இதற்கு பதில் அளித்த நண்பர் அறிவன் அவர்கள்
///பழுவேட்டரையர் மூலம் தெளிவாகவே குறிப்பிடுகிறார்,நந்தினி வீரபாண்டியன் மகள் என்று.
இதை ஆழ்வார்க்கடியானும் உறுதி -கருத்திருமன் மூலம்-செய்வான்....///
என்று கூறியிருந்தார். மேலும் சந்தேகத்தைத் தெளிவு படுத்தும் பொருட்டு
///பைத்தியக்காரன் - வந்தியத்தேவன் உதவியால் பாதாளச்சிறையிலிருந்து தப்பித்து ஓடும் போது ஆழ்வானிடம் படகில் மாட்டுவான்;அப்போதும் கருத்திருமன் முதலில்,தான் தான் அந்த இரு குழந்தைகளின் தகப்பன் எனக் கூறுவான்;பின்னர் ஆழ்வான் ‘நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கிக்' கேட்டவுடன்,இல்லை அந்த இரு குழந்தைகளும் என் எஜமானரின் குழந்தைகள்(வீரபாண்டியன்) என்பான்;புதைக்கப் பட இருந்த அவற்றை காப்பாற்றியது தான் தான் என்றும்,அதற்காகவாவது உயிருடன் விட்டு விடும் படியும் கேட்பான்;ஆழ்வான்,'உண்மையில் அதற்காகத்தான் விடுகிறேன்' பிழைத்துப் போ' என்று விடுவான்.
பின்னர் கதையில் நந்தினி கரிகாலரிடம் உண்மையைச் சொன்ன கணத்தில் பழுவேட்டரையர் மறைந்து கேட்பார்.
இத்தகவல் நந்தினியால் நேரடியாக அவருக்குக் குகையில் உறுதி செய்யப் படும்.
அதை பழுவேட்டரையர் அரசசபையில் தான் தற்கொலை செய்யும் முன்னர் பகிரங்கமாகத் தெரிவிப்பார்....///

இனி இது தொடர்பான நமது விஷயத்துக்கு வரலாம். நந்தினியின் பிறப்பு நடந்தது சோழ நாட்டில் அரண்மனைக்கு அருகிலேயே. அவளது தாய் ஊமையான மந்தாகினி அம்மையார். (வாணியின் தமக்கை). நந்தினியை பிரசவித்து விட்டு அவர் காணாமல் போய் விடுவார். மேலும் நந்தினிக்கும் மந்தாகினிக்கும் உள்ள உருவ ஒற்றுமை இதை மேலும் ஊர்ஜிதப்படுத்தி விடும். எனவே இதில் எந்த சந்தேகமும் இல்லை.
நந்தி்னியின் தந்தை யார் என்பது தான் இங்கு கேள்வி? முதலில் கதையோட்டத்தில் முதலில் நந்தினியின் தந்தையாக சுந்தரசோழனை நினைக்கும்படி கதை அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏதுவாக சுந்தர சோழரும் மந்தாகினியுடன் பழகி இருப்பார். ஆனால் சுந்தர சோழர் இலங்கையில் இருந்து திரும்பி இரண்டு ஆண்டுகள் கழித்தே நந்தினியும், (பழைய)மதுராந்தகரும் பிறந்ததால் அதற்கான வாய்ப்பே இல்லை. அடுத்து உள்ள வாய்ப்பு மதுரையின் அரசன் வீர பாண்டியன். வீரபாண்டியனின் பெயரைக் குறிப்பிட்டே கல்கி சில கதாபாத்திரங்கள் மூலம் இதை சொல்ல வைத்திருப்பதன் மூலம் அதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தோன்றுகின்றது.
முதலில் நண்பர் அறிவன் சொன்ன இரண்டு இடங்கள்
1. கருத்திருமன் ஆழ்வார்க்கடியானிடம் சொன்னது
இதில் தெளிவாக ஏதுமில்லை. ஏனெனில் என்ன பெயரை கருத்திருமன் சொன்னான் என்று அங்கு வரவில்லை.
///ஆழ்வார்க்கடியான் கருத்திருமனுடைய நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கி, "உண்மையைச் சொல்! மதுராந்தகன் யாருடைய மகன்?" என்று கேட்டான்.
"இது என்ன கேள்வி? செம்பியன் மாதேவியின்... இல்லை, இல்லை நெஞ்சை அமுக்காதே! என் உயிர் போய்விடும்! ஊமை மந்தாகினியின் மகன்."
"மதுராந்தகனின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்! இல்லாவிட்டால் உயிரோடு தப்ப மாட்டாய்!"
கருத்திருமன் இதற்குப் பதில் மிக மெல்லிய குரலில் சொன்னான். ///
2. பெரிய பழுவேட்டரையர் சொன்னது
////மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள்.///

///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"
வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///
மேற்காட்டியவைகளை வைத்து நந்தினி வீரபாண்டியனின் மகள் தான் என்று ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆனால் வேறு சில காரணங்கள் காட்டப்பட்டு நந்தினி வீரபாண்டியனின் மனைவி/காதலி என்றும் சொல்லப்படுகின்றது. அந்த காரணங்களையும், மேலே உள்ள மூன்று சாட்சிகளும் எவ்வாறு பொய்யாக முடியும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.........
............தொடரும்
29 comments:
பொன்னியின் செல்வன் அத்தியாயங்கள் மறந்து போச்சண்ணே
:( அதனால எனக்கு இன்னமும் நிறைய குழப்பம் இருக்கண்ணே...?
எனக்கு பொன்னியின் செல்வனை இன்னொரு முறை அனுபவித்துப்படிக்க வேண்டும்...
ஏதோ புரிகிற மாதிரி தெரியுது... ஆனால் வடிவேலு சொன்னா மாதிரி... வரும்... ஆனா... வராதுன்னு மாறி மாறி சொன்னானே... அப்பவே நான் புரிஞ்சிரிக்கனும்... நண்பரே புரிகிறதா...
நான் தான் பஷ்ட்டுனு சொல்லலாம் நெனைச்சேன் முடியல...
எனக்கு பொன்னியின் செல்வன் படிக்க கிடைக்கும் பொழுது நான் அந்த புத்தகத்தை வச்சிருக்கிறத பாத்த எங்கட ஊர் வாசகர்கள் "அடே உனக்கிது விளங்காதடா" எண்டு சொன்னவை,ஆனாலும் நான் எனக்கு முடிஞ்சவரை விளங்கித்தான் படிச்சனான் இருந்தாலும் இப்ப அது வாசிக்க கிடைத்தால் இன்னும் நிறைய ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்...
//அவளது தாய் பைத்தியக்கார ஊமையான மந்தாகினி //
எத வச்சி பைத்தியம்னு சொல்றீங்க... என்னால் எற்றுக் கொள்ள முடியவில்லை நண்பரே... விளக்கம் உண்டா??
////மேற்காட்டியவைகளை வைத்து நந்தினி வீரபாண்டியனின் மகள் தான் என்று ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆனால் வேறு சில காரணங்கள் காட்டப்பட்டு நந்தினி வீரபாண்டியனின் மனைவி/காதலி என்றும் சொல்லப்படுகின்றது. அந்த காரணங்களையும், மேலே உள்ள மூன்று சாட்சிகளும் எவ்வாறு பொய்யாக முடியும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.......///
????????!
எழுதுங்க தல படிக்கிறோம்...
நந்தினி மகனே என அழைக்கும் அச்சிறுவன் யாராக இருக்க முடியும்???
///VIKNESHWARAN said...
//அவளது தாய் பைத்தியக்கார ஊமையான மந்தாகினி //
எத வச்சி பைத்தியம்னு சொல்றீங்க... என்னால் எற்றுக் கொள்ள முடியவில்லை நண்பரே... விளக்கம் உண்டா??///
தவறுக்கு மன்னிக்கவும் விக்னேஷ்,,.... திருத்தி விட்டேன்.. அவர் முதலில் தன்னைப் பற்றிய நினைவு இல்லாமல் இருந்து பின்னர் ஒரு முறை கடலில் விழுந்து சு நினைவு பெறுவார். அதே போல் குழந்தைகள் பிறந்ததும் போட்டு விட்டு ஓடி விடுவார். அதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தில் எழுதி விட்டேன்,
இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது
அதித்தய கரிகாலன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா
///புருனோ Bruno said...
இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது
அதித்தய கரிகாலன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா///
வாங்க டாக்டர், ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தான் என்று சொல்ல இயலவில்லை. முதலில் கரிகாலனை கொன்றதாக ஒத்துக் கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் கூட பின்னர் ஆழ்வார்க்கடியானிடம் தாம் வீசிய கத்தி ஆதித்தனை தாக்கவில்லை சொல்லுவார். எனவே அது புரியாத புதிர் தான்.... ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ டாக்டர்... ஏனெனில் ஆதித்தன் ஏற்கனவே டென்சன் பார்ட்டி.. கோபத்தில் கத்த ஆரம்பித்து இரத்தக் கொதிப்பு அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம். அவன் உடம்பில் ஏதும் காயம் இருந்ததாகவோ, வந்திய தேவன் எடுத்த காளாமுகன் கொண்டு வந்த கத்தியிலோ, மணிமேகலையிடம் இருந்த கத்தியிலோ கூட இரத்தக்கரை இருந்ததாகவோ கூட அறிய முடியவில்லை.
பொன்னியின் செல்வன் அத்தியாயங்கள் மறந்து போச்சண்ணே
:( அதனால எனக்கு இன்னமும் நிறைய குழப்பம் இருக்கண்ணே...?
எனக்கு பொன்னியின் செல்வனை இன்னொரு முறை அனுபவித்துப்படிக்க வேண்டும்...
ஏதோ புரிகிற மாதிரி தெரியுது... ஆனால் வடிவேலு சொன்னா மாதிரி... வரும்... ஆனா... வராதுன்னு மாறி மாறி சொன்னானே... அப்பவே நான் புரிஞ்சிரிக்கனும்... நண்பரே புரிகிறதா...
எனக்கு பொன்னியின் செல்வன் படிக்க கிடைக்கும் பொழுது நான் அந்த புத்தகத்தை வச்சிருக்கிறத பாத்த எங்கட ஊர் வாசகர்கள் "அடே உனக்கிது விளங்காதடா" எண்டு சொன்னவை,ஆனாலும் நான் எனக்கு முடிஞ்சவரை விளங்கித்தான் படிச்சனான் இருந்தாலும் இப்ப அது வாசிக்க கிடைத்தால் இன்னும் நிறைய ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்...
////மேற்காட்டியவைகளை வைத்து நந்தினி வீரபாண்டியனின் மகள் தான் என்று ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆனால் வேறு சில காரணங்கள் காட்டப்பட்டு நந்தினி வீரபாண்டியனின் மனைவி/காதலி என்றும் சொல்லப்படுகின்றது. அந்த காரணங்களையும், மேலே உள்ள மூன்று சாட்சிகளும் எவ்வாறு பொய்யாக முடியும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.......///
????????!
எழுதுங்க தல படிக்கிறோம்...
இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது
அதித்தய கரிகாலன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா
ஆஹா... அதுக்குள்ள சர்ச்சையாக்கிட்டீங்களா???
நீங்க சொல்லிருக்குற எல்லா காட்சிகளுக்கு அப்புறமா கடைசியா குந்தவையும் வந்தியதேவனும் பேசுற மாதிரி ஒரு காட்சி இருக்கும். அதுல கருத்திருமன் தாந்தான் நந்தினியின் தந்தை என்று ஆழ்வார்கடியானிடம் கூறியதாக குந்தவை வந்தியதேவனிடம் சொல்லி அது உண்மையாக இருக்குமோ? ன்னு கேப்பா.
நீங்க சொன்ன எல்லா காட்சிகளுக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு சந்தேகத்த உண்டு பண்ணுகிற காட்சி வர்றதுதான் இங்க பிரச்சனை. அது போக, கல்கியோட முடிவுரைல ராஜ ராஜ சோழன் நந்தினி இறப்பதற்கு முன்பு அவளைக் கண்டு அவளுடைய பிறப்பின் ரகசியத்தைப் பற்றி அறிந்து கொண்டான் னு மொட்டையா போட்டிருப்பார். அதுல எந்த விளக்கமும் இருக்காது. கல்கி முதலில் வீரபாண்டியனை நந்தினியின் தந்தை என்று கூறிய பின்னர் அது வரலாற்று பிழையாகி விடுமோ என்ற எண்ணத்தில் இப்படி ஒரு திசைமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :))
நீங்க சொன்னது மாதிரி யோசிச்சா நந்தினியின் தந்தை வீரபாண்டியன் என்று உறுதியாக கூற முடிந்தாலும், கடைசியில் அப்படி ஒரு திசைதிருப்பக் காட்சி தேவைதானா? அது வாசகர்களை குழப்பக்கூடும் என்பதும் உண்மைதானே??
// நிஜமா நல்லவன் said...
ஆதித்த கரிகாலனை கொல்ல நந்தினி தேவி முயற்சிகள் பல செய்திருந்தாலும் பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யத்தின் முடி பொன்னியின் செல்வரையே சேர வேண்டும் என்பதில் குந்தவை கொண்டிருந்த உறுதி மறுப்பதற்கில்லை. ஆதித்தர் ஒரு அவசரக்காரர். அவர் முடி சூடினால் குந்தவை கண்ட கனவுகள் நனவாகாமல் போகலாம்.
//
விக்கிபீடியால பாத்தீங்கன்னா, மதுராந்தகர் தேவர் மேல சந்தேகம்னு போட்டுருக்காங்க.
மேலும், உத்தம சோழனுக்கும் சேந்தன் அமுதனுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், கல்கியின் முழுமையான கற்பனையே சேந்தன் அமுதன் மன்னனாகியது எனவும் சில தளங்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் மதுராந்தகத் தேவர் மேலுள்ள சந்தேகம் இன்னும் வலுவடைகிறது.
http://www.ponniyinselvan.in/novel-characters-f7/mathuranthaka-uttama-chozhan-t15581.html?sd=d
இந்த சுட்டிய பாத்தீங்கன்னா தெரியும் :)))
"பாதாளச் சிறையில் மூன்று வருஷமாக அடைப்பட்டிருந்து தங்களுடன் விடுதலை அடைந்த பைத்தியக்காரனை ஆழ்வார்கடியான் பயமுறுத்திக் கேட்டபோது அவன் சொன்னதும் தங்களுக்குத் தெரிந்திருக்கும்.."
"தெரியாமலென்ன? நந்தினிக்கும், அவள் சகோதரனுக்கும் தானே தகப்பன் என்று அவன் கூறினான்."
"அதுவே உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா!"
இதுதான் குந்தவையும் வந்தியதேவனும் பேசிக் கொள்ளும் வசனங்கள். குந்தவை சந்தேகித்ததுபோல், நந்தினி கரிகாலனைக் காக்க வேண்டுமென்று எண்ணி வீரபாண்டியனை தன் தந்தை என்று கூறியிருக்கலாம் அல்லவா? மேலும், லாஜிக்கலா யோசிச்சா, நந்தினி இவர்தான் என்னோட அப்பான்னு சொல்றதுல வர்ற நம்பிக்கைய விட வீர பாண்டியனுக்குப் பிறகு அந்த இடத்தில் இருந்த பைத்தியக்காரன் சொல்வதுலதானே நம்பிக்கை வரணும்??
ஆகையால் பைத்தியக்காரனின் கூற்றும் உண்மையாகவே இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் :))
நிறைய மற்ந்து விட்டது. இரண்டுமுறை படித்திருக்கிறேன். ஆனாலும் :(
சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க தமிழ் :)
// ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ டாக்டர்... ஏனெனில் ஆதித்தன் ஏற்கனவே டென்சன் பார்ட்டி.. கோபத்தில் கத்த ஆரம்பித்து இரத்தக் கொதிப்பு அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம். //
ஹா ஹா ஹா :)))))
///"பாதாளச் சிறையில் மூன்று வருஷமாக அடைப்பட்டிருந்து தங்களுடன் விடுதலை அடைந்த பைத்தியக்காரனை ஆழ்வார்கடியான் பயமுறுத்திக் கேட்டபோது அவன் சொன்னதும் தங்களுக்குத் தெரிந்திருக்கும்.."
"தெரியாமலென்ன? நந்தினிக்கும், அவள் சகோதரனுக்கும் தானே தகப்பன் என்று அவன் கூறினான்."
"அதுவே உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா!"///
இதுதான் குந்தவையும் வந்தியதேவனும் பேசிக் கொள்ளும் வசனங்கள். குந்தவை சந்தேகித்ததுபோல், நந்தினி கரிகாலனைக் காக்க வேண்டுமென்று எண்ணி வீரபாண்டியனை தன் தந்தை என்று கூறியிருக்கலாம் அல்லவா? மேலும், லாஜிக்கலா யோசிச்சா, நந்தினி இவர்தான் என்னோட அப்பான்னு சொல்றதுல வர்ற நம்பிக்கைய விட வீர பாண்டியனுக்குப் பிறகு அந்த இடத்தில் இருந்த பைத்தியக்காரன் சொல்வதுலதானே நம்பிக்கை வரணும்??
ஆகையால் பைத்தியக்காரனின் கூற்றும் உண்மையாகவே இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் :))///
வருகைக்கு நன்றி ஜி! 1.பைத்தியக்காரனை ஆழ்வார்க்கடியான் பயமுறுத்திக் கேட்டது பைத்தியக்காரனும், மதுராந்தகரும் இரு குதிரைகளில் தப்பி ஓடும் போது தானே? அப்போது வந்தியத்தேவன் கத்திக் குத்துப்பட்டு சேந்தன் அமுதனின் தோட்ட வீட்டில் கிடப்பான். எனவே இந்த விஷயத்தில் வந்தியதேவன் குந்தவை அருகில் இருந்த மயக்கத்தில் தெரிந்தது போல் காட்டி இருக்கலாம். (நமக்கும் வருவது தானே... ஹிஹிஹி)
2. இந்த விஷயத்தை ஆழவார்க்கடியான் எந்த இடத்திலும் சொன்னதாக இல்லை. அப்படி சொல்ல வேண்டி வந்திருக்குமானால் விசாரணை நடைபெற்று பெரிய பழுவேட்டரையர் தற்கொலைக்கு முயன்ற போதே சொல்லி இருப்பான்.
//வருகைக்கு நன்றி ஜி! 1.பைத்தியக்காரனை ஆழ்வார்க்கடியான் பயமுறுத்திக் கேட்டது பைத்தியக்காரனும், மதுராந்தகரும் இரு குதிரைகளில் தப்பி ஓடும் போது தானே? அப்போது வந்தியத்தேவன் கத்திக் குத்துப்பட்டு சேந்தன் அமுதனின் தோட்ட வீட்டில் கிடப்பான். எனவே இந்த விஷயத்தில் வந்தியதேவன் குந்தவை அருகில் இருந்த மயக்கத்தில் தெரிந்தது போல் காட்டி இருக்கலாம். (நமக்கும் வருவது தானே... ஹிஹிஹி)
2. இந்த விஷயத்தை ஆழவார்க்கடியான் எந்த இடத்திலும் சொன்னதாக இல்லை. அப்படி சொல்ல வேண்டி வந்திருக்குமானால் விசாரணை நடைபெற்று பெரிய பழுவேட்டரையர் தற்கொலைக்கு முயன்ற போதே சொல்லி இருப்பான்.
//
1. இந்த வாதத்தை முதலில் குந்தவையே ஆரம்பிப்பாள். குந்தவையும் அந்த இடத்தில் இருக்கவில்லை. ஆகையால் ஆழ்வார்கடியான் குந்தவையுடனும் வந்தியதேவனிடமும் கதையில் சொல்லப்படாத காட்சியில் அவர்களுக்குச் சொல்லியிருக்கலாம்.
2. ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தை நீங்க கதையின் ஆரம்பித்ததிலிருந்து பார்த்தாலே புரியும், அவர் எந்த இடத்திலும் தான் அறிந்த உண்மையை உடனடியாக சொல்லுவதில்லை என்று. உதாரணத்திற்கு, பார்த்திபனுடன் குதிரையில் சென்றவர்கள் ஆபத்துதவியை சேர்ந்தவர்கள் என்று அவனுக்கு தெரிந்திருந்தும், ஆபத்து வந்த பிறகே அதைப் பற்றி வாயை திறப்பான். அதே போல் பழுவேட்டறயருக்கும் நந்தினிக்கும் குகையில் நடந்த வாதத்தையும் அவன் குரு முதல் மந்திரியைத் தவிர யாரிடமும் அவன் கூற மாட்டான். இதனால் அவன் அரசவையில் பழு தற்கொலைக்கு முயன்ற போது சொல்வதற்கு எந்த சாத்தியமும் அந்த கதாபாத்திரத்துக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். :))
மேலும் ஒரு பெரும் அரசவையில் ஒரு சாதரண வைணவ சாமியார் எப்படி வாய் திறக்க முடியும்?? அது அவனுக்கே தெரிந்திருந்த படியால்தானே, முதல்மந்திரி ஏதாவது கூறும்படி சொன்னால் தவிர வேற எதற்கும் அவன் அங்கு வாய் திறப்பதேயில்லை. ஆகையால் கதாபாத்திரத்தின் தன்மையை வைத்துப் பார்த்தால் அவன் தெரிந்திருந்தும் சொல்லவில்லை என்பது புலனாகிறது தானே?? :)))
நண்பரே அடுத்த பதிவ போடுங்க... தமிழ் மணத்துல அடிச்சி புடிச்சி ஆராய்ச்சி செஞ்சி பார்க்கலாம்.
நீங்க போடலனா உங்களுக்கு எதிரா ஒரு பதிவ நான் போட்டிடுவேன்..
எல்லோருமே குழப்பமாகி விடும் விடயம் தான் நந்தினியின் தந்தை யார் என்பது. உங்கள் முடிவு எங்கனம் அமைகின்றது என பார்க்கலாம்.
இது என்னப்பா புது குழப்பம்...??
ஏற்கனவே அருள்மொழி குந்தவையின் மகனா... தம்பியான்னு ஒரு விவாதம் இன்னொரு தளத்தில் நாங்க செய்துக்கிட்டு இருக்கோம்...! அதுக்கான தகவலை தேடும்போது..., இந்த blog கிடைச்சது...
இதுல நந்தினியை பற்றிய விவாதம்...??
பொன்னியின் செல்வனில், வீரபாண்டியனின் காதலியாகவும், அவன் மரணத்திற்கு பழிவாங்க என்றே, பழுவேட்டயரை திருமணம் செய்துக்கொண்டு அவரின் அரண்மனையில் சர்வாதிகாரியாக இருக்கிறாள் என்றும் தானே படித்து இருக்கோம்...!
Post a Comment