளன். அதுவும் என் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். தேனி சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.

நான் அப்ப துபாயில் வேலை செய்ய சென்றிருந்த நேரம். நான் தங்கி இருந்த கட்டிடத்தின் இரவுக் காவலாளி ஒரு பங்களாதேஷி. ஒருநாள் என்னிடம் வந்து நான் வைத்திருந்த டேப் ரிக்காடர்ரைக் கடனாகக் கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு அன்று இரவு லோக்கல் எஃப்.எம்மில் வரும் சில பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அப்போது துபாயில் ஒரே ஹிந்தி FM ரேடியோ தான். 106.2 HUM FM. ஷோபியா கான், சிக்கந்தர் போன்ற சிறந்த காம்பியர்களை உள்ளடக்கியது. வாகனத்தில் செல்லும் போது FM கேட்டுக் கொண்டே செல்வது எங்களது பொழுது போக்கு. மாலையில் 5:20 க்கு மட்டும் நம்ம ஆசிப் அண்ணாச்சி ஏஷியாநெட்டில் ரேடியோவில் வருவார்கள். ... பதிவை விட்டு ரொம்ப வெளியே போயாச்சு. திரும்ப விட்ட இடத்துக்கு வரலாம்.

அந்த பங்களாதேஷி பதிவு செய்தவை முகமது ரஃபியின் பாடல்கள். அன்று ரஃபியின் நினைவு நாள் என்பதால் சிறப்பு ஒளிபரப்பாக, இசையமைப்பாளர் நெளசாத், ரஃபி குறித்த நினைவுகளை பேசினார்கள். மறுநாள் அந்த கேசட்டைக் கேட்ட போது மெய்மறந்து விட்டேன்.

முகமது ரஃபி! இந்திய சினிமா பாடல்களை அறிந்தவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர். 1950 களில் ஆரம்பித்து 70 கள் வரை இந்திய சினிமாவை தனது காந்தக் குரலில் கட்டிப் போட்டவர். இசையமைப்பாளர் நெளசாத் அவர்களால் ஹிந்தி திரைவுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரஃபி சுமார் 25 வருடங்கள் வரை கொடி கட்டிப் பறந்தார் என்றால் அது மிகையாகாது.

அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.

ரஃபி பற்றி தனித் தகவல்களை சக பதிவர் ஒருவர் பதிவாக எழுதியுள்ளார். அன்று நெளசாத் அவர்கள் பேட்டி அளித்ததில் இருந்து என் நினைவில் இருப்பவைகளை எழுதுகின்றேன்.




நெளசாத் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடம் முதன் முதலில் வந்தார் ரஃபி. அதைக் குறித்து நெளசாத் கூறிய வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

* एक दिन एक नौजवान गायक मुझे आया नज़र !
जिसने रौशन कर दिए संगीत के शामो सहर !
जिक्र किसका कर रहा हूँ रफ़ी था उसका नाम !

ஒருநாள் ஒரு இளைய பாடகன் என் பார்வைக்கு வந்தான்
இசை உலகை பிரகாசிக்க வைத்தான் அவன்
நான் குறிப்பிடும் அந்த நபரின் பெயர் ரஃபி.

* ரஃபி காலத்திற்கு வருவதில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர்.

* ஒரு முறை ஒரு பாடல் பதிவு நடைபெற்றது. பகலில் பாடல் பதிவு முடிந்த திருப்தியில் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நெளசாத் அவர்களின் வீட்டிற்கு இரவு ரஃபி வந்துள்ளார்கள்.

ரஃபி : இன்று பாடிய பாடலை மீண்டும் பாடிப் பதிவு செய்ய வேண்டும்.

நெளசாத் : ஏன்? நன்றாகத் தானே இருந்தது. இதைச் சொல்லவா இரவில் கிளம்பி வந்தீர்கள்?

ரஃபி : ஆம்.. எனக்கு பாடியதில் திருப்தி வரவில்லை. உங்களுக்குத் தேவையான உணர்வை என்னால் அப்பாடலில் தர இயலவில்லை.(जस्बात ला न सका !)எனவே மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.

பிறகு திரும்பவும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.

* ஒரு கர்நாட்டிக் இசையுடன் கூடிய கொஞ்சம் கடினமாக பாடல் ஒன்று இருந்தது. (Madhuban Me Radhika )அதை வேறு ஒரு பாடகரை வைத்துப் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஃபி விடாப்பிடியாக அதை கேட்டு வாங்கிப் பாடினாராம்.

அவரது பாடல்கள் என்றும் இந்திய இசையில் நீங்கா இடத்தைப் பெற்று என்றும் வாழும்.

அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள்.. உங்களுக்காக.











இதில் கிடைக்காமல் போனது.... பீதே தினோம் கி யாத் சதாதி ஹை ஆஜ் பீ .. ஓ தின் பிர் கபி வாபஸ் ந ஆயேகி.. தமாம் உம்ர யோகி ரோயே ஜாயெங்கே.. என்ற பாடல். கிடைத்தால் எனக்கு லிங்க் தாருங்கள்.

...
...

9 comments:

நட்புடன் ஜமால் said...

நானும் அங்கிருந்த காலங்களில் கேட்டு இருக்கின்றேன்.

மற்றபடி நினைவில் இல்லை.

[[ஹிந்தி டைப்பிங்கும் தெரியுமா - ‘தல’ கலக்கல் தான்.]]

अस्सा!

Raju said...

கேள்விப்பட்டிருக்கிறேன்.
முகமது ரஃபிக்கு அஞ்சலிகள்.

எம்.எம்.அப்துல்லா said...

//பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளைப் பார்க்க மாட்டோம். ஏனெனில் எங்க வீட்டில் தமிழ் தவிர வேற மொழி தெரியாது. அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி படம், பாட்டு என்றால் வேப்பங்காய் தான். நான் இந்தியாவில் பார்த்த ஒரே ஹிந்தி படம் ஹம் ஆப் கே ஹைன் கெளன். அதுவும் என் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். தேனி சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.
//

அப்படியே எனக்கும் பொருந்துகின்றது.ஹம் ஆப் கே ஹைன் கெளன் நான் பார்த்தது திருச்சி மாரீஸ் தியேட்டரில்.

Unknown said...

நான் ஹிந்தி படம் பார்க்க ஆரம்பித்த புதிதில் ரெண்டு பக்கமும் ஹிந்தி தெரிந்த நண்பர்களை வைத்துக்கொண்டு படம் பார்ப்பேன். தொந்தரவு தருவேன் என்பதை முன்னாலேயே சொல்லிவிடுவேன். இப்போ அந்தப் பிரச்சனை இல்லை, சப் டைட்டில் காப்பாத்துது.

ரஃபி சாஹேப் பாடல்களை அவரது குரலுக்காக ரசிக்க முடியும்போதிலும் மொழி புரிந்தால் இன்னும் அதிகம் ரசிக்க முடியுமே என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. அந்த ஏக்கம் சமீபத்தில் அஸ்லாம் பாடிய பாடல்கள் கேட்டபோது இன்னும் அதிகம் ஆனது.

நிஜமா நல்லவன் said...

/ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்/

ம்ம்

Unknown said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...

ஆனா நான் ஹிந்தி பாட்டு கேக்குறது குறைவு தல...

ராமலக்ஷ்மி said...

முகமது ரஃபியின் கலெக்‌ஷன் இருக்கிறது வீட்டில். காலத்துக்கும் நிற்கும் அவர் பாடல்கள்! நினைவு கூறும் அஞ்சலிப் பதிவு நன்று தமிழ் பிரியன்!

Sanjai Gandhi said...

கேக்க நல்லா தான் இருக்கு... ஆனா பிரில :)