Friday, December 3, 2010
கத்தார் - Expect amazing
அந்த குறை நேற்றுடன் தேர்ந்து விட்டது. கத்தார் உலகக் கோப்பையை நடத்துவதற்கான போட்டியில் இருந்த போது கடுமையான விமர்சனங்களை நேரிட்டது. கத்தார் அவைகளை எதிர்கொண்ட விதம் சுவாரஸ்யமானது. போட்டிக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஷேக் முஹம்மது பின் ஹமாத் அல் தானியின் இளமைத் துடிப்பும் நிதானமான நடவடிக்கைகளும் குறை சொல்லியவர்களின் வாயை மூட வைத்தது.
பொதுவாக வளைகுடா அராபிய நாடுகள் என்றாலே பயத்துடன் வாயைப் பிளக்கும் மேற்கத்தியவர்களையே காணலாம். ஆனால் இங்கு வந்து வேலை செய்யும் மேற்கத்தியவர்களுக்குத் தான் தெரியும் இதன் அற்புதங்கள். பொதுவாக அமெரிக்க, ஐரோப்ப்பிய, ஆஸ்திரேலியர்களுக்கு உலகமே அவர்கள் நாடு போலவும், மற்றவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் தான் இருக்கும். கூகுளில் world cup qatar 2022 என்று கொடுத்து Latest தேடலில் இருந்த போது தான் பலரின் வயிறு எரிந்ததைக் காண முடிந்தது.
இனி எல்லாவற்றிற்கும் பதிலை களத்தில் காட்ட இருக்கின்றோம். சிறிய நாடு, ஸ்டேடியங்கள் குறைவு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு, உச்சபட்ச வெப்பநிலை என்றேல்லாம் குறைகள் மேற்கத்திய மீடியாக்களில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், அள்ளித் தெளிக்கப்பட்டன.
மொத்தம் 12 ஸ்டேடியங்கள். அனைத்தும் முழுவதும் அரசாங்கத்தின் முதலீட்டில் கட்டப்பட இருக்கின்றன. பணம் ? எங்கள் அரசாங்கத்துக்கு பணம் என்பது ஒரு பொருட்டே அல்ல... இன்னும் 200 வருடங்களுக்கு அறிப்பட்ட இயற்கை வாயு, எண்ணைய் வளம் இருக்கின்றது. சில கிமீ துரத்திற்குள் ஸ்டேடியங்கள் அனைத்தும் பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. பல ஸ்டேடியங்களுக்கு கடல் வழியில் ரசனையான படகுகள் மூலம் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.
பாதுகாப்பு என்பது கத்தாரில் ஒரு பிரச்சினையே இல்லை. உலகில் எந்த இடத்தில் இருப்பதையும் விட கத்தாரில் இருப்பதை பாதுகாப்பாக இங்கே உள்ளவர்கள் உணர்வார்கள். வெப்பநிலை... ஆம்.. இதுதான் பெரும் பிரச்சினையாக உலக நாடுகளால் சொல்லப்பட்டது. போட்டி நடக்கும் ஜூன், ஜூலையில் வெப்பநிலை 130 டிகிரி வரை (50 பாரன்ஹீட்) செல்லும். இதை அதே நாடுகளின் தொழில்நுட்பங்களைக் கொண்டே வெற்றி கொள்ள இருக்கின்றோம். ஸ்டேடியம் முழுவதும் நவீன தொழில் நுட்பத்தில் குளிர்விக்கப்படும். சுமார் 20 டிகிரி (74 பாரன்ஹீட்) செல்சியஸ் வெப்பநிலையில் ஆட்டம் நடக்கும். ஸ்டேடியங்கள்
ஸ்டேடியம் முழுவதும் பாரம்பரியமான முறையில் அமைக்கப்படுகின்றது. பொதுவாக இது போன்ற போட்டிகளை நடத்தி முடித்த உடன் ஒரு சிக்கல் எழும். இவ்வளவு பணம் போட்டி கட்டப்பட்டவை ஸ்டேடியங்களை, ஆடுகளங்களை என்ன செய்வது என்று? கத்தார் அதற்கு தகுந்த பதில் வைத்துள்ளது. இந்த ஸ்டேடியங்கள் அனைத்தும் போட்டிகளுக்குப் பின் மூன்றாம் உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதே... முதல் 5 ஸ்டேடியங்களில் அமைப்பை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
உலக கோப்பை கால்பந்து 2022 ஐ நடத்துவது கத்தார் என்று அறிவிக்ப்பட்ட உடன் கமிட்டித் தலைவர் ஷேக் முஹம்மது பின் ஹமாத் அல்தானி கூறியது இதுதான்.
"Thank you for believing in change, Thank you for believing in expanding the game, Thank you for Qatar giving a chance, and we will not let you down, you will be proud of us, and you will be proud of the middle east, and i promised to you this "
இன்னும் 12 ஆண்டுகளே இருக்கு... இன்னும் 12 ஸ்டேடியம் கட்டனும், ஏர்ப்போர்ட் விரிவாக்கம் செய்யனும், மெட்ரோ ட்ரெயின் போடனும்... நாங்க இனி ரொம்ப பிஸியாக்கும்... ;-)
கத்தாரின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி! வென்று காட்டுகின்றோம்.
EXPECT AMAZING!
Friday, September 10, 2010
கன்னி மேடைகள்
மேடைப் பேச்சு என்பதே ஒரு சுவாரஸ்யம்.. எல்லாருக்கும் அந்த கலை வருவதில்லை. பேசும் டாபிக்கை விடு எங்கெங்கோ சென்று இழையை விட்டுவிடுபவர்களைப் பார்க்கலாம்.. அதெல்லாம் ஒரு பெரிய டாபிக்.. அது வாணாம்.. நாம வழக்கமான மொக்கைக்கு போகலாம்.. நமக்கும் இந்த மேடைகளுக்கும் ஆவறதே இல்லை. பள்ளியில் படிக்கும் போது திங்கள் கிழமை காலை வணக்கத்தில் ஒரு தலைவரைப் பற்றி ஒரு மாணவன் உரையாடனும். எங்கள் வகுப்பு வரும் போது அந்த வாய்ப்பு எனக்குதான் கிடைக்கும்.. அது மாதிரி பாரதியார், காந்தி ,நரசிம்மராவ் (அவ்வ்வ்வ்... அப்ப அவர் தான் பிரதமர்) பற்றி எல்லாம் பேசி இருக்கோம்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் ஒரு பேச்சுப் போட்டி.. குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி. நேரு பற்றி பேசலாம்னு போயாச்சு.. அங்க பார்த்தா எல்லா பசங்களும் பொளந்து கட்டி அடிக்கிறானுக.. அப்ப தான் நாம கிணற்றுத் தவளையா இருந்து இருக்கோம்னு தெரிஞ்சது.. சொந்த பள்ளியில் ராஜா மாதிரி இருந்துட்டு வெளியே போனா கை, கால் எல்லாம் நடுங்கிப் போச்சு.. எப்படி சமாளிச்சிட்டு வந்தாச்சுன்னு வச்சுக்கங்களேன்.
சென்னையில் படித்த போதும் அப்படித்தான்.. படிப்பு முடிந்ததும் கல்லூரி சார்பில் நிகழ்ச்சி..(நீ எப்ப கல்லூரி போனன்னு கேட்கப்படாது..ப்ளோவில் வரும் இதெல்லாம்) கல்லூரி பேராசிரியர்கள், எங்களைப் படிக்க வைத்த துபாய் நிறுவன உயர் அதிகாரிகள் எல்லாம் இருக்காங்க.. கழுத்தில் டை எல்லாம் கட்டி ஸ்டைலா மேடை ஏறி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பா நன்றி சொல்லனும்.. இங்கிலிபீஸில் தான்.. :) கூட படித்த ஒருத்தன் கேமராவோட இருந்தான்.. “டேய்.. நான் மேடையேறி பேசும் போது ஒரு போட்டோ எடு” ந்னு சொல்லிட்டேன்... சித்தார்கோட்டைக்காரன்.. படுபாவி.. நான் பேசப் போறதுக்கு முன்னாடி நல்லா தான் எல்லாரையும் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தான். நான் மேடை ஏறியதும் கேமராவில் ஏதோ ரிப்பேர்னு நோண்ட ஆரம்பிச்சான்.. இறங்கும் போது தான் சரியாச்சுன்னு சொன்னான்.. சதி வேலை போல இருக்கு.. என்னவோ என் மேடை போட்டோக் கனவு கானல் நீராப் போச்சுன்னு வச்சுக்கங்க... சரி அதை விடுவோம்.
நான் போய் வாக்கப்பட்ட(அல்லது பொண்ணு எடுத்த ஊர்) தமிழகத்தின் தெற்குக் கடைசியில் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் இருக்கு.. சிறு குக்கிராமம்.. ஒரு பகுதியில் மசூதி.. அதை சுற்றி மூன்று, நான்கு முஸ்லிம் மக்கள் வசிக்கும் தெருக்கள்.. அந்த ஊரில் ஒரு பழக்கம்.. நோன்புப் பெருநாள் அன்று விழா போல் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒட்டப்ப்பந்தயம், கயிறு ஏறுதல், கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமிகளுக்கு போட்டிகள் எல்லாம் இருக்கும். அந்த ஊரில் இருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் மாலையில் மேடையில் பேச வேண்டும். பேச்சுப் போட்டி என்பது எல்லாம் இல்லை. எல்லாரும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.
ரமழான் மாதம் ஆனதுமே இதுக்காக முஸ்தீபுகளில் சிறுவர், சிறுமியர் இறங்கி விடுவார்கள். எல்லா வீட்டுப்பிள்ளைகளும் கையில் பேப்பர்களை வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டு திரியும்.. போன வருடம் ஊரில் இருந்த போது பார்த்தது இதெல்லாம்... எங்க வீட்டில் ஒரு மைனர் இருக்காரே.. அவருக்கு அப்ப வயசு 3.. எல்லாப் பிள்ளைகளும் மேடை ஏறும் போது நல்ல பிள்ளை மட்டும் மேடை ஏறலைன்னா அசிங்கமா போயிடும்னு அவனையும் மேடை ஏற்ற ஏற்பாடு பண்ணியாச்சு.
பள்ளிவாசல் இமாம் அவனை பரிசோதித்து (?) குரானில் இருந்து 7 வசனங்கள் உள்ள ஒரு சூரா சொல்லட்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே மனைவி அவனுக்கு இதைக் கற்றுக் கொடுத்து வைத்து இருந்ததால் மனப்பாடமாக சொல்வது பிரச்சினையாக இல்லை. போன வருடப் பெருநாளும் வந்தது. நம்ம ஆளு புல் மேக்கப்போட ரெடி.. பயமெல்லாம் இல்லை.. எங்களுக்கு தான் பயமா இருந்தது. நான் வீடியோ கேமராவோட மகன் மேடையில் சொல்லப் போவதை பதிவு செய்ய ரெடி.. மச்சினன் தனது மருமகன் மேடையில் நிற்பதை போட்டோ எடுக்க கேமராவோட ரெடி.
மகன் பெயர் கூப்பிடப்படுகின்றது. அசால்டா மேடை ஏறினான்.. மைக்கு முன்னாடி தைரியமா வந்து நின்றான்.. நின்றான்.. நின்றான்.. நின்னுக்கிட்டே இருந்தான். ம்ஹூம்.. வாயைத் திறக்கவே இல்லையே.. பின்னாடி... முன்னாடி எல்லாரும் சொல்லுடா சொல்லுடா என்று கத்தியது தான் மிச்சம்.. மேடையில் நின்று எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றான்.. அப்புறம் வம்படியா இறக்கி விட்டுட்டாங்க.. முதல் கன்னி மேடைப் பேச்சு பேசப்படாமலே போச்சு.
போட்டோ எடுத்தாச்சு... சொல்லுடா சொல்லுடா என்ற இறைச்சலோடு வீடியோவும் எடுத்தாச்சு.. அப்புறம் மனைவியின் தோழிகள் எல்லாம் நம்மை கிண்டல் செய்தது வேற கதைன்னு வச்சுக்கங்க..
இப்போது வயது 4 . இதோ இந்த ஆண்டும் ரமழான் வந்தது. நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று பெருநாள் பண்டிகை.. இந்த ஆண்டும்.. போட்டிகள்.. அதே பேச்சுகள்.. மேடை எல்லாம் இருக்கும். நாங்களும் முயற்சியில் சற்று மனம் தளராமல் அவனை மேடை ஏற்ற தயாராகி விட்டோம். ஊரில் இல்லையென்றாலும் என்ன செய்யப் போகின்றானோ என்ற பதைபதைப்பு. இரவு தெரிந்து விடும். இப்போதும் கன்னி மேடையா? அல்லது கன்னிப் பேச்சா என்று..
இரவு அப்டேட் : மகனார் நல்லபடியாக மேடை ஏறி பேசி விட்டாராம். பேசியது இதுதான்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.
பொருள் : (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Friday, August 6, 2010
சண்முகசுந்தரம் அண்ணனும் ஸ்டெல்லா அக்காவும்
இந்த தடவை ஊருக்கு போய் இருக்கும் போது அண்ணனோட பன்னிரண்டாவது நினைவு நாளாம். அவங்க கட்சிக்குன்னு ஒரு சிறு படிப்பகம் இருக்கும். தீக்கதிரோ, தினக்குரலோ ஏதோ ஒரு பத்திரிக்கை மட்டும் வரும். சின்ன வயசில் அண்ணன் கூப்பிட்டுப் போகும் போது படிச்சி இருக்கேன். அந்த படிப்பகத்திற்கு வெளியே தான் அண்ணனோட படத்துக்கு மாலை எல்லாம் போட்டு மைக் செட் வச்சு பாட்டு எல்லாம் ஓடுச்சு. நைட் அந்த மைக் செட்காரன் டப்பாக்குத்து பாட்டு எல்லாம் போட்டது தனி மேட்டர். காலையில் தான் அஞ்சலி. தெருவில் இருக்கும் பசங்கள் எல்லாம் அங்க தான் இருந்தானுக
சண்முகசுந்தரம் அண்ணன் நான் ஏழாப்பு படிக்கும் போது தான் செத்துப் போச்சு... எங்க ஊர் இரயில்வே தண்டவாளத்தில் ஆள் அடையாளம் காண முடியாதபடி அண்ணனோட பிணம் கிடந்தது. முகம், உடல் எல்லாம் சிதைந்து கிடந்தது. போட்டு இருந்த சட்டை, வேட்டி வச்சுத் தான் அண்ணன்னு கண்டுபிடிச்சாங்க.. . அண்ணனோட கட்சி உறுப்பினர் கார்டும் கூட இருந்ததாம்.
அண்ணனுக்கு கொஞ்சம் நல்ல பேர் தான் ஏரியாவில்.... ரேசன் கார்டு பிரச்சினை, சாதிச் சான்றிதழ் பிரச்சினை, பசங்களை ஸ்கூலில் சேர்க்கும் போது பிரச்சினை இப்படின்னு எல்லா பிரச்சினைகளிலும் அண்ணன் எல்லாருக்கும் உதவும். பாரம் ஃபில் பண்றதெல்லாம் அண்ணனுக்கு தண்ணி பட்டபாடு. அரசாங்க ஆபிஸ்களில் அண்ணனுக்கு நிறைய பேரைத் தெரியும்.
அண்ணன் ஏன், எப்படி இறந்தார்ன்னு நிறைய பேருக்கு சந்தேகம். கொஞ்சம் பேர் போலீஸ் கஸ்டடியில் செத்துப் போனதால் அவரைப் போலீஸே கொண்டு வந்து தண்டவாளத்தில் போட்டு விட்டதாக இன்றும் பேசிக் கொள்வார்கள். அப்போது ஏற்ப்பட்ட ஒரு சாதி தகராறில் ஒரு போலிஸ்காரரை உயிரோடு கொளுத்தியதாக அண்ணன் மீது குற்றச்சாட்டு. அண்ணனுக்கு சாதி எல்லாம் பிடிக்காது என்றாலும் எப்படியோ இந்த கேஸில் மாட்டி விட்டு இருக்காங்க.. அதனால் தான் போலிஸ் பிடிச்சு கொன்னுட்டதா பேச்சு. அப்பவெல்லாம் என்கவுண்ட்டர் கலாச்சாரம் இல்லையே?.
கொஞ்சம் அந்தரங்கமாக சண்முகசுந்தரம் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூடப் பேசிக் கொள்வார்கள். அண்ணனுக்கு ஒரு லவ் இருந்தது. அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லா. அந்த பொண்ணும் எங்க தெரு தான். தையல் கிளாஸ் போகும் போது படிப்பகத்தைத் தாண்டி தான் போகும். அப்ப அண்ணன் சரியா படிப்பக வாசலில் நிக்கும். ரெண்டு பேரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். புன்னகையும் பிறக்கும். இதைப் பார்க்க எங்களுக்கு ஜாலியா இருக்கும். அண்ணன் சில நேரம் எங்களை விரட்டி விடும். ஸ்டெல்லா அக்கா வேறு மதம் என்பதால் ரெண்டு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு.
கடைசியில் ஸ்டெல்லா அக்காவுக்கு சிவகாசியில் இருந்து ஒருவனுக்கு கல்யாணம் முடிச்சி கொடுத்துட்டாங்க... அண்ணன் தாடி மீசையோட கொஞ்ச நாள் அலைந்தது. ஸ்டெல்லா அக்காவும் கொஞ்ச நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்புறம் கொஞ்ச நாள் லூசு மாதிரி இருந்தாங்களாம். அப்புறம் எங்கியோ காணாமப் போய்ட்டாங்களாம். அதனால் ஏற்பட்ட துக்கத்தில் தான் அண்ணன் செத்துப் போனதாவும் பேச்சு.
நானும் போய் நினைவஞ்சலியில் கலந்து கொண்டேன். இப்ப புதுசா இருக்கும் ஒன்றியத்தலைவர் அண்ணனின் வீரதீரபிரதாபங்களை எல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தார். அண்ணனை போலிஸ் அராஜகம் கொன்று விட்டதாகக் கூறி போலிஸையும் தாக்கிக்கிட்டு இருந்தார். சூட்டோட தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் உண்டியலும் குலுக்கப்பட்டது. என்னிடம் வந்த போது ’வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கீங்க.. தாராளமாப் போடுங்க’ன்னு மைக்கிலேயே சவுண்ட் வேற.. வேற வழி இல்லாம 50 ரூபாயைப் போட வேண்டி வந்துச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு வந்தேன்.
வீட்டுக்கு வந்த போது உம்மாவும், பக்கத்து வீட்டு அக்காவும் அண்ணன் குறித்து பெருமையாகப் பேசிக்கிட்டு இருந்தாங்க... அவங்களுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் நடந்ததைச் சொல்லலாம்னு நினைச்சுட்டு பின்ன விட்டுட்டேன். அதை உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன். சென்னையில் படிக்கும் போது ஞாயிறுகளில் தி.நகரில் சுற்றுவது வழக்கம். அப்படி ஒருநாளில் தான் அண்ணனையும், ஸ்டெல்லா அக்காவையும் அங்க பார்த்துட்டேன்.
வேகமா போய் அண்ணன் கையைப் பிடிச்சிக்கிட்டு விசாரிச்சேன்ன். ஸ்டெல்லா அக்காவுக்கு முகமெல்லாம் வேர்த்துப் போச்சு.. கூடவே ஒரு அஞ்சாறு வயசில் ஒரு பையன் வேறு. அண்ணனால் அக்காவை மறக்க முடியலையாம். அதோட போலிஸ் கேஸ் வேற.. அதனால் ரெயில்வே ஸ்டேசன் ஓரம் செத்துக்கிடந்த ஒரு பிச்சைக்காரனுக்கு அவரோட டிரஸ் எல்லாம் போட்டு, முகத்தைச் சிதைத்து இரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மாதிரி போட்டுட்டு ஸ்டெல்லா அக்காவோட பெங்களூருக்கு ஓடிப் போய்ட்டாராம். ரெண்டு வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்து செட்டில் ஆயிட்டாராம். யார்கிட்டயும் சொல்லிடாதன்னு கேட்டுக்கிச்சு.. ஸ்டெல்லா அக்காவும் ஒரு அழுகையோட இப்பதான் சந்தோசமா இருக்கேன். யார்கிட்டயும் காட்டிக் கொடுக்காதன்னுச்சு. சரின்னு விட்டுட்டேன். நீங்களும் இதை மறந்துடுங்க என்ன..
Wednesday, August 4, 2010
பழைய காதல் கோட்டை ஒன்று
அப்பத் தான் நம்ம பரணி வந்து சேர்ந்தான். பரணியைத் தெரியாதவங்க இங்க போய் தெரிஞ்சுக்கங்க.. தெரிஞ்சவங்க மேல படிக்கலாம். காலை ஏழு மணிக்கே அவன் வந்தது ஏனோ ஒரு வில்லங்கம் போல இருந்தது. என்னடானு கேட்டால் மென்னு முழுங்குறான். கையில் ஒரு பேக் வேற வச்சு இருக்கான். பக்கத்து தெரு லாவண்யாவோட ஓடிப் போகும் ப்ளான் ஏதும் வச்சு இருக்கானோன்னு ஒரு டவுட்டு வேற மைல்டா ஓடுது. ஆனாலும் அந்த புள்ளைக்கு இருக்கும் தைரியத்தில் 100 ல் ஒரு மடங்கு கூட இந்த பயலுக்கு இருக்காது என்பதால் அதை கூட்டிய விளக்குமாற்றாலேயே அழித்து விட்டேன்.
சரி.. உட்காருடான்னு சொல்லி ஒரு டீயும் ஆர்டர் கொடுத்து குடிக்கச் சொல்லியாச்சு.. உறிஞ்சி உறிஞ்சி குடிக்கிறேன். முழியே சரியில்லை. நல்ல நேரத்திலேயே திருட்டு முழி... இப்ப பேய் முழி வேற... பயபுள்ள கையில் இருக்கும் பேக் எங்காயவது ஆட்டையைப் போட்டதா இருக்குமோன்னு ஒரு டவுட்டு. பக் னு ஆயிடுச்சு... ஆகா நம்மளையும் சேர்த்து மாட்டி விட்டுடுவானோன்னு பயம் வேற.. டீக்கிளாஸை பிடிங்கிட்டு விரட்டிலாமான்னு யோசனை வேற.. என்ன ஆனாலும் பரவாயில்லை விசாரிக்கலாம்னு விசாரிச்சா உண்மையை கக்கிட்டான்.
பேக் உண்மையில் திருடப்பட்டதாம். ஆனாலும் திருடியது அவன் இல்லையாம். கேப்பையில் நெய் வடியுது பழமொழி நினைவில் வந்தாலும் பரணி நம்மிடம் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. எங்கள் ஊரைக் கடந்து போகும் ஒரு பஸ்ஸில் இருந்து இந்த பேக்கை ஆட்டையைப் போட்டுள்ளான் ஒரு X . அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டான். பேக்கில் ஒரு பெண்ணின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களும் இன்னும் சில முக்கிய தஸ்தாவேஜ்களும் இருக்க அவன் இவனிடம் கொடுத்துள்ளான். இந்த நல்லவன் அதை இங்கு கொண்டு வந்து விட்டான்.
அந்த X எவன்டா என்றால் சொல்ல மாட்டேன் என்கின்றான். அவன் இவனிடம் மிரட்டி சத்தியம் வாங்கி விட்டானாம். பெரிய சத்தியவான், அரிச்ச்ந்திரன் பரம்பரை.. பிட் படத்திற்கு போகும் போது மட்டும் ஆயிரத்தெட்டு பொய் சொல்லிட்டு வருவான். சரி கொண்டாடான்னு சர்டிபிகேட்களைப் பார்த்தால் அது ஒரு மலையாளப் பெண்ணுடையது. திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் அதன் சொந்த ஊர் தொடுபுழா. திண்டுக்கலில் இருந்து தொடுபுழா செல்ல எங்கள் ஊர் வழியா சென்று இருக்கின்றது. அந்த கேப்பில் எவனோ பேக்கை சுட்டு இருக்கின்றான்.
இரண்டு மேதாவிகளும் சேர்ந்து யோசித்த போது T.Meena என்ற அந்த மல்லுவின் சோகமான அழும் முகம் தான் நினைவில் வந்தது. பாவம் சர்டிபிகேட்டை தொலைத்து விட்டு எங்கே அழுது கொண்டு இருக்கின்றதோ என்று எங்கள் இருவருக்கும் ஒரே ஃபீலிங். காலேஜ் படிக்க முடியாம கடையில் அதை நினைத்து ஃபீல் பண்ணும் எங்களுக்கு இந்த ஃபீலிங் புடிச்சி இருந்தது. சரி அந்த பெண்ணோட கண்ணீரைத் துடைக்கனும்னு முடிவு செய்தாச்சு.
அட்ரஸ் இருக்கு... போன் நம்பர் ஏதும் இல்லை. திண்டுக்கல் ஹாஸ்டல் அட்ரஸூக்கும், தொடுபுழா வீட்டு அட்ரஸூக்கும் தந்தி கொடுக்கலாம்ன்னு ரெண்டு நல்லவிங்களும் ஏகமனதா முடிவு பண்ணிட்டோம். கடை ஓனர் வந்ததும் வெளியே போறதா சொல்லிட்டு நேரா வள்ளுவர் சிலை அருகில் இருக்கும் தலைமை தபால்-தந்தி அலுவலகத்திற்கு போயாச்சு.. அங்க இருந்த ஆபிஸரு ஃப்ரம் அட்ரஸ் வேணும்னு சொல்லிட்டார். வீட்டு அட்ரஸ் கொடுத்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு எங்க கடை அட்ரஸ் கொடுத்தாச்சு.
கடைக்கு வந்தா ஓனரு லெப்ட் ரைட் வாங்குறாரு... கடை அட்ரஸை ஏன்டா கொடுத்தீங்கன்னு... சாயங்காலம் ஆச்சு.. ரெண்டு அம்பாஸிடர் காரில் தடிதடியா 5,6 சேட்டனுங்க கடைக்கு வந்து இறங்குறாங்க... அதுவரை என் கூட உட்காந்து காதல் கோட்டை கற்பனை பண்ணிக்கிட்டு இருந்த பரணி பயல் எஸ்கேப் ஆயிட்டான். பேக் எல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு சர்டிபிகேட் எல்லாம் கரெக்டா இருந்ததில் திருப்தி. ஆனால் அதில் இருந்த ஒரு தங்க மோதிரமும், கொஞ்சம் பணமும் மிஸ்ஸிங்காம். பேக் எப்படி எங்களுக்கு கிடைச்சதுன்னு பெருமையா விளக்கம் வேற கொடுத்தேன்.
எத்தனை மணிக்கு கிடைச்சதுன்னு கேட்டப்ப 7 மணிக்கு கொண்டு வந்ததைக் கணக்கில் வச்சு 6 மணிக்கு ரோட்டில் கிடந்ததுன்னு சொல்லியாச்சு.. அதில் ஒரு சேட்டன் .. தம்பி உங்க ஊரை மீனா வந்த வண்டி 6:30 த்தான் கடந்து இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிட்டார். எனக்கு வதக்கு ஆயிடுச்சு.. நல்ல வேளை வேற ஒன்னும் சொல்லாம பேக்கை எடுத்துட்டு போய்ட்டாங்க.. ஒரு பத்து ரூவா கூட கொடுக்கல..
சரி நம்ம அட்ரஸூக்கு மீனாகிட்ட இருந்து லெட்டர் ஏதாவது வரும்னு ரொம்ப நாள் பரணி காத்துக்கிட்டு இருந்தான்.. ம்ஹூம் ஒன்னு கூட வரலை.. நானும் காத்துக்கிட்டு இருந்து விட்டுட்டேன். இப்ப திடீர்னு நினைவு வந்து ஆர்குட், பேஸ்புக் எல்லாம் தேடிக்கிட்டு இருக்கோம் ரெண்டு பேரும்.. இன்னும் கிடைக்கலை. கிடைச்சா சொல்லுங்க பாஸ் பேரு T.மீனா.. ஊரு தொடுபுழா.. காலேஜ் படிச்சது திண்டுக்கல். நன்றி வணக்கம்.
Friday, July 30, 2010
சமிக்ஞைகளும், குடும்ப ரகசிய மொழியும்
இதன் அவசியம் என்னவென்று பார்த்தால்.... வெளியே நாம் செல்லும் போது, மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது அல்லது இணைய வழியாக மிக முக்கிய ரகசியங்கள் உள்ள மின்னஞ்சல் அனுப்பும் போது இதைப் பயன்படுத்தலாம். இது படிப்பவர்களைத் தவிர யாருக்கும் புரியாது.
எங்கள் வீட்டில் எந்த அறிவியலும் கற்றுக் கொடுக்காமலேயே இந்த முறையை பல காலமாக கையாண்டு வருகின்றோம். எங்கள் பாரம்பரியம் திருநெல்வேலி மாவட்டத்துடன் தொடர்புடையது. எங்கள் தாத்தா,பாட்டி திருமணம் முடிந்து எங்கள் பெரியப்பா பிறக்கும் வரை வாசுதேவநல்லூர் என்ற எங்கள் பரம்பரை ஊரில் இருந்து இருக்கின்றார்கள். பின்னர் பிழைப்புக்காக இப்போது இருக்கும் ஊருக்கு வந்து இருக்கின்றார்கள். வரும் போது எதையும் கொண்டு வரவில்லையென்றால் பல பழக்க வழக்கங்களை எங்கள் குடும்பத்துக்கு என்று மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.
சமிக்ஞை இரண்டு வகை. ஒன்று உடல் மொழி இரண்டாவது சொற்கள் வழியிலான மொழி. உடல் மொழி நிறைய பேருக்கு தெரிந்தது தான். கண் பார்வை, கை அழுத்தம், கால் மிதி போன்றவை. ஏதாவது ஒரு விஷயம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நாம் அவரைப் பார்த்தால் திடீரென்று அப்பா கண்ணை இறுக மூடித் திறப்பார். அதாவது அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இவருடன் பேசக் கூடாது என்றுஅர்த்தம். அப்பாவுடனும், மற்றவர்களுடனும் பேசிக் கொண்டு இருப்போம். திடீரென்று அப்பா நம் கையைப் பற்றி உள்ளங்கையில் ஒரு அழுத்து அழுத்துவார். இனி நாம் பேசக் கூடாது அல்லது நாம் தான் பேச வேண்டும்.. இது போல் இன்னும் சில குறியீடுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் வரும். சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் அர்த்தம் மாறும். சில சமயம் இதில் தவறு நடக்கும் போது வீட்டிற்கு வந்ததும் விளக்கம் கிடைக்கும்.
சில நேரங்களில் எதிராளி நம்மை விட கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால் நமது சமிக்ஞைகள் புரிந்து விட வாய்ப்பு இருக்கின்றது. அல்லது தூரமாக இருந்தாலோ, அப்பாவை நேரடியாக பார்க்கும் விதத்தில் இல்லாமல் இருந்தாலோ அந்த சூழலில் இரண்டாவது மொழி பயன்படும். இது இந்தி போல் வேறு மொழியா என்றால் அதுதான் இல்லை. எங்கள் வீட்டில் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. அப்புறம் அது என்ன மொழி? அதுதான் ரகசிய மொழி. சுமார் 25, 30 வார்த்தைகள் தான் இருக்கின்றன இம்மொழிக்கு. இது எந்த மொழியுடன் தொடர்பு இல்லாத வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நேரத்திற்கு தகுந்தாற் போல் சங்கேத தகவல்களைத் தெரிவித்து விடலாம்.
ரொம்ப முக்கியமானது எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஆட்களுக்கு இம்மொழி தெரியாது. இதை நாமே உருவாக்கலாம். உங்கள் குடும்பத்திற்கான சங்கேத மொழியை நீங்களே உருவாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்து பழக்கலாம். நல்லது, கெட்டது, கொடு, கொடுக்காதே, பணம், கெட்டவன், நல்லவன், கண்டுகொள்ளாமல் இரு, இவன், அவன் இன்னும் இது போன்ற பொதுவாக வெளியில் சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு சங்கேத வார்த்தை இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு நல்லது , கெட்டது என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். கயழி, பசிறு என்ற வார்த்தைகளை இவைகளுக்கு முறையே சங்கேத வார்த்தையாக பாவித்துக் கொள்வோம். கடையில் இருக்கிறோம். பொருள் நல்ல பொருள் என்று தெரிகின்றது. நாம் ‘கயழி போல இருக்கு’ என்று நமக்குள் பேசிக் கொண்டால் கடைக்காரருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. எனவே நாம் பேரம் பேசும் போது நம்முடைய உணர்வு அவருக்குப் புரியாது. அதாவது பிடித்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமா?, இல்லையா? என்று அவர் திணறுவார். அதைப் பயன்படுத்தி பேரத்தைக் குறைக்கலாம்.
அதே போல் வேறு ஒரு இடத்தில் இருக்கிறோம். நம் முன் இருக்கும் ஆள் சரியில்லை போல் தோன்றுகின்றது. நம்முடன் இருக்கும் மனைவிக்கோ, மகனுக்கோ உணர்த்த வேண்டும். ‘ ஆள் பசிறு’ என்று எங்கோ பார்த்து நாம் சொன்னால் உடனே அவர்கள் புரிந்து கொண்டு கவனமாக இருக்கலாம். எதிராளிக்கும் நாம் என்ன சொன்னோம் என்பது புரியாது.
இதில் மிக முக்கியமானது சங்கேத வார்த்தைகளை நாம் பேசும் போதும், கேட்கும் போது மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாகப் பேசக் கூடாது. கொஞ்சம் கம்மலாக பேச வேண்டும். அதோடு முக பாவம் ரொம்ப முக்கியம். நல்லதுக்காக முகம் மலர்ந்தும் சொல்லக் கூடாது, கெட்டதுக்காக முகத்தை சுறுக்கியும் சொல்லக் கூடாது. சங்கேத வார்த்தைகள் தயாரித்தலும், அதைப் பழக்குப்படுத்தலும், உடல் மொழியை உணர வைத்தலும், முக பாவத்தை ஒழுங்குபடுத்துதலும் ஏதோ படிக்க, கேட்க பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் இது மிக மிக சுலபமானது. கிட்டத்தட்ட நம் இணையத்தில் சாட்டில், டிவிட்டரில், பஸ்ஸில் பேசிக் கொள்ளும் சங்கேத வார்த்தைகள் போல் தான். எங்கள் வீட்டில் பண விபரம் குறித்து பேசும் போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆங்கில எண் வைத்துத் தான் பேசுவோம்.
இதே போல் நமது குடும்பத்தினருக்கு மட்டும் புரியும் வண்ணம் ஒரு சிறு அகராதியை உண்டாக்கி வாரத்திற்கு இரு வார்த்தைகள் என்ற வீதத்தில் பேசிக் கொண்டே வந்தால் சில மாதங்களில் அதில் நிபுணத்துவம் அடைந்து விடலாம்.
எங்கள் வீட்டில் சில நேரங்களில் இது பிரச்சினையாகும். எப்படி? வீட்டிற்கு புதிதாக மருமகள் வந்தால் அவர்களுக்கு இந்த மொழிகள் எல்லாம் புரியாது. அவர்களுக்கும் கொஞ்ச நாட்களில் இந்த மொழியைக் கற்றுக் கொடுத்து விடுவோம். வேறு வழி இல்லாத கட்டாயத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். எனக்கும் கூட திருமணமான புதிதில் சில நேரங்களில் திண்டாட வேண்டி வந்தது. பின்னர் என் மனைவிக்கு இவைகளை விளக்கி கற்றுக் கொடுக்க வேண்டி வந்தது. இப்போது என் அம்மாவுடன், அக்காவுடன் வெளியே சென்றால் என் மனைவியும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள்.
நீங்களும் உங்கள் வீட்டில் இப்படியான ஒரு அகராதியை உருவாக்குங்கள். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தத்துடன் தொடர்பு இருக்கக் கூடாது. முதலில் சுவாரஸ்யமாக ஜாலியாக பழகுங்கள். பின்னர் பழக்கத்தில் வந்து அதுவே நல்ல பலன் தரும்.
டிஸ்கி : இதில் குறிப்பிட்டு இருக்கும் சில வார்த்தைகள் எங்கள் அகராதியில் இலலாதவை. எடுத்துக்காட்டுக்காக மட்டும் பயன்படுத்தி உள்ளேன்.
Friday, July 23, 2010
லெமூரியா கண்டம் - ஒரு ஆய்வுப்பயணம் - பிம்பமாக
லெமூரியா அல்லது லெமுரியா .. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு இருந்தாலும் நடுவே இன்று நம்மிடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை போல் ”மேரு” என்ற மலைத்தொடரைத் தன் நடுவே கொண்டு இருந்தது. அதில் தேன் போன்ற சுவையை உடைய ஆறுகள் உற்பத்தியாகி ஓடின. அவைகள் கிழக்கேயும், மேற்கேயும் பெருகி ஓடி கடல்களில் கலந்தன. மலைத் தொடரிலும், அந்த ஆறுகள் ஓடிய பகுதிகளிலும் பசுமைத் தாய் தனது கரங்களை நீட்டி அந்த லெமுரியா கண்டத்தையே பசுமையாக்கி வைத்து இருந்தாள்.
இக்கண்டத்தின் ஒரு கிழக்கு முனை ஆஸ்திரேலியா கண்டத்துடனும், மேற்கு முனை ஆப்ரிக்காக் கண்டத்தை ஒட்டிய மடகாஸ்கர் வரையும் பரந்து விரிந்து கிடந்தது. கடல் மட்டத்தில் இருந்து கீழே இருந்ததால் கடலினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர வேறு எதுவும் இக் கண்டத்தைத் தீண்டவில்லை. இங்கு வாழ்ந்த மக்களிடையே அப்போது தான் புதிய நாகரிகங்கள் தழைத்தோங்க தொடங்கி இருந்தன.
மக்கள் இரும்பின் பயன்பாட்டை உணராத நேரமது. வலிமையான விலங்குகளின் எலும்புகளையும், மரங்களையும் தீட்டி ஆயுதமாக கொண்டு இருந்த நேரம். பெரும்பகுதி காடுகளைக் கொண்ட அந்த பகுதிகளில் விலங்கினங்களுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. இவைகளுக்கு நடுவே வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு என்பது முக்கியமானதாக இருந்தது.
மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இறைச்சியே அவர்களின் முக்கிய உணவாக இருந்து வந்தது. மீன்பிடித் தொழிலும் மிக முக்கியமானதாக இருந்தது. இது தவிர கிழங்குகள், பழங்கள் போன்றவைகளையும் உண்டு வந்தனர். அரிசி உணவே அவர்களுக்கு சில நுற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அறிமுகமாகி இருந்தது. இக்கண்டம் முழுதும் பலவிதமாக ஒலிக்குறிகளையுடைய பேச்சுக்கள் இருந்தன. இவைகளில் பெரும்பாலனவை தமிழ் மொழியின் மறுவுகளாக இருந்தது. மக்களிடையே கேளிக்கைகள் நிறைந்து இருந்தது. களவி ஒழுக்கம் மிக மேலானதாக பேணப்பட்டு வந்தது. பண்பிலும், கலாச்சாரத்திலும் கண்ணியமானவர்களாக இவர்கள் இருந்தனர்.
மற்றவர்களுக்கு மரியாதை செய்தல், திருடாமை, பொய் சொல்லாமை, கடின உழைப்பு, வீரம் போன்றவை சிறந்த குணங்களாகப் பார்க்கப்பட்டன. இயற்கையை தெய்வமாக வழிபாடு செய்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஆற்றின் கரையோரங்களிலேயும், மலையடிவாரங்களிலும் ஊர்களை நிர்மாணித்து இருந்தனர்.
பரந்த நிலப்பரப்பாக இருந்தாலும் மக்கள் பெருக்கம் மிகக் குறைவாக இருந்தது. ஒரு பகுதியில் பரவிய நாகரீகம் மற்ற பகுதிகளுக்கு பரவ பல காலம் தேவைப்பட்டுக் கொண்டு இருந்தது. பெரிய நிலப்பரப்பாகவும், இடையே கட்டுப்பாடு அற்று ஓடும் ஆறுகள், உயரமான மலைகள் இருந்ததாலும் இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இடையேயான தொடர்பு குறைவாகவே இருந்தது.
இதே கால கட்டத்தில் ரோமானிய நாகரிகம் ஐரோப்பாக் கண்டத்தின் நாகரிகமானதாகக் கருதப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ரோமபுரியில் மன்னராட்சி நடந்து கொண்டு இருந்தது. உலகுக்கே புதிய நாகரீகத்தைக் கற்றுத் தருபவர்களாக ரோமாப்புரிக்காரர்கள் இருந்தனர். மிக குறுகிய நிலப்பரப்பாக இருந்த ரோம் நாட்டில் இருந்து கடல் வழிப்பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தனர். அவ்வாறு கடல் வழியே கிளம்பியவர்கள் லெமுரியா கண்டத்தை வந்தடைந்த போது பிரமிக்க நேரும். லெமுரியாவின் வனப்பு அவர்களின் மனதைக் கொள்ளை கொண்டதில் மிகையில்லை.
நகர அமைப்பு, நீதி, மன்னர், படை, கட்டுப்பாடு போன்றவைகளுடன் வாழ்ந்து வந்த ரோமாபுரி கடல் பிரயாணிகளுக்கு லெமுரியாவின் சமூக அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரோமாபுரியை ஆட்சி செய்த ரொமுலஸ் அரசபரம்பரையில் வந்த சிலர் மெமுரியா கண்டத்தின் வனப்பில் மயங்கி இங்கு வந்து சேர்ந்தனர். தங்களிடம் இருந்த ஆளுமைத் திறமையைப் பயன்படுத்தி லெமுரியா கண்டத்தின் பல பகுதிகளை ஒன்றிணைத்தனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரோம மன்னரின் மகள் ஒருவரின் பெயர் பாண்டயா (Pandaya) என்பதாக இருந்தது. அவளது கண்காணிப்பில் கீழ் லெமுரியா கண்டம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலப்பரப்பு அவள் பெயராலேயே வழங்கப்பட்டும் வந்தது.
கடல் கடந்து வெகு தூரம் வந்தவர்களாக இருந்ததால் ரோமானியர்கள் சொற்பமானவர்களாகவே இருந்தனர். எனவே லெமுரியாவின் மண்ணின் மைந்தர்களில் வீரமானவர்களாக இருந்தவர்களே அந்ததந்த பகுதிகளுக்கு தலைவர்களாக இருந்தனர். வியாபாரத்தையும், நாகரிகத்தையும் எல்லாப் பகுதிகளிலும் இணைப்பவர்களாக இத்தலைவர்கள் இருந்தனர். மிக வலிமை பொருந்திய ஒரு கூட்டம் மெல்ல மெல்ல லெமுரியக் கண்டத்தின் பல பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நாளடைவில் இவர்கள் இருந்த நிலப்பரப்பின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். பின்னர் அது
“பாண்டியன்” என்று மறுகியது.
லெமுரியா முழுவதும் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்தது. நகரங்கள் உண்டாகின. கிராமங்கள் செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் நிர்வாகம் செய்ய தனித்தனிஅலுவலர்களும் குறுநில மன்னர்களும் இருந்தனர். பாண்டியர்களின் தலைநகரமான மதுரை ( இன்றைய மதுரை அல்ல) உருவாக்கப்பட்டது. நாகரீகத்தின் உச்சத்தை பாண்டிய நாடு எட்டியது. தமிழ் மொழி செழித்து ஓங்கியது. ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்யத் துவங்கினர். பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. வளமும், வனப்புமாக இருந்த லெமுரியா கண்டம் கடல்கோளினால் முற்றிலும் அழிக்கப்பட்டு இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது. கடல் கோளில் தப்பியவர்களும், இப்போதைய தமிழ்நாட்டில் தென் பகுதியில் வசித்தவர்களும் புதிதாக ஒரு மதுரை நகரை உருவாக்கி பாண்டிய ஆட்சியைத் தொடரச் செய்தார்கள்.
டிஸ்கி : இது மாய பிம்ப வகைப் பதிவு.. இப்பதிவுக்கு என்று எந்த தரவுகளும் கிடையாது. இப்படி எல்லாம் நடந்து இருந்திருக்கலாம் என்பதாக படித்தவைகளை வைத்து சித்திகரிக்கப்பட்டுள்ளது.
...
..
.
Saturday, July 17, 2010
படைப்புக்கும் படைப்பாளிக்குமான தொடர்பு துண்டிக்கப்படுவது எப்போது ?
முஸ்கி 1: இந்த பதிவுக்கும், எந்த நுண்ணரசியலுக்கும் சம்பந்தமில்லை. இதில் வரும் வசனங்களும், குறிப்புகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
முஸ்கி 2 : இது ஒரு நல்ல சமையல் குறிப்பு. வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிக நல்லது. இதை உண்டவர்கள் தங்கள் சொந்த வீடாக இருந்தாலும் அதை இரண்டு நாள் அனுகாமல் இருப்பது மிக நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் காற்றால் வீட்டுச் சுவரோ, கான்க்ரீட்டோ உடையும் அபாயம் இருக்கலாம் அல்லது உங்கள் நாற்றம் தாங்காமல் உங்கள் மனைவி உங்களை விவாகரத்து செய்து உங்களை தப்பிக்க வைக்கலாம்.
இனி பதிவு..
பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.
பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.
நன்றி : வெப்உலகம்.காம்
இனி பூண்டு குழம்பு செய்வது எப்படி ?
- 1. பூண்டு - 15 பல்
- 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
- 3. தக்காளி - 2
- 4. புளி தண்ணீர்
- 5. தேங்காய் பால் - 1 கப்
- 6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
- 7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- 8. கறிவேப்பிலை, கொத்தமல்லி
- 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- 10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- 11. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
- 12. உப்பு
- வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
- பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.
Note:
தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.
நன்றி : அறுசுவைடாட்காம்.
டிஸ்கி 1 : பூண்டு குழம்பு செய்து கொண்டு இருக்கும் போதோ, காற்றைப் பிரித்து விடும் போதோ யாராவது உங்களைத் திட்டினால் போடா நாயே என்று அவர்களை திட்டாதீர்கள்.
டிஸ்கி 2 : நாற்றம் தாங்காமல் யாராவது திட்டினால் த்தூ என்று இடப்புறம் ஒரு முறை துப்பி விட்டு சென்று விடுங்கள்.
டிஸ்கி 3 : இந்த பதிவில் நாய், த்தூ போன்ற வார்த்தைகள் இருப்பதால் இதை புனைவு என்றோ, நாய்ப்பதிவு என்றோ, சொற்சித்திரம் என்றோ சொன்னால் அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது.
டிஸ்கி 4 : மேலே உள்ளவைகளை எழுதி காப்பி\பேஸ்ட் செய்து எழுதி முடித்ததும் அதற்கும் எனக்குமான உறவு முடிந்து விடுகின்றது. இனி படைப்புகளுடன் மட்டும் பேசிக் கொள்ளவும்.
......
....
..
.
Friday, July 16, 2010
பகுத்தறிவும், தனி மனித ஒழுக்கமும்
உயிரினும் ஓம்பப்படும் " என்று கூறினார். உயிரை விட மதிப்பு மிக்கதாக ஒழுக்கத்தை குறிப்பிடுகின்றார். ஒழுக்கத்திற்கான வரைமுறை என்ன ? இது காலம், இடம், கலாச்சாரத்தை பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டுக்காக சொல்வதானால் மிக குறைந்த ஆடையுடன் நடமாடும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன், நமது மதுரைப் பெண்களை ஒப்பிட முடியாது. இது போல இன்னும் சில உதாரணங்களைக் கூறலாம்... இதை விட்டு விடுவோம். எனவே ஒழுக்கத்திற்கான அடையாளங்களை புறக்காரணங்களைக் கொண்டு கணக்கிட இயலாது.
தற்போதைக்கு அகத்தூய்மையை மட்டும் எடுத்துக் கொள்வோம். எப்படி? ஒரு மனிதனுடைய செயலால் அவனை சுற்றியுள்ளவர்கள், அல்லது சுற்றியுள்ளவைகள் பாதிக்கப்படாமல் இருக்குமானால் அதுவே தனி மனித ஒழுக்கத்தின் முதல் படி. இப்படி எடுத்துக் கொள்ள இயலுமா ? தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் இருக்கின்றது. பேருந்தில், தியேட்டரில், பொது இடத்தில் மது அருந்தி விட்டு வருகின்றவர்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தபட்டவரிடம் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது என்று விளக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து கேட்டால் அது தனது பர்சனல் விஷயம். இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வார். அவரது உடலை கெட்டுப் போக வைக்கும் விஷயம் குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அல்லது கவலைப்படுவதில்லை என்பதைப் போல நடிக்கின்றார்.
மது அருந்துவது, புகை பிடிப்பது.. அது பொது இடமாக இருந்தாலும் தனி இடமாக இருந்தாலும் உடலுக்கு தீமை என வரும் போது தவறானதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உடலைப் பேணிப் பாதுகாப்பது மனிதனின் கடமைகளில் ஒன்று. இவை தீமை என்று அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையெனில் ??? இனி தான் புதிதாக கேள்விகள் பிறக்கின்றன.
ஒழுக்கமின்மையை தீர்மானிக்கும் காரணிகள் அல்லது கட்டுப்படுத்த விழையும் காரணிகள் எவை? மனிதன் பல விடயங்களுக்கு கட்டுப்படுகின்றான். தனது சமூகத்திற்கு, மதத்திற்கு, நீதி நூல்களுக்கு, தனது பாரம்பரியத்திற்கு, சட்டத்திற்கு என்று பல வகைகளில் கூறலாம்.
சமூகம் எதை எல்லாம் தீமை என்று ஒதுக்கி வைத்திருக்கின்றதோ அதற்கு... தெருவில் போகும் போது ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது சமூகத்தின் நியதி. எனவே சமூகம் கூறும் அந்நியதிக்கு தன்னைத் தானே உட்படுத்திக் கொள்கின்றான். மதங்கள் கூறும் கட்டுப்பாடுகளையும் ஒரு சாரார் கடைபிடிக்கின்றனர். பல சமூக கோட்பாடுகளுக்கும் கட்டுப்படாதவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டி நேர்கின்றது.
இவை எதற்கு கட்டுப்படாமல் இருப்பவர்கள் இருக்கின்றார்களா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விடையாக இல்லை. ஆனாலும் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதித்துக் கொள்ள அல்லது கட்டுப்பாட்டுக்குள் வராமல் தன் மனதிற்குபட்டதை சரி என செய்யும் சிலரும் இருக்கின்றனர். இவர்களுக்கான கட்டுப்பாடுகளை எது தீர்மானிக்கின்றது ?
குறிப்பாக பகுத்தறிவு பேசக் கூடியவர்கள். பகுத்தறிவு என்பது மிக சிறப்பான ஒன்று. ஆனால் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் பகுத்தறிவு என்பதை கடவுளை மறுப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது போன்ற ஒரு மாயையை நிலைநிறுத்த ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். நன்மை, தீமை எது என்பதை முதலில் விளங்கினால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.
நன்மை, தீமையை எது விளக்குவது? பகுத்தறிவு பேசுபவர்களுக்கான நன்மை தீமைக்கான அளவுகோல் எது? ஏன் நன்மை செய்ய வேண்டும் ? ஏன் தீமை செய்யக் கூடாது? ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கான நன்மை, தீமை சட்டங்கள் இருக்கின்றன. கடவுள் நம்மை கண்காணிக்கின்றார் என்ற பயம் இருக்கும். அதே போல் இறப்புக்குப் பின் இருக்கும் வாழ்க்கை குறித்து பயம் இருப்பவர்களும் தவறு செய்ய தயங்குவார்கள்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மதம் தவறு, பாவம் என்று சொன்னதையே தைரியமாக செய்யக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தங்கள் மதத்தின் மீது நம்பிகை இருந்தாலும் மனபலவீனத்தின் காரணமாக தவறு செய்கின்றனர். மனதளவில் தவறு என்பது அவர்களுக்கு தெரிந்து தான் இருக்கின்றது.
இவை எல்லாவற்றையும் விட பெரிய வியாதி இருக்கின்றது.. அது எவருக்கும் கட்டுப்பட மறுக்கும். கேள்வி கேட்பது என்பது ரொம்ப முக்கியமான விடயம்.. ஆனால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது என்பது ஒரு வகை மனோ வியாதி. நம் பதிவுலகிலேயே சிலரைப் பார்க்கலாம்.. அவர்களுக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. பொது இடங்களில் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் நடக்கலாம். பிறரைப் பற்றி அவர் விரும்பாத வகையில் பொதுவெளியில் விமர்சனம் என்ற பெயரில் திட்டலாம். கடவுளைத் திட்டலாம். தனி மனிதனைத் திட்டலாம். கேட்டால் அவர்களை எதுவும் கட்டுப்படுத்தாது.
அவர்களுக்கான ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவர்களிடம் இருப்பதில்லை. எந்த நீதி நூலுக்கும் கட்டுப்படுவதில்லை. எந்த மதக் கோட்பாடுக்கும் கட்டுப்படுவதில்லை. அனைவரும் கட்டுப்படும் மனசாட்சி என்பதற்கும் கட்டுப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களுக்கு சரியாகப் படுகின்றது. அவர்களது நண்பர்களும் இதே போல் தான் தோன்றித்தனமானவர்களாக இருப்பதால் இது அவர்களுக்கு ஊக்கமானதாக மாறி விடுகின்றது.
இவர்கள் எல்லாம் சமூகத்தில் ஒரு வியாதி போன்றவர்கள். கொலை செய்வது என்பதும் இவர்கள் பார்வையில் சில நேரங்களில் தவறாக மாறி விடுகின்றது. கொள்ளை அடிப்பதும், அடுத்தவரின் உரிமையில் தலையிடுவதும், அடுத்தவரின் மனதைப் புண் படுத்துவதும் இவர்களது அகராதியில் ஒன்றாகி விடுகின்றது.. பொதுவாக எதற்கும் கட்டுப்படாதவைகளை காட்டெருமைக்கு ஒப்பிடுவார்கள்.. இவர்களும் அது போன்ற கால்நடை பிராணிகள் போன்றவர்கள் தான். வேண்டாம் பாவம் அந்த காட்டெருமைகள்.. அவைகளுக்கு என்று அவைகளுக்குள் ஒரு ஒழுங்கு இருக்கும்... அது கூட இவர்களுக்கு இருக்காது.
இவர்களின் கிறுக்குத்தனம் எப்போது ஒழியும் என்று பார்த்தால் எப்போதும் ஒழியாது.. ஏனெனில் நல்லவர்களுக்கு எடுத்துக்காட்டு சொல்லும் அதே நேரத்தில் கெட்டவர்களுக்கான எடுத்துக்காட்டாக காட்ட இவர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் அதை எடுத்துச் சொன்னால் கூட ஆமாம் நாங்கள் அப்படித்தான் என்பார்கள்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும், விலகியே இருக்க வேண்டியதும் இது போன்ற மனித ஜென்மங்களுக்கு அப்பாற்பட்ட விலங்கினங்களை விட கேவலமான எண்ணங்களை உடையவர்களிடம் தான்.
Saturday, July 10, 2010
அ முதல் ஃ வரை - தமிழ்ப் பழமொழிகள்
தமிழ்நாட்டு பழமொழிகள்
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
- அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
- அசையாத மணி அடிக்காது
- அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
- அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
- அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
- அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
- அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
- அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
- அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
- அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
- அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
- அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
- அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
- அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
- அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
- அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
- அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
- அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
- அன்பே கடவுள்.
- அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
- அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
- அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
- அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
- அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
- அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
- அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
- அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
- அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
- அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
- அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
- அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
- அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
- அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
- அதிக ஓய்வு அதிக வேதனை.
- அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
- அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
- அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
- அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
- அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
- அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
- அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
- அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
- அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
- அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
- அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
- அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
- அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
- அரசனும் அன்னைக்கு மகனே.
- அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
- அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
- அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
- அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
- அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
- அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
- அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
- ஆடிப்பட்டம் தேடி விதை.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே!
- ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
- ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
- ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
- ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
- ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
- ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
- ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
- ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
- ஆறுவது சினம்.
- ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
- ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
- ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
- ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
- ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
- ஆலை விழுது தாங்கியது போல.
- ஆடு பகை குட்டி உறவா?
- ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
- ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
- ஆரம்பத்தில் சூரத்துவம்.
- ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
- ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
- ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
- ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும் - ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
- இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
- இளமையில் கல்.
- இளங்கன்று பயமறியாது.
- இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
- இளமையில் கல். முதுமையில் காக்கும்.
- இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
- இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
- இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
- இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
- இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
- இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
- இறங்கு பொழுதில் மருந்து குடி.
- இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
- இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
- இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
- இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
- இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
- இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
- இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
- இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
- இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
- இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
- இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
- இடுக்கன் வருங்கால் நகுக.
- ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
- ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
- ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
- ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
- ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
- உழுத நிலத்தில் பயிரிடு.
- உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
- உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
- உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
- உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
- உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
- உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
- உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
- உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
- உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
- உழைத்து உண்பதே உணவு.
- உப்பிட்டவரை உள்ளவும் நினை.
- உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
- ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
- ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
- ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
- ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
- ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
- எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
- எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
- எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
- எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
- எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
- எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
- எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
- எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
- எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
- எண்ணம்போல் வாழ்வு.
- எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
- ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
- ஏழை சொல் அம்பலம் ஏறாது.
- ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
- ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
- ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
- ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
- ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
- ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
- ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
- ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
- ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
- ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
- ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
- ஒழுக்கம் விழுப்பம் தரும்.
- ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
- ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
- ஒத்தடம் அரை வைத்தியம்.
- ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
- ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
- ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
- ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
- ஓடிப் பழகிய கால் நிற்காது.
- ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
- கண்ணுக்கு இமை பகையா?
- கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
- கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
- கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
- கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும். - கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
- கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
- கடுங்காற்று மழைக்கூட்டும்.
கடுஞ்சிநேகம் பகை கூட்டும். - கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
- கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
- கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
- கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
- கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
- கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
- கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
- கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
- கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
- கல்வி விரும்பு.
- கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
- கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
- கணக்கு எழுதாதன் நிலைமை.
கழுதை புரண்ட இடம் மாதிரி. - கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
- கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
- கடலில் கரைத்த பெருங்காயம் போல.
- கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
- கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
- கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
- கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
- கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
- கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
- காலம் போகும் வார்த்தை நிற்கும்.
- கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
- கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
- கார்த்திகை கன மழை.
- கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
- கார்த்திகை கண்டு களம் இடு.
- கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
- காணிச் சோம்பல் கோடி நட்டம்.
- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
- காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
- காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
- காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
- காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
- காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
- காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
- கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
- கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
- கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
- கார்த்திகை கால் கோடை.
- கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
- கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
- கிட்டப் போயின் முட்டப் பகை.
- கிட்டாதாயின் வெட்டென மற.
- கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
- கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
- கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
- குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
- குருடனுக்கு ஒரே மதி.
- குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
- குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
- குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
- குதிரையும் கழுதையும் ஒன்றா?
- குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
- குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
- குடி குடியைக் கெடுக்கும்.
- குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
- குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
- குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
- கூழானாலும் குளித்துக் குடி.
- கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
- கூலிப் படை வெட்டுமா?
- கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
- கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
- கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
- கெடுவான் கேடு நினைப்பான்.
- கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
- கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
- கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
- கை பட்டால் கண்ணாடி.
- கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
- கொடிக்கு காய் பாரமா?
- கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
- கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
- கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
- கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
- கோமளவல்லிக்கு ஒரு மொழி
கோளாறுகாரிக்குப் பல மொழி - கோபத்திற்குக் கண்ணில்லை.
- கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
- சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை. - சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
- சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
- சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
- சிறுதுளி பெருவெள்ளம்.
- சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
- சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
- சித்திரை எள்ளைச்சிதறி விதை.
- சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
வைகாசி என்றால் வளர்வதும் இல்லை - சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
- சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
- சித்திரை மழை செல்ல மழை.
- சீரைத் தேடின் ஏரைத்தேடு
- சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
- சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
- சுக்கைப் போல மருந்தில்லை.
- சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
- சுத்தம் சோறு போடும்.
- சுற்றம் சூழ வாழ்
- சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
- சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
- சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
- சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
- சூதும் வாதும் வேதனை செய்யும்
- செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
- செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
- செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
- சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
- சேற்றில் முளைத்த செந்தாமரை
- சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
- சோம்பித் திரியேல.
- சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
- தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
- தண்ணீரே உணவகளின் அரசன்.
- தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
- பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
- மனிதனுக்கச் சோதனை பெண்!
- தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
- தண்ணீரில் அடி பிடிக்கிறது.
- தலை பகை, வால் உறவா?
- தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
- தலைக்குத் தலை பெரிய தனம்.
- தன் தப்பு பிறருக்குச் சத்து
- தன் உயிர்போல் மண் உயிர் நினை.
- தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
- தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
- தன் கையே தனக்கு உதவி.
- தர்மம் தலை காக்கும்.
- தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
- தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
- தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
- தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
- தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
- தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
- தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
- தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
- தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
- தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
- தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
- திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
- திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
- தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
- தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
- துறவிக்கு வேந்தன் துரும்பு.
- தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
- துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
- தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
- துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
- துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
- தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
- தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
- தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
- தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
- தூங்காதவனே நீங்காதவன்.
- தூரமிருந்தால் சேர உறவு.
- தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
- தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
- தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
- தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
- தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
- தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
- தையல் சொல் கேளேல்.
- தை பிறந்தால் வழி பிறக்கும்.
- தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
- பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
- பணம் பத்தும் செய்யும்.
- பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
- பணம் உள்ளவனுக்கு அச்சம்;
- பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
- பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
- பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
- பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
- பல் போனால் சொல் போச்சு.
- பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
- பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
- பங்குனி மாதம் பதர் கொள்.
- பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
- பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
- படுக்க படுக்க பாயும் பகை.
- பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
- பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
- பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
- பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
- பணம் பாதாளம் வரை பாயும்.
- பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
- பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
- பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
- பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
- பிச்சை புகினும் கற்கை நன்றே!
- பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
- பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
- புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
- புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
- புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
- புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே! - புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
- புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
- புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
- பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
- பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
- பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
- பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
- பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது. - பெண் என்றால் பேயும் இரங்கும்.
- பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
- பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
சுவருக்கு மண்ணிட்டுப் பார் - பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
- பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
- பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
- பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; - பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
- பொறுமை கடலினும் பெரிது.
- பொறுத்தார் பூமி ஆள்வார்.
- பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
- பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
- போகும்போது புளியமரத்தடியில் போ
- வரும்போது வேப்பமரத்தடியல் வா.
- நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
- நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
- நன்றி மறவேல்.
- நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
- நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
- நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
- நன்மைக்கு நன்மை செய்
தீமைக்கு நன்மையே செய் - நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
- நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
- நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
- நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
- நாளை என்பது நட்டாற்று ஓடம்.
- நாளை என்று ஒருநாள் உண்டா?
- நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
- நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
- நாளும் அதிகாலையில் நீராடு.
- நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
- நிலையாமை ஒன்றே நிலையானது.
- நீலிக்கு கண்ணீர் இமையிலே.
- நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
- நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
- நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
- நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
- நொறுங்கத் தின்றால் நூறு வயது.
- நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- மனம் போல வாழ்வு
- மனம் ஒரு குரங்கு
- மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
- மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
- மனைவி வீட்டின் ஆபரணம்.
- மனைவி சொல்லே மந்திரம்.
- மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
- மனித நேயம் வளர்ப்பதே மதம்.
- மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
- மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
- மதியாதார் வாசல் மிதியாதே!
- மனசாட்சியை ஏமாற்றாதே!
- மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
- மந்திரம் கால்; மதி முக்கால்.
- மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
- மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
- மனிதனின் அழகு அவன் நாக்கு.
- மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
- மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
- மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
- மாதா, பிதா, குரு, தெய்வம்.
- மின்னுவதெல்லாம் பொன்னல்ல
- மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
- முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
- முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
- முன் வைத்த காலை பின் வைக்காதே!
- முயன்றால் முடியாதது இல்லை.
- முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
- முயற்சி திருவினையாக்கும்.
- மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
- மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
- மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
- மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
- வட்டியோடு முதலும் போச்சு.
- வளைகிற முள் நுழையாது.
- வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
- வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
- வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
- வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
- வண்டி வந்தால் வழி உண்டாகும்.
- வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
- வாய் உள்ளவன் உள்ளே.
- வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
- வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
- வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
- வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
- வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
- வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
கடந்த காலம் ஒரு கனவு
வருங்காலம் ஒரு பெருமூச்சு - வாய் அரை வைத்தியன்.
- வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
- வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
- விரலுக்கேற்ற வீக்கம்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும்
- வீணை கோணினும் நாதம் கோணுமா?
- வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
டிஸ்கி : பார்வ்ர்ட் மெயிலில் வந்தது.. திரும்ப தேடி எடுக்க இயலாது என்பதால் இங்கு பதிவேற்றம் செய்தாகி விட்டது.
Friday, July 9, 2010
நிஜமா நல்லவன் பதிவுக்கு வரிக்கு வரி காரமான எதிர்வினை
மெழுகினில் புகுத்தி இனிமை சேர்க்கும்
அழகிய தேன் கூட்டை
சிதறித் தெளிக்கிறது ஒற்றைக் கல்!
உயிர்ப்பச்சை நீர்த்து வாடிய பயிர்களில்
எதிர்பாராமல் சூல் கொள்ளும் மேகங்கள்
இயற்கை இருப்பை நிலை நிறுத்தி
சொட்டு சொட்டாய் நிரம்பும் உயிர் நீர்!
மேகங்களின் நகர்வில் மிதந்திடும் நிலவை
விழியோர புருவங்களால் வளைத்தெடுக்க
குறும்பை கொப்பளிக்கும் இமைகள்
வரைந்திடும் எழிலோவியங்கள் விழித்திரையில்
நிறைவேறா கணங்களின்
நிறங்கள் குழைத்து
சிறகில் தெளித்து
சிறகடிக்கிறது
கனவுப் பறவை!
வண்ணங்கள் களவோடு
எண்ணங்கள் விரிய
நிறங்கள் உமிழ்ந்து
நிறமிழக்கின்றன விழிகள்
விழிநிலையில்! \\\
பாஸ்.. நீங்க பெரிய கவிஞரா இருக்கலாம்..
ஆனால் இதை எல்லாம் வாசிச்சா
எங்களுக்கு ஒன்னும் புரியல..
கண்ணுல பச்சை மிளகாயை
வச்சு தேய்ச்சு,
மூக்குல மிளகாய்
பொடியை திணிச்சு,
காதுல மிளகாய்
பொடியை நுழைச்சு,
வாயில மல்லிப்
பொடியை அள்ளிக் கொட்டி,
உடம்பு பூரா
புளிய விளாரால் விளாசி
உப்பு வச்சு தேய்ச்சு
விஜயோட மசாலா படம் பார்த்த பீலிங் தான் வருது..
நாங்க இன்னும் இலக்கிய
உலகை கரைச்சுக் குடிக்கல.
டிஸ்கி: இப்ப எல்லாம் எதிர்பதிவு காரமா இருந்தா தான் மவுசாம்.. அதனால் தான் கொஞ்சம் மசாலா தூவி இருக்கோம்.
Saturday, July 3, 2010
நாளைக்கு - சென்னையில்
தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..
இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.
வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர்.
அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.
இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஸ்டமான வேலைகளை செய்து வந்தனர், உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது லேபர் செக்கிங்கில் மாட்டிக் கொள்பவர்களை அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் சிறையில் அடைக்கப்பட்டு அதேக் கோலத்தில் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பும் பரிதாப நிலை.
இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக மட்டும் ( அந்நிய செலாவனிக்காக ) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம்.
பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல், பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாய, மற்றும் மார்க்க விளக்கக் கூட்டங்கள், அதன் அமைப்பாளர் அறிஞர் பிஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரை, மாநில, மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல் கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.
மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.
சமுதாயப் பிரச்சனைகளுக்கு பழநிபாபா போன்றவர்களையும், மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மௌலவிகள் என்றும் தரம் பிரித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டுக்கும் தகுதியானவர்கள் மார்க்க அறிஞர்களே என்ற நிலையை உருவாக்கி அரசியல், மற்றும் ஆன்மீக மேடைகளில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.
ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர்.
பாட்டு கச்சேரிகள், கரகாட்டங்கள், போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாய, மற்றும் மார்க்க உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.
இவ்வாறாக
· அரசியல் மேடைகள்,
· ஆன்மீக மேடைகள்,
· தெருமுணைக் கூட்டங்கள்,
· ஜூம்ஆ உரைகள்,
என
நகர்புறம் முதல், கிராமப் புறம் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரச்சாரம் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி தமிழகம் அதுவரை கண்டிராத வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.
தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும், வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரை, சாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக் கொண்டும், தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.
சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஸ்டம் நிலவும் இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில், பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,
இன்னும் இதுப் போன்ற அமைதியானப் பேரணிகளை, மாநாடுகளை ஜனநாயக ரீதியில் அதிகமதிகம் நடத்துவதால்,
நாங்கள்,
· மாவேயிஸ்டுகளைப் போல் மறைந்திருந்து அப்பாவிகளைத் தாக்குபவர்கள் அல்ல,
· மரங்களை வெட்டி சாய்த்து மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் அல்ல,
· வாகணங்களை அடித்து நொறுக்கி பொதுச் சொத்துக்களுக்;கு சேதம் விளைவிப்பவர்கள் அல்ல,
எங்கள் வாழ்வுரிமைக்காக
அரசு அனுமதித்த வழியில் அமைதியாகப் போராடும் மக்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வாய்ப்பு இது,
அரசின் மீது விரக்தி அடைந்து ஆயுதமேந்தும் ஒரு சிலரும் கூட இழந்த உரிமைகளை வென்றெடுக்க இது தான் சிறந்த வழி என்று நம்முடன் இணைந்துப் போராடும் நற்குணமுடையவர்களாக மாறுவதற்கும் இது போன்ற கூட்டங்கள், பேரணிகள் வாய்ப்பாக அமைந்து விடும்.
3 ½ சதவிகிம்.
· 1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்களைத் திரட்டி வாழ்வுரிமைக் கோரி மெரீனா கடற்கரையில் குழுமச் செய்தனர்.
அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது )
· அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்து, திலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது.
இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் வுNவுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில், மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர்;.
''குடந்தை குலுங்கட்டும்''
இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம்.
இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
''தொடர் முழக்கப் போராட்டங்கள்''
அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும்
ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,
இடஒதுக்கீடுப் பெறும் வரை,
ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,
எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும்.
ஜூலை 4
சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்திய, மாநில அரசுப் பணிகளில், கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும், காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம் 15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வுNவுது அழைப்பு விடுக்கிறது.
· தீவுத்திடலை திணறடிக்க,
· தீவுத்திடலில் அலை கடலென ஆர்ப்பரிக்க,
· ஜூலை 4 க்கான பயண எற்பாடுகளை இன்றே செய்யத் தயாராகுங்கள்.
கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பயண ஏற்பாடுகளுடன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள் ...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16
கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும், அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும்.
இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,
· வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை,
· எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை,
· ஒரு வேளை உணவையும், இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை,
· குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை,
மாற்ற முடியாது.
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையை படிக்க கீழ்காணும் லிங்கை சொடுக்கவும். http://www.tntj.net/?p=12863
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....நன்றி : TNTJ இணையதளங்களில் இருந்தும், பார்வர்ட் மெயில் இருந்தும்