Thursday, February 25, 2010

இயற்கையான அழகி.. என் வீட்டிற்கு எதிரே

அவளை எப்ப முதன் முதலா பார்த்தேன்னு நினைவில் இல்லை.. ஆனா பார்த்த நாள் முதலாய் மனசுக்குள் நெருப்பு பத்திக்கிச்சு.. எப்ப பார்த்தாலும் மனசுக்குள் மத்தாப்பு தான்.. அழகா இருப்பான்னு சொன்னால் அது தப்பா போய்டும்... ஏன்னா எழுத்தாளர்கள் எல்லாம் அழகான என்ற அர்த்தத்தில் சொன்ன மொக்கை பிகர்களோடு இவளையும் சேர்த்து ஒப்பீடு செய்ய வேண்டி வந்து விடும்.. இவ அதுக்கு எல்லாம் மேலே..

அதுக்காக எண் கணிதத்தின் துணையோடு பெருமிதமா அங்கங்களை வர்ணிக்கவும் முடியாது.. நார்மல் தான்.. ஆனா அழகு... கொஞ்சம் மாநிறத்தில், சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு அழகி.. எவன் பார்த்தாலும் கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று சொல்லவும் முடியாத அழகு... மத்தவர்களுக்கு எப்படியோ எனக்கு அவள் அழகியாத் தெரிந்தாள்.

எப்படி அவளை அறிந்தேன்... என்ன பெரிய அறிதல், புரிதல் எல்லாம்.. முன் வீட்டில் புதிதாக குடி வந்து இருந்தாள். அவங்க அப்பாவுக்கு இங்க இருக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு பண்ணாடைக் கம்பெனியில் வேலையாம்.. மாற்றலாகி இங்க வந்து இருக்காங்க போல.. ஒரு குட்டி தம்பியும் இருக்கான் அவளுக்கு.. கதாநாயகின்னா ஒரு குட்டி தம்பியும், தங்கையும் இருக்கனும் என்பது எழுதப்படாத விதி போல..

அரசல் புரசலாக அவளை பல முறை பார்த்து இருந்தாலும் வீட்டிற்கு முன்னாடி கோலம் போடும் போது தான் அவளைப் பார்த்தேன்.. எங்க தெருவில் இருக்கும் எந்த பொண்ணும் இப்பவெல்லாம் கோலம் போடுவதே இல்லை... நான் சின்ன வயசில் இருக்கும் போது, எனது சீனியர்கள் எல்லாம் கோலம் போடும் நேரங்களில் சைக்கிளில் வலம் வருவார்கள்.... இதனால் சில நேரங்களில் பொண்ணுகளின் கடைக்கண் பார்வையும், பல நேரங்களில் நைட்டி ஆன்ட்டிகளின் திட்டுக்களையும் மானாவாரியாக அள்ளிச் செல்வார்கள்.

இப்ப இருக்கும் பொண்ணுகள் எல்லாம் பாவம் போல.. எல்லாம் காலையில் வேகவேகமா பஸ் பிடிச்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் போய்ட்டு நைட் தான் வீட்டுக்கு திரும்புதுங்க.. இதில் வீட்டை பெருக்குவதாவது.. கோலமாவது...ஆங் எங்க விட்டேன்.. கோலம் போடும் போது... அப்ப தான் வீட்டு வாசலில் பேப்பர்க்காரன் விட்டு விட்டுப் போன தி ஹிந்து பேப்பரை எடுக்க வெளியே போனேன் என்று எழுதத் தான் ஆசை... ஆனா என்ன செய்ய வீட்டில் இருக்கும் பசு மாட்டை அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் இரை மேய பத்திக் கொண்டு போகும் போது தான் அவளைப் பார்த்தேன்.

அவளை ஏற்கனவே முன்னாடியே வர்ணிச்சாச்சு.. அதனால் நேரா மேட்டருக்கு போகலாம்... என்னன்னா அவளுக்கு என் மீது எப்படி காதல் வந்துச்சு என்பது தான்... நானே எருமை மாட்டுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருப்பேன்.. அவளுக்கு என் மீது எப்படிக் காதல் வந்தது? ஏன் எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜனைப் பார்த்து அந்த ஒல்லியா சிகுசிகுன்னு வளர்ந்து இருக்குமே அந்த அம்மாவுக்கு காதல் வரலையா? அது மாதிரின்னு நினைச்சுக்கங்க...



அவளோட தம்பி தான் எங்க காதலுக்கு தூதவனோ என்று நினைச்சுக்காதீங்க.. அந்த படுபாவி தான் வில்லன்... இவ சிரிச்சாலே அவன் என்னை முறைப்பான்... அவகிட்ட நான் வாங்கிய முத்தத்தையோ, அவளுக்கு நான் கொடுத்த ஆங்கிலப் பட கிஸ்ஸையோ பார்த்து இருந்தான் அம்புட்டுத் தேன்... ஊரில் எனக்கு பெரிய ஆப்பா சீவி வச்சு இருப்பான்.. நல்லவேளை மாட்டலை..

அவளை நான் லவ் பண்ண ஆரம்பிச்சதில் இருந்தே ஊர்க்காரப் பயலுவலுக்கு ஒரே பொறாமை.. எல்லாம் காதிலும் புகை... எப்படித் தான் இந்த மேட்டர் ஊர்க்குள்ள பரவுதோ.. எல்லா திருவாத்தானுகளும் இதே வேலையா அலையுதானுக... கடைசியா ரெண்டு வீட்டுலயும் தெரிஞ்சு போச்சு... அவங்கப்பன் குய்யோ முறையோன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறான்.. பின்னே பக்கத்து டவுன் டாஸ்மாக் பாரில் அவன் வாங்கின குவாட்டரில் ஓசியில் முக்கால்வாசியை குடித்தவன் தான் மாப்பிள்ளைன்னா எந்த அப்பன் தான் ஒத்துக்குவான்.. ஆனா நம்ம ஆளு படு ஸ்ட்ராங்.. காதல் பட கதாநாயகி மாதிரி எல்லாம் ஓவரா போகலை,,, நீ வேணா செத்துப் போ.. நான் அவனைத் தான் கல்யாணம் கட்டுக்குவேன்னு சொல்லிடுச்சு...

அவங்கப்பனுக்கு விக்கினதுமில்லை, விரைச்சதுமில்லை.. ஸ்ட்ரக்கப் ஆயிட்டான்.. அப்புறம் என்ன வேற வழி இல்லாம எனக்கே கல்யாணம் முடிச்சுத் தருகிறேன்னு எங்க வீட்டு வாசப்படி ஏறி வந்துட்டான்.. அடுத்த வாரமே கல்யாணம்...

இதுவரை எழுத வேண்டிய சிறுகதையை எழுதி வைத்து விட்டு படித்துக் கொண்டு இருந்தேன்.. பின்னாடி இருந்து கழனித் தண்ணி மீதியை தலையில் விசிறி அடித்து விட்டு அப்பத்தா கத்தத் தொடங்கினார்.. “ஏண்டா? சல்லவாரி நாயே.. அப்ப இருந்து பசு மாடு கத்துது அதைக் கொண்டு போய் தோட்டத்துல கட்டுன்னு நாயா பேயா கத்திக்கிட்டு இருக்கே... பேப்பரிலே ஏதோ ஜில்லா கலெக்டர் பரிட்சைக்கு போறவன் மாதிரி உட்கார்ந்து கிறுக்கிகிட்டு இருக்க... ஒன்னு ஏதாவது பொஸ்தகத்தை எடுத்து படிச்சிட்டு லூசு மாதிரி மோட்டு வளையைப் பார்க்குறான்.. இல்லைன்னா எதையாவது எழுதுறான்.. என்னைக்கு தான் திருந்த போறானோ என்று புலம்பிக் கொண்டே போனாள்.

மாட்டை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த போது, என் காதலி குடி இருக்கும்\இருந்த வீட்டில் பல ஆண்டுகளாக குடி இருக்கும் வள்ளிக் கிழவி வீட்டின் முன் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

22 comments:

ஆயில்யன் said...

முதல்லேர்ந்து ஆரம்பிக்கவா இல்ல முடிச்ச எடத்திலேர்ந்து ஆரம்பிக்கவான்னு ஒரு சின்ன கொயப்பம் !!! ???

ஆயில்யன் said...

சரி எது எப்படி இருந்தா என்ன ஸ்டார்ட் மியூசிக்!

ஆயில்யன் said...

ஏன்ய்யா? சல்லவாரி $%^$&& .. காலையிலேர்ந்து ஸ்பான்சர் கத்திக்கிட்டிருக்கான் அவன் கூட ஆபிசுக்கு போனேமான்னு இல்லாம ஏதோ கிளையண்ட் சைடு ஆளு மாதிரி கம்யூட்டர்ல எதையோ தட்டிக்கிட்டு இருக்கீயளே ஒண்ணு எதாச்சும் நாலு வார்த்தை கேப் வுட்டு அடிச்சு வைச்சுக்கிட்டு கதை எழுதப்போறேன் கதை எழுதப்போறேன்னு சீனை போட்டுக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு - என்னிக்கித்தான் திருந்தப்போறீயளோ?

ஆயில்யன் said...

//ஏன்னா எழுத்தாளர்கள் எல்லாம் அழகான என்ற அர்த்தத்தில் சொன்ன மொக்கை பிகர்களோடு இவளையும் சேர்த்து ஒப்பீடு செய்ய வேண்டி வந்து விடும்.. இவ அதுக்கு எல்லாம் மேலே.எவன் பார்த்தாலும் கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று சொல்லவும் முடியாத அழகு.//


மொக்கை ஃபிகர்ன்னு மட்டம் தட்டிட்டு மட்டமான ஃபிகரை பத்தி மொக்கை போடும் கதை வரிகளுக்கு கடுமையான கண்டனங்கள் !

ஆயில்யன் said...

//கதாநாயகின்னா ஒரு குட்டி தம்பியும், தங்கையும் இருக்கனும் என்பது எழுதப்படாத விதி போல..//

அப்பிடியெல்லாம் 1ம்மில்ல விஜய்யோட போக்கிரி படம் பார்த்த எஃபெக்ட்டோட கதை எழுதுனா இப்பிடித்தான்!

ஆயில்யன் said...

//எங்க தெருவில் இருக்கும் எந்த பொண்ணும் இப்பவெல்லாம் கோலம் போடுவதே இல்லை//


ஏன் கோலப்பொடி பயங்கர டிமாண்டா?

ஆயில்யன் said...

//பேப்பர்க்காரன் விட்டு விட்டுப் போன தி ஹிந்து பேப்பரை எடுக்க வெளியே போனேன் என்று எழுதத் தான் ஆசை... ஆனா என்ன செய்ய//


மொக்கை பிகரை பத்தி ஆஹா ஒஹோன்னு பில்ட்-அப்ப செய்யத்தெரியுது மாடு மேய்க்கிறதை மட்டும் சொல்றதுக்கு என்ன வெக்கம் வேண்டிகெடக்கு?:

ஆயில்யன் said...

//நானே எருமை மாட்டுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருப்பேன்.///

இது என்ன மாதிரி புனைவு???

செவனேன்னு கிடக்கிற எருமை மாட்டுக்கு ஏண்டாப்பா பெயிண்ட் அடிச்சு பாக்குறீங்க?

ஆயில்யன் said...

//ஊரில் எனக்கு பெரிய ஆப்பா சீவி வச்சு இருப்பான்.. நல்லவேளை மாட்டலை..
//
மாட்ட வைச்சிருந்தா அவன் கெட்டிக்காரன் மாட்டாம இருந்ததால நீதான்ய்யா ரொம்ப கெட்டிக்காரன்!

ஆயில்யன் said...

டோட்டலா படிச்சு பார்த்ததில சாரி படிச்சதுல - பிகரை பார்க்கமுடியல ஒரு சின்ன போட்டோ போட்டிருந்திருக்கலாம் - கதை ஒஹோஹோஹோ!

வாழ்த்துக்கள் !

ஆயில்யன் said...

ஆனால் இந்த கதைக்கு வித்யா பாலன் படம் போட்டதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது! மனசு கெடந்து அழுவுதுய்யா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன நடக்குது இங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ளாகில் கதை எழுதிட்டு திரும்பினா .. ஆயில்யன் இப்படி கமெண்ட் போடுவார்ன்னு தமிழ் என்ன கண்டாரா.. :)

நல்லா இருக்கு கதை(கனவு)

gulf-tamilan said...

இந்த கதைக்கும் வித்யாபாலனுக்கும்(வேற நல்ல ஸ்டில் கிடைக்கலையா?) என்ன தொடர்பு??? :)))

நாணல் said...

:) நல்லா இருக்கு... இதைப் படிச்சவுடனே , கலைஞர் டீவில “நாளைய இயக்குனர்” போட்டியில வந்த குறும்படம் நியாபகத்துக்கு வந்தது....

சீக்கிறம் சுபமாகட்டும் கதையில்.... :)

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது .பகிர்வுக்கு நன்றி !

நட்புடன் ஜமால் said...

ஆயில்ஸ் பேச்சை கேட்டு நீங்க போட்டோ போட்டது தப்புங்குறேன்

---------------

அது எப்படி பாஸூ இயற்கையிலேயே அழகானவங்கள்ளாம் உங்கள மாதிரி ஆளுங்க வீட்டிற்கு எதிரே வாறாங்க

---------------

திடீர் டவுட்டு நீங்க சொன்ன அழகி அந்த “வள்ளி”யா

அன்புடன் அருணா said...

அய்யோ கனவா!

சந்தனமுல்லை said...

hahahaa ...கதைய விடடாஅயில்ஸ் கமெண்ட்ஸ் கலக்கல்...அப்படியே ஜமால் கேல்வியும்! :-)

சந்தனமுல்லை said...

/ ஆயில்யன் said...

ஆனால் இந்த கதைக்கு வித்யா பாலன் படம் போட்டதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது! மனசு கெடந்து அழுவுதுய்யா!/

அதேதான்...;-)

கண்மணி/kanmani said...

அவ்வ்வ் படம் போடலியேன்னு பாத்தா [லோடு ஆகலை]
வித்யாபாலன் படமா...ஓகே ஓரளவுக்கு.
:))))))ஏன்னா அழகா இல்லையானு சொல்ல முடியாது;)

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை:))!

ஆயில்யன் அடித்து ஆடி இருக்கிறார்:)!