Friday, July 4, 2008

பெரீரீரீரீ.....ய திருப்புமுனை - வாழ்க்கை அனுபவம்

.

சர்வேசன் பதிவர்களின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனைகளை எழுத அழைப்பு விடுத்து இருந்தார். நம்முடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தை, அல்லது நபர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக இருக்கும் என்று அதற்கு காரணம் கூறினார். சில தினங்களாக ஆணி மிகமிக அதிகமாகிப் போனதால் உடனடியாக எழுத நினைத்ததை எழுத இயலவில்லை. இனி என்னுடைய வாழ்வில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய திருப்புமுனையை சொல்கிறேன்......



1996 ஆவது வருடம் +2 எனப்படும் மேல்நிலைத் தேர்வை எழுதி 70% க்கு கொஞ்சம் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். அதற்கு அடுத்த என்ன படிக்கலாம் என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருந்தேன். அப்ப தான் வீட்டில் பெரிசா வெடி குண்டு ஒன்றைப் போட்டார்கள்... படிச்சு கிழிச்சது வரை போதும், அடுத்து படிக்கவெல்லாம் 'வெள்ளையப்பன்' இல்லைன்னு... என்னடா இது ஏதேதோ கனவு கண்டோமே எல்லாமே புட்டுக்கிச்சா என்று கவலையுடம் இருக்க வேண்டி வந்தது. வீட்டையும் குறை சொல்ல முடியாது., அப்ப சூழ்நிலை அப்படி... சகோதரிக்கு அப்போது தான் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தோம். செலவுகள் அதிகமாகி வீட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது. ஆனாலும் எங்காவது இலவசமாக படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரிந்த இடங்களில் கேட்டுப் பார்த்தோம். ஏதாவது ITI, பாலி டெக்னிக்கிலாவது படிக்க முயற்சி செய்தாலும் எல்லாமே சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்து கொண்டிருந்தது. பாலிடெக்னிக்கில் கூட செமஸ்டர் பீஸ், ஹாஸ்டல் பீஸ், போக்குவரத்து செலவு என்று முழி பிதுங்கி விடும் என்று தெரிந்தது. எனவே படிப்பை துறக்க வேண்டி வந்தது. அதே போல் தம்பிக்கும் சில காரணங்களால் படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. (தம்பி, தற்போது 26 வயதில் 10 வது பரீட்சை எழுதுகிறான். பெருமையாக இருக்கிறது). 1996 ஜூலையில் 18 ஆயிரம் முதலீட்டில் எனக்கும், எனது தம்பிக்கும் சேர்த்து ஒரு பெட்டிக் கடை போல் அப்பாவால் வைத்து தரப்பட்டது. படிப்பைத் தொடர இயலாத சோகத்துடன் கடையை நடத்தத் தொடங்கினோம். ஓரளவு வீட்டுச் செலவை தாக்குபிடித்து கடை நடந்தது. இது 1997 ஜூலை வரை தொடர்ந்தது. இதற்குள் படிப்பின் வாசம் முழுவதுமாக நீங்கி இருந்தது.

அப்போது தான் அந்த திருப்புமுனை ஒரு இன்லேண்ட் லெட்டர் வடிவில் வந்தது. அதை எழுதி இருந்தது எங்களுடைய தூரத்து உறவினர் மதிப்பிற்குரிய பீர் முகம்மது அவர்கள். (எனது பாட்டிக்கு மாமா மகன்) தொலைவில் உள்ள ஒரு ஊரில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவரது பள்ளியில் நடக்கும் ஒரு கேம்பஸ் இண்டர்வியூ பற்றி எழுதி இருந்தார்.



அந்த கடிதத்தில் சுருக்கம் இதுதான். வளைகுடாவில் இருக்கும் தமிழர்களால், தமிழர்களைக் கொண்டு, ............களுக்காக நடத்தப்படும் ஒரு நிறுவனம் +2 வரைப் படித்தவர்களைத் தெரிவு செய்து இலவசமாக ஒரு வருடம் தொழிற்கல்வியை இந்தியாவில் கற்றுக் கொடுத்து, வளைகுடாவில் உள்ள தனது நிறுவனத்தில் வேலையும் தரும். இலவசமாக தொழிற்கல்வி கற்றுத் தந்து, இலவ்சமாக அழைத்துச் செல்வதால் குறைந்த ஊதியத்திற்கு ஏழு ஆண்டுகள் பணி செய்ய வேண்டுமென்பது முக்கிய நிபந்தனை. இதில் நம்மைக் கவர்ந்தது இலவசக் கல்வி என்பது மட்டுமே. கடிதத்தில் நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி ஏதும் இல்லை. தொலைபேசவும் வாய்ப்பு இல்லாததால் உடனே கிளம்பி சென்றோம். நாங்கள் சென்ற அன்று தான் நேர்முகத் தேர்வு. சுமார் 25 பேர்களைத் தேர்ந்தெடுக்க 250 மாணவர்கள் இருந்தனர். எப்படியோ தட்டுத் தடுமாறி அதில் தேறினேன். அடுத்த ஒரு வருடம் ஒரு சிறப்பான கல்வி நிலையத்தில் கல்வி மற்றும் செய்முறைப் பயிற்சிகள். அனைத்திலும் முதலாக தேறி சாதனை வேறு..

கடையை தம்பியும், அப்பாவும் பார்த்துக் கொண்டனர். 1998 ஆகஸ்ட்டில் ஓராண்டு கல்வி முடிய செப்டம்பரில் விமானம் ஏறி துபாயில் இறங்கியாகி விட்டது. அப்போது வயது 19 + தான். அடுத்த 5 1/2 ஆண்டுகள் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை. வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கணிணியும் கற்றுக் கொண்டாகி விட்டது. (எனது மொக்கை பதிவுகளுக்கு கணிணி கற்றுக் கொடுத்தவரை காரணமாக்காதீர்கள்... ;) ) இதற்குள் ஓட்டு வீடு கான்கிரீட் போட்ட வீடாகி இருந்தது. பின்னர் 4 மாத விடுமுறையில் இந்தியா. மீண்டும் 1 1/2 வருடம் என 7 ஒப்பந்த ஆண்டுகள் முடிந்தது. கான்கிரீட் போட்ட வீடு மாடி வீடானது. அதற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து திருமணம். பழைய ஊதியத்தை விட மூன்று மடங்கு ஊதியத்தில் புனித மெக்காவுக்கு அருகிலேயே புதிய வேலை......... வாழ்க்கை தொடர்கின்றது.
எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிந்து விட்டது............ நான் கருதும் திருப்புமுனை அந்த நல்லவரின் இன்லேன்ட் கடிதம்... மேலும் கணிணி கற்றுக் கொண்டது, வேலையில் வைத்திருந்த வெறி, ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), திருமணம் என்று சில சிறிய திருப்புமுனைகளையும் சொல்லலாம்.

44 comments:

ஆயில்யன் said...

உங்கள் வாழ்வில் திருப்பு முனை இன்லேண்ட் லெட்டரில் மட்டுமல்ல இன்னும் கூட நிறைய இருப்பது உண்மைதான்!

//வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கண்ணியும் கற்றுக் கொண்டாகி விட்டது.//

செய்த வேலையினை விட சிறப்பாக சொந்தமாய் வீடு கட்டி முடித்தது!

எனக்கு பிடித்த நல்ல திருப்பு முனை அந்த 7 வருட காண்ட்ராக்ட் முடித்ததுமே அந்த கம்பெனியிலிருந்து வெளியேறியதுதான்!

வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!

ஆயில்யன் said...

//ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //

யாரு...????

:)))))))))))))))))

கண்மணி/kanmani said...

நல்ல திருப்புமுனை.பீர் முகமது வடிவில் உங்க எதிர்காலம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது.மேலும் பல திருப்புமுனை கண்டு வாழ்வில் முன்னேற டீச்சரின் அன்பான ஆசிகள்

ஜோசப் பால்ராஜ் said...

திருப்பு முனை அந்த கடிதத்தில் இருந்த தகவல் என்றாலும்,
திருப்பப் பட்ட அந்த புள்ளியில் இருந்து உங்களை இந்த அளவுக்கு பயணிக்க வைத்தது, உங்கள் கடின உழைப்பு என்பது நன்கு தெரிகின்றது.
மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

திருப்புமுனை காட்டிய வழியில் பயணித்திருந்தாலும் தாங்கள் இத்தனை தூரத்தைக் கடந்து வந்தது உங்கள் அயராத உழைப்பினாலும்தான் என்பது போற்றத் தக்கது தமிழ் பிரியன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருப்புமுனை மிக நெகிழவைக்கும் பதிவா வந்திருக்கு.. வாழ்வில் இன்னும் பல வெற்றிப்படிகளை சந்திக்க வாழ்த்துகிறேன்..

கடைசியில் காமெடி செய்திருக்கீங்களே.. ஆயில்யன் கேட்டதே தான்.. யாரு தப்பிச்சா ..?

Sathiya said...

உங்களை மாறி இப்படி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு படித்து முன்னேறியவர்களை பார்க்க பெருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நல்ல திருப்புமுனைதான் அண்ணே, இன்னும் பல நல்ல திருப்பு முனைகளை கண்டு வளமாக வாழ வாழத்துக்கள்...:))

தமிழன்-கறுப்பி... said...

7 வருசம் கஷ்டப்பட்டது -இது பெரிய விசயமண்ணே!

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே உங்க நம்பிக்ககையும் பொறுமையும் தான் அண்ணே எல்லாத்துக்கும் பெரிய சக்தி, தொடர்ந்து வெற்றிகளை குவியுங்க...!

தமிழன்-கறுப்பி... said...

@ ஆயில்யன்...

///
உங்கள் வாழ்வில் திருப்பு முனை இன்லேண்ட் லெட்டரில் மட்டுமல்ல இன்னும் கூட நிறைய இருப்பது உண்மைதான்!

//வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கண்ணியும் கற்றுக் கொண்டாகி விட்டது.//

செய்த வேலையினை விட சிறப்பாக சொந்தமாய் வீடு கட்டி முடித்தது!

எனக்கு பிடித்த நல்ல திருப்பு முனை அந்த 7 வருட காண்ட்ராக்ட் முடித்ததுமே அந்த கம்பெனியிலிருந்து வெளியேறியதுதான்!

வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!///

எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு...

ரிப்பீட்டு...:))

தமிழன்-கறுப்பி... said...

@ ஆயில்யன்..

//ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //

யாரு...????
:)))))))))))))))))///

முதல்ல இதுக்கொரு ரிப்பீட்டு :))

தமிழன்-கறுப்பி... said...

//ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //

அப்புறமா...
அண்ணே ஆக ஒரே ஒரு தோல்விதானாண்ணே...?;)
அனுபவத்தை பகிர்ந்துக்கறது;எனக்கு காதல்கதைகள்னா ரொம்ப பிடிக்கும்ணே...;)

Anonymous said...

எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிந்து விட்டது............

இன்னும் முடியவில்லை தொடரும்...
பட்ட கஷ்டங்களுக்கும், அனுபவங்களுக்கும் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.
சந்தோசங்களை மட்டும் காண என் வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

///(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //

நல்லவேளை தப்பீச்சீங்க:)

Thamiz Priyan said...

/// ஆயில்யன் said...

உங்கள் வாழ்வில் திருப்பு முனை இன்லேண்ட் லெட்டரில் மட்டுமல்ல இன்னும் கூட நிறைய இருப்பது உண்மைதான்!

//வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கண்ணியும் கற்றுக் கொண்டாகி விட்டது.//

செய்த வேலையினை விட சிறப்பாக சொந்தமாய் வீடு கட்டி முடித்தது!

எனக்கு பிடித்த நல்ல திருப்பு முனை அந்த 7 வருட காண்ட்ராக்ட் முடித்ததுமே அந்த கம்பெனியிலிருந்து வெளியேறியதுதான்!

வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!///

நன்றி ஆயில்யன்! ஆனா இன்னும் சொந்த வீட்டுக் கனவு மட்டும் இருக்கு! ஏனெனில் முதலில் கட்டியது பூர்வீக வீடு. அதில் அனைவருக்கும் பாத்தியதை இருக்கிறது. எனக்காக இனி தான் சொந்தமாக வீடு கட்ட வேண்டும்.... கனவு வீடு விரைவில் தயாராகின்றது :)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //

யாரு...????

:)))))))))))))))))///
ஆள் யாருன்னு கேக்குறீங்களா? தப்பிச்சது யாருன்னு கேக்குறீங்களா?... ;))))

Thamiz Priyan said...

///கண்மணி said...

நல்ல திருப்புமுனை.பீர் முகமது வடிவில் உங்க எதிர்காலம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது.மேலும் பல திருப்புமுனை கண்டு வாழ்வில் முன்னேற டீச்சரின் அன்பான ஆசிகள்///
தங்களுடைய ஆசிகளுக்கு மிக்க நன்றி டீச்சர்.... :)

Thamiz Priyan said...

/// Joseph Paulraj said...

திருப்பு முனை அந்த கடிதத்தில் இருந்த தகவல் என்றாலும்,
திருப்பப் பட்ட அந்த புள்ளியில் இருந்து உங்களை இந்த அளவுக்கு பயணிக்க வைத்தது, உங்கள் கடின உழைப்பு என்பது நன்கு தெரிகின்றது.
மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்///
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜோசப்!

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

திருப்புமுனை காட்டிய வழியில் பயணித்திருந்தாலும் தாங்கள் இத்தனை தூரத்தைக் கடந்து வந்தது உங்கள் அயராத உழைப்பினாலும்தான் என்பது போற்றத் தக்கது தமிழ் பிரியன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!///
வாழ்த்துக்கு மிக்க நன்றி ராமலெட்சுமி அக்கா!

Thamiz Priyan said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

திருப்புமுனை மிக நெகிழவைக்கும் பதிவா வந்திருக்கு.. வாழ்வில் இன்னும் பல வெற்றிப்படிகளை சந்திக்க வாழ்த்துகிறேன்..///
மிக்க நன்றிக்கா!

Thamiz Priyan said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...

கடைசியில் காமெடி செய்திருக்கீங்களே.. ஆயில்யன் கேட்டதே தான்.. யாரு தப்பிச்சா ..?///
அக்கா நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தப்பிச்சது இரண்டு பேரும் தான்... ;) இதைத் தானே கேட்டீங்க... :))

Thamira said...

வாழ்த்துக்கள் தமிழ்.!

இம்சை said...

வாழ்த்துக்கள் நண்பா, மிகவும் பெருமையாக இருக்கிறது...

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

கடின உழைப்பு, அசாத்தியப் பொறுமை, வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற வெறி, (Killer Instinct), சரியான இலக்கு இஅவை அனைத்துமே வெற்றிக்குக் காரணங்கள். இருப்பினும் அம்மடல் - நேர்முகத் தேரிவிற்கான மடல் உண்மையிலேயே ஒரு திருப்பு முனை தான்

நல்வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

தங்கள் கனவு இல்லம் - நனவு இல்லமாய் விரையில் நிகழும்!

உழைப்பும், உண்மையும் இருக்குமிடம் - தெய்வத்தின் இருப்பிடம்!


வாழ்க! வளர்க!

Thamiz Priyan said...

/// Sathiya said...

உங்களை மாறி இப்படி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு படித்து முன்னேறியவர்களை பார்க்க பெருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!///
நன்றி சத்தியா!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

அண்ணே நல்ல திருப்புமுனைதான் அண்ணே, இன்னும் பல நல்ல திருப்பு முனைகளை கண்டு வளமாக வாழ வாழத்துக்கள்...:))///
நன்றி தமிழன்!

Thamiz Priyan said...

/// தமிழன்... said...
@ ஆயில்யன்..
//ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //
யாரு...????
:)))))))))))))))))///
முதல்ல இதுக்கொரு ரிப்பீட்டு :))///
அண்ணே நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

///(நல்ல வேளை தப்பிச்சாச்சு), //

நல்லவேளை தப்பீச்சீங்க:)///
நிஜமாவேதாண்ணே!... ;)

Thamiz Priyan said...

///மது... said...எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிந்து விட்டது............இன்னும் முடியவில்லை தொடரும்...பட்ட கஷ்டங்களுக்கும், அனுபவங்களுக்கும் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.
சந்தோசங்களை மட்டும் காண என் வாழ்த்துக்கள்.///
யக்கோவ்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

Thamiz Priyan said...

//Thamira said...

வாழ்த்துக்கள் தமிழ்.!///
நன்றி தாமிரா!

Thamiz Priyan said...

//இம்சை said...

வாழ்த்துக்கள் நண்பா, மிகவும் பெருமையாக இருக்கிறது...///
இம்சை அண்ணே! நன்றி!

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

கடின உழைப்பு, அசாத்தியப் பொறுமை, வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற வெறி, (Killer Instinct), சரியான இலக்கு இஅவை அனைத்துமே வெற்றிக்குக் காரணங்கள். இருப்பினும் அம்மடல் - நேர்முகத் தேரிவிற்கான மடல் உண்மையிலேயே ஒரு திருப்பு முனை தான். நல்வாழ்த்துகள்///
ஐயா! பெரியவர்களின் வாழ்த்துக்கு நன்றி!

Thamiz Priyan said...

///நாமக்கல் சிபி said...

தங்கள் கனவு இல்லம் - நனவு இல்லமாய் விரையில் நிகழும்!

உழைப்பும், உண்மையும் இருக்குமிடம் - தெய்வத்தின் இருப்பிடம்!


வாழ்க! வளர்க!///
நன்றி தள!

Unknown said...

Super anna..!! :-)
Nijamma kannula thanni vandhudhichi...!! :'-(

Thamiz Priyan said...

///Sri said...

Super anna..!! :-)
Nijamma kannula thanni vandhudhichi...!! :'-( ///
ஸ்ரீ, இதுக்கெல்லாம் ஃபீலிங் ஆப் இந்தியா ஆகலாமா? டேன் இட் ஈஸிமா... :)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்லாயிருக்குங்க பதிவு.

காதல் தோல்விதான் உங்க வெற்றியா அமைஞ்சிடுச்சு பாத்தீங்களா,, :-))

Thamiz Priyan said...

///மதுவதனன் மௌ. said...

நல்லாயிருக்குங்க பதிவு.

காதல் தோல்விதான் உங்க வெற்றியா அமைஞ்சிடுச்சு பாத்தீங்களா,, :-))///
நன்றி மதுவதனன்! அப்படி சொல்ல இயலாது அது ஒரு கட்டம் தான்.... :)

கோவி.கண்ணன் said...

தமிழ் பிரியன்,

இப்போதுதான் இந்த இடுகையைப் படித்தேன். உண்மையிலேயே பெரிய திருப்புமுனைதான். உங்களது படிப்பு ஆர்வமும் முன்னேறவேண்டும் என்று இருந்த முனைப்பும், அதற்கு தடங்கலாக பொருளாதாரம் இருந்ததையெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அந்த கடிதம் பெரிய திருப்பு முனைதான். வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். உங்களது இந்த முயற்சி தன்னால் முடியாது என்று நினைப்பவர்களுக்கு, முயற்சி எடுக்க நல்ல ஊக்கம் கொடுக்கும்.

இந்த சுட்டியைக் கொடுத்து படிக்கச் சொன்ன வடகரை வேலன் அண்ணாச்சிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

na.jothi said...

இதை தான் திரு அப்துல் கலாம் சொன்னாரோ
கனவு காணுங்கள் உங்கள் வாழ்க்கை முன்னேற என்று
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் உங்கள் கனவு மெய்யானதற்கும்
மென்மேலும் வளரவும்

குசும்பன் said...

ஹேட்ஸ் ஆப் தமிழ்பிரியன்!

இதிலிருந்து நான் தெரிஞ்சுக்கிட்டது உங்க வாழ்கையின் திருப்புமுனை ஏற்பட காரணம் ஒரு பீர்!

சரியா:))))))))

Vijayashankar said...

வடகரைவேலன் பதிவு மூலம் இங்கு வந்தேன்.

ரொம்ப நல்லாயிருக்குங்க திருப்பு முனைகள்.

சுற்றமும் நட்பும் நல்ல அமைந்தாலே எல்லாம் சுகம் தான்.

பணம் இருந்தாலும் மாற்று தொழில் இல்லாமல் இருக்கும் என்னை போன்றோர் நிலை கொஞ்சம் வித்தியாசம்.

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
http://www.vijayashankar.in

PPattian said...

வணக்கம். வடகரை வேலனின் பதிவிலிருந்து உங்கள் பதிவுக்கு வந்தேன். வாழ்த்துகள்.

உங்கள் உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக, உங்கள் படிப்புக்காக தன்னை கடையில் ஈடுபடுத்திக் கொண்ட உங்கள் தம்பிக்கும் பாராட்டுகள். தம்பிவுடையான்..