வாங்க மக்கா! உங்களை கொஞ்சம் 16,17 வருஷம் பின்னோக்கி கொண்டு போறேன். இதுவும் ஒரு சைக்கிள் காலம் தான். ஆனா கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஏற்கனவே ஒரு சைக்கிள் கதை சொல்லி இருக்கேன். குட்டி சைக்கிளில் ஏறி ஊரை வலம் வந்து கொண்டு இருந்த காலம். அப்பத்தான் பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பழகிட்டு சீட்டில் உட்கார ஆரம்பிச்சு இருந்தேன்.
பெடலுக்கு கால் முழுவதுமாக எட்டாததால் ஏதாவது வீட்டு திண்ணை, அல்லது கல் மீது கால் வைத்து ஏறிக் கொள்வேன். ஏதோ வேலையாய் நான் சைக்கிளில் ஒரு இடத்திற்கு போனோம். வரும் வழியில் என் பெரியப்பா மகன் தம்பி வந்து கொண்டு இருந்தான். வாடா சைக்கிளில் போகலாம் என்று ஒரு கெத்தாக சொல்ல அவனும் வந்து விட்டான். சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாததால் அவனை முன்னால் உட்கார வைத்து திண்ணை துணையுடன் ஓட்ட ஆரம்பித்தேன்.
பிரச்சினை இல்லாமல் ஓடிக் கொண்டு இருந்தது. சரியில்லாத ரோடு என்பதால் குண்டும் குழியுமாக இருந்தது. நானும், தம்பியும் பேசிக் கொண்டே வந்து கொண்டு இருந்தோம். ரோட்டில் ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் அதைக் கவனிக்க வில்லை. கடைசியில் தம்பி பார்த்து குழந்தை விளையாடுது சைக்கிளை திருப்பு என்று அவனே திருப்பியும் விட, அவன் திருப்பிய திசைக்கு மறுபுறம் நான் திருப்ப நேராக குழந்தையின் மீதே மோதி விட்டோம்.
குழந்தையை தள்ளிய சைக்கிள் அதன் மீதே ஏறி, பின்னர் கீழே விழுந்தும் விட்டது. வழக்கம் போல் சைக்கிளின் மீது நானும், தம்பியும் கிடக்க குழந்தை எல்லாத்துக்கும் அடியில் கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை தூக்கி விட்டனர். ஆங்காங்கே இரத்த காயம்.
ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்த ஏரியா தான் எங்க ஊருக்கே கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துகளை மொத்த வியாபாரம் செய்யுமிடம். எங்களை காப்பாற்றி தூக்கியவர்கள் அனைவரும் பெரிய ரவுடிகள்.
கொஞ்ச நேரத்தில் குரங்காட்டி வந்தார். அவர் தான் அந்த ஏரியா கேங் லீடர். (வயதில் பெரிய மனிதன் என்பதால் மரியாதையாக சொல்வோம்.) குரங்காட்டி என்றால் குரங்கை காட்டி வித்தை காட்டுபவர் அல்ல... எப்போதும் தன்னுடனொரு குரங்கை வைத்துக் கொண்டிருப்பார். அது அவர் மீது எப்போதும் ஏறி விளையாடிக் கொண்டு இருக்கும். பெரிய சாராய வியாபாரி. பன்றி வளர்ப்பவர். கொஞ்சம் ரவுடித்தனமும் உண்டு(அப்பத்தைய நிலவரம்.. :) )
எங்களை தூக்கியவர்கள் சைக்கிளை ஓரமாக வைத்து விட்டு, எங்கள் இருவரையும் அங்கிருந்த வீட்டின் முன் கூரைக்காக நட்டப்பட்டு இருந்த அகத்தி மரத்தில் கட்டி வைத்து விட்டனர். குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)
விவரம் கேட்டதும் கோபத்தில் கத்த ஆரம்பித்து விட்டார். எங்கள் அப்பாவின் பெயரைச் சொன்னாலும் தெரியவில்லை. வீட்டு அட்ரஸை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நானும் தம்பியும் ஒரே அழுகை வேறு. அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.
இதற்குள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுவன் அந்த வழியாக சென்றவன் எங்களைப் பார்த்து விட்டான். அவன் ஓடோடிப் போய் எங்கள் வீட்டில் சொல்ல, எங்கள் தாத்தா வேகமாக கிளம்பி வந்து விட்டார். தாத்தாவைப் பார்ததும் தான் போன உயிர் திரும்பியது.
தாத்தா வந்ததும், குரங்காட்டியிடம் என்னப்பா நம்ம வீட்டுப் புள்ளைகளை கட்டி வச்சு இருக்க என்றதும் அவர் ‘நம்ம வீட்டு புள்ளைகளா? பயபுள்ளைக சொல்லவே இல்லியா’ என்று கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டார். ‘இனி கவனமா சைக்கிள் ஓட்டனும்’ என்று அறிவுரை வேறு... :) எங்கள் அப்பா அப்போது பிரபல்யம் அடையவில்லை என்று நினைக்கிறேன். அப்ப தாத்தாவோட இராஜ்ஜியம். இருவரும் நொண்டிக் கொண்டே சைக்கிளை உருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வழியில் என் தம்பியிடம் ‘வாடா, இனி சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலாம்’ என்றதும் நக்கீரரைப் பார்த்த சிவாஜி மாதிரி ஒரு பார்வை பார்த்தானே பார்க்கனும். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. அந்த சைக்கிளில் மாட்டிய குழந்தை... அது எங்களை கட்டி வைத்தும் கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு எங்கள் அருகிலேயே விளையாட்டைத் தொடர்ந்தது. அதற்கு அடி ஏதும் படவில்லை.
♥
63 comments:
ஆஹா...! நாந்தான் மொதொ ஆளா?
குரங்காட்டி, 'ஆட்ரா ராமா'ன்னுல்லாம்
சொல்லலையா? தாத்தா வந்தாரோ பொழச்சீங்களோ! இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?
இதுக்குத்தான் குரங்கு பெடல் போட்டு ஓட்டக்கூடாது.
பயபுள்ளைக சொல்லவே இல்லியே!
//வாங்க மக்கா! உங்களை கொஞ்சம் 16,17 வருஷம் பின்னோக்கி கொண்டு போறேன்.//
பத்திரமா திருமப் கொண்டாந்து வுட்டுடுவீங்கன்னா சொல்லுங்க நானும் வரேன் பாஸ்!
//குட்டி சைக்கிளில் ஏறி ஊரை வலம் வந்து கொண்டு இருந்த காலம். //
பாவம் குட்டி ! :(((
//பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு//
பாவம் குரங்கு!
//ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.//
நடுநடுவில இப்படி ஒரு வரி வருதே அது என்னங்க ஆங் சொல்ல மறந்துட்டேன்!
பாராகிராப் டிவைடரா அது ?????
//கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு //
ஓ.....!
அப்பலேர்ந்தே உங்கள பார்த்தாலே எல்லாரும் இப்படித்தானா.....????
தமிழ்பிரியன் நல்லா இருக்குங்க !
அய்ய இந்த கமெண்ட் தான் பத்தா?
ஒ.கேய் மீ த பத்து !!!
குரங்குப்பெடல் போட்டவங்களுக்கு மேட்சிங்கா குரங்காட்டி கிடைச்சுட்டார்:-)))))
\\நானும் தம்பியும் ஒரே அழுகை வேறு. அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.\\
ஆஹா ‘தல' அப்பவேவா ...
ஊருபக்கம் போகும் போது ஜாக்கிரதை.. ரவுடின்னா சொன்னேனு திரும்ப கட்டிவைக்கப்போறார்..இப்ப அந்த பாப்பால்லாம் பெரிசாகி இருக்கும் அது இப்ப சிரிச்சா நல்லாருக்காது.. :)
//வழக்கம் போல் சைக்கிளின் மீது நானும், தம்பியும் கிடக்க//
ஹி ஹி ஹி
//எங்களை காப்பாற்றி தூக்கியவர்கள் அனைவரும் பெரிய ரவுடிகள்//
தமிழ் பிரியன் நீங்க இனிமே சொல்லிக்கலாம் ..ஏ! இங்க பாருங்க நானும் ரவுடி தான் ரவுடி தான் :-)))))
அண்ணா சூப்பர் நல்லா சிரிச்சேன் :))
ஆயில்ஸ் அண்ணா கமெண்ட்ஸ் அல்டிமேட் :))))))))))))
//அப்பத்தான் பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பழகிட்டு சீட்டில் உட்கார ஆரம்பிச்சு இருந்தேன்.//
//குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)//
இப்படியெல்லாம் எழுதினா நாங்க என்ன சொல்வது...?
//அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.//
இது இது ரொம்ப நல்ல ஐடியா. இன்றுவ்ரை எல்லா பிள்ளைகளும் பின் பற்றுவது. யார்தான் சொல்லிக் கொடுப்பார்களோ:))?
என்னாச்சு குழந்தைன்னு நான் பதறிபோய் கத முழுதையும் படிச்சா - கட்டக் கடசிலே அது கை கொட்டி சிரிச்சுது வேற ஒண்ணுமில்ல ன்னு கூலா சொல்லிட்டுப் போய்ட்டே - அப்பா நிம்மதியாச்சு
ஆமா தாத்தா பேரச் சொல்லி அந்த சோ கால்டு ரவுடீஸை மிரட்டி இருக்க வேனாமா - என்ன பய புள்ளெ நீ - போ
ஹாய் ஜின்னா,
//குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)//
ஹா ஹா ஹா ஹா.....
ஹாய் ஜின்னா,
//அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.//
அது சரி அப்பலேர்ந்தே கிரிமினல் தானா?(நான் ஐடியாவை சொன்னேன்)
ஹாய் ஜின்னா,
//கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு எங்கள் அருகிலேயே விளையாட்டைத் தொடர்ந்தது. அதற்கு அடி ஏதும் படவில்லை.//
ஹா ஹா ஹா ஹா.....அப்பவே உங்களைப் பாத்து கெகே பிக்கேனு சிரிச்சுடுச்சா? ஹா ஹா ஹா....
(இப்பவும் அப்படி தான் சிரிக்கும் னு நினைக்கிறேன்.)
//தமிழ் பிரியன் நீங்க இனிமே சொல்லிக்கலாம் ..ஏ! இங்க பாருங்க நானும் ரவுடி தான் ரவுடி தான் :-)))))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஹாய்,
//ஊருபக்கம் போகும் போது ஜாக்கிரதை.. ரவுடின்னா சொன்னேனு திரும்ப கட்டிவைக்கப்போறார்..//
ஆமாம்,இப்போ ஊருக்கு வரும் போது போட்டு குடுத்துடலாம் னு நினைக்கிறேன், நீங்க என்ன சொல்றீங்க?
குழந்தைக்கு என்னாச்சுன்னு பதறிப் போய் படிச்சா......அப்பாடா...நல்லவேளை பிழைத்தது....இல்லைன்னா குரங்காட்டி என்ன பண்ணியிருப்பாரோ??
அன்புடன் அருணா
உங்களுக்கு குரங்கே தேவலைன்னு விட்டுட்டார்னு நெனைச்சா, உங்க தாத்தா வந்து காப்பாத்தியிருக்கார்.
குரங்காட்டி பெடல் ஓட்டினா இப்படித்தான் ஆகும் :)
//ஆயில்யன் said...
//கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு //
ஓ.....!
அப்பலேர்ந்தே உங்கள பார்த்தாலே எல்லாரும் இப்படித்தானா.....????
//
hahaaha
;-))) kalakkals
வழியில் என் தம்பியிடம் ‘வாடா, இனி சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலாம்’ என்றதும் நக்கீரரைப் பார்த்த சிவாஜி மாதிரி ஒரு பார்வை பார்த்தானே பார்க்கனும்.
irunthalum ungaluku rompa than thaireyam pa.
அதுனாலதான் இன்னும் குரங்குப் பாசம் விடாம குரங்குமலைப் பக்கம் குடியிருந்து குரங்குகளாப் படம் எடுக்கு
றீங்களா:)
அதுனாலதான் இன்னும் குரங்குப் பாசம் விடாம குரங்குமலைப் பக்கம் குடியிருந்து குரங்குகளாப் படம் எடுக்கு
றீங்களா:)// ஹிஹி.. ரிப்பீட்டு.!
//நானானி said...
ஆஹா...! நாந்தான் மொதொ ஆளா?////
ஆமாம்மா! நீங்க தான் முதலில்.. நன்றி!
///நானானி said...
குரங்காட்டி, 'ஆட்ரா ராமா'ன்னுல்லாம்
சொல்லலையா? தாத்தா வந்தாரோ பொழச்சீங்களோ! இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?
இதுக்குத்தான் குரங்கு பெடல் போட்டு ஓட்டக்கூடாது.////
வீர விளையாட்டுகளில் இதெல்லாம் சகஜம் தானே.... தாத்தா வரா விட்டாலும் எப்படியாவது வந்திருப்போம்ல...;)
///ஆயில்யன் said...
பயபுள்ளைக சொல்லவே இல்லியே!///
ஹிஹிஹி எல்லா ரகசியத்தையும் ஒரே நாளில் சொல்ல முடியுமா?...
///ஆயில்யன் said...
//வாங்க மக்கா! உங்களை கொஞ்சம் 16,17 வருஷம் பின்னோக்கி கொண்டு போறேன்.//
பத்திரமா திருமப் கொண்டாந்து வுட்டுடுவீங்கன்னா சொல்லுங்க நானும் வரேன் பாஸ்!///
ஏற்கனவே காலச் சக்கரத்தில் ஏற்றிக் கொண்டுப்போனப்பவே திருப்பிக் கொண்டு வந்துட்டேனே...இப்ப பயமில்லாமல் வாங்க..:)
///ஆயில்யன் said...
//குட்டி சைக்கிளில் ஏறி ஊரை வலம் வந்து கொண்டு இருந்த காலம். //
பாவம் குட்டி ! :(((///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///ஆயில்யன் said...
//பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு//
பாவம் குரங்கு!///
என்னைச் சொல்லலியே?..;)
/// ஆயில்யன் said...
//ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.//
நடுநடுவில இப்படி ஒரு வரி வருதே அது என்னங்க ஆங் சொல்ல மறந்துட்டேன்!
பாராகிராப் டிவைடரா அது ?????////
அதோ ஃப்ளோப்பா... பேசும் போது அப்படித்தான் பேசனும்.. அதுதான் வருங்கால அரசியல் வாதிகளுக்கு அழகு!
///ஆயில்யன் said...
//கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு //
ஓ.....!
அப்பலேர்ந்தே உங்கள பார்த்தாலே எல்லாரும் இப்படித்தானா.....????///
ஆமாண்ணே! சின்ன வயசில நான் உங்களை மாதிரி தான் இருந்தேன்...;)
///ஆயில்யன் said...
தமிழ்பிரியன் நல்லா இருக்குங்க !///
நன்றி ஆயில் அண்ணே!
///ஆயில்யன் said...
அய்ய இந்த கமெண்ட் தான் பத்தா?
ஒ.கேய் மீ த பத்து !!!///
ஆமாமா! நீங்களே தான் பத்து!
///துளசி கோபால் said...
குரங்குப்பெடல் போட்டவங்களுக்கு மேட்சிங்கா குரங்காட்டி கிடைச்சுட்டார்:-)))))///
ஆமாம் டீச்சர்.. ;)
///அதிரை ஜமால் said...
\\நானும் தம்பியும் ஒரே அழுகை வேறு. அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.\\
ஆஹா ‘தல' அப்பவேவா ...////
பிறந்ததில் இருந்தே என்று கேள்வி.. ;)
////முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஊருபக்கம் போகும் போது ஜாக்கிரதை.. ரவுடின்னா சொன்னேனு திரும்ப கட்டிவைக்கப்போறார்..இப்ப அந்த பாப்பால்லாம் பெரிசாகி இருக்கும் அது இப்ப சிரிச்சா நல்லாருக்காது.. :)///
அக்கா! அதெல்லாம் விவரமா இருப்போம்ல... குரங்காட்டி கதை எல்லாம் முடிஞ்சு போச்சு.. அந்த தைரியம் தான். நீங்க சொன்னதும் தான் ப்யமா இருக்கு. குரங்காட்டியின் வாரிசுகள் இருக்காங்க
///கிரி said...
//வழக்கம் போல் சைக்கிளின் மீது நானும், தம்பியும் கிடக்க//
ஹி ஹி ஹி
//எங்களை காப்பாற்றி தூக்கியவர்கள் அனைவரும் பெரிய ரவுடிகள்/
தமிழ் பிரியன் நீங்க இனிமே சொல்லிக்கலாம் ..ஏ! இங்க பாருங்க நானும் ரவுடி தான் ரவுடி தான் :-)))))///
இனிமே இல்ல... ஊரிலேயே நாங்க ரவுக தான்..... ;))
///ஸ்ரீமதி said...
அண்ணா சூப்பர் நல்லா சிரிச்சேன் :))////
நன்றிம்மா தங்கச்சி!
/// ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா கமெண்ட்ஸ் அல்டிமேட் :))))))))))))///
நமக்கு அண்ணனாச்சே... அதான் கலக்குறாரு!
///புதியவன் said...
//அப்பத்தான் பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பழகிட்டு சீட்டில் உட்கார ஆரம்பிச்சு இருந்தேன்.//
//குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)//
இப்படியெல்லாம் எழுதினா நாங்க என்ன சொல்வது...?///
அவ்வ்வ்வ்வ்வ்வ் பாராக்களைச் சேர்க்காதீப்பா... மானம் போகுது..;)
///ராமலக்ஷ்மி said...
//அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.//
இது இது ரொம்ப நல்ல ஐடியா. இன்றுவ்ரை எல்லா பிள்ளைகளும் பின் பற்றுவது. யார்தான் சொல்லிக் கொடுப்பார்களோ:))?///
ஹிஹிஹி இதெல்லாம் இரத்தத்தில் ஊறி இருக்குமக்கா... நீங்க கூட சின்ன வயசில் நிறைய இது மாதிரி அழுது அடம் பிடிச்சதா அம்மாகிட்ட இருந்து இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது..;)
///rapp said...
:):):)///
கஷ்டப்பட்டு தப்பி வந்து இருக்கேன். உங்களுக்கு சிரிப்பா இருக்கா?.. :(
///cheena (சீனா) said...
என்னாச்சு குழந்தைன்னு நான் பதறிபோய் கத முழுதையும் படிச்சா - கட்டக் கடசிலே அது கை கொட்டி சிரிச்சுது வேற ஒண்ணுமில்ல ன்னு கூலா சொல்லிட்டுப் போய்ட்டே - அப்பா நிம்மதியாச்சு
ஆமா தாத்தா பேரச் சொல்லி அந்த சோ கால்டு ரவுடீஸை மிரட்டி இருக்க வேனாமா - என்ன பய புள்ளெ நீ - போ///
ஒரு ரவுடி கூட்டம் இன்னொரு ரவுடி கூட்டத்தோட சண்டை போடக் கூடாதுன்னு அங்கு எழுதப்படாத சட்டமா இருந்தது.. அதான் விட்டுட்டு வந்துட்டோம்.. :))
//Sumathi. said...
ஹய் ஜின்னா,
//குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)//
ஹா ஹா ஹா ஹா.....////
ஒரு முடிவோடத்தான் இருக்கீங்களா? அவ்வ்வ்
///Sumathi. said...
ஹாய் ஜின்னா,
//அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.//
அது சரி அப்பலேர்ந்தே கிரிமினல் தானா?(நான் ஐடியாவை சொன்னேன்)///
எல்லாத்திலயும் அப்ப இருந்தே நாங்க கிரிமினல்க தான்.. :)
///அன்புடன் அருணா said...
குழந்தைக்கு என்னாச்சுன்னு பதறிப் போய் படிச்சா......அப்பாடா...நல்லவேளை பிழைத்தது....இல்லைன்னா குரங்காட்டி என்ன பண்ணியிருப்பாரோ??
அன்புடன் அருணா///
அக்கா! நாங்க அன்னைக்கு யோசிக்காதைக் கூட இன்னைக்கு சொல்லி பயமுறுத்துறீங்களே... :(
///வடகரை வேலன் said...
உங்களுக்கு குரங்கே தேவலைன்னு விட்டுட்டார்னு நெனைச்சா, உங்க தாத்தா வந்து காப்பாத்தியிருக்கார்.///
குரங்கை விட மோசமா இருந்ததினால் தான் கட்டி வச்சுட்டாருன்னு நினைக்கிறென்ன்...;))
///சின்ன அம்மிணி said...
குரங்காட்டி பெடல் ஓட்டினா இப்படித்தான் ஆகும் :)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///சின்ன அம்மிணி said...
//ஆயில்யன் said...
//கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு //
ஓ.....!
அப்பலேர்ந்தே உங்கள பார்த்தாலே எல்லாரும் இப்படித்தானா.....????
//
hahaaha///
எல்லாரும் கூட்டணி சேர்ந்திருக்கீகளாக்கும்.. அவ்வ்வ்வ்வ்
///கானா பிரபா said...
;-))) kalakkals///
நன்றி கானா அண்ணே!
///gayathri said...
வழியில் என் தம்பியிடம் ‘வாடா, இனி சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலாம்’ என்றதும் நக்கீரரைப் பார்த்த சிவாஜி மாதிரி ஒரு பார்வை பார்த்தானே பார்க்கனும்.
irunthalum ungaluku rompa than thaireyam pa.////
ஹிஹீஹி காயத்ரிக்கா... இந்த வீரமெல்லாம் சின்ன வயசில் இருந்தே வந்துடுச்சுக்கா... ;)
///ராஜ நடராஜன் said...
அதுனாலதான் இன்னும் குரங்குப் பாசம் விடாம குரங்குமலைப் பக்கம் குடியிருந்து குரங்குகளாப் படம் எடுக்கு
றீங்களா:)////
ஹா ஹா ஹா ஹா
///தாமிரா said...
அதுனாலதான் இன்னும் குரங்குப் பாசம் விடாம குரங்குமலைப் பக்கம் குடியிருந்து குரங்குகளாப் படம் எடுக்குறீங்களா:)// ஹிஹி.. ரிப்பீட்டு.!////
இதையெல்லாம் இங்க போட்டு உடைக்காதீங்க அண்ணே.. ;)
not for publish!!!
ஆலோலம் பாடிக்கொண்டிருந்த போது
வேடனாகவும் விருத்தனாகவும் வந்த முருகன் என்னிடம் பாலகனாகவும் என் பேரன் வடிவில் திடீரென்று ஓடி வந்து....கீபோர்டைத் தன் பத்து விரல்களாலும் தட்டோதட்டுன்னு தட்டி தலைப்பைத் தவிர அத்தனையயும் அழித்து பத்தாததுக்கு எனக்குத் தெரியாமலே பப்ளிஷும் பண்ணீ விட்டு ஓடிவிட்டான். பொறுங்கள். விரைவில் மறுபடி ஆலோலம் பாட வருவேன்.
Post a Comment