பாலையாய் இருந்த
பாதையில் சருகுகள்
விரிப்பாக...
விரைவாக நடக்கிறேன்...
உறவுகள் சுமையென
உதறும் மனிதர்கள் போல
இலைகள் சுமையென
இறக்கிய மரங்கள்
வெறுமையாய் நின்று
வெய்யிலை உணர்த்த ...
கண்ணீர் இன்றி வறண்ட கண்களும்
தண்ணீர் இன்றி வறண்ட நிலங்களும்
ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்ய ...
உயிரின் கடைசி துளி
ஈரப்பதத்தில்
இழுத்துக் கொண்டிருந்த
ஒரு உயிர்...
உயிர்த்தது
உன்னை கண்டு
உலகமே சோலையானது
உயிர் வசமானது
மரங்கள் பூத்தது
மனமும் குளிர்ந்து
மரணமும் இனித்தது
ஆம் உனது மடியில்
மரணம் கூட இனிக்கும்.
ஒவ்வொரு முறையும்
உன் மடியில் சாய்வதர்க்க்காகவே
மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் !
கவிதை எழுதியவருக்கு நன்றிகள்
12 comments:
test
வந்துட்டேன்...
கவிதை கவிதை...
தலை கவிதைக்கான சந்தர்ப்பம் என்ன...??? :)
///ஆம் உனது மடியில்
மரணம் கூட இனிக்கும்.///
ம்ம்ம்...
///ஒவ்வொரு முறையும்
உன் மடியில் சாய்வதர்க்க்காகவே
மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் ///
காதலில் தான் பிறப்பும் இறப்பும் பல முறை நிகழ்கிறது...!
//கவிதை எழுதியவருக்கு நன்றிகள்//
சும்மா வெக்கப்படாம உண்மையை ஒப்புக்கோங்க தல...:)
///உறவுகள் சுமையென
உதறும் மனிதர்கள் போல
இலைகள் சுமையென
இறக்கிய மரங்கள்
வெறுமையாய் நின்று
வெய்யிலை உணர்த்த//
ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள் :)
//உறவுகள் சுமையென
உதறும் மனிதர்கள் போல
இலைகள் சுமையென
இறக்கிய மரங்கள்
வெறுமையாய் நின்று
வெய்யிலை உணர்த்த ...//
இது அருமை:)
///தமிழன்... said...
///ஒவ்வொரு முறையும்
உன் மடியில் சாய்வதர்க்க்காகவே
மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் ///
காதலில் தான் பிறப்பும் இறப்பும் பல முறை நிகழ்கிறது...!///
காதல் கறுப்பா! நன்றி!
///ஆயில்யன் said...
///உறவுகள் சுமையென
உதறும் மனிதர்கள் போல
இலைகள் சுமையென
இறக்கிய மரங்கள்
வெறுமையாய் நின்று
வெய்யிலை உணர்த்த//
ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள் :)///
நன்றி ஆயில்யன்!
///ரசிகன் said...
//உறவுகள் சுமையென
உதறும் மனிதர்கள் போல
இலைகள் சுமையென
இறக்கிய மரங்கள்
வெறுமையாய் நின்று
வெய்யிலை உணர்த்த ...//
இது அருமை:)///
நன்றி ஸ்ரீதர்!
Post a Comment