Wednesday, July 9, 2008
நிற்க உதவிய ஊன்றுகோல்கள் (அ) நிமிர உதவிய நெம்புகோல்கள் - 50 வது பதிவு
இது எனது பதிவின் 50 வது இடுகை. ஒரு வருடமாக தமிழ்மணத்தோடு இருந்தாலும் இப்போது தான் 50 வது இடுகையே எட்ட முடிந்துள்ளது. பதிவை பின்னோக்கி பார்க்கும் அதே நேரத்தில், வாழ்வில் வந்த பாதையை பின்னோக்கி பார்க்கும் போது நம் பின்னே பலரும் இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. அதிலும் சிலர் மிக உயரமாக தெரிகின்றனர். மனதில் மிக்க மதிப்புடன் பதிந்து போன வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு என்னை எடுத்துச் செல்ல உதவிய சிலரை ஞாபகப் படுத்திக் கொள்ளவே இந்த பதிவு.
என்னை பெற்று, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோர்களுக்குப் பிறகு நான் முக்கியமாக நினைக்கும் நபர்கள் பலர் இருந்தாலும் முக்கியமாக மூவரை அறிமுகம் செய்கின்றேன்.
1. அமரர் ஆசிரியர் தனுஷ்கோடி.....
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியராக இருந்தவர். மிகச் சிறப்பான பாடம் நடத்தக் கூடியவர். அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் இருக்கும். ஆங்கிலத்தை வாசிக்கத் தெரியாமலேயே ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும் வந்து விட்டோம் அல்லது விடுவோம். தனுஷ்கோடி ஐயா தான் ஆங்கிலத்தை தனது மாணவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று முழு கவனத்துடன் பாடம் நடத்துவார். பாடங்களை புரிந்து படிப்பது, என்ன எழுதப் போகிறோம் என்று எப்படி யோசித்து வைப்பது, எழுத்தை அழகாக்க என்ன செய்வது, படிப்புக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு என பள்ளிப் பாடத்திற்கு வெளியே உள்ள கட்டுடைக்கும் வேலைகளை சொல்லித் தருவார். பொதுவாக ஆசிரியர்கள் தனது கடன் பாடத்தை வாசித்து, போர்டில் எழுதிப் போடுவது என்று இருக்கும் பொதுபுத்தியை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையாளர். மாணவர்களுக்கு போட்டி வைத்து தனது சொந்த பணத்தில் பரிசுகளை வாங்கிக் கொடுத்து ஊக்குவிப்பார். நிச்சயமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய சிறந்த ஆசிரியர்.
ஆனால் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு தீய பழக்கம் இருந்ததால் பணி மூப்பிற்கு முன்னே மரணம் எய்தியதைக் கேட்டதும் கண்கள் கலங்கின. சிறந்த மனிதர்ர்களுக்கு சாபக்கேடு தான் மது எண்ணும் அரக்கன்.
2. ஆனந்தி அக்கா (ஹிந்தி ஆசிரியை)
பொதுவாக தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்கள் மிகக் குறைவு. 60 களில் ஏற்ப்பட்ட இந்தி எதிர்ப்பால் அதற்குப் பிறகு இந்தி படிப்பவர்கள் எதிரிகளாக பார்க்கப்பட்டனர். இப்போது நிலைமை மாறி வருகின்றது. தேவை எனக் கருதுபவர்கள், விருப்பமுள்ளவர்கள் படிப்பது நல்லது. அப்படி படித்தவர்களில் நானும் ஒருவன். நான் படித்த இந்தி எனக்கு நல்ல முறையிலேயே உதவியுள்ளது. உருது மற்றும் இந்தி தெரிந்தவர்களுடன் நன்றாகவே சண்டை போட முடிகின்றது. (கவனிக்க : எனது குடும்பத்தில் உருது, இந்தி யாருக்கும் தெரியாது). இன்னும் சிலர் 'நீ மதராசியா? நம்பவே முடியலை' என்று சொல்வதும் கூட நடக்கின்றது. சுயபுராணம் அதிகமாயிடுச்சோ... நிப்பாட்டிடுறேன்....
ஆனந்தி அக்கா எனக்கு இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியை. ஆசிரியை என்ற உடன் எங்க கண்ணாடி போடாத கண்மணி டீச்சர் மாதிரியோ, இல்லை கண்ணாடி போட்ட கயலக்கா மாதிரியோ யோசிக்காதீங்க... நான் 7 ம் வகுப்பு படிக்கும் நேரம், இந்தி வகுப்பு செல்ல ஆரம்பித்த போது அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இந்தியும் படித்துக் கொண்டிருந்தார்கள்... அதோடு பகுதியாக இந்தியும் கற்பித்துக் கொண்டு இருந்தார்கள். நான் இந்தியில் பிரார்தமிக்(1) படிக்கும் போது அவர்கள் பிரவேசிகா(4) படித்தார்கள். அப்படியே மற்றவர்களுக்கு ஆசிரியையாகவும் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். ஒரு சிறந்த ஆசிரியைக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் அவரிடம் மட்டுமே கண்டேன். பாடம் சொல்லிக் கொடுக்கும் முறை, மாணவர்களுக்கு புரிய வைக்கும் விதம், புரியதாவர்களுக்கு தனிக்கவனம் எடுப்பது, பணம் செலுத்த தாமதிப்பவர்களுக்கு உதவுவதும், படிப்பில் கண்டிப்பு என சிறப்பாக செயல்படுவார். இந்தி கற்றுக் கொள்பவர்களில் 90 சதவீதம் மெட்ரிக்குலேசன் முறையில் பயில்பவர்களே இருப்பர். என்னைப் போன்ற தமிழில் படிப்பவர்கள் அந்த ஜோதியில் இணைந்து மாட்டிக் கொள்வோம். 90 சதம் பேருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் திறமை(?)யால் 10 சதத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்று தனிக்கவனம் எடுத்துக் கொள்வார். மற்றவர்கள் ஆங்கில முறையில் 'மிஸ்' என்று கூப்பிடும் போது நான் 'அக்கா' என்றே அழைப்பேன். :)
திராவிட கொள்கையில் உள்ளவர்களுக்கு பொதுவாக பார்ப்பனீய எதிர்ப்பு இயல்பாக இருக்கும். அந்த எதிர்ப்பு எல்லோரிடமும் நாம் காட்டக் கூடாது என்றும், இயல்பாகவே சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்றும் நான் இன்று நம்புவதற்கு காரணமாக இருந்தவர்.
தற்போது ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகின்றார். தற்போதும் அதே கவனத்துடன், பாடம் நடத்தி வருகிறார் என்றால், அவரது மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவார்கள் எனபதில் இம்மியும் சந்தேகம் இல்லை.
3. செல்வகுமார் அண்ணன்
துபாயில் பணி செய்த போது எனது மேற்பார்வையாளர். நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். முதன்முதலில் 0 மீட்டரில் வேலைக்கு சேர்ந்த போதும் சரி 7 வருடம் கடந்து வேலை கற்றுக் கொண்ட போதும் ஒரே மாதிரி இருந்தவர். அண்ணன் கொஞ்சம் தடாலடியானர். ஆனால் கட்டிடமே இடிந்து விழுந்தாலும் பதறாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர். வேலையே தெரியாவிட்டாலும் பரவாயில்லை... வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் என்று திடமாக நம்பியவர்.
ஓவர் டைம், வேலை சம்பந்தமாக அவ்வப்போது பூசல்களை ஏற்ப்படுத்திக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பராக இருப்பார். இன்று எனது தொழில்நுட்ப வேலையில் பொறியாளர்களுடன் சவால் விடும் அளவுக்கு வேலையை கற்க ஊன்றுகோலாக இருந்தவர். எந்த தவறு செய்தாலும் அவர் திட்டும் அதிகபட்ச வார்த்தையே.... “ என்ன்ன்ன்ன்ன்னங்க நீங்க.......” என்பது தான் :) தற்போது ஊரில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
டிஸ்கி : என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... (இருக்கா என்பதே சந்தேகம் தான் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்) யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ் :(
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன். ஆமாம், கொஞ்சம் சென்டிமென்டலா இருக்கு. பரவாயில்ள்ள அடுத்த பதிவில் நகைச்சுவை கலந்து அடிங்க. நிறைய பதிவர்கள் நல்ல நகைச்சுவையுடன் எழுதுகிறார்கள். All the best.
அனுஜன்யா
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
நல்ல பதிவு..
இன்னும் நீங்கள் மென்மேலும் வளர இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
(வளர்றதுன்னா உயரத்துல இல்ல.உடனே ஓடிப் போய் 'ரிஷான் தம்பி இப்படி சொல்லிட்டார். உடனே கல்யாணம் பண்ணிவைங்க' ன்னு வீட்ல சொல்லப் படாது ..ஆமா )
உங்க நிஜப்பெயரே தமிழ் பிரியன் தானா?
அழகா இருக்கு :)
//என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... (இருக்கா என்பதே சந்தேகம் தான் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்) யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ் :(//
Idhuve bayangara comedy-ah irukku anna..!! :-)
வாழ்த்துக்கள் தல!
///இது எனது பதிவின் 50 வது இடுகை. ஒரு வருடமாக தமிழ்மணத்தோடு இருந்தாலும் இப்போது தான் 50 வது இடுகையே எட்ட முடிந்துள்ளது.//
எண்ணிக்கை கணக்கு கிடக்கட்டும் தல. அதுவா முக்கியம். நீங்க எழுதிய வரையில் எல்லாம் நல்லா இருக்கு தல.
//வாழ்வில் வந்த பாதையை பின்னோக்கி பார்க்கும் போது நம் பின்னே பலரும் இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.///
உண்மை!உண்மை!
///என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... ////
அது என்ன தல மண்டை மூளை? வேற எங்கெங்க எல்லாம் உங்களுக்கு மூளை இருக்கு?
/// Sri said...
//என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... (இருக்கா என்பதே சந்தேகம் தான் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்) யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ் :(//
Idhuve bayangara comedy-ah irukku anna..!! :-)////
ரிப்பீட்டேய்....!
வாழ்த்துக்கள் தல
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்... 50வது கோல் அடிச்சிடிங்க... அடுத்த வருசம் இந்த நாளில் 500வது கோச் அடிக்க வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்
நின்று உதவிய நெம்புகோல்களுக்கும், நிமிர உதவிய நெம்புகோல்களுக்கும், அதே நேரத்தில் அதை சரியாக உள்வாங்கிகொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் :))
//யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... //
என்ன்ன்ன்ன்ன்னங்க நீங்க.......”
செண்டிமெண்ட்தானே வாழ்க்கை :)
முதல்ல 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
அடிக்கடி மனசைத்தொடறா மாதிரி பதிவு போட்டு கலக்குறிங்க...
மனித வாழக்கையில் நேரடியாகவோ மறை முகமாகவோ பலர் பின்புலமாக இருக்கிறார்கள், ஒரு சிலர் ஆத்மார்த்தமாக பக்க பலமாக இருக்கிறார்கள்..
அவர்களை நினைவில் வைத்து எம்மோடு பகிர்ந்து கொண்டமை பாராட்டுக்குரியது....
//வாழ்வில் வந்த பாதையை பின்னோக்கி பார்க்கும் போது நம் பின்னே பலரும் இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.///
கண்டிப்பா...
//என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... (இருக்கா என்பதே சந்தேகம் தான் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்) யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ் :(//
சென்டிமென்ட் பதிவும் போடுங்க...
ஆனா காமெடி வரலைன்னா இருக்வே இருக்காரு 'நிஜமா??? நல்லவன்...' சொன்னிங்கன்னா சூப்பரா கத்துக்குடுப்பாரு...
அப்படி இல்லைன்னா நவீன பின் நவீனத்துவ எழுத்தாளர் அண்ணன் திரு மாப்பி சென்ஷி அவர்களிடம் கேட்டிங்கன்னா சும்மா கலக்குவாரு..;)
//நிற்க உதவிய ஊன்றுகோல்கள்..நிமிர உதவிய நெம்புகோல்கள்// என்ன அழகான
தலைப்பு! தமிழ்பிரியன்!
ரூம் போட்டு யோசிப்பியளோ?
இன்னும் நல்லா நிமிர வாழ்த்துக்கள்!!
நீங்க வேலை செய்யுமிடத்திலேயே
நிறைய காமெடிகள் நடக்குமே? அவற்றை அப்படியே பதிவிட்டாலே
போதுமே! அடுத்த பதிவு காமெடிப்
பதிவுதான். சேரியா?
காமெடியாக பதிவு போடாவிட்டாலும் நிறைய பதிவுகளில் பின்னூட்டம் காமெடியாக கலக்குகிறீர்களே அதையெல்லாம் சேர்த்து ஒரு பதிவாகப் போடலாம்.
///அனுஜன்யா said...
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன். ஆமாம், கொஞ்சம் சென்டிமென்டலா இருக்கு. பரவாயில்ள்ள அடுத்த பதிவில் நகைச்சுவை கலந்து அடிங்க. நிறைய பதிவர்கள் நல்ல நகைச்சுவையுடன் எழுதுகிறார்கள். All the best.
அனுஜன்யா///
நன்றி அனுஜன்யா! எல்லாரும் எழுதுறாங்க நம்மால முடியலையேன்னு தான் வருத்தம்.
///ஜெகதீசன் said...
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.///
நன்றி ஜெகதீசன்!
/// கயல்விழி முத்துலெட்சுமி said...
50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
நல்ல பதிவு..///
நன்றிக்கா!
///எம்.ரிஷான் ஷெரீப் said...
இன்னும் நீங்கள் மென்மேலும் வளர இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
(வளர்றதுன்னா உயரத்துல இல்ல.உடனே ஓடிப் போய் 'ரிஷான் தம்பி இப்படி சொல்லிட்டார். உடனே கல்யாணம் பண்ணிவைங்க' ன்னு வீட்ல சொல்லப் படாது ..ஆமா )
உங்க நிஜப்பெயரே தமிழ் பிரியன் தானா?
அழகா இருக்கு :) ///
அண்ணே! ஒரு கல்யாணம் முடித்ததுக்கே முழி பிதுங்கி போச்சு... இதுல இன்னொன்றா?... ;)
நிஜப்பெயர் இறுதித் தூதரின் பெயரில் ஆரம்பிக்கின்றது.
///Sri said...
//என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... (இருக்கா என்பதே சந்தேகம் தான் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்) யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ் :(//
Idhuve bayangara comedy-ah irukku anna..!! :-)///
என் நிலைமை உங்களுக்கு காமெடியா இருக்கா? இதெல்லாம் ஓவருக்கா.... அவ்வ்வ்வ்வ்வ்வ் ;)
/// நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள் தல!///
நன்றிண்ணே!
/// ஜி said...
வாழ்த்துக்கள் தல///
நன்றி ஜி!
///VIKNESHWARAN said...
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்... 50வது கோல் அடிச்சிடிங்க... அடுத்த வருசம் இந்த நாளில் 500வது கோச் அடிக்க வாழ்த்துக்கள் :)///
அம்புட்டு பேராசையெல்லாம் கிடையாதுங்ண்ணா!
///ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்
நின்று உதவிய நெம்புகோல்களுக்கும், நிமிர உதவிய நெம்புகோல்களுக்கும், அதே நேரத்தில் அதை சரியாக உள்வாங்கிகொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் :))///
நன்றி ஆயில்யன்!
///ஆயில்யன் said...
//யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... //
என்ன்ன்ன்ன்ன்னங்க நீங்க.......”
செண்டிமெண்ட்தானே வாழ்க்கை :)///
என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ங்க நீங்க... ;)
//தமிழன்... said...
முதல்ல 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...///
நன்றி தமிழன்.... :)
///நானானி said...
//நிற்க உதவிய ஊன்றுகோல்கள்..நிமிர உதவிய நெம்புகோல்கள்// என்ன அழகான
தலைப்பு! தமிழ்பிரியன்!
ரூம் போட்டு யோசிப்பியளோ?
இன்னும் நல்லா நிமிர வாழ்த்துக்கள்!!///
என்னங்கம்மா சொல்லுதீய... தானாவே வருதுல... :))
///நானானி said...
நீங்க வேலை செய்யுமிடத்திலேயே
நிறைய காமெடிகள் நடக்குமே? அவற்றை அப்படியே பதிவிட்டாலே
போதுமே! அடுத்த பதிவு காமெடிப்
பதிவுதான். சேரியா?///
நானானிம்மா! அடுத்த பதிவை காமெடிப் பதிவாவே போட்டாச்சு... :)
/// புகழன் said...
காமெடியாக பதிவு போடாவிட்டாலும் நிறைய பதிவுகளில் பின்னூட்டம் காமெடியாக கலக்குகிறீர்களே அதையெல்லாம் சேர்த்து ஒரு பதிவாகப் போடலாம்.///
எம்புட்டு பேரு இப்படி கிளம்பி இருக்கீங்கய்யா... அவ்வ்வ்வ்வ் :(
50 க்கு வாழ்த்துக்கள்!
கடந்து வந்த பாதையா, அப்படின்னா என்னன்னு கேக்குற இந்தக் காலத்துல, சில முக்கியமானவர்களை ஞாபகம் வச்சு சொல்லியிருக்கீங்களே, நல்ல விஷயம்தான் :)
அரைச் சதத்துக்கு முதலில் இந்த வாழ்த்தைப் பிடியுங்க.
கடந்து வந்த பாதையை மறக்காம இருக்கணுங்க. எத்தனை ஏணிகள் நமக்கு உதவி இருக்கு பாருங்க.
எல்லாமே காலத்தினால் செய்த உதவி அல்லவா?
நன்றி காட்டாத மனசு இருந்தா நல்லாவா இருக்கும்???
இது எனது பதிவின் 50 வது இடுகை.//
முதல்ல என் வாழ்த்தைப் பிடிங்க.
//ஆங்கிலத்தை வாசிக்கத் தெரியாமலேயே ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும் வந்து விட்டோம் அல்லது விடுவோம். //
ஹை பரவாயில்லையே! நான் எம்.பி.ஏ வரைக்கும் வந்துட்டேன்
50க்கு வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது என்பது ஒரு இனிய அனுபவம்.வேண்டாத நினைவுகளை நீக்கிவிட்டு பார்த்தால் கடந்தகால அனுபவங்கள்,நட்புக்கள்,நினைவுகள் உதட்டோரம் புன்முறுவலை வரவழைப்பவையே:)
உதவிய உள்ளங்களை மறக்காமல் நினைவு கூர்ந்தமையும் அதனை ரசனை குறையாமல் அழகாக எழுத்தாக்கியிருப்பதும் அருமை..தொடருங்க:)
//தஞ்சாவூரான் said...
50 க்கு வாழ்த்துக்கள்!
கடந்து வந்த பாதையா, அப்படின்னா என்னன்னு கேக்குற இந்தக் காலத்துல, சில முக்கியமானவர்களை ஞாபகம் வச்சு சொல்லியிருக்கீங்களே, நல்ல விஷயம்தான் :) ////
நன்றி தஞ்சையாரே! இந்தியாவில் நல்ல முறையில் செட்டில் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... :)
///துளசி கோபால் said...
அரைச் சதத்துக்கு முதலில் இந்த வாழ்த்தைப் பிடியுங்க. கடந்து வந்த பாதையை மறக்காம இருக்கணுங்க. எத்தனை ஏணிகள் நமக்கு உதவி இருக்கு பாருங்க.
எல்லாமே காலத்தினால் செய்த உதவி அல்லவா?
நன்றி காட்டாத மனசு இருந்தா நல்லாவா இருக்கும்??? ///
டீச்சர், வாழ்த்துக்களுக்கு நன்றி!
///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
இது எனது பதிவின் 50 வது இடுகை.//
முதல்ல என் வாழ்த்தைப் பிடிங்க.
//ஆங்கிலத்தை வாசிக்கத் தெரியாமலேயே ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும் வந்து விட்டோம் அல்லது விடுவோம். //
ஹை பரவாயில்லையே! நான் எம்.பி.ஏ வரைக்கும் வந்துட்டேன்///
நன்றிண்ணே! நீங்க இம்புட்டு நல்லவரா...... அவ்வ்வ்வ்வ்வ் ;)
///ரசிகன் said...
50க்கு வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது என்பது ஒரு இனிய அனுபவம்.வேண்டாத நினைவுகளை நீக்கிவிட்டு பார்த்தால் கடந்தகால அனுபவங்கள்,நட்புக்கள்,நினைவுகள் உதட்டோரம் புன்முறுவலை வரவழைப்பவையே:)
உதவிய உள்ளங்களை மறக்காமல் நினைவு கூர்ந்தமையும் அதனை ரசனை குறையாமல் அழகாக எழுத்தாக்கியிருப்பதும் அருமை..தொடருங்க:)///
வாங்க ஸ்ரீதர்... வாழ்த்துகளுக்கு நன்றி!
Post a Comment