Thursday, December 11, 2008

என்ன செய்ய? நானும் புலம்பி விட்டு செல்கிறேன்.

மும்பையில் நடந்த பயங்கரவாதச் செயல அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது மீடியாக்களும், அரசியல் வியாதிகளும் அடித்த கூத்துக்கள் மக்களிடையே ஒரு அதிருப்தியையே ஏற்படுத்தின. இதனைக் குறித்து அவந்திகா பதிவிட்டு இருந்தார். அதன் தொடர்பதிவாக முத்துலக்ஷ்மி அக்கா தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல. கொஞ்சம் உற்றுக் கவனித்தோமேயானால் இது விளங்கும். கற்காலம் தொட்டு இது இருந்து வருகின்றது. முன்பு தனி மனிதன் தனது தேவைக்காக வன்முறையில் இறங்கினான். உணவு, பெண், இடத்திற்காகவே சக மனிதனுடன் தனது சண்டையைத் துவக்கினான்.

அதை அடுத்து மனிதன் கூட்டாக சமுதாயமாக வாழத் தொடங்கியதும், சமூகங்களுக்கு இடையேயும் சண்டை சச்ச்ரவுகள் ஆரம்பித்தன. இவைகள் இன்று வரைத் தொடர்கின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் ஒரு தனி மனிதனை அழிக்கவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. துப்பாக்கி உள்ளிட்ட அழிவு ஆயுதங்கள் மனிதனிடம் வந்ததுமே இந்த அழிவு வேலை அதிகமானது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மக்கள் போர்க்களங்களில் மண் என்ற ஒரு ஆசைக்காக கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மனிதனுக்கு மதம் என்ற மதம் பிடிக்க ஆரம்பித்ததும் இந்த படுகொலைகள் தொடர்கின்றன. அமைதியையும், சகிப்புத் தன்மையையும் போதிக்கும் மதங்களில் இருந்தும் கொலைகாரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் மனிதன் தனது உணவுக்காக போராடுவது குறைந்து நம்பிக்கையின் அடிப்படையில் போராட ஆரம்பித்து விட்டான்.

இந்த போராட்டங்களில் நீட்சியை உற்றுக் கவனித்தால் எந்த சமூகம் அதிக அதிகாரமோ அல்லது அதிக நிராசையோ அடைகின்றதோ அது அடுத்தவர்களை துன்புறுத்தியதைப் பார்க்கலாம். கோவில் இடிக்கப்பட்டதும், சர்ச்கள் தகர்க்கப்பட்டதும், மசூதிகள் தரை மட்டமானதும் இதற்கு உதாரணங்கள். இந்தியாவில் சமணர்கள் அழிக்கப்பட்டதும், ஹிட்லரால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இதற்கு மற்றொரு வடிவம்.

இப்போதைய சூழலில் நம் முன் இருக்கும் பயங்கரவாதம் மதத்தின் பெயரால் இருப்பவையே. தனி மனிதனுக்குள் இருக்கும் குரோதங்கள், சில வினாடி உந்துதலால் ஏற்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் திட்டமிட்ட படுகொலைகள் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டியவை.



எடுத்துக்காட்டுக்காக மும்பை கொடூரத்தையே எடுத்துக் கொண்டால் அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருந்தது. இயன்ற அளவு மக்களை அழிக்க வேண்டும். தாம் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. ஒரு மனிதனுக்கு உயிரை விட பெரிய விடயம் எதுவுமில்லை. அதை துச்சமாக நினைக்கும் நிலையிலேயே இந்த மிருகங்கள் இருந்திருக்கின்றன.

அதே போல் சமீபகால தீவிரவாத செயல்களுக்கு அச்சாணியாக கருதப்படும் 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்பையும் உற்று நோக்கினால் அதன் பிண்ணனியில் இருந்தவர்களும் இதே போன்ற மனநிலையில் இருந்தது விளங்கும். ஏன் இவர்கள் மாறினார்கள்? அல்லது மாற்றப்பட்டார்கள்.

நம் மக்கள் பொதுவாக எந்த விஷயத்தையும் மேலோட்டமாகவே பார்க்கின்றோம். அதன் அடித்தளங்களை ஆராய்வதில்லை. ஏதாவது நடந்ததும் காச் மூச் என்று கத்தி விட்டு அதை மறந்து விடுகின்றேன். விஷச் செடிகள் ஒன்று முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். வளர்ந்து விட்டது என்றால் அதை வேருடம் பிய்த்து எறியப்பட வேண்டும்.

இப்போதைய உலக மீடியாக்களில் டிரெண்டான So called தீவிரவாதத்தையே எடுத்துக் கொண்டாலும், பயங்கரவாதிகளின் செயல்கள் மட்டுமே கணக்கில் இருக்கின்றன. அவர்களின் உருவாக்கத்தை விட்டு விடப்படுகின்றன. மேலே கூறியது போல் மனிதன் இரண்டு நிலைகளில் தான் பயங்கரங்களில் இறங்குகின்றான்.

முதலாவது தன்னிடம் அதிகாரம் இருக்கும் போது.. எடுத்துக்காட்டுக்கு ஹிட்லர் முதல் சிங்கள பேரினவாதம் வரை தொடரலாம். இவர்கள் தங்களுக்கும், தங்களது தலைமைக்கும் அதிகாரம் இருப்பதால் இது போன்று தாண்டவமாடுகின்றனர். இரண்டாவது வகை இந்த அதிகார வர்க்கத்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் பயங்கரவாதம். இவ்வகையினருக்கு எதிராளியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கும். தங்களது பாதிப்புகள் மட்டுமே இவர்களின் உள்ளங்களில் இருக்கும்.

முதல் வகையினர் தங்களது பயங்கரவாத செயல்களுக்கு பலப்பல நியாயங்களைக் கற்பிப்பார்கள். அவர்களுக்கு புதிய தலைமுறை நாடுகள் பூம்பூம் மாடு போல ஆமா சாமி போடும். அவர்களது செயல்கள் அனைத்திற்கும், அப்போதைக்கு அங்கீகாரம் பெரிதாகத் தரப்படும். கால ஓட்டத்திலேயே அதைப் பற்றிய கொடூரங்கள் வெளியே வரும். இதற்கு அமெரிக்கா நடத்தும் பயங்கரவாதங்களைக் கூறலாம்.

சரி.. .சரி.. புலம்பல் எங்கங்கோ உலக ரீதியில் போய்கிட்டே இருக்கு..இனி இந்தியாவுக்கு வரலாம். இந்தியாவுக்கு பயங்கரவாத செயல்கள் ஒன்றும் புதிதல்ல..... இந்த மண்ணுக்காக வரிசையாக நிற்க வைத்து இந்தியர்கள் கொல்லப்பட்ட காலமும் உண்டு. என்ன அப்போது ஒரு வாளால் ஒரு மனிதனைக் கொல்ல முடிந்தது. இன்று துப்பாக்கிகளும், Cyclotrimethylenetrinitramine, டெட்டர்னேட்டர்களும் வந்த பிறகு ஒரே தாக்குதலில் பலரைக் கொல்ல முடிகின்றது. தற்கொலைப்படை தாக்குதல்களும் அதிகமாக நடத்தப்படுகின்றது.

ஏன் இவைகள் என்று யோசித்தால் வரும் விடை தெளிவாக இருக்கின்றது... அது மக்களிடையே அரசியல் வியாதிகள் ஏற்படுத்தும் சில காரியங்களின் விடயம் தான். நாட்டுக்காக உயிரையும் கொடுக்க துணிவாக இருக்க வேண்டும் என்பது நம் இரத்ததில் ஏற்றப்பட்டுள்ளது. இதையே அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தங்களது சமூகத்திற்கு செய்யப்பட்ட அநீதிகளைக் கூறி வெறி ஏற்றி மூளைச் சலவை செய்யப்பட்டு தான் இது போன்ற தீவிரவாதிகள் உருவாகின்றனர். இதன் மூலம் இரண்டு புறமும் பலன் அடைபவர்கள் அரசியல்வாதிகளே..... தீவிரவாதிகளின் தாக்குதல்களை தங்களது மதத்துக்கு எதிரானதாக மாற்றி அதை ஓட்டு பொறுக்கும் வேலையைத் தான் இவர்கள் செய்கின்றனர். அதே போல் தான் அங்கும். மூளைச் சலவை செய்வதற்கான மூலக் கூறுகளை அறுத்து எரிய வேண்டியது தான் இன்றைய தேவை.

அடுத்தவர்களின் இரத்தத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவன் அமைதியடைவான். அனைவருக்கும் தெரிந்தே தவறு செயதவன் சுதந்திரமாக திரியும் போது பாதிக்கப்பட்டவனும் ஆயுதம் ஏந்துகின்றான்.
இதில் மதம் தான் குற்றவாளி? என்றால் இல்லை.. மதத்தின் பெயரால் வயிற்றையும், புகழையும் வளர்க்க நினைக்கும் கேடு கெட்ட மத வாதிகள் தான் குற்றவாளிகள்.

ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான். இரண்டு எம்பி சீட்களுடன் உருவான ஒரு கட்சி மனிதப் பிணங்களின் மீது நடந்தும், இரத்த ஆறில் நீந்தியும் நாட்டையே ஆளும் அளவுக்கு வந்ததற்கு காரணமும் நாம் தான். நமது ஓட்டு என்னும் ஆயுதத்தை சரியாக பயன்படுத்தாதால் தான் இது போன்ற மதத்தாலும், ஜாதியாலும் மக்களிடையே இரத்தத்தை ஓட்டக் கூடியவர்கள் வெற்றி அடைகின்றனர்.

நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்.

Cyclotrimethylenetrinitramine = RDX
படம் நன்றி : sitnews

28 comments:

நட்புடன் ஜமால் said...

வந்தேன்...

படித்துவிட்டு மீண்டும்.

நட்புடன் ஜமால் said...

\\ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான்\\

மிகச்சரியாக சொன்னீர்கள்

நட்புடன் ஜமால் said...

\\வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல.\\

இப்படித்தான் துவங்கவேண்டும் என நானும் நினைத்திருந்தேன்

நட்புடன் ஜமால் said...

\\மண் என்ற ஒரு ஆசைக்காக கொல்லப்பட்டனர்\\

இன்றும் அதிகமாக இதற்காகத்தான் நடக்கிறது.

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் திட்டமிட்ட படுகொலைகள் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டியவை.\\

ஆம் தடுக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டியவையே

நட்புடன் ஜமால் said...

\\நம் மக்கள் பொதுவாக எந்த விஷயத்தையும் மேலோட்டமாகவே பார்க்கின்றோம். அதன் அடித்தளங்களை ஆராய்வதில்லை.\\

மிக மிக மிக சரியே.

ஆயில்யன் said...

//மதத்தின் பெயரால் வயிற்றையும், புகழையும் வளர்க்க நினைக்கும் கேடு கெட்ட மத வாதிகள் தான் குற்றவாளிகள்//


நல்லா சொல்லியிருக்கீங்க !

நட்புடன் ஜமால் said...

\\அடுத்தவர்களின் இரத்தத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவன் அமைதியடைவான்.\\

அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை அவர்களின் அதிகாரத்தை பிடுங்குவது. பிடுங்க வேண்டும் ...

நட்புடன் ஜமால் said...

\\அனைவருக்கும் தெரிந்தே தவறு செயதவன் சுதந்திரமாக திரியும் போது பாதிக்கப்பட்டவனும் ஆயுதம் ஏந்துகின்றான்.
இதில் மதம் தான் குற்றவாளி? என்றால் இல்லை.. மதத்தின் பெயரால் வயிற்றையும், புகழையும் வளர்க்க நினைக்கும் கேடு கெட்ட மத வாதிகள் தான் குற்றவாளிகள்\\

சரியாக சொன்னீர்கள்

கிரி said...

//நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்//

சரியா சொன்னீங்க

ராமலக்ஷ்மி said...

***உங்கள் உயிரைப் பணயம் வைத்து
பணம் பார்க்கிறது பயங்கரவாதம்.

மூளைச் சலவையில் முகவரி தொலைத்து***
எனச் செல்லும் வரிகள் எனது எனது ‘என்னதான் வேண்டும் உமக்கு’ பதிவில்! உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.

//நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்.//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Thamira said...

இதைத்தான் காலங்காலமாக நல்லோர் அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சிறப்பாகவே செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். கடைசி வரிகளைக் காதுகொடுத்து கேட்கவேண்டியது மக்கள்.. நடக்கிற காரியமா அது?

Thamira said...

தளத்தின் லே அவுட் சிறப்பாக உள்ளது. ரசிக்கும் பதிவுகளில் என்னோடதும் உள்ளது.. நன்றி தமிழ்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன உங்களோட இடத்தில மாற்றம் செஞ்சிட்டீங்க போல இருக்கே.

ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான். இரண்டு எம்பி சீட்களுடன் உருவான ஒரு கட்சி மனிதப் பிணங்களின் மீது நடந்தும், இரத்த ஆறில் நீந்தியும் நாட்டையே ஆளும் அளவுக்கு வந்ததற்கு காரணமும் நாம் தான். நமது ஓட்டு என்னும் ஆயுதத்தை சரியாக பயன்படுத்தாதால் தான் இது போன்ற மதத்தாலும், ஜாதியாலும் மக்களிடையே இரத்தத்தை ஓட்டக் கூடியவர்கள் வெற்றி அடைகின்றனர்

மிகச்சரி.

"என்ன செய்ய? நானும் புலம்பி விட்டு செல்கிறேன்."//

இப்படி யோசிங்களேன்.
நாமெல்லாம் குறைந்த பட்சம் பதிவெழுதி புலம்பியாவது நமது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறோம்.

Anonymous said...

துவேஷம் மனதில் விதைக்கப்படும் பொழுது வன்முறையாக அறுவடை செய்யப்படுகிறது.

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
வந்தேன்...
படித்துவிட்டு மீண்டும்.///
நன்றி ஜமால் அண்ணே!

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
\\ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான்\\
மிகச்சரியாக சொன்னீர்கள்////
நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

//அதிரை ஜமால் said...
\\வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல.\\
இப்படித்தான் துவங்கவேண்டும் என நானும் நினைத்திருந்தேன்///
அதுதான் உண்மையும் கூட!

Thamiz Priyan said...

//அதிரை ஜமால் said...
\\மண் என்ற ஒரு ஆசைக்காக கொல்லப்பட்டனர்\\
இன்றும் அதிகமாக இதற்காகத்தான் நடக்கிறது.///
இன்று அதிகமாக கொலைக்கு மனிதனின் சுக வாழ்வுக்காகவும், தன்னுடைய ஆளுமையைக் காட்ட வேண்டு என்பதற்காகவும் நிகழ்வதாகவே கருதுகின்றேன்..:)

Thamiz Priyan said...

///கிரி said...

//நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்//

சரியா சொன்னீங்க////

நன்றி கிரி!

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

***உங்கள் உயிரைப் பணயம் வைத்து
பணம் பார்க்கிறது பயங்கரவாதம்.

மூளைச் சலவையில் முகவரி தொலைத்து***
எனச் செல்லும் வரிகள் எனது எனது ‘என்னதான் வேண்டும் உமக்கு’ பதிவில்! உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.

//நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்.//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.////
நன்றி அக்கா!

Thamiz Priyan said...

///தாமிரா said...

இதைத்தான் காலங்காலமாக நல்லோர் அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சிறப்பாகவே செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். கடைசி வரிகளைக் காதுகொடுத்து கேட்கவேண்டியது மக்கள்.. நடக்கிற காரியமா அது?////
நடக்கும் தாமிரா அண்ணே! இதுவும் ஒருநாள் மாறும்.

Thamiz Priyan said...

///தாமிரா said...

தளத்தின் லே அவுட் சிறப்பாக உள்ளது. ரசிக்கும் பதிவுகளில் என்னோடதும் உள்ளது.. நன்றி தமிழ்.!///
நன்றி தாமிரா!

Thamiz Priyan said...

///அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன உங்களோட இடத்தில மாற்றம் செஞ்சிட்டீங்க போல இருக்கே.
இப்படி யோசிங்களேன்.
நாமெல்லாம் குறைந்த பட்சம் பதிவெழுதி புலம்பியாவது நமது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறோம்.///
அப்பப்ப நம்ம வீட்டை சுத்தம் செய்து பெயிண்ட் அடிச்சு வச்சுக்கனும்ல .,. அது மாதிரி தான்..:)

நமக்கு இருக்கும் வசதியைக் கொண்டு எழுதுவோம்... மற்றும் நமது சுற்றுப் புறத்தையும் சரியாக்கி வைத்துக் கொள்வோம்.

Thamiz Priyan said...

/// வடகரை வேலன் said...

துவேஷம் மனதில் விதைக்கப்படும் பொழுது வன்முறையாக அறுவடை செய்யப்படுகிறது.///
ஆமாம் வேலன் சார்! விதைக்கும் போது அமைதியாக இருந்து விட்டு அறுவடைக்கும் போது கதறுகின்றோம்..:(

Thamiz Priyan said...

/// துளசி கோபால் said...

ரொம்பச் சரி.///
நன்றி டீச்சர்!

மஸ்தூக்கா said...

உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடறுதுக்காகவே விடிய விடிய கத்துக்கிட்டிருப்பாங்களோ ஒரு பதிவுக்காவது நான் முதல்ல போடனும் நினைக்கிறேன் முடியலியே. ஆங்... சொல்ல வந்தத மறந்துட்டேனே
ரொம் நல்லா இருக்கு. அமிர்தவர்ஷினி அம்மா சொன்ன மாதிரி நாமெல்லாம் பதிவெழுதியாவது புலம்பிகிட்டிருப்போம்