Monday, June 9, 2008

ஜிவாஜி வாயிலே ஜிலேபி

கி.பி 2099 ஜூன் 9 ந்தேதி காலை 6:15
அப்போது தான் தனது அபிமான நடிகையுடன் கனவில் சாட்டிங் செய்து கொண்டிருந்தான். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அலாரம் விடாமல் அடிக்க ஆரம்பித்தது. கனவு கலைந்த எரிச்சலில் கட்டிலை விட்டு இறங்கியதும், அலாரம் தானாக அடிப்பதை நிறுத்த, கட்டில் தானாக மடங்கி சுவருக்குள் சென்றது. ஆயாசமாக உணர்ந்தாலும் இன்னும் ஒரு மணி நேரம் தூங்க அவனுக்கு அனுமதி கிடையாது. இன்னும் 5 நிமிடத்தில் ஷவரில் தண்ணீர் வர ஆரம்பமாகி விடும். 4 நிமிடம் 20 நொடிகள் மட்டுமே அவனுக்கு குளிக்க அனுமதி... விரைவாக தயாராக ஆரம்பித்தான்.
குளித்து விட்டு வர அவனுடைய அறிவிப்பு பலகையில் அன்று அணிய வேண்டிய ஆடையின் அறிவிப்பு இருந்தது, அவனுக்கு முற்றிலும் பிடிக்காத நிறம்... எரிச்சலுடன் அணிந்து கொண்டான். தானியங்கி கதவு தானாக திறக்க வீட்டை விட்டு வெளியே வந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது. தானியங்கி லிப்ட் மூலம் கீழே வந்தான். கட்டிடத்தின் வெளியே அவனுக்கான வாகனம் தயாராக இருந்தது. கடிகாரத்தைப் பார்க்க இன்னும் 2 நிமிடம் 40 வினாடிகள் இருந்தது. கட்டிட முகப்பில் இருந்த தானியங்கி உணவு இயந்திரத்தில் தனது அடையாள அட்டையை செருக அது அன்றைய காலை உணவாக 4 மாத்திரை கொண்ட அட்டையை துப்பியது. நேற்று இணையத்தில் பார்த்த நூற்றாண்டுக்கு முந்திய தோசை, இட்லி போனறாவைகளை நினைத்து நொந்து கொண்டே அட்டையைப் பிரித்து வில்லைகளை விழுங்கினான்.
இங்கு இவனைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடலாம். இவன் பெயர் JBRQA762118456. வயது 26. அரசாங்கத்தால் இவன் கருவில் இருக்கும் போதே இந்த பெயர் வைக்கப்பட்டுவிட்டது. மேலும் இவனது படிப்பு, வேலை, திருமணம் மற்றும் மரணம் அப்போதே முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்காக பூமியில் பொட்டி தட்டுகிறான்.
தனது வாகனத்திற்கு அருகில் வந்த போது ரோபோ ஓட்டுனர் காலை வணக்கம் சொல்லியது. வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் அங்கிருந்த டிஜிட்டல் போர்ட் இன்னும் வாகனம் 20 வினாடிகளில் கிளம்பும் என அறிவித்தது. அவன் அசதியாக கண்ணை மூடியதும் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் நினைவு வந்தது. வாகனத்தில் குலுக்கலில் கண்ணைத் திறந்த போது பூமியில் இருந்து வாகனம் 4000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வான் வெளியிலும் வாகனப் போக்குவரத்து மிகைத்து இருந்ததை பார்க்க முடிந்தது. ரோபோ இன்னும் 17 நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்து விடலாம் என அறிவித்து விட்டு செய்திகளை வாசிக்கத் தொடங்கியது. இதை நிறுத்தவும் இயலாது. அரசாங்கம் கண்டிப்பாக வாகனத்தில் காலையில் செல்லும் போது செய்திகளை கேட்பதை கட்டாயமாக்கி விட்டது. செவ்வாயின் வட துருவத்தில் உள்ள பனிக்கட்டிகளை உருக்கி தண்ணீராக மாற்ற செவ்வாயின் மீது ஏற்படுத்தப்பட்டு வரும் சூரிய வெப்ப தடுப்பான்களைப் பற்றியும், 47 வது கேலக்ஸியின் சூரியன் தனது ஆர்பிட்டில் இருந்த கோள்களை தனக்குள் கவர்ந்து பெருத்து வெடித்துச் சிதறியதையும், கட்டாய மரண ஓய்வை 65 வயதிலிருந்து 64 வயதாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்தும், தமிழ் தான் நிலையான சிறந்த மொழி என்று ஒரு தமிழறிஞரின் ஆய்வைப் பற்றியும் ரோபோ கூறிக் கொண்டே வந்தது.
சரியாக 17 வது நிமிடம் அவனது வாகனம் அலுவலகத்தை வந்து அடைந்தது. அவனது இருக்கையில் அவன் அமர்ந்ததும் கணிணித் திரை தானாக ஒளிர்ந்தது. இணைய உலாவியைத் திறக்க அது அவனது உலாவியின் முதல் பக்கமான தமிழ்மணம்.காமிற்கு சென்றது. வழக்கம் போல் அது மெதுவாக திறக்க அடுத்த டேபில் (TAB) மின்னஞ்சலைப் பார்க்கலானான். வழக்கம் போல் நேற்று போட்ட பதிவுக்கு செவ்வாயில் பணி செய்து வரும் அவனது இணைய நண்பன் மீ த பர்ஸ்ட் என்று ஆரம்பித்து 10 கமெண்ட்களைப் போட்டு கும்மி அடித்திருந்தார். பூமியின் வேறு பகுதியில் இருந்து ஒருவர் நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் இட்டு இருந்தார். நிலாவில் கட்டுமானப் பணியில் இருக்கும் ஒரு நண்பர் தொடர் பதிவு விளையாட்டுக்கு டேக் அழைப்பு விடுத்திருந்தார்.
தலைப்பு : ஜிவாஜி வாயிலே ஜிலேபி

டிஸ்கி : இது ஜீவ்ஸ் போட்ட ஜிவாஜி வாயிலே ஜிலேபியில் ஆயில்யனை டேக் செய்திருந்தார். ஆயில் நம்மை டேக் செய்ய நாம் தொடர் பதிவுக்கு டேக் செய்வது
1. அண்ணன் மங்களூர் சிவா
2. அண்ணன் நிஜமா நல்லவர்
3. அண்ணன் 'காதல் கறுப்பி' தமிழன்

34 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்கு:)))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரவாயில்ல அப்பயும் தமிழ்மணம் தான் அலுவலகம் வந்ததும் முதல்ல பார்ப்பீங்களோ..

கண்மணி/kanmani said...

ஹூம் அப்பவும் தமிழ்மணம் ஸ்லோவாகத்தான் ஓப்பன் ஆகுமோ?

ராமலக்ஷ்மி said...

இப்படி ஒரு தலைப்புக்கு இவர் எப்படித்தான் எழுதியிருக்கிறார் என்று பார்ப்போமே என வந்தேன். கடைசியில், திருநெல்வேலிக்கே அல்வாவா என எல்லார் வாயிலும் திணிச்சிட்டீங்க 'ஜிலேபி'யை. வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு:)

புகழன் said...

இப்படி ஒரு தொடர் விளையாட்டு இருக்கிறதே உங்க பதிவிலிருந்து இப்பத்தான் தெரிந்து கொண்டேன்.
ரெம்பவே சுவார்ஸ்யமாக இருக்கிறது.

புகழன் said...

ஏங்க கனவில் கூட சாட்டிங்தான் பண்ணனுமா? வேற எதாவது?

புகழன் said...

2099லயும் ஜிவாஜி வாயிலே ஜிலேபி தானா?

மங்களூர் சிவா said...

http://mangalore-siva.blogspot.com/2008/06/blog-post_09.html

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு:)))))))))

ஜெகதீசன் said...

கலக்கீட்டீங்க....
:))

வல்லிசிம்ஹன் said...

நல்லாவே சுத்திட்டீங்க தமிழ்:)

cheena (சீனா) said...

நல்லா இருக்கு - சிவாஜி வாயிலே ஜிலேபி

இப்படி நடந்தா எப்படி இருக்கும் - பட்டி மன்றம் தொடருவோமா

தமிழன்-கறுப்பி... said...

இப்பத்தான் வந்தேன்...

தமிழன்-கறுப்பி... said...

என்னடா இது ஒரே மாதிரி தலைப்புல நாலைஞ்சு பதிவு சுத்திக்கிட்டு இருக்கேன்னு பாத்தா...

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே என்னண்ணே சின்னப்பையனை போய் பெரிய சிக்கல்ல மாட்டி விட்டுட்டிங்க...?

தமிழன்-கறுப்பி... said...

உங்க பதிவு கலக்கல்..:))

நம்மாலை முடியாதப்பா...முயற்சி பண்ணி பாக்குறேன்...

தமிழன்-கறுப்பி... said...

இன்னைக்கே பதிவு போடணுமா சிவாண்ணன் மாதிரி பதிவு போடா பரவாயில்லையா...

தமிழன்-கறுப்பி... said...

எல்லா கதையில இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து கொடுத்து பதிவு ஆகிடுச்சுன்னு தப்பிச்சுரலாம்...

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.


ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.


கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?


படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://tamil.isgreat.org போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.


எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்

தமிழன்-கறுப்பி... said...

யாருப்பா அது திருச்சிராப்பள்ளி தமிழச்சி எனக்கு எதுவுமே புரியலை...

தமிழன்-கறுப்பி... said...

புகழன் சொன்னது..

///ஏங்க கனவில் கூட சாட்டிங்தான் பண்ணனுமா? வேற எதாவது?///

அப்ப என்ன பண்ணலாம் நீங்களெ சொல்லுங்க...

தமிழன்-கறுப்பி... said...

புகழன் சொன்னது..

///2099லயும் ஜிவாஜி வாயிலே ஜிலேபி தானா?///

அந்த நேரத்தில இந்த கதைகள் வரலாறுகளாக இருக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

தல ஒரு வழியா என்னையும் எழுத வச்சிட்டிங்களே...

தமிழன்-கறுப்பி... said...

எங்க போயிட்டிங்க தல...
தூக்கமா? அப்ப நானும் கிளம்பறேன் வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையும் செய்யணும்ல..:)

M.Rishan Shareef said...

சூப்பர் :))))))))))))))))))

ஆபிஸ்ல இது தான் வேலையா? :P

M.Rishan Shareef said...

உங்களை இங்கே காணோமே?

http://www.vavaasangam.blogspot.com

Thamiz Priyan said...

/// ஆயில்யன் said...

நல்லா இருக்கு:)))))))))///
நன்றி ஆயில்யன்

Thamiz Priyan said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...

பரவாயில்ல அப்பயும் தமிழ்மணம் தான் அலுவலகம் வந்ததும் முதல்ல பார்ப்பீங்களோ..///
அங்க கண்ணியெல்லாம் இல்லைக்கா.. வீட்டிற்கு வந்ததும் தான் தமிழ்மணம்.. :))

Thamiz Priyan said...

///கண்மணி said...

ஹூம் அப்பவும் தமிழ்மணம் ஸ்லோவாகத்தான் ஓப்பன் ஆகுமோ?///
வாங்க டீச்சர், என்ன செய்ய அவங்க என்ன சொன்னாலும் எனக்கு இப்பவரை ஸ்லோவாகத்தான் இருக்கு... இப்படியே தான் இனியும் இருக்கும்ன்னு நம்பிக்கை... :(

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

இப்படி ஒரு தலைப்புக்கு இவர் எப்படித்தான் எழுதியிருக்கிறார் என்று பார்ப்போமே என வந்தேன். கடைசியில், திருநெல்வேலிக்கே அல்வாவா என எல்லார் வாயிலும் திணிச்சிட்டீங்க 'ஜிலேபி'யை. வாழ்த்துக்கள்!///
வாங்கக்கா! ஆனா நீங்க கொடுத்த ஜிலேபி சூப்பரா இருந்தது... :))

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு:)///
நன்றிண்ணே... :)

Thamiz Priyan said...

///புகழன் said...

2099லயும் ஜிவாஜி வாயிலே ஜிலேபி தானா? ///
வாங்க புகழன்... தலைப்பை கொண்டு வ்ரணுமே... :))))

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நியாயமாண்ணே...