.
1995 ஒரு கோடைக்கால பகலில் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில்
“என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்க” கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தேன்.
“காலைலக்கி லெமன் சாதமும், மதியத்துக்கு தயிர் சாதமும் கொண்டு வந்தேன். காலைல தான் யாருமே சாப்பிட விடலையே? இரண்டும் அப்படியே இருக்கு”
“நீ தான் பஸ்ஸிலே ஏறியதும் கும்பகர்ணன் மாதிரி தூங்க ஆரம்பிச்சுட்டியே? எப்படி பசிக்கப் போகுது”
“ஏய் கிண்டல் பண்ணாத”
“ஏம்ப்பா எப்போவாதான் டூர் வர்றோம். இங்கயும் அதே லெமன் சாதமும், தயிர் சாதமும் தானா?”
“வெளியே கடைகளில் சாப்பிட்டா ஒடம்புக்கு நல்லதில்ல. அதான் ஆமா நீ என்ன சாப்பிடப் போற”
“நான் ஏதும் கொண்டு வரலை! கடையில பசங்களோட சேர்ந்து சாப்பிடப் போறேன். இல்லைன்னா ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்தாலே எனக்கு போதும்”
“அய்ய இப்பதான சொன்னே கடை சாப்பாடு ஒடம்புக்கு நல்லதில்லைன்னு. நீ தயிர் சாதம் சாப்பிடு. நான் லெமன் சாதம் சாப்பிட்டுக்கிறேன்”
“ நீ ஒல்லியாதன இருக்க இரண்டையும் சேத்து தின்னு ஒடம்பை தேத்து”
“ஏய் கேலி பண்ணாத சாப்பிடனும்னா சாப்பிடு இல்லைன்னா போ நான் கீழ கொட்டிக்கிறேன்”
சட்டென்று எனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள். நான் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
“என்னோட ரேஞ்சுக்கு தயிர் சாதமும் லெமன் சாதமும் சாப்பிட மாட்டேன். இருந்தாலும் உனக்காக சாப்பிடுகிறேன்”
இப்போது அவளது கண்களை நான் பார்க்க அவள் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்
“நல்லா தான் இருந்தது உங்க வீட்டு தயிர் சாதம்... கை கழுவ தண்ணி ஊத்து”
“கர்சிப் எடுத்து கையைத் தொடச்சுக்க”
“வர்ற அவசரத்துல கர்சிப்பை மறந்துட்டு வந்துட்டேன்ப்ல”
“இந்தா இந்த துப்பட்டால கையைத் துடைச்சுக்க”
1995 ஜூன் மாதம் பள்ளிக்கூட மரத்தடியில்
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” அவள் கொடுத்த சாக்லேட்டை எடுத்துக் கொண்டே கூறினேன். தேன் கலரில் சுடிதாரில் அழகாகத் தெரிந்தாள்.
எனது பையில் இருந்து அந்த வாழ்த்து அட்டையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கியதும் பிரித்து பார்த்தாள். ஹேப்பி பர்த் டே டூ யூ என்று இசை முழங்கியது. வாழ்த்து அட்டையில் ஏதும் எழுதாததால் ஏற்ப்பட்ட ஏமாற்றம் அவளது முகத்தில் தெரிந்தது.
“ரெம்ப தேங்க்ஸ்... இது எங்கம்மா எனக்கு புதுசா எடுத்துக் கொடுத்த சுடிதார். எங்கப்பா எனக்கு பிறந்த நாள் பரிசா இந்த செயின் கொடுத்தாங்க” அழகான கழுத்தை ஒட்டி போட்டிருந்த தங்க செயினை ஒரு விரலால இழுத்து காண்பித்தாள்.
“தங்கத்தை பாத்தேலே வாயெல்லாம் பல்லாகிடுமே இந்த பொம்பளைகளுக்கு தங்கத்து மேல அப்படி என்ன ஆசையோப்பா”
“நானெல்லாம் அப்டி இல்ல. எஙகப்பா வாங்கிக் கொடுத்தாங்க போட்டிருக்கேன்”
இப்படி ஏதாவது சொல்லி சமாளிங்க! கழுத்து, காது, மூக்குன்னு தங்கத்தை மாட்டிக்கிட்டு திரியிரவங்களை பாத்தா எரிச்சலா இருக்கு”
“சரி விடு உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தங்கமே வாங்கித் தராத”
“நான் தங்கமெ வாங்கித் தர மாட்டேன் பாரு”
அவளது கண்கள் என் கண்களைப் பார்க்க சட்டென்று எனது கண்கள் தரையை நோக்கி பணிந்தன.
.......... நினைவுகள் தொடரும்
39 comments:
ஐயோ ஒரு லவ்வு.... தாங்கல... ஆனா உங்க தலைப்பில் ஏதோ ஒரு மறைமுக சூட்சமம் இருப்பதை காண்கிறேன்...
யோவ் பெருசு... இப்படி தான் உசுப்பேத்தி இத்தோட ரெண்டு கதைங்க பெப்டிங்ள நிக்குது... இதையாவது ஒழுங்க எழுதி முடிங்க...
வயசாயி போச்சுனா என்ன எழுதுறோம்னு கூடவா மறந்துடும்... ரெண்டு தொடரையும் மாத்தி மாத்தி போட்டு மண்ட காய வச்சிராதிங்க...
ஓ இதான் புனைவா? சரி சரி :)
கண்கள் எழுதும் கண்கள் எழுதும் ஒரு வண்ணகவிதை காதல் தானா!?
:))
நல்லா இருக்கு. சீக்கிரம் தொடருங்கள்.
வெள்ளிகிழமை வந்தா போதுமே பயபுள்ளைங்க நிதானமா இருக்கறது கிடையாது! எதையாவது நினைச்சு நினைச்சு மனசை போட்டு கொழப்பிக்கவேண்டியாது! அப்புறம் அடுத்த ஒரு வாரமும் வேலையே செய்யாம,அதைப்பத்தியே நினைச்சுக்கிட்டே இருக்கவேண்டியாது இப்படியாகவே போய்க்கிட்டு இருக்கு அயலகத்து வாழ்க்கை! :((
என்னோட காதல் என்பது யாதெனில் தொடர்பதிவ படிச்சு பின்னூட்டம் போட்ட வேகத்தில இங்க வந்து எழுத ஆரமிச்சிட்டமாதிரி இருக்கு..
தல நினைவு(புனைவு) சும்மா டக்கரா இருக்கு:)
தலைப்பில் தொக்கி நிற்கும் அர்த்தம் தான் என்னன்னு புரியல!
தல அடிக்கடி புனைவுகள் தலை தூக்குதே என்ன காரணம்?????
படிப்பதற்கு நல்ல இருக்கு. தொடரவும்
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்
அன்பின் தமிழ் பிரியன்,
மலரும் நினைவுகள் பதின்மூன்று ஆண்டுகள் கழித்து - இன்னும் நினைத்து நினைத்து ............. மகிழ, .........
ம்ம் நல்வாழ்த்துகள்
ஆயில்யனின் மறு மொழியைப் படிக்கவும்
பிளஸ் ஒன் படிக்கும் போது, மீசை முளைக்காத வயதில், ஏற்பட்ட காதலா - ம்ம்ம்ம்ம்ம்
அடுத்த எபிசொட் இன்னும் வரலை
A video about S/w Engineers Life
Enjoy
TamilNenjam
நெஞ்சில் புதையவேண்டிய நினைவுகளா...? நல்ல ஆரம்பம்!
உன்னை அவள் பார்த்தபோது
மண்ணை நீ பார்த்தாயே
அவளை நீ பார்த்தபோது
மண்ணை அவள் பார்த்தாளே!!
காவியக்காதல் நல்லபடி முடியட்டும்.
கலக்குறிங்க தல...:))
இதுதான் அந்த திருப்பு முனையில் சொன்ன "ஒரு காதல் தோல்வியோ"...?
///“ஏய் கேலி பண்ணாத சாப்பிடனும்னா சாப்பிடு இல்லைன்னா போ நான் கீழ கொட்டிக்கிறேன்”
சட்டென்று எனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள். நான் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.///
என்னதான் கெத்து,அது இதுன்னாலும் அந்த பார்வைகளை தாங்க முடியறதில்லை! அப்படித்தானே தல..
\\\\
“சரி விடு உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தங்கமே வாங்கித் தராத”
“நான் தங்கமெ வாங்கித் தர மாட்டேன் பாரு”
அவளது கண்கள் என் கண்களைப் பார்க்க சட்டென்று எனது கண்கள் தரையை நோக்கி பணிந்தன.///
ஜாடையா சொல்லிட்டிங்க அப்படித்தானே...:)
அழகழகான நினைவுகள்...
புனைவு மாதிரி அப்படின்னு சொல்லாம உண்மைன்னு சொல்லியிருக்கலாம்..;)
///VIKNESHWARAN said...
ஐயோ ஒரு லவ்வு.... தாங்கல... ஆனா உங்க தலைப்பில் ஏதோ ஒரு மறைமுக சூட்சமம் இருப்பதை காண்கிறேன்...///
ஐய்! விக்கிக்கு பொறாமை போல இருக்கு... எங்க நீங்களும் எழுதுங்க பார்க்கலாம்... மாட்டி விட்டாச்சு... :))
///VIKNESHWARAN said...
யோவ் பெருசு... இப்படி தான் உசுப்பேத்தி இத்தோட ரெண்டு கதைங்க பெப்டிங்ள நிக்குது... இதையாவது ஒழுங்க எழுதி முடிங்க...
வயசாயி போச்சுனா என்ன எழுதுறோம்னு கூடவா மறந்துடும்... ரெண்டு தொடரையும் மாத்தி மாத்தி போட்டு மண்ட காய வச்சிராதிங்க..///
மாமேவ்! ஒரு தொடர் தான் பாக்கி இருக்கு... விட்டா அளந்து விடுவீகளே... ;(
///கயல்விழி முத்துலெட்சுமி said...
ஓ இதான் புனைவா? சரி சரி :)///
அக்கா! நீங்களுமா....... அவ்வ்வ்வ்வ்
///மங்களூர் சிவா said...
கண்கள் எழுதும் கண்கள் எழுதும் ஒரு வண்ணகவிதை காதல் தானா!? :)) நல்லா இருக்கு. சீக்கிரம் தொடருங்கள்.///
காதல் வந்துச்சோ! அண்ணனுக்கு காதல் வந்துச்சோ.... ;))
///ஆயில்யன் said...
வெள்ளிகிழமை வந்தா போதுமே பயபுள்ளைங்க நிதானமா இருக்கறது கிடையாது! எதையாவது நினைச்சு நினைச்சு மனசை போட்டு கொழப்பிக்கவேண்டியாது! அப்புறம் அடுத்த ஒரு வாரமும் வேலையே செய்யாம,அதைப்பத்தியே நினைச்சுக்கிட்டே இருக்கவேண்டியாது இப்படியாகவே போய்க்கிட்டு இருக்கு அயலகத்து வாழ்க்கை! :((///
ஆயில்யன் இதெல்லாம் புனைவு மாதிரி... சரி உங்களுக்கும் ஒரு சவால்... நீங்க இது மாதிரி ஒரு பதிவு எழுதுங்க பார்ப்போம்.. இரண்டாவது ஆளு மாட்டிக்கிச்சு... ;)
///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
என்னோட காதல் என்பது யாதெனில் தொடர்பதிவ படிச்சு பின்னூட்டம் போட்ட வேகத்தில இங்க வந்து எழுத ஆரமிச்சிட்டமாதிரி இருக்கு..///
விட்டா, வைரமுத்து இரயில் கவிதையைப் படிச்சிட்டு எழுதியதுன்னு சொல்வீங்க போல இருக்கே...;)
///நிஜமா நல்லவன் said...
தல நினைவு(புனைவு) சும்மா டக்கரா இருக்கு:)///
நன்றி பாரதி!
///நிஜமா நல்லவன் said...
தலைப்பில் தொக்கி நிற்கும் அர்த்தம் தான் என்னன்னு புரியல!///
அண்ணெ! தலைப்பு நீங்க கொடுத்தது தான... ;)
///நிஜமா நல்லவன் said...
தல அடிக்கடி புனைவுகள் தலை தூக்குதே என்ன காரணம்?????///
ஹிஹிஹி எல்லாம் ரகசியம்... சொல்லப்படாது
///விஜய் said...
படிப்பதற்கு நல்ல இருக்கு. தொடரவும்///
நன்றிப்பா! முடியலை........ அவ்வ்வ்வ்வ்வ்
///cheena (சீனா) said...
அன்பின் தமிழ் பிரியன்,
மலரும் நினைவுகள் பதின்மூன்று ஆண்டுகள் கழித்து - இன்னும் நினைத்து நினைத்து ............. மகிழ, .........
ம்ம் நல்வாழ்த்துகள்///
நன்றி சீனா சார்... :)
///cheena (சீனா) said...
பிளஸ் ஒன் படிக்கும் போது, மீசை முளைக்காத வயதில், ஏற்பட்ட காதலா - ம்ம்ம்ம்ம்ம்///
காதல்ன்னு சொல்லவே இல்லையே... ;)
///மது... said...
அடுத்த எபிசொட் இன்னும் வரலை///
பாசமலரே! போட்டாச்சும்மா... :))
///நானானி said...
நெஞ்சில் புதையவேண்டிய நினைவுகளா...? நல்ல ஆரம்பம்!
உன்னை அவள் பார்த்தபோது
மண்ணை நீ பார்த்தாயே
அவளை நீ பார்த்தபோது
மண்ணை அவள் பார்த்தாளே!!
காவியக்காதல் நல்லபடி முடியட்டும்.///
நானானிம்மா! அது காதலே இல்லையே.... ஆனா வேற காதல் கிடைச்சுடுச்சு.. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன்... :))
///தமிழன்... said...
அழகழகான நினைவுகள்...///
நன்றி தமிழன்!
//தமிழன்... said...
புனைவு மாதிரி அப்படின்னு சொல்லாம உண்மைன்னு சொல்லியிருக்கலாம்..;)///
உண்மை இல்லையே? அதனால இருக்கலாம்... :)
அப்ப புதைய வேண்டிய நினைவுகள்தான்....ரொம்ப ஆஆஆழமா!!!!
Post a Comment