.
இன்னும் சில தினங்களில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக சீனாவில் தொடங்க உள்ளன. அதில் பங்கு கொள்ளும் நாடுகள் அனைத்தும் பதக்க வேட்டைக்கு தயாராகி வருகின்றனர். நம் இந்தியர்கள் வழக்கம் போல் ஒரு பதக்கமாவது கிடைக்குமா என்று கனவு கண்டு வருகின்றனர். அந்த கதையெல்லாம் பேசி நம்ம மனசை புண்ணக்கிக் கொள்ள வேண்டாம். ஒரு சரித்திர சாதனை புரிந்த வீராங்கனையைப் பற்றிப் பார்க்கலாம்.
வருடம் : 1976
இடம் : கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரம்
நிகழ்ச்சி : ஒலிம்பிக் விளையாட்டு
அந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ருமேனியா நாட்டின் சார்பாக கலந்து கொண்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாதியா எலினா கெமனேசி . ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது அவளுக்கு வயது 14 மட்டுமே. இந்த சின்ன பெண்ணால் என்ன சாதிக்க இயலும் என்ற கேள்விக் கணைகள் எழுந்த போது சாதனைகளால் மெய்சிலிர்க்க வைத்தவர்.
ஜிம்னாஸ்டிக் பிரிவில் Uneven Bars எனப்படும் கம்பிகளுக்கே இடையேயான விளையாட்டில் தங்க வென்றார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 10/10 என்ற புள்ளிகளை நவீன ஒலிம்பிக்கில் பெற்ற முதல் வீராங்கனை என்பதே அது. அந்த இடத்தில் இருந்த நடுவர்களும், பார்வையாளர்களும் அந்த சிறுமியின் அபாரமான திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். 1976 ஒலிம்பிக்கில் All Round, Bars, Beams ஆகிய மூன்று போட்டிகளில் தங்கமும், Floor Exercise பிரிவில் வெண்கலமும் தட்டிச் சென்றார். அதே போல் 1980 ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டு Beams, Floor Exercise பிரிவில் தங்கத்தை வென்றார்.
நாதியா எலினா கெமனேசி இளம் வயதில் புரிந்த சாதனைகள் இனி முறியடிக்க இயலாதவை. எப்படி? 1976 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் போது கெமனேசியின் வயது 14 மட்டுமே. தற்போதைய ஒலிம்பிக் சட்டப்படி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் தினத்தன்று குறைந்தபட்சம் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். எனவே இனி யாரும் அவரது சாதனையை முறியடிக்க இயலாது.
பல விருதுகளையும் கெமெனெசி வென்று சாதனை படைத்துள்ளார். இன்னும் ஜிம்னாஸ்டிக் உலகில் தொடர்ந்து பணி ஆற்றி வருகிறார்.
1976 ஒலிம்பிக்கில் கெமெனெசி நிகழ்த்திய சாதனைகள்.....
10/10 புள்ளிகளை வென்ற Uneven Bars
11 comments:
And also we ensure that when we enter in this specific blog site we see to it that the topic was cool to discuss and not a boring one.
நல்ல தகவலோடு பதிவு போட்டு இருக்கீங்க. நன்றி தல.
///national lottery said...
And also we ensure that when we enter in this specific blog site we see to it that the topic was cool to discuss and not a boring one.///
நீங்க இம்புட்டு நல்லவங்களா? பதிவு போட்டதும் வந்து கமெண்ட் போடுறீங்களே?...... ;)
ரொம்ப ரொம்ப நல்ல தகவல் கொடுத்திருக்கீங்க, நன்றிங்க :):):)
மிகவும் பயனான தகவல்... முதன் முறையாக தெரிந்துக் கொள்கிறேன்.. மிக்க நன்றி...
lotto lottery இவங்கள்ளாம் மீ த பர்ஸ்ட் ஆளுங்க தெரியாதா?
\\rapp said...
ரொம்ப ரொம்ப நல்ல தகவல் கொடுத்திருக்கீங்க, நன்றிங்க :):):)//
மறுமுறை சொல்லிக்கறேன்.
\\rapp said...
ரொம்ப ரொம்ப நல்ல தகவல் கொடுத்திருக்கீங்க, நன்றிங்க :):):)//
மறுமுறை சொல்லிக்கறேன்.
எல்லோரும் சொன்ன மாதிரி - அரிய தகவல்கள் - பயனுள்ளது - பெருமைப்பட வேண்டும்
நல்ல தகவல்கள் தமிழ்.
நாடியாவை ரசிக்கிறவர்களில் நானும் ஒருத்தி.
அறியதகவல் தேடிஎடுத்து கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி
///நிஜமா நல்லவன் said...
rapp said...
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ச்சின்னப் பையன் said...
cheena (சீனா) said...
வல்லிசிம்ஹன் said...
மது... said...////
உங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
Post a Comment