சமீபத்தில் சினிமா பற்றிய பதிவில் சுப்ரமணியபுரம் படம் பற்றிச் சொல்லி விட்டு, சைட் அடித்துக் கொண்டே போய் சாக்கடையில் விழும் காட்சியைக் கண்டால் பழைய நினைவுகள் வரும் என்றும், அதே போன்ற அனுபவம் நமக்கும் உள்ளது என்று என்றும் சொன்னதும், நண்பர்கள் அதை எழுதுமாறு நச்சரித்தனர்... (ஸ்ஸ்ஸ்ஸ்.. இருங்கப்பா மூச்சு விட்டுக்குறேன்.)
நாம சைக்கிளோட பிகர் முன்னாடி விழுந்த கதையைக் கேட்க நம்ம ஆட்களுக்கு என்ன ஆர்வம் பாருங்க... நல்லா இருங்கப்பூ! நல்லா இருங்க!
எங்க வீட்டில் இருந்து ஹை ஸ்கூல் கொஞ்சம் தூரம் அதிகம்.10 வகுப்பு வரை நடராஜா சர்வீஸ் தான். பத்தாவது கடைசியில் தான் வீட்டில் சைக்கிள் வாங்கித் தந்தார்கள். 11 வதில் என்னோட சசி என்ற நண்பன் படித்தான். ஆளு பரணி அளவுக்கு இல்லையென்றாலும் (என்னது? பரணி யாரா? இங்க போய் படிச்சிட்டு திரும்பி வாங்க) ஓரளவு நல்ல பையன் தான்.
அவனோட நடுநிலைப்பள்ளியில் படித்த ஒரு பெண்ணை காதல் (?) பண்ணிக் கொண்டு இருந்தான். ஆனா அந்த பெண் இவனை கண்டுக்காத மாதிரி தான் இருக்கும். சசி சைட் அடிக்கும் பெண்ணோட ஒரு கண்ணாடி போட்ட பெண் வரும். சசி, அந்த பெண், சோடாபுட்டி எல்லாம் ஒண்ணா படிச்சவங்க. இந்த கதை நமக்கு தேவை இல்லாதது அதனால் சசியைப் பற்றி அப்புறமா பார்க்கலாம். சசியோடயே சுத்தியதால் இதெல்லாம் தெரியும். இப்ப சொல்ற எல்லாரும் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள்.
ஒருநாள் பள்ளிக்கு வேகமாக சைக்கிளில் வந்து கொண்டு இருந்தேன். எதிர்த்தால் போல் அந்த சோடாபுட்டி சைக்கிளில் வந்து கொண்டு இருந்தது. நம்ம வண்டி ஹெர்குலிஸ்... சும்மா எருமை மாடு மாதிரி இருக்கும். நம்ம சொன்ன பேச்செல்லாம் கேட்கும். அந்த பெண் வந்தது ஒரு BSA SLR லேடீஸ் ஓட்டும் வண்டி.
நான் வந்து கொண்டிருந்தது நல்ல இறக்கம். கீழே இருந்து அந்த பெண் வந்ததால் கஷ்டப்பட்டு சைக்கிள் மிதித்துக் கொண்டு வந்தது. நான் வேகமா வரும் போதே, எனக்குள் இருக்கும் மிருகம் விழித்துக் கொண்டது. ஒரு வில்லத்தனமான ஐடியா வந்தது.
இறக்கத்தில் பிரேக்கைப் பிடிக்காமல் வேகமாக அந்த பெண்ணின் சைக்கிளை நோக்கி அழுத்தினேன். கிட்டத்தட்ட சில அங்குல இடைவெளியில் சரக்கென்று என்னோட சைக்கிளை திருப்பினேன். ‘தடார்’ ‘டமார்’ என்று சத்தம்.. என்ன நடந்தது?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான் சைக்கிளில் இருந்து அருகில் இருந்த சாக்கடையில் விழுந்து விட்டேன் என்று தானே நினைச்சீங்க... அதான் இல்லை. அது நல்ல வழுவழுவென்று இருக்கும் ரோடு. மோதுவது போல் போய் விட்டு கடைசி வினாடியில் என் சைக்கிளை திருப்பிக் கொண்டு அழகாக சென்று விட்டேன். அந்த பெண் சைக்கிளை பேலன்ஸ் செய்ய இயலாமல் கீழே விழுந்து கிடக்க, சைக்கிள் அந்த பெண்ணின் மேலே கிடந்தது. இதை சைக்கிளில் இருந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று விட்டேன். அருகில் இருந்தவர்கள் அந்த பெண் எழுந்திருக்க உதவி செய்தார்களாம். கண்ணாடி வேறு உடைந்து போனதாம்.
அடப்பாவி! சதிகாரா! என்று திட்டுவது இங்கு வரை கேட்குது... அது ஏதோ திமிறில் செய்து விட்டேன். இப்போது வரை அதை நினைத்து வருந்துவேன்.
கொசுறு செய்தி 1 : அந்த சோடாபுட்டிப் பெண் தற்போது கொடைக்கானலில் இருந்து ஒலிபரப்பாகும் கோடை பண்பலையில் (Kodai FM) நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்கின்றார். தெரிந்தவர்கள் என்னுடைய மன்னிப்பை சொல்லி விடுங்கள்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நீ விழுந்த கதை எங்கே என்று கேட்கிறீர்கள் தானே? அதையும் சொல்லிடலாம்.
நமக்கும் சைட் அடிக்க ஒரு பெண் இருந்தது. அப்போது எல்லாம் ‘டேய்! நான் இந்த பெண்ணை லவ் பண்றேன். வேற யாரும் அவளை பார்க்கக் கூடாது’ என்பது நண்பர்கள் மத்தியில் சகஜமாக இருக்கும் வசனம். லவ்(?) பண்ண யாரும் இல்லை என்றால் அது அவமானமாகக் கருதப்படும் காலம்... அப்ப என்னைப் போன்ற அழகானவர்களுக்கு(?) ஆள் இல்லாம இருக்கலாமா? நாம சைட் அடித்தது மெட்ரிகுலேசன் ... ஹிஹிஹிஹி .. நாங்க யாரு? எங்க ஸ்டேடஸ் என்ன?
அப்ப சைக்கிள் வைத்து இல்லாத வித்தையெல்லாம் காட்டுவேன். கைகளை விட்டு ஓட்டுவது, ஹேண்ட் பாரில் காலை வைத்து ஓட்டுவது, மோதுவது போல் வேகமாக சென்று திரும்புவது என வாழ்ந்த காலம் அது.
அன்றைக்கு ஏதோ பொருள் வாங்க மார்க்கெட்டுக்கு வேகவேகமாக போய்க் கொண்டு இருந்தேன். நல்ல காற்றுடன் மழை வேறு. ஒரு கையில் குடையும் மறு கையில் சைக்கிள் ஹேண்ட் பாரும்... ஒரு சந்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது சந்தின் கடைசியில் என்னோட சைட்டும், அவளோடு தோழியும் குடையுடன் வந்து கொண்டிருந்தனர். பார்த்ததும் வழக்கமான குறுகுறுப்பு மேலோங்கி விட்டது.
அருகில் வரும் போது கெத்தாக ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் இருவரும் சந்தை அடைத்துக் கொண்டு பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முன் சைக்கிளை விட்டு இறங்கினால் பிரஸ்டீஜ் பிராப்ளம் வரும். இறங்கவே கூடாது என நினைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அருகில் வந்ததும் இருவரும் பிரிந்து சைக்கிளுக்கு நடுவில் வழி விட்டனர். நான் அவள் முகத்தைப் பார்க்க முயற்சிக்க குடை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாமல் செய்து விட்டது. டமார் என்று சததம்.
உண்மையில் நான் தான் கீழே விழுந்து விட்டேன். சைக்கிள் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம், குடை ஒரு பக்கம் என்று பிரிந்து கிடக்கிறோம். மழையில் உடல் முழுவதும் நனைந்தும் விட்டது. அங்காங்க்ற் கை கால்களில் சிறாய்ப்பு வேறு.
சந்துகளின் நடுவில் சாக்கடைகள் கட்டப்பட்டு இருக்கும். அதில் ஒரு ஓரத்தில் சைக்கிள்கள் சென்று பள்ளமாக மாறி இருக்கும். அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மற்ற பகுதிகளில் மேடு பள்ளமாக இருக்கும். வழக்கமாக செல்லும் வழி என்பதால் இருட்டில் கூட சென்று விடுவேன். ஆனால் அன்று யோசனை எங்கோ மாறி சென்று விட்டதால் புதையல் எடுக்க வேண்டி வந்து விட்டது.
எப்படியோ தட்டுத்தடுமாறி எழுந்திருக்க, தோழிகள் இருவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டே கும்மாளமாக சிரித்துக் கொண்டு சென்றனர். ஆனால் இருட்டா இருந்ததால் என்னை அவர்களுக்கு அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் மனதில் பல வருடங்களாக இந்த சந்தேகம் இருக்கு? ஒருக்கால் நம்மை அடையாளம் கண்டு கொண்டு தான் இப்படி வெடி சிரிப்பு சிரித்தார்களோ? இன்னும் இந்த சந்தேகம் அரிப்பா மனசில் இருக்கு... :(
யாராவது அந்த பெண்ணைத் தெரிந்தவர்கள் கேட்டுச் சொல்லுங்க... அன்று இரவு என்னை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை தானே?
கொசுறு தகவல் 2 : அந்த பெண் தற்போது நியூஸிலாந்து நாட்டில் தனது கணவர், மற்றும் குழந்தையுடன் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கடைசியாக இந்தியா சென்ற போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருஞ்சொற்பொருள்
சைட் - நாம் லவ் பண்ண புக் செய்து வைத்து இருக்கும் பெண். அவர் திரும்பி பார்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
சோடாபுட்டி - கண்ணாடி அணியும் பெண்.
ஒரு பாட்டு மட்டும் பாடிக்கிறேன். இந்த பாட்டுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
எங்கிருந்தாலும் வாழ்க! உன்
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க!
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க!
35 comments:
//எங்கிருந்தாலும் வாழ்க! உன்
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க! //
தம்பி அடுத்த மாசம்தானே ஊருக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கீங்க ?
(இல்ல ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்ணிக்கத்தான் கேட்டேன்!)
//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//
என்னாத்தா சொல்றது :(
//அளவுக்கு இல்லையென்றாலும் (என்னது? பரணி யாரா? இங்க போய் படிச்சிட்டு திரும்பி வாங்க) ஓரளவு நல்ல பையன் தான்.///
யோவ் இதை நீ வார்னிங்குன்னே வைச்சுக்கோ! சும்மா உங்க பிளாக்குலயே நான் திரும்ப திரும்ப சுத்திக்கிட்டிருந்தா (அங்க இன்னொரு லிங்க் கொடுத்து அங்க போய் படிக்க சொல்லவேண்டியது!)
என்னால சரிவர பின்னூட்ட பணியெல்லாம் செய்யமுடியாது வேணும்னா அதை காப்பி பண்ணி இங்க கொண்டுவாங்க ஒ.கேவா
இல்லாட்டி....
பீ
கேர்
ஃ புல் (நான் என்னிய சொல்லிக்கிட்டேன்!)
//அதே போன்ற அனுபவம் நமக்கும் உள்ளது என்று என்றும் சொன்னதும், நண்பர்கள் அதை எழுதுமாறு நச்சரித்தனர்... //
நொம்ப டேஞ்சரஸ் ஃ பெலோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
:)))))))))
//ஒருநாள் பள்ளிக்கு வேகமாக சைக்கிளில் வந்து கொண்டு இருந்தேன். எதிர்த்தால் போல் அந்த சோடாபுட்டி சைக்கிளில் வந்து கொண்டு இருந்தது.///
என்னாது இது?
அது இதுன்னு ஏகவசனத்தில பேசுறீங்க!
சாக்கிரதை அவ்ளோதான் சொல்லமுடியும்!
//அந்த பெண் சைக்கிளை பேலன்ஸ் செய்ய இயலாமல் கீழே விழுந்து கிடக்க, சைக்கிள் அந்த பெண்ணின் மேலே கிடந்தது.///
அடப்பாவி!
///ஆயில்யன் said...
//ஒருநாள் பள்ளிக்கு வேகமாக சைக்கிளில் வந்து கொண்டு இருந்தேன். எதிர்த்தால் போல் அந்த சோடாபுட்டி சைக்கிளில் வந்து கொண்டு இருந்தது.///
என்னாது இது?
அது இதுன்னு ஏகவசனத்தில பேசுறீங்க!
சாக்கிரதை அவ்ளோதான் சொல்லமுடியும்!///
அண்ணே! மருத ஸ்லாங்.. அப்படித்தான் பேசிக்குவோம்... அப்படியே எழுதிட்டேன்... :)
/நமக்கும் சைட் அடிக்க ஒரு பெண் இருந்தது.///
எனக்கும்
///ஆயில்யன் has left a new comment on your post "சுப்ரமணியபுரம் படக்காட்சியும், சைக்கிளில் இருந்து ...":
/நமக்கும் சைட் அடிக்க ஒரு பெண் இருந்தது.///
எனக்கும் /////
அண்ணே! அந்த கதையும் சொல்லுங்களேன்.. சுவாரஸ்யமா இருக்கும்.
நானும் நொம்ப டேஞ்சரஸ் ஃ பெலோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தான்.. ;))
//அப்ப சைக்கிள் வைத்து இல்லாத வித்தையெல்லாம் காட்டுவேன்//
சைக்கிளே வைத்து இல்லாதப்ப நீங்க என்ன வித்தைய காட்டுவீங்க
குட்டிகர்ணம் அடிப்பீங்களா?
இல்ல ஹை ஜம்ப் லாங்க் ஜம்ப்?
அதுவும் இல்ல குதிச்சு குதிச்சு நடக்கறது எதாச்சுமா ?
கொஞ்சம் விவரமா சொன்னா புரியும்!
தமாசு.. தமாசு.. :)
//அன்றைக்கு ஏதோ பொருள் வாங்க மார்க்கெட்டுக்கு வேகவேகமாக போய்க் கொண்டு இருந்தேன்///
அட! அப்ப நீங்க் ரவுடியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அருகில் வரும் போது கெத்தாக ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்//
ஏற்கனவே காத்து மழையில பாவம் புள்ளைங்க நொம்ப கஷ்டத்தோட வரும்போது இந்த கஷ்டம் வேறயா?
அவ்வ்வ்வ்வ்வ்
//அவள் முகத்தைப் பார்க்க முயற்சிக்க குடை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாமல் செய்து விட்டது//
அட அதெல்லாம் குடை மறைக்கல!
இதுக்கு பேர்தான் விதி! ஆண்டவன் கட்டளை!
//ஆனால் இருட்டா இருந்ததால் என்னை அவர்களுக்கு அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.//
விழுந்தாலும் கூட மீசையில நோ சாண்ட்!
வெரிகுட்!
// அந்த பெண் தற்போது நியூஸிலாந்து நாட்டில் தனது கணவர், மற்றும் குழந்தையுடன் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கடைசியாக இந்தியா சென்ற போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன///
அதை ஏன் மேன் நீ பாலோ பண்ற நீ நொம்ப டேஞ்சரஸ் ஃபெலோதான்!
//வட்டமோதிரத்துடன் வாழ்க //
ஆமாம் இதுல என்ன கதை இருக்கு?
(அப்பாடா இன்னுமொரு கதைக்கு அஸ்திவாரம் போட்டு கொடுத்தாச்சு!)
அண்ணா நீங்களா இப்படி??????????????
அப்படின்னு என்ன கேட்க வெச்சிட்டீங்க...!! :))
ஆயில்ஸ் அண்ணா கமெண்ட் எல்லாம் நானும் வழிமொழிகிறேன்..!! :)))))))))
ROTFL!!
:-)))...
சைட் அடிச்சது பெரிசில்லை செல்லம். எல்லாரோட இப்போதைய ஸ்டேடஸ் ஃபாலோ அப் பண்ணி வச்சிருக்கே பார், அங்கே நிக்கிற நீ..!
உங்களை ஒன்று கேட்பேன்...
உண்மை சொல்ல வேண்டும் :D
நீங்க சைட் அடிச்சீங்க சரி
உங்களை யாராச்சும் சைட் அடிச்சாங்களா?
அந்த கதை எதாச்சும் இருக்கா அண்ணா :)
//எங்கிருந்தாலும் வாழ்க! உன்
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க! //
annaikku phone pannappa veettu number kekka marandhuttEn ;) solla mudiyumaa
//எங்கிருந்தாலும் வாழ்க! உன்
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க! //
annaikku phone pannappa veettu number kekka marandhuttEn ;) solla mudiyumaa
நீயுமா...... தம்பி......???????!@!!!!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி நானும்தான்???????
சேம் பிளட்
//
கிழஞ்செழியன் said...
சைட் அடிச்சது பெரிசில்லை. எல்லாரோட இப்போதைய ஸ்டேடஸ் ஃபாலோ அப் பண்ணி வச்சிருக்கே பார், அங்கே நிக்கிற நீ..!
//
Repeatey!!!!
/ஆயில்யன் said...
//எங்கிருந்தாலும் வாழ்க! உன்
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க! //
தம்பி அடுத்த மாசம்தானே ஊருக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கீங்க ?
(இல்ல ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்ணிக்கத்தான் கேட்டேன்!)/
ரிப்பீட்டேய்...!
அடச்சே....இதுவும் புனைவு மாதிரி தானா???? அட போய்யா...:)
:))
ரொம்ப நல்ல அனுபவங்கள் அண்ணே!
மீசை முளைக்கும் வயசில் இதெல்லாம்
சகஜம்.. ஹி ஹி!
இப்ப பாருங்க உங்க வயசான காலத்துல
அத பத்தி நினைத்து சந்தோஷப்பட முடியுது, பதிவெல்லாம் போட முடியுது!
இந்த பதிவ அண்ணிக்கு படிச்சி காட்டுங்க....
பரிசா ஏதாவது கிடைக்கும்....
;-) ரொம்ப ரகளைக்கார ஆளுப்பா நீரு
//சைட் அடிச்சது பெரிசில்லை செல்லம். எல்லாரோட இப்போதைய ஸ்டேடஸ் ஃபாலோ அப் பண்ணி வச்சிருக்கே பார், அங்கே நிக்கிற நீ..!//
:-))))))))))
வட்டமோதிரத்துடன் வாழ்க
இது என்ன புதையல் எடுத்தப்ப கெடச்ச்தா.
Post a Comment