Thursday, December 18, 2008

மீள் பதிவு : போங்கடா நீங்களும்.... உங்க IE 8 ம்.....

நம்ம பிரண்ட் ஒருத்தன் சும்மா இருக்க மாட்டாம இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பீட்டா வெர்ஷன் வந்திருக்கு. பதிவிறக்கி பயன்படுத்து, எழுத்துரு எல்லாம் ஆபிஸ் 2007 ல் வர்ர மாதிரி அழகா இருக்குனு சொன்னான். சரி எப்படி இருக்கும்னு பார்க்கலாமேனு சிங்கத்தோட குகைக்குள்ள நுழைஞ்சேன். பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யப் போனா வழக்கம் போல நம்மோட XP டுபாக்கூருனு சொன்னாரு நம்ம பில்கேட்ஸ். அவர் கிடக்காருனு டகால்டி வேலை காட்டி உங்களோட XP பத்தரை மாற்று தங்கம்னு சொல்ல வச்சி இன்ஸ்டால் பண்ணியாச்சு.

அப்புறம் ஆரம்பிச்சதப்பு சனியன்..... :( ஏதாவது பதிவை திறக்கப் போய் முழுவதும் திறப்பதற்குள் எலிக்குட்டியை ஸ்க்ரால் செய்தால் IE 8 படுத்து தூங்கிடுறாரு.... எங்க போய் சொல்ல... எல்லாம் நம்ம நேரம்... நமக்கு இந்த ஆசை எல்லாம் இல்லை தான்... நாம எப்பவுமே நெருப்பு நரி ஆட்கள் தான்... ஆனால் சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது.... :(


சரி அதெல்லாம் இருக்கட்டு இந்த கதையைப் படிச்சிட்டு அப்பீட்டாயிடுங்க... சரியா...

நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.

நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.

‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.

பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.

முதல்ல நரகம்.

ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.

ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?

கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.

அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..

சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,

கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.

அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.

யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..

இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.

அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.

கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!

நன்றி: http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504

முக்கிய டிஸ்கி : ஒரு வாரமா கொஞ்சம் எழுதும் மனநிலையில் இல்லை. ஊருக்கு போக டிக்கெட் கிடைக்காத டென்சனில் இருக்கேன். அதனால் இந்த மீள் பதிவு... இதெப்படி இருக்கு

42 comments:

மு. மயூரன் said...

நல்ல நகைச்சுவை.


//சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது..//

இதற்கு பரிகாரம் உண்டு.
இந்தத் தொடுப்பைப் படித்துப்பாருங்கள்.

http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html

நந்தா said...

அந்த கதையோட முடிவுல நான் வேற மாதிரி எதிர் பார்த்தேன்.

கடவுள் திருப்பி, நீ கூடதான் ஸ்பீடு, பர்ஃபார்மென்ஸ், பெஸ்ட் OS, அது இதுன்னு நிறைய்ய சொல்ற. உண்மையிலயே அப்படியா இருக்கு. அந்த மாதிரிதான் இதுவும்னு பதில் சொல்லுவாரோன்னு எதிர்பார்த்தேன்.

ஆப்புறம் IE 7 ல்யே anialised ஆக எழுத்துக்கள் Renderinng ஆகி வருதே. இதுக்காகவா IE 8 போனீங்க

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

justify தான் பிரச்சினை என்றால் firefox 3 beta 5 போங்க. அதில் தமிழ் எழுத்துக்கள் நல்லா தெரியுது.

Bruno_புருனோ said...

ஓபெரா உலாவியில் இந்த பிரச்சனையில்லை.

நிஜமா நல்லவன் said...

ஹா ஹா ஹா .........

ஆயில்யன் said...

நல்லா இருக்கு :))

மங்களூர் சிவா said...

நெருப்பு நரி 2 , ஐஇ 6 இதுதான் வீட்டுல.

நெருப்பு நரி2, ஐஇ7 ஆப்பீஸ்ல. ஒரு பிரச்சனையும் இல்லாம ரொம்ப நல்லா எழுத்துரு எல்லாம் வருது.

பில்கேட் கதை ரொம்ப பழையது இருந்தாலும் நல்லா இருக்கு.

Thamiz Priyan said...

///மு.மயூரன் said...

நல்ல நகைச்சுவை.


//சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது..//
நன்றி மயூரன் ஐயா!

Thamiz Priyan said...

///நந்தா said...

அந்த கதையோட முடிவுல நான் வேற மாதிரி எதிர் பார்த்தேன்.

கடவுள் திருப்பி, நீ கூடதான் ஸ்பீடு, பர்ஃபார்மென்ஸ், பெஸ்ட் OS, அது இதுன்னு நிறைய்ய சொல்ற. உண்மையிலயே அப்படியா இருக்கு. அந்த மாதிரிதான் இதுவும்னு பதில் சொல்லுவாரோன்னு எதிர்பார்த்தேன்.

ஆப்புறம் IE 7 ல்யே anialised ஆக எழுத்துக்கள் Renderinng ஆகி வருதே. இதுக்காகவா IE 8 போனீங்க///
நன்றி நந்தா! ஏதோ போயாச்சு :))

Thamiz Priyan said...

///ரவிசங்கர் said...

justify தான் பிரச்சினை என்றால் firefox 3 beta 5 போங்க. அதில் தமிழ் எழுத்துக்கள் நல்லா தெரியுது.///
இதை முயற்சி செய்து பார்க்கிறேன்... :)

Thamiz Priyan said...

///புருனோ Bruno said...

ஓபெரா உலாவியில் இந்த பிரச்சனையில்லை.///
தகவலுக்கு நன்றி புருனோ

Yogi said...

:)

பயர்பாக்ஸ் உபயோகிக்கவும். நான் ஒன்னரை வருசமா உபயோகிக்கிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. பீட்டா 3 வெர்சன் 5 ல் தமிழ் எழுத்துக்கள் நல்லா தெரிகிறது.

Yogi said...

கும்மியில் மெம்பரா இருந்துக்கிட்டு மாடரேசன் வச்சிருக்கலாமா?

என்ன கொடுமை வேல்முருகன் இது?

Yogi said...

போட்டோ எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்ன எடுத்தது?

Anonymous said...

>எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே..

வூட்டுக்கு வூடு கம்பீட்டரு வர்துக்கு முன்னாடி அல்லாரும் லினக்சு, உனிக்சுதான் வெச்சுனுருதாங்களாமா? எந்தூரு கடவுள்பா இவுரு, வரலாறே தெரியாமக்குறாறே...

அப்பாலிக்கா, இன்னொரு மேட்டரு. இன்டர்னெட் எக்சுபுளோரரு ஒரு டெவலப்பரு எடிசனு. அதுல எவ்ளோவோ மேட்டரு புச்சுப்புச்சா வந்துக்கீது. அல்லாம் டெசைனரு சமாச்சாரம்ப்பா. கூடிய வெரவுல நெர்ப்புநெரிக்காரங்கோ காப்பி அட்சு ரிலீசு பண்ணுவாங்கோ, அப்பாலிக்கா அல்லாருக்கும் பிர்யும்... வர்ட்டா!

Anonymous said...

தமிழ் பிரியன் said...

///ரவிசங்கர் said...

justify தான் பிரச்சினை என்றால் firefox 3 beta 5 போங்க. அதில் தமிழ் எழுத்துக்கள் நல்லா தெரியுது.///

இதுல தமிழ்மணம், குமுதம் எல்லாம் நல்லா தெரியுது.
ஆனா, தலைகீழா நின்னாலும் தினமலர் மாதிரி சில தளங்கள் தெரியவே மாட்டேங்குது :(

மு. மயூரன் said...

//கூடிய வெரவுல நெர்ப்புநெரிக்காரங்கோ காப்பி அட்சு ரிலீசு பண்ணுவாங்கோ, அப்பாலிக்கா அல்லாருக்கும் பிர்யும்... வர்ட்டா! //

யார் யார காப்பி அடிக்கிறாங்க?

IE 7 என்பதே அச்சு அசலாக firefox இனது ஈயடிச்சான் காப்பி, shortcut keys கூட விடாம அடிச்சிருந்தாங்க.

இப்ப IE 8 ல முடிந்தவரைக்கும் w3c நியமங்கள கடைப்பிடிக்கப்போறதா சொல்லுறாங்க.

அட அநியாயமே, முடிஞ்சவரைக்கும் கடைப்பிடிக்கப்போறீங்களா?

புகழன் said...

கதை நல்லாயிக்கு
இதை அப்படியே மொழியாக்கம் செய்து பில்கேட்ஸ்க்கு அனுப்பிவெச்சா நல்லது.

Thamiz Priyan said...

//நிஜமா நல்லவன் said...

ஹா ஹா ஹா .........///
:))

Thamiz Priyan said...

///ஆயில்யன். said...

நல்லா இருக்கு :))//
தலைவா! டெம்ப்ளேட் பின்னூட்டமா?

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...

நெருப்பு நரி 2 , ஐஇ 6 இதுதான் வீட்டுல.

நெருப்பு நரி2, ஐஇ7 ஆப்பீஸ்ல. ஒரு பிரச்சனையும் இல்லாம ரொம்ப நல்லா எழுத்துரு எல்லாம் வருது.

பில்கேட் கதை ரொம்ப பழையது இருந்தாலும் நல்லா இருக்கு.//
அப்ப எனக்கு மட்டும் தான் பிரச்சினையா? :( அவ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///பொன்வண்டு said...

:)

பயர்பாக்ஸ் உபயோகிக்கவும். நான் ஒன்னரை வருசமா உபயோகிக்கிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. பீட்டா 3 வெர்சன் 5 ல் தமிழ் எழுத்துக்கள் நல்லா தெரிகிறது ///
இப்ப பயர்பாக்ஸ் 3 பீட்டாக்கு வந்தாச்சு. சூப்பரா இருக்கு.... :)

Anonymous said...

>யார் யார காப்பி அடிக்கிறாங்க?

>IE 7 என்பதே அச்சு அசலாக firefox இனது ஈயடிச்சான் காப்பி,
"நல்ல காமடி" என்பதைத் தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியலை. ஒரு சின்ன test: IE 7 & firefox எப்படி ஒரு சுட்டியை tabல் திறக்கும் என்று கவனித்திருக்கிறீர்கள் தானே? எது intuitive? இப்படியெல்லாம் கூட ஈயடிச்சான் காப்பியில் பண்ண முடியுமா என்ன?


>shortcut keys கூட விடாம அடிச்சிருந்தாங்க.

Ctrl + T? Shortcut keysஆ shortcut keyயா?

Firefoxனு மட்டும் இல்லை, இன்னும் நிறைய மென்பொருட்கள் File->New, File->Openனு காப்பி அடிச்சுண்டேதான் இருக்காங்க. "கூட" என்றால் எப்படி, IE உள்ள இருக்கற rendering engine கூடவா?

>இப்ப IE 8 ல முடிந்தவரைக்கும் w3c நியமங்கள கடைப்பிடிக்கப்போறதா சொல்லுறாங்க.

>அட அநியாயமே, முடிஞ்சவரைக்கும் கடைப்பிடிக்கப்போறீங்களா?

"றீ" எழுத்துப்பிழையா? சரி, இருக்கட்டும். Firefox 100% w3c compliant உலாவின்னுனு சொல்ல வறீங்களா?

ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு விதமான ப்ரௌசர்ல அவங்கவங்க எழுதற code சரியா தெரியணுமேன்னு கவலை. முதல் தேவை வலைப்பக்க user friendliness. developerக்கும் friendliness தேவைதான். இதில் என்ன ப்ரச்சனை என்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலம், பலவீனம். சிலருக்கு w3c standard compliant html codingஏ நட்பற்றதாக இருக்கலாம். சிலருக்கு அதை அனுசரிக்கும் உலாவிகளே friendlyயாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இது நபருக்கு நபர் மாறுபடும் விஷயம். இதில் எந்த உலாவியை மனதில் வைத்து design செய்தாலுமே அததற்கான தலைவலிகள் நிச்சயம் உண்டு. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்வதென்றால், இதுவும் நபருக்குநபர் மாறுபடும்... நம்முடைய ப்ராஜக்டுக்குப்ராஜக்ட் மாறுபடும். இதுதான் உண்மை நிலை.

மற்றபடி எது சிறந்த உலாவி என்பதை நிர்ணயிக்க (ஒரு பயனராகவோ அல்லது ஒரு நிரலாளராகவோ) W3c நியமங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தீர்மானிப்பது சரிவராது என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்களது கருத்து மாறுபடலாம். அதை மதிக்கிறேன்.

சத்யா said...

ஹாஹா! நகைச்சுவை ரசிக்கும்படி! அதுலெ மெட்டரும்..

ரசிகன் said...

//சரி எப்படி இருக்கும்னு பார்க்கலாமேனு சிங்கத்தோட குகைக்குள்ள நுழைஞ்சேன். பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யப் போனா வழக்கம் போல நம்மோட XP டுபாக்கூருனு சொன்னாரு நம்ம பில்கேட்ஸ். அவர் கிடக்காருனு டகால்டி வேலை காட்டி உங்களோட XP பத்தரை மாற்று தங்கம்னு சொல்ல வச்சி இன்ஸ்டால் பண்ணியாச்சு.
அப்புறம் ஆரம்பிச்சதப்பு சனியன்..... :( ஏதாவது பதிவை திறக்கப் போய் முழுவதும் திறப்பதற்குள் எலிக்குட்டியை ஸ்க்ரால் செய்தால் IE 8 படுத்து தூங்கிடுறாரு.... எங்க போய் சொல்ல... எல்லாம் நம்ம நேரம்... நமக்கு இந்த ஆசை எல்லாம் இல்லை தான்... நாம எப்பவுமே நெருப்பு நரி ஆட்கள் தான்... ஆனால் சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது.... :(//
ஹா..ஹா,..,:))))) அருமையா ரசிக்கும்படியா சொல்லியிருக்கிங்க..:)
கலக்குங்க..வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

//நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.//

என்ன இருந்தாலும் உங்க விண்டோ xp டூப்பிளிகேட்டுன்னு சொன்னதுக்காக பிக்கேட்ஸ்ச இப்டி சாகடிச்சு இருக்கப்டாது:P

Anonymous said...

கதை ச்சும்மா நச்சுன்னு இருக்குதுப்பா (ஆனா கொஞ்சம் பழசு )

அன்புடன்
கே ஆர் பி

http://visitmiletus.blogspot.com/

Thamiz Priyan said...

///சத்யா said...

ஹாஹா! நகைச்சுவை ரசிக்கும்படி! அதுலெ மெட்டரும்.. ///
வருகைக்கு நன்றி சத்யா!

Thamiz Priyan said...

///ரசிகன் said...

//நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.//

என்ன இருந்தாலும் உங்க விண்டோ xp டூப்பிளிகேட்டுன்னு சொன்னதுக்காக பிக்கேட்ஸ்ச இப்டி சாகடிச்சு இருக்கப்டாது:P ///
:)))))))))

Thamiz Priyan said...

///Anonymous said...

கதை ச்சும்மா நச்சுன்னு இருக்குதுப்பா (ஆனா கொஞ்சம் பழசு )

அன்புடன்
கே ஆர் பி

http://visitmiletus.blogspot.com/ ///
அவசரத்துக்கு அந்த கதைதான் கிடைச்சது கே ஆர் பி! :)

ILA (a) இளா said...

//IE 7 என்பதே அச்சு அசலாக firefox இனது ஈயடிச்சான் காப்பி//
இல்லை, avant browser என்ற ஒரு plugin 6 வருஷமா இருக்கு, அதிலே இருந்து உருவானதுதான் firefoxன் புதிய பதிப்பும், ie7ம். அதே போல firefox இது போல நிறைய காப்பி அடித்திருக்கிறது. இதனாலேயே எனக்கு firefox பிடிக்காமல் போனது. அப்புறம் ie8, xpக்கும் ஏழாம் பொருத்தம். அதன் செயலாக்கம் xpக்கு ஏத்தது அல்ல. IE8 விஸ்டாவிற்காக உருவாக்கப்பட்டது.

ILA (a) இளா said...

//IE 7 என்பதே அச்சு அசலாக firefox இனது ஈயடிச்சான் காப்பி, shortcut keys கூட விடாம அடிச்சிருந்தாங்க.//
மயூரன் செம காமெடிங்க? அப்போ flockல இருந்து firefox 3 beta 5 உருவுன மேட்டரு, avant லிருந்து keys shortcuts உருவின மேட்டரு, operaவிலிருந்து மொத்த engine காப்பி அடிச்ச மேட்டரு எல்லாம் தெரிஞ்சுதான் சொல்றீங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

Sanjai Gandhi said...

பாவம்யா அந்தாளு.. இன்னைக்கு பொட்டி தட்டிட்டு பொழாப்ப ஓட்டற ஒவ்வொருத்தனும் அவர் புண்ணியாத்துல தான் இப்படி சொகுசா இருகான்ங்க. ஆனா ஆத மறந்துட்டு அந்தாளயே குனிய வச்சி குத்தறானுங்க.. :)

Thamiz Priyan said...

///சு. க்ருபா ஷங்கர் said...///
///ILA(a)இளா said... ///
தலைகளின் வருகைக்கு மிக்க நன்றி! யார் யாரிடம் திருடினார்கள் என்று நாம் சண்டையிடத் தேவையில்லை. எது வசதியாக உள்ளது என்பது தான் இங்கு சர்ச்சை.
IE 8 உபயோகிப்பதற்கு அழகாக இருந்தாலும் பயனபடுத்துவதற்கு (என்னிடம் உள்ள முழு நிரல் உள்ள XP ல்) பயனற்றது. IE8, Flock, Opera, Firefox அனைத்தும் வைத்துள்ளேன். எனக்கு பயன்படுத்த பயர்பாக்ஸே சிறப்பாக உள்ளது. எனவே நான் பயர்பாக்சே பரிந்துரைப்பேன்,... :)

Thamiz Priyan said...

/// ILA(a)இளா said...
இதனாலேயே எனக்கு firefox பிடிக்காமல் போனது. //
வருந்தத்தக்க விஷயம். ஒரு நல்ல பிரெளசரை பயன்படுத்துவதை தவிர்க்க இப்படியும் ஒரு காரணம் இருக்க முடியுமா?

Thamiz Priyan said...

///ILA(a)இளா said...
அப்புறம் ie8, xpக்கும் ஏழாம் பொருத்தம். அதன் செயலாக்கம் xpக்கு ஏத்தது அல்ல. IE8 விஸ்டாவிற்காக உருவாக்கப்பட்டது.///
IE8 இன்ஸ்டலேசன் என்பது பதிவிறக்கி அப்படியே செய்து விடுவதல்ல. இணையம் மூலம் நேரடியாக நமது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பரிசோதித்து பின்னர் தான் பதிவிறக்க முடிகிறது.XP க்கு ஏழாம் பொருத்தமென்றால் அவர்கள் பதிவிறக்கத்தை தடுக்கலாமே? :(

Anonymous said...

பயன்படுத்தி வெந்துபோய் கைய விட்டிட்டன்.. இப்ப firefox 3 beta 5 பாவிக்கிறன்.. மிகவும் அருமையாக உள்ளது!

Mike said...

எனக்கும் ஏகப்பட்ட பிரச்சனை இதால, Emulate IE7 button கொஞ்சம் பரவாயில்லை, ஆனால google map பொயே போச்சு, blog type பண்ண வேலை செய்ய மாட்டேங்குது. notepad-ல அடிச்சு காபி பண்ண வேண்டியுள்ளது

கிரி said...

// டகால்டி வேலை காட்டி உங்களோட XP பத்தரை மாற்று தங்கம்னு சொல்ல வச்சி இன்ஸ்டால் பண்ணியாச்சு//

நாம யாரு :-)))

தமிழ் தோழி said...

உங்க பில்கேட்ஸ் கதை சூப்பர்.
வேனாம் எனக்கு சிரிப்பு வருது சிருச்சிடுவேன்.

ராமலக்ஷ்மி said...

தமிழ் தோழி said...

//உங்க பில்கேட்ஸ் கதை சூப்பர்.
வேனாம் எனக்கு சிரிப்பு வருது சிருச்சிடுவேன்.//

நான் சிரிச்சிட்டேன்:))))))!

சரி, டிக்கெட் கிடைத்ததா?

SurveySan said...

ஹி ஹி. பேட்டா தான் அப்படீன்னா, ஃபைனலும் அப்படித்தான் கீது ;)