Friday, December 12, 2008

குதிரைன்னா ஓடனும்.. கழுதைன்னா சுமக்கனும் ©

அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். ஹெல்பரா போய் கொஞ்சம் முன்னேறி டெக்னீசியனா வேலை செய்து கொண்டு இருந்தேன். கையில் டூல்ஸ் பெட்டியுடன் வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல், வேலையைக் கண்டு மலைத்து நானும் ஓடிக் கொண்டு இருந்தேன்.

ஏதோ ஆசையில் கணிணி வாங்கி அறையில் வைத்து ஏதையாவது நோண்டிக் கொண்டு இருப்பேன். முறையாக கணிணி படிக்கவில்லையாதலால் அதிகபட்சமா வேலை ஆபிஸ் தொகுப்பில் எதாவது இருக்கும். மற்றபடி காஸ்ட்லியான பாட்டு கேட்கும் பொட்டி தான் அது. அவ்வப்போது வாங்கும் சம்பளம், ஊருக்கு அனுப்பியது இதை எல்லாம் Excel ல் போட்டு வைப்பேன்.

அப்ப நான் வேலை செய்த நிறுவனம் கணிணி மயமாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அலுவலகப் பணிகள், மற்றும் வேலை நிலவரங்கள் அனைத்தும் Data Base ல் (oracle) கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அக்கவுண்ட்ஸ், பெர்சனல் துறை அலுவலகத்திலேயே இருப்பதால் அதில் சிரமம் ஏதும் அவர்களுக்கு இருக்கவிலை. ஆனால் நிறுவனத்தில் பராமரிப்பு ஒப்பந்ததில் (Maintenance Contract) ல் உள்ள Equipment( இயந்திரங்கள் என்று சொல்லவா? ) பற்றிய தகவல்கள் முழுதாக இருக்கவில்லை.

எங்கள் ஒப்பந்ததில் இருந்தவை அனைத்தும் பல அடுக்கு மாடி கட்டிடங்கள், குடியிருப்புகள், மாளிகைகள் (Residential, Commercial High rise buildings,Villas, Palaces) . இவைகளில் உள்ள அமைப்புக்கு தகுந்தாற் போல் பிரித்து, அவைகளில் உள்ள இயந்திரங்களின் பட்டியல் எடுக்க வேண்டும்.

அவைகளைப் பட்டியல் இட்டு, அதை டேட்டா பேஸிற்குத் தகுந்தாற் போல் மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு சொன்னால் கட்டிடத்தின் பெயர் (Building Name), மாடி எண்(Floor No), வீட்டு எண்(Flat No), அறை எண்(Room No) இவைகளை Location பட்டியலில் சேர்க்க வேண்டும். அடுத்து அந்த அறை எண்ணில் இருக்கும் இயந்திரங்களை (Like A/C , Exhaust System, Plumbing Equipment, Lighting) பட்டியலிட்டு இவைகளையும் டேட்டா பேஸிற்குள் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு Tag தர வேண்டும். அதில் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும். (பின்னூட்டத்தில் அதை விளக்குகின்றேன்.)

மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் டேட்டா பேஸில் ஏற்றப்பட வேண்டும். பின்னர் ஒப்பந்த கட்டிடங்களின் பிரதிநிதிகளிடம் இருந்து வரும் சேவைத் தேவை, குறைகளை(Service Request, complaints) இவைகளை குறித்துக் கொண்டு கணிணியில் ஏற்றி ஒரு சர்வீஸ் நம்பரை சம்பந்தப்பட்ட துறைக்கு தர வேண்டும். அவர்கள் அந்த குறைபாட்டை சரி செய்து விட்டு, அந்த எண்ணைக் குறிப்பிட்டு Work Order ஐ அனுப்புவார்கள். அந்த ஒர்க் ஆர்டரை கணிணியில் ஏற்ற வேண்டும். இத்துடன் அந்த சர்வீஸ் எண்ணின் வேலை முடிந்து விடும்.

மாதக் கடைசியில் கட்டிடம் வாரியாக ரிப்போர்ட் தயாரிக்க வேண்டும். அதில் முடிந்த வேலைகள், முடியாமல் உள்ளவை என தனித்தனியாக வர வேண்டும். இது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு அனுப்பப்படும்.

எனது பொறியாளரின் வற்புறுத்தலால் என்னை அங்கே தள்ளி விட்டார்கள். வந்தவர் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். இந்தி பேசக் கூடியவர் என்பதால் நமக்கு மொழிப் பிரச்சினையுமில்லை. ஆரக்கிளில் நல்ல திறமையானவர். ஆனால் எங்களது தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களில் அனுபவமில்லை. நிறுவனத்தின் AGM + மேலாளார் குறிப்பு மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.

அனைத்து கட்டிடங்களுக்கும் சென்று தகவல்களை சேகரித்து, அதை Excel (Comma delimited CSV)சீட்டில் பொதிந்து டெவலப்பரிடம் தர வேண்டும். அவர் அதை மொத்தமாக SQL மூலம் டேட்டா பேஸில் ஏற்றி விடுவார். கடுமையான உழைப்புக்குப் பின் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஓரிடத்தில் தவறு செய்திருந்தாலும் Compile செய்யும் போது வரிசையாக எரர் அடிக்கும்..;) பாவம் அந்த System Administrator....

இதைத் தொடர்ந்து Complaints வந்தால் அதை டேட்டா எண்ட்ரியில் ஏற்றுவதற்கு தோதுவாக Operator interface உருவாக்கம் நடந்தது. இதிலும் என்னவென்ன தகவல்கள் ஏற்றப்பட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு (Condition), டேட்டா பேஸில் இருந்து எடுக்கும் தகவலின் தொடர் எல்லாம் சரி செய்யப்பட்டது.

அதே போல் Maintenance Work Order ஐ டேட்டா பேஸில் ஏற்றவும் தனியாக பகுதி ஏற்ப்படுத்தப்பட்டது. கடைசியில் ரிப்போர்ட் தயாரிக்கும் முறையும் ரிப்போர்ட்டின் வடிவமைப்பும் செய்யப்பட்டது.

இவைகளை எல்லாம் செய்து முடிக்க சுமார் மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவது சிக்கல் இருக்கும். எனக்கு தேவையான கண்டிஷனல் தொடர்பு வரவைக்க வேண்டும். இணையத்தில் தேடி தேடி அதற்கான code களை சேர்ப்பார். எனக்கும் அந்த சிஸ்டத்தின் முழு அமைப்பும் நன்றாக விளங்கி இருந்தது.

வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிந்த சூழ்நிலையில், புதிதாக இந்தியாவில் இருந்து ஒரு Date Entry operator வந்தார். அவருக்கு எப்படி தகவல்களை உள்ளீடு செய்வது என்பதையும் சொல்லிக் கொடுத்தேன். அடுத்த சில தினங்களில் மீண்டும் பழையபடி பழைய வேலையைத் தொடரச் சொல்லி விட்டார்கள். மீண்டும் அதே பழைய டூல்ஸ்... அதே வாழ்க்கை ஓட்டம்...:)

இதே போல் இன்னொரு கட்டிடத்தில் (துபாய் - Bur Dubai - Near Mövenpick Hotel) உள்ள இயந்திரங்கள் அனைத்தும் கணிணியில் இணைக்கப்பட்டிருந்தது. இதை BMS (Building Management System ) என்று சொல்வோம். (இதைப் பற்றியும் ஒரு தொழில் நுட்பப்பதிவு போட நினைத்துள்ளேn). அங்கு இருந்த ஒரு BMS Operator கோணக்கால்(?) சாத்திவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டான். அவசரத் தேவையாக இருந்த சூழலில் நம்மை பரிந்துரை செய்தனர். அவசரமாக ஊருக்கு செல்வதால் எதுவும் சொல்லித் தரும் நிலையில் பழைய ஆள் இல்லை.

வேறு வழி இல்லாததால் முன் அனுபவமோ, பழக்கமோ இல்லாமல் அங்குள்ள இயந்திரங்களைக் கணிணியைக் கொண்டு இயக்க வேண்டிய சூழல். போனவன் அனைத்து manual களையும் சுட்டுட்டு போய் விட்டான். வேறு என்ன செய்வது? இணையத்தில் அந்த Manual ஐ(Honeywell XL 5000) பதிவிறக்கி படித்து இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டிய சூழல்.


அதற்கடுத்த சில மாதங்களில் ஊருக்கு திரும்ப வேண்டிய சூழல் வந்த போது (5 1/2 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஊருக்கு விடுப்பில்) புதிதாக ஒருவருக்கு கற்றுக் கொடுத்தால் தான் நான் ஊருக்கு செல்ல முடியும் என்று கட்டாயப் படுத்தப்பட்டேன். அதையும் சமாளித்து புதிதாக ஒருவனுக்கு(அவன் செய்த லொள்ளு இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்) கற்றுக் கொடுத்து ஊருக்கு சென்று திரும்பினேன்.

ஊருக்கு சென்று திரும்பியதும் வழக்கம் போல் பழைய குருடி கதவைத் திருடி கதையாக மீண்டும் பழைய வேலை. அதே டூல்ஸ்... அதே ஓட்டம்..... கணிணி சம்பந்தமான வேலை எல்லாம் எனக்கு கிடையாது என்று மறுப்புடன்....... இப்போது வேலையைக் கண்டு நான் பயந்தது போய் வேலை என்னைக் கண்டு பயந்து ஓடத் துவங்கி இருந்தது.

குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்கனும். .

58 comments:

நட்புடன் ஜமால் said...

ஓடி வந்திட்டேன்...

நட்புடன் ஜமால் said...

இப்படிதான் என் வாழ்விலும் நடந்துள்ளது.

அழகாக சொல்ல கற்றுக்கொண்டு சொல்கிறேன்.

ஆனாலும் ரொம்ப வேகமா கற்றுக்கொண்டுள்ளீர்கள் “தல”

நட்புடன் ஜமால் said...

இப்ப என்னவா இருக்கீக ...!

நட்புடன் ஜமால் said...

\அவ்வப்போது வாங்கும் சம்பளம், ஊருக்கு அனுப்பியது இதை எல்லாம் Excel ல் போட்டு வைப்பேன்.\\

இதை எப்படி செய்வது என் பதிவிடுங்களேன்.

துளசி கோபால் said...

அது என்ன பின்னூட்டத்தில் சொல்றேன்னு?

பின்னொருநாளில் சொல்லப்போவதா?

அப்படீன்னா. அப்புறம் கதை?:-)))

வேலை வாங்கிக்கணுமுன்னா எதையும் கண்டுக்கமாட்டாங்க. ஆனா அதே வேலையை அஃபிஷியலாப் போட்டுக் கொடுன்னா.... அதுக்கு உரிய படிப்பு இல்லை அனுபவம் உமக்கு இல்லைன்னு வாங்க. இப்படித்தானே பல இடங்களில் நடக்குது(-:

Thamiz Priyan said...

ஒரு இயந்திரத்துக்கு Tag போடும் முறை. D9061010360804AFCCA0235
முதலில் இடம் D (D-Dubai S- Sharjah..etc..)

அடுத்து கட்டிட எண் 9061 (உதாரணத்திற்கு 21st Century Towers)

கட்டிடத்தின் உள்பிரிவு 01 (Building 01, 02.. etc )

மாடி - 036 (36வது மாடி)

ப்ளாட் எண் 08 (ப்ளாட் எண் 3608)

அறை எண் 04 (இதற்காக உருவாக்கப்பட்ட டிராயிங்கில் பார்த்தால் தெரியும். இதற்கான Description டேட்டா பேஸில் இணைக்கப்பட்டிருக்கு. இது டாய்லெட்டாகக் கூட இருக்கலாம்.)

அடுத்து இயந்திரம்

எந்த துறையைச் சார்ந்தது A ( A- A/C, P-Plumbing E- Electrical..etc)

என்ன இயந்திரம் FC (FC -Fan coil Unit, SP - Split A/C...etc)

எந்த தயாரிப்பு CA (Carrier)

வரிசை எண் 0235 .

D9061010360804AFCCA0235 - இந்த Tag எண்ணை வைத்துக் கொண்டு அந்த இயந்திரத்தின் சரித்திரம், பூகோளத்தை டேட்டா பேஸில் இருந்து சுலபமாக் எடுக்கலாம்

Unknown said...

நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..

ஆயில்யன் said...

//குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்கனும்//

:((

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..
//

நங்!

அண்ணன்னா தலையில நங்குன்னு குட்டணும்!

என்ன சின்னபுள்ளதனமா இருக்கு தம்பி என்னமா ஃபீல் பண்ணியிருக்கு :(((

ஆயில்யன் said...

மீ த பத்து போட்டுட்டு ஒரு ரிக்வெஸ்ட்!


பின்னூட்டத்தில்லெல்லாம் பதிவு போடாதீங்க பாஸ்!

எபெக்டிவ்வா இருக்காது!

ஏன் பதிவுலயே பதிவு (?!) போடுங்க யாரு தடுத்தா????

ஆயில்யன் said...

//BMS (Building Management System ) என்று சொல்வோம். (இதைப் பற்றியும் ஒரு தொழில் நுட்பப்பதிவு போட நினைத்துள்ளேn). /



ரைட்டு தம்பி!

துறை சார்ந்த பதிவுகள் கேட்டகிரியில ஒரு நூறு பதிவுகள் இருக்குன்னு சிம்பாலிக்கா சொல்லிட்டீங்க போங்க!!!

ஆயில்யன் said...

//அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்///


அதெல்லாம் ஒரு காலம் !!!!

Unknown said...

யு ஆர் ரியலி கிரேட் அண்ணா :))

ராமய்யா... said...

Tamil...
Palanerathula ippidi nadakkirathu jagajam...

Unknown said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..
//

நங்!

அண்ணன்னா தலையில நங்குன்னு குட்டணும்!

என்ன சின்னபுள்ளதனமா இருக்கு தம்பி என்னமா ஃபீல் பண்ணியிருக்கு :(((//

அதான் சொன்னேனில்ல அண்ணா.. நான் பதிவ படிக்காம போட்ட பின்னூட்டம் அதுன்னு.. :))

Unknown said...

//ஆயில்யன் said...
//அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்///


அதெல்லாம் ஒரு காலம் !!!!//

ஆமா.. ஆனா, இப்படி ஒரு காலம் ஆயில்ஸ் அண்ணாவுக்கு மட்டும் வரவே மாட்டேங்குது.. ;))

வால்பையன் said...

//அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்.//

அது ஒரு கனா காலம்
(உங்க முதலாளிக்கு)

ஆயில்யன் said...

//அதான் சொன்னேனில்ல அண்ணா.. நான் பதிவ படிக்காம போட்ட பின்னூட்டம் அதுன்னு.. :))///


அப்பிடியெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது!


படிச்சாலும் படிக்காட்டியும் ஒரே ரியாக்‌ஷன் கொடுக்க பழகிக்கோணும்! :)))))))))))

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
//ஆயில்யன் said...
//அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்///


அதெல்லாம் ஒரு காலம் !!!!//

ஆமா.. ஆனா, இப்படி ஒரு காலம் ஆயில்ஸ் அண்ணாவுக்கு மட்டும் வரவே மாட்டேங்குது.. ;))
//

அட !

நாங்கெல்லாம் ஆபிஸ் டைம்ல டெர்ரா வேலை பார்ப்போம் மத்த டைம்லதான் வெட்டியா இருப்போம் தெரியும்லே!

ஆயில்யன் said...

மீ த இருபது :}

வால்பையன் said...

எனக்கு தலை சுத்துது!
இது துறை சார்ந்த பதிவா?

Unknown said...

//ஆயில்யன் said...
//அதான் சொன்னேனில்ல அண்ணா.. நான் பதிவ படிக்காம போட்ட பின்னூட்டம் அதுன்னு.. :))///


அப்பிடியெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது!


படிச்சாலும் படிக்காட்டியும் ஒரே ரியாக்‌ஷன் கொடுக்க பழகிக்கோணும்! :)))))))))))//

நீங்க தான் அது எப்படின்னு சொல்லித்தரவே மாட்டேங்கிறீங்களே அண்ணா.. :(((

Unknown said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
//ஆயில்யன் said...
//அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்///


அதெல்லாம் ஒரு காலம் !!!!//

ஆமா.. ஆனா, இப்படி ஒரு காலம் ஆயில்ஸ் அண்ணாவுக்கு மட்டும் வரவே மாட்டேங்குது.. ;))
//

அட !

நாங்கெல்லாம் ஆபிஸ் டைம்ல டெர்ரா வேலை பார்ப்போம் மத்த டைம்லதான் வெட்டியா இருப்போம் தெரியும்லே!//

தெரியாதே :P

Unknown said...

நான் தான் 24

Unknown said...

நான் தான் 25

Thamiz Priyan said...

மக்களே! இந்த பதிவு தலைப்பு காப்பிரைட் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் இதைத் திருட்டுத்தனமா அனுமதி இல்லாம பயன்படுத்தக் கூடாது... ;))

வால்பையன் said...

என் கடமை பணி செய்து கிடப்பதே என்று சொல்கிறீர்கள்.

நன்று, வேலையை காதலிக்க ஆரம்பித்துவிட்டால் அலுப்பே தெரியாது.

gayathri said...

thalipa pathu ethachi katha solluvenganu vanthen enna emathetengale tamil

ஆயில்யன் said...

//மக்களே! இந்த பதிவு தலைப்பு காப்பிரைட் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் இதைத் திருட்டுத்தனமா அனுமதி இல்லாம பயன்படுத்தக் கூடாது... ;))///


மக்களே இந்த வாசகம் அம்புட்டும் நான் காப்பிரைட் பண்ணி வைச்சிருக்கேன் பை த பை காப்பிரைட் வாசகம் கூட நானே வாங்கிட்டேன்!

யாராச்சும் என் பர்மிஷன் இல்லாம யூஸ் பண்ணுனீங்க அப்புறம் இருக்குடி ராசா!!!!

ஆயில்யன் said...

அய்யோ © போடலப்பா :(

காப்பிரைட்©

இப்ப ஒ.கே!

ஆயில்யன் said...

ஹய்யா நானே முப்பது :))

ஆயில்யன் said...

//gayathri said...
thalipa pathu ethachi katha solluvenganu vanthen enna emathetengale tamil
//

வருத்தப்படாதீங்க ப்ரெண்டு !

ஏகப்பட்ட கதை கைவசம் வைச்சிருக்காரு லீவு விட்டு ஆபிஸ் ஒபன் ஆனதும் ஒண்ணொண்ணா சொல்லுவாரு அது வரைக்கும் வெயீட்டீஸ் :)))

Unknown said...

//ஆயில்யன் said...
//குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்கனும்//

:((//

©
:)))))))))))))

Unknown said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..
//

நங்!

அண்ணன்னா தலையில நங்குன்னு குட்டணும்!

என்ன சின்னபுள்ளதனமா இருக்கு தம்பி என்னமா ஃபீல் பண்ணியிருக்கு :(((//

©
:))))))))

Unknown said...

//ஆயில்யன் said...
அய்யோ © போடலப்பா :(

காப்பிரைட்©

இப்ப ஒ.கே!//

© :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான தலைப்பு, தலைப்பு கொஞ்சமும் சளைக்காத பதிவு.

அலைச்சலான அனுபவம்தான்.

கபீஷ் said...

//பின்னூட்டத்தில்லெல்லாம் பதிவு போடாதீங்க பாஸ்!

எபெக்டிவ்வா இருக்காது!

ஏன் பதிவுலயே பதிவு (?!) போடுங்க யாரு தடுத்தா????//

ஆயில்ஸை ரிப்பீட்டுக்கறேன்

கபீஷ் said...

துறை சார்ந்த பதிவா? லேபிள்ல போட்டிருந்தா படிக்காம இருந்திருப்பேனே :-):-):-)

ஏன்னா அது என் கொள்கைக்கு விரோதமானது.

நீங்க எந்த வேலை பிடிச்சிருக்குன்னு சொல்ல வர்றீங்க

கண்மணி/kanmani said...

என்னென்னமோ சொல்லுதீக நமக்கு வெளங்கல்ல.
ஆனா இஷ்டப்பட்ட்ட் கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
சரிதானே

ராமலக்ஷ்மி said...

கண்மணி சொன்ன மாதிரி டெக்னிகலா பலதும் புரியலை என்றாலும் ஒன்று மட்டும் புரிகிறது.

குட்டையில் ஊறும் மட்டையாக இருந்தால் வாழ்க்கையில் ஒரே வட்டத்தில் முடிந்து விடும். நீங்கள் ஆத்தில தூக்கிப் போட்டாலும் எதிர் நீச்சல் போடத் தெரிந்திருக்கிறீர்கள். கடலில் தூக்கிப் போட்டாலும் கரை சேரத் தெரிந்திருக்கிறீர்கள்.

உங்களது இந்த ஆர்வம், உழைப்பு, தன்னம்பிக்கை வாழ்வில் பல உயரங்களை எட்ட வைக்கும். நேரம் வரும். வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

//இப்போது வேலையைக் கண்டு நான் பயந்தது போய் வேலை என்னைக் கண்டு பயந்து ஓடத் துவங்கி இருந்தது.//

புரிகிறது உங்களின் உணர்வு..மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

சுரேகா.. said...

அடேயப்பா...பின்னிப்பெடலெடுத்திருக்கீங்க!

உழைப்பு என்னிக்குமே டாப்புதான் தலைவா!

வாழ்த்துக்கள்...!

Anonymous said...

//துளசி கோபால் said...
வேலை வாங்கிக்கணுமுன்னா எதையும் கண்டுக்கமாட்டாங்க. ஆனா அதே வேலையை அஃபிஷியலாப் போட்டுக் கொடுன்னா.... அதுக்கு உரிய படிப்பு இல்லை அனுபவம் உமக்கு இல்லைன்னு வாங்க. இப்படித்தானே பல இடங்களில் நடக்குது(-://

மேடம் சரியாகச் சொல்லீட்டாங்க. ஆனா இந்த அனுபவம் இப்பக் கை கொடுக்கலன்னாலும் பின்னால உதவும். உங்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் மற்றும் கிரகிக்கும் வேகத்துக்கு ஒரு பாராட்டு தமிழ்.

Expatguru said...

கற்ற கலை என்றும் கை கொடுக்கும். அது தான் கடைசி வரை வரும் நிரந்தர சொத்து. உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் அது வெளிவரத்தான் செய்யும். வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

அயலகம் சென்று கடின உழைப்பினால் முன்னேறியவர்கள் பலரிருக்கிறார்கள். இறைவன் சந்தர்ப்பங்கள் தருவான். அதைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுபவர்கள் புத்திசாலிகள்.

அலுவலகங்களில் பல நேரங்களில் இது மாதிரியான எஸ் ஓ எஸ் வரும். நமக்குச் சம்பந்த மில்லாத வேலைகள் நம்மை நம்பி ஒப்படைக்கப்படும். அவற்றை நமது திறமையினாலும், கடின உழைப்பினாலும் வெற்றிகரமாக முடிக்கும் போது வெற்றிக்கோப்பை யாராவது தட்டிச் சென்று விடுவர்.

நமக்குப் பிடித்த பணியினை நமக்குத் தர "படிப்புத் தகுதி" இல்லையென மறுத்திடுவர்.

இருப்பினும் அனுபவம், கற்றுக்கொள்வதில் ஆர்வம், கடின உழைப்பு இவை அனைத்தும் என்றுமே நம்மைக் கை விடாது.

நம் திறமையை எல்லோரும் நாடும் காலமும் வரும்.

நல்ல பதிவு - நல்வாழ்த்துகள்

காரூரன் said...

ஒரு தடவை தான் டுபாய் வந்திருந்தேன். அந்த வெப்பம் தாங்க முடியவில்லை. உந்த நாட்டு வெப்பத்திலும் வெளியே சென்று தகவல் சேர்க்கும் வேலை செய்வது எவ்வளுவு கடினம் என்று தெரியும் பூச்சியத்துக் கீழ் 40 பாகையயும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெப்பம் தாங்க முடியாது. உங்கள் கடின உழைப்பு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழக்கையில் முன்னேற்றும் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள்!

சங்கரராம் said...

இப்ப எப்படி

தமிழ் தோழி said...

வந்துட்டேன்

தமிழ் தோழி said...

"குதிரைன்னா ஓடனும்.. கழுதைன்னா சுமக்கனும் ©"
தலைப்பு சூப்பர்
:)))

தமிழ் தோழி said...

உங்களுடைய வேலை பழுவையும் அழகாக எலுதி இருக்கீங்க

சந்தனமுல்லை said...

// ஸ்ரீமதி said...

நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..//

ரிப்பீட்டு!

சந்தனமுல்லை said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான தலைப்பு, தலைப்பு கொஞ்சமும் சளைக்காத பதிவு.

அலைச்சலான அனுபவம்தான்.//

ரிப்பீட்டு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எதுவா மாறினீங்களோ அதுல அந்த குணத்தோட இருந்ததுக்கு பாராட்டுக்கள்.. சிலர் இதுவா இருக்கும் போது அதுவா நினைச்சுக்க்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்துவாங்க..

தமிழ் தோழி said...

எவ்வளவு நாள் தான் குதிரைய ஓடவும்,கழுதைய சுமக்கவப்பீங்க.

கிரி said...

//5 1/2 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஊருக்கு விடுப்பில்//

நிஜமாவா!!!!!!

Poornima Saravana kumar said...

//குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்கனும். . //

அப்படியா!!!!!!!!!!!1

sindhusubash said...

அப்ப துபாய்னா..இப்ப எங்க இருக்கறீங்க? இங்க முக்கால்வாசி வேலையும் இப்படி தானே இருக்கு.

Tech Shankar said...

ரொம்ப சீரியசான பதிவில் - ஏன் எல்லோரும் மொக்கை போடுரீங்க