Monday, July 21, 2008

அறிவியல் கதை - போகாதே! போகாதே! என் கணவா!

2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி
“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.

“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.

“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”
”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”

பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”

“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”

விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

2100 ஜனவரி 1

இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”

“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.

ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.

அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.

இது சிறில் அலெக்ஸ் அவர்களின் அறிவியல் புனைக் கதைப் போட்டிக்காக

45 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்ப்பா!

எனக்கு இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா //இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் // அம்புட்டு பேரையும் ஆசை காட்டி அனுப்பிடுவேன் :)))))))

ஆயில்யன் said...

// இந்தியாவை கண்காணிக்கும் தூதர், //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அந்த நிலைமை வந்துடுமா????????

Anonymous said...

Narration is good.
//அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர்//
I like this :)

Sri said...

:-) Superb...!!
Vaazhthukkal anna..!!:-)

Mathu said...

உண்மையாவே நல்ல கற்பனை! நல்லா எழுதி இருக்கீங்க. nice!

குசும்பன் said...

//ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.//

இன்று இரவு சரியான நேரம் எல்லா MPயும் ஆஜர் ஆகி இருக்கானுங்க, அப்படியே அலேக்கா பார்லிமெண்டை தூக்கி வோகாவுக்கு பார்சல் செய்யமுடியுமா? பிளீஸ்!

கானா பிரபா said...

;-) அறிவியல் கதைக்கு புராணத் தலைப்பு போட்டதே முதல் வித்தியாசம். கதை கலக்கல். வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். said...

எப்படிங்க.. இது..! நானும் ஏறக்குறைய இது போலவே ஒரு கான்செப்ட் வைத்திருந்தேன்...! தங்கள் கதை நன்றாகவே இருந்தது.

VIKNESHWARAN said...

சூப்பர் தலைவா... ஆனால் இது பாதில் முடிந்த மாறி இருக்கு இன்னும் கொஞ்சம் தொடர்ந்து எழுதினால் நால்லா இருக்கும்.

VIKNESHWARAN said...

சூப்பர் தலைவா... ஆனால் இது பாதில் முடிந்த மாறி இருக்கு இன்னும் கொஞ்சம் தொடர்ந்து எழுதினால் நால்லா இருக்கும்.

தமிழன்... said...

அசத்துங்க அசத்துங்க...

தமிழன்... said...

///;-) அறிவியல் கதைக்கு புராணத் தலைப்பு போட்டதே முதல் வித்தியாசம். கதை கலக்கல். வாழ்த்துக்கள்.\\\

சரியா கவனிச்சிருக்கிங்க பிரபா அண்ணன்..:)

ரிப்பீட்டு...!

தமிழன்... said...

வாழ்த்துக்கள் தல...

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்ப்பா!

மது... said...

அறிவியல் கதைக்கு, பாசமும் நேசமும் கலந்து புலம்பும் ஒரு பெண்ணின் குரலாக போகதே போகதே என் கணவா என்று தலைப்பிட்டது அருமை.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் தல...

யோசிப்பவர் said...

எண்டமுரி வீரேந்திரநாத்தின் "கண் சிமிட்டும் விண்மீன்கள்" மற்றும் ஐன்ஸ்டீன்!!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இப்படி இருந்தா நல்லா இருந்து இருக்கும்
''அமெரிக்க பிரதமர்,அமெரிக்க ஜனாதிபதி,அமெரிக்காவை கண்காணிக்கும் இந்திய தூதர்.."

:)

தமிழ் பிரியன் said...

///யோசிப்பவர் said...

எண்டமுரி வீரேந்திரநாத்தின் "கண் சிமிட்டும் விண்மீன்கள்" மற்றும் ஐன்ஸ்டீன்!!///
இதற்கும் எண்டமூரியின் நாவலுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றவில்லை. விள்க்கமாக இட்டிருந்தால் புரிந்திருக்கும்.

Ramya Ramani said...

வாழ்த்துக்கள் நல்ல கற்பனை :))

Mastan said...

நல்ல கதை, வித்தியாசமன சிந்தனை.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
--மஸ்தான்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இந்த மாதிரி புராணக்கதை கேட்ட நியாபகம்.. ப்ரம்ம வருசம் கூட போகும்ன்னோ என்னவோ ..:) நல்லாருக்கு கதை.

அதிஷா said...

கதை அருமையாருக்குங்க

வெற்றி பெற வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
வாழ்த்துக்கள்ப்பா!
எனக்கு இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா //இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் // அம்புட்டு பேரையும் ஆசை காட்டி அனுப்பிடுவேன் :)))))))///
ஹிஹிஹி அப்படியே என்னை பிரதமர் பதிவியில் உட்கார வைப்பேன் என்பதை விட்டுட்டீங்களே... :)))

நாமக்கல் சிபி said...

அருமையான கதை தமிழ்ப்ரியன்!

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர்//

:))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

// இந்தியாவை கண்காணிக்கும் தூதர், //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அந்த நிலைமை வந்துடுமா????????//
வராதுன்னு எதிர்பார்ப்போம்... :)

தமிழ் பிரியன் said...

///Anonymous said...

Narration is good.
//அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர்//
I like this :)///
நன்றி நண்பரே!

தமிழ் பிரியன் said...

/// Sri said...

:-) Superb...!!
Vaazhthukkal anna..!!:-)///
நன்றி ஸ்ரீ!

தமிழ் பிரியன் said...

//Mathu said...

உண்மையாவே நல்ல கற்பனை! நல்லா எழுதி இருக்கீங்க. nice!//
மெய்யாலுமா... நன்றி!

தமிழ் பிரியன் said...

///குசும்பன் said...
//ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.//

இன்று இரவு சரியான நேரம் எல்லா MPயும் ஆஜர் ஆகி இருக்கானுங்க, அப்படியே அலேக்கா பார்லிமெண்டை தூக்கி வோகாவுக்கு பார்சல் செய்யமுடியுமா? பிளீஸ்!///
செய்ய முடியலையே... என்ன செய்வது.. ;)

தமிழ் பிரியன் said...

///கானா பிரபா said...

;-) அறிவியல் கதைக்கு புராணத் தலைப்பு போட்டதே முதல் வித்தியாசம். கதை கலக்கல். வாழ்த்துக்கள்.///
கானா அண்ணை நன்றி!

தமிழ் பிரியன் said...

//இரா. வசந்த குமார். said...

எப்படிங்க.. இது..! நானும் ஏறக்குறைய இது போலவே ஒரு கான்செப்ட் வைத்திருந்தேன்...! தங்கள் கதை நன்றாகவே இருந்தது.///
இராயல்டி ஒன்னும் வாங்கலையே... சும்மா.... நன்றி வசந்த்

தமிழ் பிரியன் said...

//இரா. வசந்த குமார். said...

எப்படிங்க.. இது..! நானும் ஏறக்குறைய இது போலவே ஒரு கான்செப்ட் வைத்திருந்தேன்...! தங்கள் கதை நன்றாகவே இருந்தது.///
இராயல்டி ஒன்னும் வாங்கலையே... சும்மா.... நன்றி வசந்த்

தமிழ் பிரியன் said...

///VIKNESHWARAN said...

சூப்பர் தலைவா... ஆனால் இது பாதில் முடிந்த மாறி இருக்கு இன்னும் கொஞ்சம் தொடர்ந்து எழுதினால் நல்லா இருக்கும்.///
என்னது தொடர்கதையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் வரலைப்பா

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

வாழ்த்துக்கள் தல...///
நன்றிப்பா!

தமிழ் பிரியன் said...

/// மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்ப்பா!///நன்றி தல!

தமிழ் பிரியன் said...

///யோசிப்பவர் said...

எண்டமுரி வீரேந்திரநாத்தின் "கண் சிமிட்டும் விண்மீன்கள்" மற்றும் ஐன்ஸ்டீன்!!///
நன்றி யோசிப்பவரே! இந்த கதையும் அது போல் பாசமும், விஞ்ஞானமும் கலந்து வருகின்றது அது தானே... :)

தமிழ் பிரியன் said...

///மது... said...

அறிவியல் கதைக்கு, பாசமும் நேசமும் கலந்து புலம்பும் ஒரு பெண்ணின் குரலாக போகதே போகதே என் கணவா என்று தலைப்பிட்டது அருமை.///
அண்ணனோட கதையெல்லாம் தானியங்கியா அப்படி தானம்மா வருது... :))

தமிழ் பிரியன் said...

////நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் தல...///
நன்றி பாரதி!

தமிழ் பிரியன் said...

///Ramya Ramani said...

வாழ்த்துக்கள் நல்ல கற்பனை :))///
நன்றி ரமணி!

தமிழ் பிரியன் said...

///Mastan said...

நல்ல கதை, வித்தியாசமன சிந்தனை.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
--மஸ்தான்.///
நன்றி மஸ்தான்!

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

இந்த மாதிரி புராணக்கதை கேட்ட நியாபகம்.. ப்ரம்ம வருசம் கூட போகும்ன்னோ என்னவோ ..:) நல்லாருக்கு கதை.////
ஆமாக்கா! நானும் கேள்விப்பட்டிருக்கேன்.... குர்ஆனிலும் அவ்வாறே வருகின்றது.. :)

தமிழ் பிரியன் said...

///அதிஷா said...

கதை அருமையாருக்குங்க

வெற்றி பெற வாழ்த்துக்கள்///
மிக்க நன்றி அதிஷா!

தமிழ் பிரியன் said...

///நாமக்கல் சிபி said...

அருமையான கதை தமிழ்ப்ரியன்!

வாழ்த்துக்கள்!///
நன்றி தள!

LinkWithin

Related Posts with Thumbnails