முதலில் சில உதவிக் குறிப்புகள் பார்க்கலாம். ப்ளாக்காரில் Bold, Italic, நிறம் மாற்றும் முறை, தொடுப்பு (Link) தரும் முறை போன்றவை முன்பே தரப்பட்டுள்ளன. இவை தவிர்த்து சில முறைகளை அறிமுகப்படுத்தவே இந்த இடுகை.
(இதில் உள்ளவை சாதாரண HTML Code கள் என்பதால் உங்கள் பதிவு திறக்க அதிகப்படியான நேரம் எடுக்காது என்பதால் தாராளமாக பயன்படுத்தலாம்.)
1. How to add scrolling Text in your blogger template?
2. How to add Flashing Text in your blog post?
3. How to show blog owner's comment in a different color?
1. முதலில் உங்கள் பதிவில் உருளும் வரிகளை பதிக்கும் முறை.
இதே போன்ற அமைப்பை எனது பதிவின் முகப்பிலும் வைத்து இருக்கின்றேன். கடைசியாக எழுதிய மூன்று பதிவுகள் அதில் ஓடிக் கொண்டு இருக்கும். மூன்றும் தனித்தனியாக அதற்குரிய தொடுப்புக்கு(Link) செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது தளத்திலும் அமைக்கலாம். இடுகையில் சேர்க்க கீழே உள்ளது போல் எழுதலாம்.
<marquee behavior="scroll" direction="left" onmouseover="this.stop()" scrollamount="4" onmouseout="this.start()" bgcolor="##fdefd0" align="middle"><br/><br/> <a href="http://majinnah.blogspot.com/2008/11/blog-post_28.html "> Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள், </a> <br/><br/> </marquee>
அதில் தொடுப்புக்கான இடத்தில் உங்களுக்கு தேவையான தொடுப்பையும், விளக்கத்தில் உங்களுக்கான விளக்கத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதை Dash Board, Layout,Add a Gadget, HTML/JavaScript சென்று அங்கு உங்களுக்கு தேவையான கோடை அதில் உள்ளீடு செய்ய இனி உங்கள் பதிவிலும் இது ஓடத் தொடங்கி விடும். இது கீழ்கண்டவாறு உங்கள் பதிவில் வரும். இந்த முறையில் சிறு துணுக்குகள், முக்கிய செய்திகள், பொன் மொழிகள், அறிவுரைகளைத் தரலாம்.
2. உங்கள் பதிவில் மின்னும் வார்த்தைகளைப் (Flashing Text) பதிப்பது எப்படி?
இதுவும் மிக சுலபம் தான். கீழே எடுத்துக்காட்டுக்காக இரு வரிகளைத் தந்துள்ளேன்.
ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் - திருக்குர்ஆன்
இதற்கு பயன்படுத்தப்பட்ட HTML Code கீழே தந்துள்ளேன்.
<span style="text-decoration: blink; color: rgb(51, 0, 153);
font-weight: bold;">ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் - திருக்குர்ஆன்</span>
இதில் அந்த வார்த்தைகள் இருக்கும் இடத்தில் உங்களுக்குத் தேவையான வரிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
3. பதிவர்கள் தங்கள் சொந்த பின்னூட்டங்களை மட்டும் வேறு கலரில் தருவது எப்படி?
சிலருடைய பதிவில் (முத்துலக்ஷ்மி அக்கா, எனது...) பதிவின் உரிமையாளருடைய பின்னூட்டங்கள் மட்டும் வேறு கலரில் இருக்கும். பின்னூட்டங்களுக்கு பதில் பார்க்கும் போது தெளிவாக, சுலபமாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதையும் உங்கள் பதிவில் சுலபமாக மாற்றலாம்.
முதலில் வழக்கம் போல் Dash Board, Layout, Edit HTML, சென்று Expand Widget Templates என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
முக்கியம் :இதில் இருப்பதை ஒரு வேர்ட் பைலில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்
இனி உங்கள் HTML ல்
Step : 1
.comment-body
{
margin:0;
padding:0 0 0 20px;
}
.comment-body p
{
font-size:100%;
margin:0 0 .2em 0;
}
இந்த இடத்தை தேடிக் கண்டுபிடியுங்கள். (ப்ளாக்கர் டெம்ப்ளேட் வைத்து இருப்பவர்களுக்கு அப்படியே கிடைக்கும். மற்ற இடங்களில் இருந்து என்றால்
கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும்..... தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்)
இதற்குக் கீழே, அடியில் உள்ளதை பேஸ்ட் செய்யுங்கள்.
.comment-body-author {
margin:0;
padding:0 0 0 20px;
}
.comment-body-author p {
font-size:100%;
margin:0 0 .2em 0;
color:#CC3300;
text-decoration:bold;
}
Step : 2
HTML ல் <dl id='comments-block'> <b:loop values='data என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள். இந்த வரிக்கு கீழே சில வரிகளுக்குப் பின் <data:comment.author/> </b:if> said... </dt> இப்படி இருக்கும். இந்த dt> க்குக் கீழே , அடியில் உள்ளதை பேஸ்ட் செய்யுங்கள்.
<b:if
cond='data:comment.author == data:post.author'>
பேஸ்ட் செய்த பிறகு அதற்கு இன்னும் சில வரிகள் கழித்து ஒரு இடத்தில் <dd
class='comment-body-author'> <p><data:comment.body/></p> </dd> என்று முடியும். அதற்குக் கீழே </b:if> என்பதை மட்டும் பேஸ்ட் செய்து விடுங்கள். இனி Save Template கொடுங்கள். அம்புட்டுத்தேன்..இனி உங்கள் பதிவில் நீங்கள் கமெண்ட் போட்டால் சிவப்பு கலரில் தெரியும்.
Save ஆகும் போது எரர் வருதா? அமைதியா ஏற்கனவே வேர்ட் பைலில் சேவ் செய்து வைத்திருப்பதை திரும்பி பேஸ்ட் செய்து விட்டு அமைதியா இருந்து கொள்ளுங்கள்... ;)))
எனக்கு சிவப்பு கலர் பிடிக்காது. வேற கலர் தான் வேண்டும் என்று சொல்பவர்கள் இங்கு சென்று புதிய கலருக்கான Code ஐ (#3B9C9C இப்படி இருக்கும்) எடுத்து வந்து மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். நிறத்திற்கான குறிப்புகள்
மாற்றம் செய்யுமிடம்
.comment-body-author p {
font-size:100%;
margin:0 0 .2em 0;
color:#CC3300;
text-decoration:bold;
}
இதில் சிகப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களுக்குப் பதில் உங்கள் நிறத்திறகான Code ஐ மாற்றிக் கொள்ளுங்கள்.
நன்றிகள் : தீபா அக்கா மற்றும் முத்துலக்ஷ்மி அக்கா!
****************************************************************
முதலில் சொன்னதுக்கு பதில். இவர்களுடைய பதிவுகளில் யாஹூ சிரிப்பான் வருவதற்கான நிரலி சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இடுகைகள் திறக்கும் போது கடைசியில் பல வினாடிகள் (சில நேரங்களில் ஒரு நிமிடங்கள் வரை) கணிணி ஸ்தம்பித்து விடுகின்றது. பிராஸஸரின் வேலைப்பளு சுமார் 70, 80 சதவீதம் வரை செல்கின்றது. சிரிப்பான் சிரிக்காமல் இருந்தால் பரவாயில்லை என எண்ணினால் இது போன்று பிரச்சினையுள்ளவர்கள் கீழே உள்ள வரிகளை நீக்கினால் சரியாகி விடும்.
<script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script>
சிரிப்பான் கண்டிப்பாக சிரிக்க வேண்டுமெனில் அப்படியே விட்டு விட்டு எங்கள் கணிணியை சூடேற்றலாம்... :)))
டிஸ்கி : படித்தவர்கள் அனைவரும் தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டுப் போட்ட்டுட்டு போகனும்... யார் வந்துட்டு ஓட்டு போடாம போனாலும் கண்டுபிடிச்சிடுவேன்.. ... :)))
138 comments:
டெஸ்ட் கமெண்ட்.. கலரா வரும்ன்னு சொல்லிட்டு கலர் வரலைன்னா என்ன செய்ய.... அதான்...:))
மீத ரெண்டாவது.. சும்மா இது இன்னா கலர்ல வருதுனு பாக்கத்தான்
வாவ் சூப்பர் அண்ணாச்சி கைய குடுங்க கலக்கீட்டீங்க
:-)))...
ஒட்டு போட்டாச்சி!!!
அப்படியே விதம்விதமா கமெண்ட்டு போடறதுக்கும் சொல்லிக்கொடுங்களேன்....
சூப்பர் மேட்டர் தலைவா..
யாருகிட்ட கேட்கறதுன்னு நெனைச்சுகிட்டே இருந்தேன்..
நல்ல பயனுள்ள தொழி்ல்நுட்ப பதிவு.
என்னைப்போன்ற தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் உங்கள் எண்ணம் வாழ்க. தொண்டு வளர்க.
press ctrl+F and search on your templates
Thank you..But i did expect more like this..
:))))))))))
me the 10? :):)
வணக்கம் தமிழ் பிரியன்
\\
டிஸ்கி : படித்தவர்கள் அனைவரும் தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டுப் போட்ட்டுட்டு போகனும்... யார் வந்துட்டு ஓட்டு போடாம போனாலும் கண்டுபிடிச்சிடுவேன்
\\
இத படித்தவுடன்தான் பயந்துவிட்டேன்
பதிவு மிக அருமையானது,
என்னைப்போல் பதிவு தொடங்க வேண்டும் என எண்ணம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
நன்றி
என்னை மாதிரி கணினி கைநாட்டுங்களுக்கு கண்டிப்பா தேவை இந்த மாதிரிப்பதிவு. ஓட்டு போட்டாச்சு
அருமையான பதிவு தமிழ்.. வாழ்த்துக்கள்
நானும் முயற்சித்து பார்க்கின்றேன் :))
நான் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி பின்னூட்டம்
அண்ணாத்தே ரொம்ப யூஸ்புல்லா இருந்த்தது. நானும் கமெண்ட் கலரை மாத்தனும்:)
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
இப்படி வருதே.
இப்படி ஒரு அறுமையான பதிவ எழுதியிருக்கீக ஓட்டு போட முடியலையே.
மேலும் முழு பிளாக்கர் டெம்ப்ளேட் உருவாக்குவது எப்படி என்று சொல்லி தாருங்களேன்.
அருமையான தகவல்கள். முயற்சித்து பார்க்கிறேன்
நன்றி தமிழ் பிரியன்
போட்டாச்சு ஓட்டு
:)
:)
சாதிச்சிட்டீங்க பாஸ் :)
///தமிழ் பிரியன் said...
டெஸ்ட் கமெண்ட்.. கலரா வரும்ன்னு சொல்லிட்டு கலர் வரலைன்னா என்ன செய்ய.... அதான்...:))
///
கலர்ன்னா இதுதானா?
நான் என்னவோ ஏதோன்னுல்ல நினைச்சேன்!
thamizmanam
இடுகைத்தலைப்பு:
Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
//
எனக்கு முன்னாடியே என்னோட ஓட்ட கள்ள ஓட்டா போட்டது யாருனு கண்டுபிடிச்சி சொல்லுங்க...!!
பயனுள்ள பதிவு.
மிஸ்டர் துப்பறியும் சாம்பு, பாருங்க ஒரு வோட்டு இதோ இப்பக் கூடியிருக்கும்:))!
ஓட்டுப் போட்டுட்டேன் வாத்தியாரே!.நல்ல பதிவு நான் இதை முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.
பாஸ், ஓடவச்சிட்டீங்களே அதாவது நீங்க சொன்ன மேட்டரை சொன்னேன், கலக்கல்;)
நல்ல விசயங்கள் தமிழ்.. ஆனா பாருங்க, இதெல்லாம் அடிக்கடி பதிவு போடுறவங்களுக்குதான் உபயோகமாகும்.. என்னை மாதிரி "நானும் ரவுடிதான்" பார்ட்டிங்களுக்கெல்லாம் தேவையே இல்லை.. :))))
//வெண்பூ said...
நல்ல விசயங்கள் தமிழ்.. ஆனா பாருங்க, இதெல்லாம் அடிக்கடி பதிவு போடுறவங்களுக்குதான் உபயோகமாகும்.. என்னை மாதிரி "நானும் ரவுடிதான்" பார்ட்டிங்களுக்கெல்லாம் தேவையே இல்லை.. :))))
//
வழி மொழிகிறேன்.
பயந்துபோய் நிறைய பேர் பின்னூட்டம் போட்டிருப்பது தெரிகிறது. நான் அப்படி பயப்புடுற ஆளெல்லாம் இல்லை..
தமிழ், எனது பதிவில் பின்னூட்டியவர்களின் பெயருக்கு பதிலாக ')))) இப்பிடி தெரிகிறது. இதை சரிசெய்ய வழிசொல்லுங்கள்.
very useful post. Thank you
venpoo comment supero super
இந்த பிளாஷ் ஸ்டைல்,எழுத்து கண்ணை சிமிட்டறது எல்லாம் எனக்கு வேலைக்காவது.வேணுமுன்னா கலர் பார்க்கிறது எப்படின்னு பார்க்கிறேன்:)
தமிழ் பையன்!எனது ஓட்டை நல்ல பிள்ளையா திருப்பிக் கொடுங்க பார்க்கலாம்.
காரணம் புரியவில்லையென்றால் எனது தீவிரவாதத்தின் மூலக்கூறுகள் பின்னூட்டத்தில்
"கலர் மாற்றம் தனக்குத் தானே உதவி திட்டத்தின் கீழ்" கலரைப் பார்க்கவும்:(
இதெல்லாம் வேண்டாம். பதிவப் போட்டதும் தானா 20 30 கமெண்ட் வரும்படி ஏதாவது இருந்தாச் சொல்லுங்க. உங்களுக்குச் சொர்க்கதில் இடம் கிடைக்கும்.
Wow.....A very useful post.Well done.
anbudan aruna
எல்லாம் சரி தீபாவுக்கு நன்றி.ஆனா முத்துலஷ்மிக்கு ஏன்?அவிக டெம்ப்லேட் மாத்தவே பயப்படுவாங்களே?
அப்பால இந்த பின்னூட்ட பகுதியிலும் எப்படி நம்ம விமர்சனம் சேர்ப்பது [நீங்க எழுதியிருப்பது போல ] சொன்னால் தேவலை.
///ராஜ நடராஜன் said...
தமிழ் பையன்!எனது ஓட்டை நல்ல பிள்ளையா திருப்பிக் கொடுங்க பார்க்கலாம்.
காரணம் புரியவில்லையென்றால் எனது தீவிரவாதத்தின் மூலக்கூறுகள் பின்னூட்டத்தில்
"கலர் மாற்றம் தனக்குத் தானே உதவி திட்டத்தின் கீழ்" கலரைப் பார்க்கவும்:( ///
அண்ணே! கண்ணாடியை நல்லா தொடச்சி போட்டுப் பாருங்க.. அழகா நீலக் கலரில் சூப்பரா வந்திருக்குது...;))))
உங்களோட வெளிநாட்டு சதியை முறியடிச்சிட்டோம்ல..;)))
Great Post from Priyan.
I like this.
Thanks
நாங்களும் போட்டுட்டோம்ல ஓட்ட...
என் பதிவில் தற்போது ஸ்க்ரோலிங் உபயாகப் படுத்துகிறேன், நன்றி
பயனுள்ள தகவல்கள், தமிழ் பிரியன். நன்றி.
இட்லிவடை பதிவில் மேலே வரும் bannerகளை மாற்றி கொண்டே இருக்கிறாரே, அதை பிளாகரில் எப்படி செய்வது? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
/// Expatguru said...
இட்லிவடை பதிவில் மேலே வரும் bannerகளை மாற்றி கொண்டே இருக்கிறாரே, அதை பிளாகரில் எப்படி செய்வது? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.////
மிகவும் சுலபம். என்னுடைய பதிவில் முன்னால் இருக்கும் படம் ஒரு கிப்ட் பெட்டி. இதன் லிங்க் http://i286.photobucket.com/albums/ll86/skincorner2/thegift_01.jpg
அதே போல் உங்களது மெட்ராஸ் தமிழன் பதிவில் உள்ளது சூர்ய காந்தி படம். அதன் லிங்க் http://img143.imageshack.us/img143/9249/bghdrbotfy2.jpg (இது உங்களது HTML கோடில் இருந்து எடுத்தது தான்).
உங்களுக்கு வேண்டிய படத்தை இப்போது உள்ள படத்தின் அளவுக்கு (995 x 150) மாற்றி அதை www.imageshack.us இல் பதிவேற்றி அதன் லிங்கை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் HTML கோடில் http://img143.imageshack.us/img143/9249/bghdrbotfy2.jpg இது எங்கே இருக்கின்றது எனக் கண்டறிந்து புதிய பட லிங்கை மாற்றி விடுங்கள். இனி புதிய படம் முகப்பில் வரும்.
வாழ்த்துக்கள்!
///தாமிரா said...
தமிழ், எனது பதிவில் பின்னூட்டியவர்களின் பெயருக்கு பதிலாக ')))) இப்பிடி தெரிகிறது. இதை சரிசெய்ய வழிசொல்லுங்கள்///
தாமிரா உங்கள் மின்னஞ்சல் பெட்டி பாருங்கள்!
எனது வலைப்பதிவிலும் இப்போது உருளும் மின்னும் எழுத்துக்களை பயன் படுத்திவருகிறேன். பின்னூட்டங்களுக்கு செய்வது தான் சிரமாக இருக்கிறது. அதற்கு உதவவும்.
தங்களுக்கு எனது நன்றிகள்.
என்னமோப் போங்க.தூள் கிளப்புறீங்க.கணிணிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.எல்லாம் சொல் புத்திதான்.முயற்சி செய்கிறேன்.மிக நல்ல பதிவு.
அன்புடன்,
தேனியார்
தமிழ் மணம் பக்கம் வந்தா லபக்குன்னு பிடிக்கலாமுன்னு காலையிலேருந்து திரியறேன்.
கலர் மாற்றம் இப்பத்தான் தெரியுது.அது தெரியாம அதுக்கு முன்னாடியெ உங்களுக்குப் போட்ட பின்னூட்டம் எனது பதிவில் போய்ப் பார்க்கவும்:)
கலர்தான் பார்க்கமுடியவில்லை கலராவது பார்க்கிறேன்!நன்றி.
மூணாவதை முயற்சித்துப் பார்த்துட்டு வர்ரேன்.
அது சரி... ஓட்டெல்லாம் எங்க எப்படி போடணும்னு ஒண்ணும் சொல்லித்தரலை !
//அதிஷா said...
மீத ரெண்டாவது.. சும்மா இது இன்னா கலர்ல வருதுனு பாக்கத்தான்///
நன்றி அதிஷா!
///அதிஷா said...
வாவ் சூப்பர் அண்ணாச்சி கைய குடுங்க கலக்கீட்டீங்க///
ஹிஹிஹி... நன்றி அதிஷா!
///விஜய் ஆனந்த் said...
:-)))...
ஒட்டு போட்டாச்சி!!!
அப்படியே விதம்விதமா கமெண்ட்டு போடறதுக்கும் சொல்லிக்கொடுங்களேன்....////
பீஸ் அதிகமாகுமே விஜய்! பரவாயில்லயா?
///பரிசல்காரன் said...
சூப்பர் மேட்டர் தலைவா..
யாருகிட்ட கேட்கறதுன்னு நெனைச்சுகிட்டே இருந்தேன்..////
நன்றி பரிசலாரே!
///சுந்தரராஜன் said...
நல்ல பயனுள்ள தொழி்ல்நுட்ப பதிவு.
என்னைப்போன்ற தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் உங்கள் எண்ணம் வாழ்க. தொண்டு வளர்க.////
நன்றி அண்ணே! நாமலும் தொழில் நுட்பம் தெரியாத ஆளுங்க தான். மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான்!
///Karthik said...
press ctrl+F and search on your templates////
நன்றி கார்த்திக்! நானே இதை சொல்லி இருக்கனும்!.. மக்களுக்கு தெரிந்து இருக்கும்னு விட்டுட்டேன். :)
நீங்க ஒரு பதிவு போட்டீர்கள்.. ஆனால் அதில் எந்த கோடும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
///ராது said...
Thank you..But i did expect more like this..///
I will try my best Rathu!
/// ஸ்ரீமதி said...
:))))))))))////
நான் என்னம்மா ஜோக்கா அடிச்சேன்....இந்த மாதிரி சிரிக்க...;)
///ஸ்ரீமதி said...
me the 10? :):)////
ஆமாவே தான்...:)
/// வனம் said...
வணக்கம் தமிழ் பிரியன்
\\
டிஸ்கி : படித்தவர்கள் அனைவரும் தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டுப் போட்ட்டுட்டு போகனும்... யார் வந்துட்டு ஓட்டு போடாம போனாலும் கண்டுபிடிச்சிடுவேன்
\\
இத படித்தவுடன்தான் பயந்துவிட்டேன்
பதிவு மிக அருமையானது,
என்னைப்போல் பதிவு தொடங்க வேண்டும் என எண்ணம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
நன்றி//////
நாம யாரை பிடிக்கப் போகிறோம்... எல்லாம் ஒரு லுலுவாயிக்கு தான்...:)
வாங்க..இனி பதிவுலக அனுபவங்களுக்கு வாழ்த்து(க்)கள்!
///சின்ன அம்மிணி said...
என்னை மாதிரி கணினி கைநாட்டுங்களுக்கு கண்டிப்பா தேவை இந்த மாதிரிப்பதிவு. ஓட்டு போட்டாச்சு/////
ஏனுங்கம்மணி! நீங்களே இப்டி சொல்லிப் போட்டீங்ன்னா என்னங்ம்மணி அர்த்தம்..:)
///சென்ஷி said...
அருமையான பதிவு தமிழ்.. வாழ்த்துக்கள்
நானும் முயற்சித்து பார்க்கின்றேன் :))////
நன்றி சென்ஷி அண்ணே!
///சென்ஷி said...
நான் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி பின்னூட்டம்///
நன்னி! நன்னி! நன்னி!
///வித்யா said...
அண்ணாத்தே ரொம்ப யூஸ்புல்லா இருந்த்தது. நானும் கமெண்ட் கலரை மாத்தனும்:)////
வித்யாக்கா! டிரை பண்ணிப் பாருங்க!
///அதிரை ஜமால் said...
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
இப்படி வருதே.
இப்டி ஒரு அறுமையான பதிவ எழுதியிருக்கீக ஓட்டு போட முடியலையே.
மேலும் முழு பிளாக்கர் டெம்ப்ளேட் உருவாக்குவது எப்படி என்று சொல்லி தாருங்களேன்.///
உங்க ஐபியில் யாரோ ஓட்டுப் போட்டு இருக்காங்க என்று அர்த்தம்!
ஒரு பதிவு ஆரம்பம் மற்றும் எழுதுவது பற்றி ஒரு பதிவு போட ப்ளான் இருக்கு.. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.
///கிரி said...
அருமையான தகவல்கள். முயற்சித்து பார்க்கிறேன்
நன்றி தமிழ் பிரியன்////
நன்றி கிரி!
/// முத்துலெட்சுமி-கயல்விழி said...
போட்டாச்சு ஓட்டு
:)///
நன்றிங்க (புது) டீச்சர்!
///ஆயில்யன் said...
:)
சாதிச்சிட்டீங்க பாஸ் :)////
ஹிஹிஹி எல்லாம் உங்க ஆதரவும், உதவியும் தான்!
///ஆயில்யன் said...
///தமிழ் பிரியன் said...
டெஸ்ட் கமெண்ட்.. கலரா வரும்ன்னு சொல்லிட்டு கலர் வரலைன்னா என்ன செய்ய.... அதான்...:))
///
கலர்ன்னா இதுதானா?
நான் என்னவோ ஏதோன்னுல்ல நினைச்சேன்!////
நினைப்பீங்க.. நினைப்பீங்க... ;))
/// மின்னுது மின்னல் said...
thamizmanam
இடுகைத்தலைப்பு:
Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
//
எனக்கு முன்னாடியே என்னோட ஓட்ட கள்ள ஓட்டா போட்டது யாருனு கண்டுபிடிச்சி சொல்லுங்க...!!///
ரெண்டாவது தடவை கள்ள ஓட்டு போட முயற்சி செஞ்சா அப்படித்தான் சொல்லுமாம்ல..;))
///ராமலக்ஷ்மி said...
பயனுள்ள பதிவு.
மிஸ்டர் துப்பறியும் சாம்பு, பாருங்க ஒரு வோட்டு இதோ இப்பக் கூடியிருக்கும்:))!////
ஹிஹிஹிஹி நன்றிக்கோவ்!
// நல்லதந்தி said...
ஓட்டுப் போட்டுட்டேன் வாத்தியாரே!.நல்ல பதிவு நான் இதை முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.///
முயற்சி செய்யுங்க நண்பரே!
///கானா பிரபா said...
பாஸ், ஓடவச்சிட்டீங்களே அதாவது நீங்க சொன்ன மேட்டரை சொன்னேன், கலக்கல்;)////
நன்றி தல!
//வெண்பூ said...
நல்ல விசயங்கள் தமிழ்.. ஆனா பாருங்க, இதெல்லாம் அடிக்கடி பதிவு போடுறவங்களுக்குதான் உபயோகமாகும்.. என்னை மாதிரி "நானும் ரவுடிதான்" பார்ட்டிங்களுக்கெல்லாம் தேவையே இல்லை.. :))))////
உண்மையிலேயே ரவுடியா மாறிடுங்க பாஸ்!
//கபீஷ் said...
//வெண்பூ said...
நல்ல விசயங்கள் தமிழ்.. ஆனா பாருங்க, இதெல்லாம் அடிக்கடி பதிவு போடுறவங்களுக்குதான் உபயோகமாகும்.. என்னை மாதிரி "நானும் ரவுடிதான்" பார்ட்டிங்களுக்கெல்லாம் தேவையே இல்லை.. :))))
//
வழி மொழிகிறேன்.///
போன கமெண்டுக்கான பதிலையே படிச்சுக்குங்க கபீஷ்!
///தாமிரா said...
பயந்துபோய் நிறைய பேர் பின்னூட்டம் போட்டிருப்பது தெரிகிறது. நான் அப்படி பயப்புடுற ஆளெல்லாம் இல்லை..///
ஹிஹிஹிஹி கமெண்ட் போடும் போதே தெரியுதுங்ண்னா..;))
///முரளிகண்ணன் said...
very useful post. Thank you////
நன்றி முரளி அண்ணே!
///முரளிகண்ணன் said...
venpoo comment supero super////
:))
///ராஜ நடராஜன் said...
இந்த பிளாஷ் ஸ்டைல்,எழுத்து கண்ணை சிமிட்டறது எல்லாம் எனக்கு வேலைக்காவது.வேணுமுன்னா கலர் பார்க்கிறது எப்படின்னு பார்க்கிறேன்:)////
எப்பவுமே இதே நினைப்புங்களா..;))
இம்புட்டு நோண்டுனுமா? அடப் போங்கப்பா.. ஆனாலும் நல்ல தகவலுங்க. நன்றி!
//வேணுமுன்னா கலர் பார்க்கிறது எப்படின்னு பார்க்கிறேன்:)//
:)
முருகா.. நீயாவது கண்டுபிடிச்சு அட்வைஸ் பண்றியே.. நல்லாயிரு..
என் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து விரித்துப் பார்த்தேன். அதில் நீங்கள் எழுதியிருப்பது போன்ற வார்த்தைகள் இல்லை.
'http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js' (முன்னும், பின்னும் ஸ்கிரிப்ட் என்று ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால் அதுவும் பின்னூட்டத்தில் ஏற மறுக்கிறது) இப்படித்தான் இரண்டு இடங்களில் இருந்தது. இரண்டு இடங்களிலுமே டெலீட் செய்து பார்த்தேன்..
ஆனால் save ஆக மறுத்து, "Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly. XML error message: The element type "script" must be terminated by the matching end-tag ""."
இப்படி பதில் வருகிறது..
அப்பனே முருகா.. என்ன செய்யலாம் என்று சட்டுப்புட்டுன்னு சொல்லு.. புண்ணியமாப் போகும்..
நண்பர் தமிழ்பிரியன் அவர்களே..
தங்கள் பதிவில் சொல்லியிருக்கும் வழிகாட்டுதல்களின்படி நான் செய்து பார்த்தேன். ஆனால் தவறாக வருகிறது. டெம்ப்ளேட்டை சேமிக்க முடியவி்லலை.
பல முறை முயன்றும் முடியாததால் தெரியாத விஷயத்தில் மேற்கொண்டும் மோத வேண்டாம் என்பதனால் அதனை வோர்டில் காப்பி செய்து உங்களுக்கு மெயிலில் அனுப்பியுள்ளேன்.
தாங்கள் மனம் வைத்து அந்த சிரிப்பானை நீக்கிவிட்டு, பின்னூட்டத்தின் வரிகளை சிவப்பு கலரில் காட்டும்படியான வசதியினையும், ஒவ்வொரு பதிவின் கீழும் அதன் முந்தைய பதிவின் தலைப்பினை மட்டும் ஸ்க்ரால் செய்யும் வசதியையும் கோபித்துக் கொள்ளாமல் செய்து டெம்ப்ளேட்டை திருப்பி அனுப்பி வைக்குமாறு தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
அவசரமில்லை. மெதுவாகவே செய்து தரவும்.
நன்றி..
உண்மைத்தமிழன்
அட... யாருப்பா 'தீபாவை' என் கோடில் ஏற்றியது...
நல்ல தகவல்.. சிரிப்பான் கோடை நீக்கிட்டேன்...
இப்போ பதிவு சீக்கிரமா வரும்னு நினைக்கிறேன்... இந்த பக்கம் பயமில்லாமே வாங்கப்பா...
நன்றி...
தமிழ்ணா
உங்க பின்னூட்டம்லாம் படிக்கறதுக்குள்ள கண்ணுல பூ விழுந்துரும் போலருக்கு
தயவு பண்ணி அத கொஞ்ம் டார்க் கலருக்கு மாத்துங்கோ..
பிளீஸ்
Thanks for you details
//அதிஷா said...
தமிழ்ணா, உங்க பின்னூட்டம்லாம் படிக்கறதுக்குள்ள கண்ணுல பூ விழுந்துரும் போலருக்கு. தயவு பண்ணி அத கொஞ்ம் டார்க் கலருக்கு மாத்துங்கோ.. பிளீஸ்//
அத எப்படி கலர் மாத்துறதுன்னு கொஞ்சம் சொல்லித் தர்றது..?
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
எனது கமெண்டுகள் வேறு கலரில் தெரிகிற மாதிரி மாற்றியாயிற்று. கலர் மாறியதும் த்ரில் ஆயிட்டேன்:)!
வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
very useful and informative.
என்ன மாதிரி தத்தக்கா பித்தக்கா க்கெல்லாம் யூஸ் ஆகும்
உருளும் வரிகளை யூஸ் பண்ணிக்கிட்டேன்.
ஃப்ளாஸ் தான் கொஞ்சம் மக்கர் பண்ணுது.
கலக்கறீங்களே!! உபயோகமாயிருக்கும் எனக்கும்! நன்றி அண்ணா!
88
அது சரி தனியா நம்பர் மட்டும் பின்னூட்டமா போட்டா கலரா வராதா...
எப்படிண்ணே இதுக்கல்லாம் டைம் ஒதுக்கறிங்க...!
அடிக்கடி இப்படி ஏதாவது செஞ்சு காட்டி கலக்குறிங்க...
100 நான்தான் அடிக்கணும் அப்புறமா வாறேன்...
தமிழ் பிரியன்! "கலர்" வேலை செய்யுது.அதனால இன்னொரு கள்ள ஓட்டுப் போட்டிருக்கேன்:)
தல நேரமே கிடைக்க மாட்டேங்குது...
///வடகரை வேலன் said...
இதெல்லாம் வேண்டாம். பதிவப் போட்டதும் தானா 20 30 கமெண்ட் வரும்படி ஏதாவது இருந்தாச் சொல்லுங்க. உங்களுக்குச் சொர்க்கதில் இடம் கிடைக்கும்.////
ஹிஹிஹிஹி அதே ஐடியா கிடைச்சா எனக்கும் சொல்லுங்களேன்.. சில பதிவுகள் போட்டுட்டு மோட்டு வளையைப் பார்த்துட்டு உட்கார வேண்டி வருது வேலன் சார்..;))
///அன்புடன் அருணா said...
Wow.....A very useful post.Well done.
anbudan aru////
நன்றிங்க டீச்சர்!
///கண்மணி said...
எல்லாம் சரி தீபாவுக்கு நன்றி.ஆனா முத்துலஷ்மிக்கு ஏன்?அவிக டெம்ப்லேட் மாத்தவே பயப்படுவாங்களே?///
அவுக தான் இணைப்பு பாலமா இருந்தாங்க டீச்சர்.. அதான் நன்னி பறஞ்சது..:)
/// அப்பால இந்த பின்னூட்ட பகுதியிலும் எப்படி நம்ம விமர்சனம் சேர்ப்பது [நீங்க எழுதியிருப்பது போல ] சொன்னால் தேவலை.////
புரியலியே டீச்சர்..:(((
/// தமிழ்நெஞ்சம் said...
Great Post from Priyan.
I like this.
Thanks///
நன்றி தல!
//நான் ஆதவன் said...
நாங்களும் போட்டுட்டோம்ல ஓட்ட...////
நன்றி நண்பரே!
100
அண்ணே ரொம்ப ந்ன்றியண்ணே!
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்,
இதற்க்காக உங்களுக்கு கோடி முறை நன்றி சொல்லலாம்.
இந்த பதிவை எனது மெயிலுக்கு அனுப்பி விட்டால் காலத்துக்கும் அழியாமல் இருகுமல்லவா?
Thank you!
தமிழில் ஒரு நல்ல பயனுள்ள தொழி்ல்நுட்ப பதிவு.
பதிவர்களுக்கே வண்ணம் காட்டி விட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது...
///முரளிகண்ணன் said...
என் பதிவில் தற்போது ஸ்க்ரோலிங் உபயாகப் படுத்துகிறேன், நன்றி///
நன்றி முரளி அண்ணே!
///Expatguru said...
பயனுள்ள தகவல்கள், தமிழ் பிரியன். நன்றி.///
நன்றி Expatguru!
///தமிழ் ஓவியா said...
எனது வலைப்பதிவிலும் இப்போது உருளும் மின்னும் எழுத்துக்களை பயன் படுத்திவருகிறேன். பின்னூட்டங்களுக்கு செய்வது தான் சிரமாக இருக்கிறது. அதற்கு உதவவும்.
தங்களுக்கு எனது நன்றிகள்.////
நன்றி தமிழ் ஓவியா! உதவிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் dginnah@gmail.com முடிந்ததைச் செய்து தருகின்றேன்.
///தேனியார் said...
என்னமோப் போங்க.தூள் கிளப்புறீங்க.கணிணிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.எல்லாம் சொல் புத்திதான்.முயற்சி செய்கிறேன்.மிக நல்ல பதிவு.
அன்புடன்,
தேனியார்///
வருகைக்கு நன்றி தேனியாரே! நாமலும் படிக்காத ஆளுங்க தான். கல்லூரிக்கோ, கணிணி வகுப்புக்கோ ஒருநாள் கூட சென்றதில்லை. எல்லாம் கேள்வி ஞானம் தான்..:)
///ராஜ நடராஜன் said...
தமிழ் மணம் பக்கம் வந்தா லபக்குன்னு பிடிக்கலாமுன்னு காலையி
கலர் மாற்றம் இப்பத்தான் தெரியுது.அது தெரியாம அதுக்கு முன்னாடியெ உங்களுக்குப் போட்ட பின்னூட்டம் எனது பதிவில் போய்ப் பார்க்கவும்:)
கலர்தான் பார்க்கமுடியவில்லை கலராவது பார்க்கிறேன்!நன்றி.///
நீங்க எப்பவுமே ஒரு குழப்ப மனநிலையில் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..:))))
///தருமி said...
மூணாவதை முயற்சித்துப் பார்த்துட்டு வர்ரேன்.
அது சரி... ஓட்டெல்லாம் எங்க எப்படி போடணும்னு ஒண்ணும் சொல்லித்தரலை !////
தருமி சார், உங்களுக்கேவா? அவ்வ்வ்வ்வ்
/// ILA said...
இம்புட்டு நோண்டுனுமா? அடப் போங்கப்பா.. ஆனாலும் நல்ல தகவலுங்க. நன்றி!
//வேணுமுன்னா கலர் பார்க்கிறது எப்படின்னு பார்க்கிறேன்:)//
:)////
துறை சார்ந்த ஆட்களே சலிச்சிக்கிட்டா எப்படிங்ண்ணா? நீங்க தான் எங்களைப் போன்ற தெரியாத ஆளுங்களுக்கு சொல்லித் தரணும்..:)
///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முருகா.. நீயாவது கண்டுபிடிச்சு அட்வைஸ் பண்றியே.. நல்லாயிரு..///
மிக்க நன்றி அண்ணே!
/// ச்சின்னப் பையன் said...
அட... யாருப்பா 'தீபாவை' என் கோடில் ஏற்றியது...
நல்ல தகவல்.. சிரிப்பான் கோடை நீக்கிட்டேன்...
இப்போ பதிவு சீக்கிரமா வரும்னு நினைக்கிறேன்... இந்த பக்கம் பயமில்லாம வாங்கப்பா...
நன்றி...///
ஹா ஹா ஹா.. அம்புட்டு கஷ்டத்துலயும் வந்துக்கிட்டு தான் இருந்தோம்...இனி ஜாலியாவே வருவோம்..:))
///அதிஷா said...
தமிழ்ணா
உங்க பின்னூட்டம்லாம் படிக்கறதுக்குள்ள கண்ணுல பூ விழுந்துரும் போலருக்கு
தயவு பண்ணி அத கொஞ்ம் டார்க் கலருக்கு மாத்துங்கோ..
பிளீஸ்///
மாத்தியாச்சுங்ண்னா...;)
///Bash said...
Thanks for you details///
நன்றி Bash !
///பிரபு said...
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி////
நன்றி! நன்றி! நன்றி!
///ராமலக்ஷ்மி said...
எனது கமெண்டுகள் வேறு கலரில் தெரிகிற மாதிரி மாற்றியாயிற்று. கலர் மாறியதும் த்ரில் ஆயிட்டேன்:)!
வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.////
உங்களுக்கு ஒரு உதவி செய்ய வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றிகள் அக்கா!
///அமிர்தவர்ஷினி அம்மா said...
very useful and informative.
என்ன மாதிரி தத்தக்கா பித்தக்கா க்கெல்லாம் யூஸ் ஆகும்
உரளும் வரிகளை யூஸ் பண்ணிக்கிட்டேன்.
ஃப்ளாஸ் தான் கொஞ்சம் மக்கர் பண்ணுது.///
நாங்களும் தத்தக்கா பித்தக்கா தானுங்கோ...;)
///சந்தனமுல்லை said...
கலக்கறீங்களே!! உபயோகமாயிருக்கும் எனக்கும்! நன்றி அண்ணா!//
நன்றி தங்கச்சி!
///தமிழன்-கறுப்பி... said...
அது சரி தனியா நம்பர் மட்டும் பின்னூட்டமா போட்டா கலரா வராதா...///
அவ்வ்வ்வ்
///தமிழன்-கறுப்பி... said...
எப்படிண்ணே இதுக்கல்லாம் டைம் ஒதுக்கறிங்க...!////
வேலையே அது தானே தல..;)
//ராஜ நடராஜன் said...
தமிழ் பிரியன்! "கலர்" வேலை செய்யுது.அதனால இன்னொரு கள்ள ஓட்டுப் போட்டிருக்கேன்:)////
இப்ப ஏதும் குழப்பமில்லியே?..;))
//வால்பையன் said...
அண்ணே ரொம்ப ந்ன்றியண்ணே!
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்,
இதற்க்காக உங்களுக்கு கோடி முறை நன்றி சொல்லலாம்.
இந்த பதிவை எனது மெயிலுக்கு அனுப்பி விட்டால் காலத்துக்கும் அழியாமல் இருகுமல்லவா?///
நன்றி அண்ணே!
/// r.selvakkumar said...
Thank you!///
நன்றி!
///வீரன்(Veeran) said...
தமிழில் ஒரு நல்ல பயனுள்ள தொழி்ல்நுட்ப பதிவு.
பதிவர்களுக்கே வண்ணம் காட்டி விட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!!////
நன்றி வீரரே!
///அம்பி செல்லம் said...
மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது...///
நன்றி அம்பி செல்லம்!
நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரியே இன்னும் இருக்கிறது. என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்கிறார்கள். பார்க்கும் போது ஆசையாயிருக்கும். ஆனால் தெரியாது. பொறுமையும் இல்லை.எதையோ எழுதுவேன், பிரசுரிப்பேன் அவ்வளவுதான். நீங்க சொன்னா மாதிரி மாற்றங்கள் செய்வேன். என் மகளை கெஞ்சி கூத்தாடி....ஆம்! அவளுக்கு அவள் மகனோடேயே சரியாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் என் ப்ளாக்கும் ஜொலிக்கும் பாருங்கள்!!உங்களால்!
127 பேருக்குப் பின்னாடி நான் படிச்சுப் பதில் போடணும் - கொஞ்சம் நேரம் வேணும் - மொதல்லே வருகைப் பதிவேடு. அப்பாலிக்கா மறுமொழி - சேரியா
//
நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரியே இன்னும் இருக்கிறது. என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்கிறார்கள். பார்க்கும் போது ஆசையாயிருக்கும். ஆனால் தெரியாது. பொறுமையும் இல்லை.எதையோ எழுதுவேன், பிரசுரிப்பேன் அவ்வளவுதான். நீங்க சொன்னா மாதிரி மாற்றங்கள் செய்வேன். என் மகளை கெஞ்சி கூத்தாடி....ஆம்! அவளுக்கு அவள் மகனோடேயே சரியாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் என் ப்ளாக்கும் ஜொலிக்கும் பாருங்கள்!!உங்களால்!
//
ஆகா ஆகா நானானியின் கைவண்ணம் சொலிக்கப் போகிறது - பலே பலே - நல்வாழ்த்துகள்
சந்தேகம் வந்தா கேக்கறதுக்கு மக (மகளோட மகன் விட்டா ) - நான் என்னா பண்றது ? என் பிளாக்கை எப்படி மாத்தறது ? ம்ம்ம் - சிந்திப்போம்...
அதாரப்பா அது ? எதுக்கு மாத்தணும் - அதான் பதிவே போடறதே இல்லியேன்னு கேக்கறது ? டெம்பிளேட் மாத்தினா பதிவும் போடுவோம்ல .....
ஏம்பா - தமிழ் பிரியா,
எதுக்கு மாத்தினே - பழசே பழசுதான் நல்லா இருந்திச்சி - இது ஏதோ கருப்பா நல்லா இல்லியே !
உனக்குப் பழசு பிடிக்கலையா ?? இல்ல
பொழுது போகாம மாத்தினியா ?
புதுசு பிடிச்சு மாத்தினியா -இல்ல மாத்தினதுக்கு அப்புறம் பிடிச்சிச்சா ?
என்னவோ செய்ப்பா
தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((
//தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((//
கிரி என்னோட சைட்டைப் பாத்தீங்களா?.பின்னூட்டத்தில் பதில்கள் சூப்பரா இருந்து இருக்குமே(கலர்ல மட்டும்).ஆனா இதை வாத்தியார் சொன்னது போல் செய்ய முடியவில்லை ஏனென்றால் நீங்கள் சொன்னது போல அந்த வரிகளே இல்லை.அதக்கப்புறம் அடிச்சுக்கோ புடிச்சிக்கோன்னு நானே வேற இடத்தில் சொன்ன மாதிரி முயற்சி செஞ்சி பண்ணி இருக்கேன்! :)
///நானானி said...
நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரியே இன்னும் இருக்கிறது. என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்கிறார்கள். பார்க்கும் போது ஆசையாயிருக்கும். ஆனால் தெரியாது. பொறுமையும் இல்லை.எதையோ எழுதுவேன், பிரசுரிப்பேன் அவ்வளவுதான். நீங்க சொன்னா மாதிரி மாற்றங்கள் செய்வேன். என் மகளை கெஞ்சி கூத்தாடி....ஆம்! அவளுக்கு அவள் மகனோடேயே சரியாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் என் ப்ளாக்கும் ஜொலிக்கும் பாருங்கள்!!உங்களால்!///
கண்டிப்பாம்மா...ஜொலிக்க வைத்து விடலாம்..:)
/// cheena (சீனா) said...
127 பேருக்குப் பின்னாடி நான் படிச்சுப் பதில் போடணும் - கொஞ்சம் நேரம் வேணும் - மொதல்லே வருகைப் பதிவேடு. அப்பாலிக்கா மறுமொழி - சேரியா////
கடமைன்னு ஒன்னு இருக்கே?...;))
///cheena (சீனா) said...
ஏம்பா - தமிழ் பிரியா,
எதுக்கு மாத்தினே - பழசே பழசுதான் நல்லா இருந்திச்சி - இது ஏதோ கருப்பா நல்லா இல்லியே !
உனக்குப் பழசு பிடிக்கலையா ?? இல்ல
பொழுது போகாம மாத்தினியா ?
புதுசு பிடிச்சு மாத்தினியா -இல்ல மாத்தினதுக்கு அப்புறம் பிடிச்சிச்சா ?
என்னவோ செய்ப்பா///
கை துறுதுறுன்னு இருக்கே அதான்.. ஏதாவது செய்யனும் போல இருக்கு..:))
///கிரி said...
தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((///
இப்போது உங்க பதிவுக்கு பின்னூட்ட கலர் மாற்றப்பட்டு விட்டது.. எனவே இப்ப மண்டை காயாமல் இருங்க...:))
///நல்லதந்தி said...
//தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((//
கிரி என்னோட சைட்டைப் பாத்தீங்களா?.பின்னூட்டத்தில் பதில்கள் சூப்பரா இருந்து இருக்குமே(கலர்ல மட்டும்).ஆனா இதை வாத்தியார் சொன்னது போல் செய்ய முடியவில்லை ஏனென்றால் நீங்கள் சொன்னது போல அந்த வரிகளே இல்லை.அதக்கப்புறம் அடிச்சுக்கோ புடிச்சிக்கோன்னு நானே வேற இடத்தில் சொன்ன மாதிரி முயற்சி செஞ்சி பண்ணி இருக்கேன்! :)////
நல்லதந்தி, பலரும் பல இடங்களில் இருந்து டெம்ப்ளேட் எடுக்கின்றோம். ஒவ்வொரு இடத்திலும் Variable கள் தனித்தனியாக அடையாளப்படுத்தப்படும். எனவே அதே வார்த்தைகள் கிடையாது. HTML கோடை புரிந்து கொண்டால் சுலபமாக இனம் காண இயலும்..கிரியினுடைய பதிவில் நான் குறிப்பிட்ட முறையிலேயே மாற்றம் செய்யப்பட்டு விட்டது. பார்த்துக் கொள்ளுங்கள்.
சீனா அவர்கள் ஜொலிக்கவைத்த பின்னாடியாவது நிறைய பதிவிடுகிறார்களாப் பாப்போம்!!
Post a Comment