Thursday, June 12, 2008

மெக்கா புனித பயணம் - சில நினைவுகள் - பின்லேடன் நுண்ணரசியல்

மத நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தாங்கள் புனிதமாக நம்பும் இடங்களுக்கு செல்வது என்பது ஒரு கனவாகவே இருக்கும். முஸ்லிம்களுக்கு புனித மக்கா பயணம் என்பது ஒரு மிகப் பெரிய இறைவனின் கருணை என்றே கூறலாம். அதிலும் இந்தியாவில் இருந்து செல்வது பணம், உடல்நலம் காரணமாக பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கும்.
முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்வது என்பது மூன்று பள்ளிகளில் தொழுகைக்காக மட்டுமே இருக்கும். மக்கா, மதினா, ஜெருசலம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே நன்மையை நாடி செல்ல தகுதி படைத்தவை.
(இந்தியாவில் இருப்பவர்கள் அஜ்மீர், நாகூர், ஏர்வாடி என்று செல்வது தவறான வழிகாட்டல்களில் அடிப்படையில் நிகழ்வது... அதற்கும் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாத்தின் அடிப்படையில் அங்கு செல்வது பாவமான காரியமாகும்.)

அப்படிப்பட்ட மக்காவிற்கு செல்லும் வாய்ப்பு இறைவனின் அருளால் சமீபத்தில் 2002 ல் துபாயில் இருக்கும் போது கிடைத்தது. சின்ன (?) வயதில் ஹஜ் செய்யும் நோக்கத்தில் அங்கிருந்து சவுதி சென்று ஒரு மாதம் தங்கினோம். மீண்டும் இங்கு வரும் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சிந்தினையில் தான் அங்கிருந்து திரும்பினோம்.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

2005 வரை துபாயில் ஆணி பிடுங்கி விட்டு, ஒரு வருடம் ஊரில் ஆணி பிடுங்குவதில் தோல்வி அடைந்து மீண்டும் வந்து சேர்ந்த இடம் சவுதி. அதிலும் மக்காவிற்கு மிக அருகில் வேலை அமைந்து இரண்டு வருடமாகப் போகின்றது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறை உம்ரா பயணம் மேற்கொள்ள முடிகின்றது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

இப்போது சவுதியில் வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது. சவுதி மன்னர் குடும்பம், பணியாளர்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நாங்கள் இருக்கும் மலைப்பகுதி மாளிகைக்கு வரத் தொடங்கி விட்டனர். எனவே ஆணிகளால் முழி பிதுங்கி நிற்கிறோம்.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

கடந்தவாரம் புதன்கிழமை இரவு மக்கா பயணம் மேற்கொண்டோம். வியாழன் வெள்ளிகளில் விடுமுறை என்பதால் கூட்டமாக இருக்குமென்பதால் புதன்கிழமை இரவைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். எங்கள் இடத்தில் வெப்பநிலை 95 டிகிரி என்றால் மக்காவில் 110 இருக்கும். எனவே இரவோடு இரவாக சென்று திரும்புவது வழக்கம். பயணம் சிறப்பாக இருந்தது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

மக்கா பள்ளியைச் சுற்றி கிழக்கே 500 மீட்டர் தூரத்திற்கு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பள்ளி விஸ்தரிப்பு பணிகள் நடக்கின்றன. அதே போல் பள்ளியில் உள்ளே சயி செய்யும் இடங்களிலும் விஸ்தரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

புதன் கிழமை என்பதால் கூட்டம் குறைவாக இருந்ததால் தவாப், தொழுகை, சயி போன்றவைகளை சுலபமாக நிறைவேற்ற முடிந்தது. மனமும் லேசாக இருந்தது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

ஈரான், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து நிறைய பேர் உம்ரா வந்திருக்கின்றனர். அவர்கள் மொத்தமாக இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவது ரசிக்கும்படி இருக்கின்றது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

சிறு குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருக்கின்றனர். அவர்களில் சேட்டைகளை பார்க்கும் போது, காலடி ஓசை கேட்டவுடனே ஓடி வரும் மகனின் நினைவு வந்தது,... :(

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

சவுதியில் உள்ள இரண்டு புனிதத் தளங்களிலும் பராமரிப்பு பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொள்வது பின்லேடன் குழுமம் தான். அவர்களில் முக துரிதமாக பணிகள் பிரமிக்க வைக்கும். இப்போது பணியாளர்களில் சீருடைகளில் இருந்த பின்லேடன் குழுமத்தில் பெயரும், அவர்களில் லோகோவும் துணி வைத்து தைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. உலக எண்ணைய் வளத்தைத்தின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்டுள்ள சவுதி அரசின் நுண்ணரசியலின் இன்னொரு பக்கம் சிரிப்பைத் தான் வரவழைத்தது.

10 comments:

தமிழன்-கறுப்பி... said...

அட இதெப்ப நடந்திச்சு...

தமிழன்-கறுப்பி... said...

சொல்லவே இல்ல....

தமிழன்-கறுப்பி... said...

///2005 வரை துபாயில் ஆணி பிடுங்கி விட்டு, ஒரு வருடம் ஊரில் ஆணி பிடுங்குவதில் தோல்வி அடைந்து மீண்டும் வந்து சேர்ந்த இடம் சவுதி. அதிலும் மக்காவிற்கு மிக அருகில் வேலை அமைந்து இரண்டு வருடமாகப் போகின்றது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறை உம்ரா பயணம் மேற்கொள்ள முடிகின்றது.////


அடிக்கடி போவிங்களோ...

தமிழன்-கறுப்பி... said...

///மக்கா பள்ளியைச் சுற்றி கிழக்கே 500 மீட்டர் தூரத்திற்கு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பள்ளி விஸ்தரிப்பு பணிகள் நடக்கின்றன. அதே போல் பள்ளியில் உள்ளே சயி செய்யும் இடங்களிலும் விஸ்தரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ///


ஆமா நானும் கேள்விப்பட்டேன்...

தமிழன்-கறுப்பி... said...

///சிறு குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருக்கின்றனர். அவர்களில் சேட்டைகளை பார்க்கும் போது, காலடி ஓசை கேட்டவுடனே ஓடி வரும் மகனின் நினைவு வந்தது,... ///

தல இன்னும் கொஞ்ச நாள்தான பொறுத்துக்குங்க...

("அப்பா"டா ஒப்புக்கிட்டாருப்பா...:)

தமிழன்-கறுப்பி... said...

/// இப்போது பணியாளர்களில் சீருடைகளில் இருந்த பின்லேடன் குழுமத்தில் பெயரும், அவர்களில் லோகோவும் துணி வைத்து தைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. உலக எண்ணைய் வளத்தைத்தின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்டுள்ள சவுதி அரசின் நுண்ணரசியலின் இன்னொரு பக்கம் சிரிப்பைத் தான் வரவழைத்தது.///


அட இது வேற இருக்கா ...

புதுகை.அப்துல்லா said...

அன்பின் தழிழ் பிரியன்
வருகின்ற 30 தேதி இந்தியாவில் இருந்து கிளம்பி உம்ரா வருகிறேன். 6 ஆம் தேதி வரை அங்கு இருப்பேன்.

ஜி said...

:)))

Vaazththukkal... Alhamdulillah... Neenga koduththu vachavanga... athaan adikkadi intha baakiyam kedaikuthu...

Thamiz Priyan said...

தமிழன், அப்துல்லா வருகைக்கு நன்றி! :) தாமதத்திற்கு மன்னிக்கவும்...

Thamiz Priyan said...

///ஜி said...

:)))

Vaazththukkal... Alhamdulillah... Neenga koduththu vachavanga... athaan adikkadi intha baakiyam kedaikuthu...////
வருகைக்கு வாழ்த்துக்கு நன்றி ஜி! இறைவனின் பெரிய கிருபைகளில் ஒன்றாகவே நினைக்கிறேன்... அல்ஹம்துலில்லாஹ்..