Monday, July 6, 2009
காதல் கறுப்பட்டியும், கறுப்பியும்.. சந்தித்த வேளையில்
ஒரு உருவம் தூரத்தே யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த தெருவில் நடந்து வருவது தெரிகின்றது.. அருகே வர வர அதன் உருவம் நமக்கு விளங்குகின்றது. அடர் நீல நிறத்தில் ஜிப்பா பைஜாமாவுடன் கையில் பிரெஸ்லெட்டுல் மின்னுகின்றது. தங்கத்தின் மின்னலை ஜிப்பாவின் மின்னல் வெட்டுவது நம் கண்ணைக் கூச வைக்கின்றது... கண்களில் பச்சை நிறத்தில் கண்ணாடி அழகைக் கூட்டிக் காட்டுகின்றது. முகம் முழுவதும் முதல்வன் அர்ஜூன் போல பவுடர் கொட்டிக் கிடக்கின்றது. ஒரு கையில் ஒரு சூட்கேஸ், மற்றொரு கையில் ஒரு அட்டைப் பெட்டி.
அந்த உருவம் தெருவை ரசித்துக் கொண்டே வருவது நமக்கு மிக அருகே தெரிகின்றது. பேக் கிரெளண்டில் ஆட்டோகிராபில் வரும் “ஞாபகம் வருதே”க்கு முன்னால் வரும் தீம் மியூசிக் கேக்கின்றது. கேமரா குளோசப்பில் நெருங்கி வருகின்றது.. பார்த்தால் வருவது நம்ம தம்பி காதல் கறுப்பி . (இனி தம்பி என்று வரும்). அதற்கு மேல் குளோசப்பில் காட்டினால் மக்கள் நம்மை அடிக்க வருவார்கள் என்பதால் கேமராவின் கோணம் தம்பியின் பார்வையில் இருந்து விரிகின்றது.
தெரு ரொம்ப பிஸியாக இல்லாமல் அங்கொருவரும் இங்கொருவருமாக நடந்து செல்கின்றனர். தெரிவில் இருக்கும் நாய்கள் எல்லாம் தம்பியைப் பரிதாபமாக பார்க்கின்றனர். தூரத்தே வரும் ஒரு தாத்தா தம்பியின் சட்டையின் ஒளி வெள்ளத்தில் ஆளை சரியாகக் கணிக்க இயலாமல் திணறி நெற்றில் தனது கைகளை வைத்து கண்களைச் சுருக்கி “யாரு?” என்றும் கேட்கிறார்.
முன்னாடி பார்த்தால் சிவப்பு கலர் சுடிதாரில் ஒரு பெண் நடந்து வருகின்றார்.. கொஞ்சம் சுமாரான கலர் தான்.. (இங்கிதம் கருதி வர்ணனை தடை செய்யப்படுகின்றது.) அவர்தான் தம்பியின் கனவுக் காதலி கறுப்பி.
இதுவரை இருந்த தீம் மியூஸிக் மாறி “தந்தன தந்தன தாளம்” தீம் மியூஸிக் இசைக்கின்றது. மீண்டும் தம்பி்யின் முகம் கேமரா கோணத்தில்.. மீண்டும் மியூஸிக்கில் மாற்றம்.. பார்த்த விழி பார்த்தபடி பார்த்திருக்க... (குணா)
பிளந்த வாயை மூடாமல் விழித்துக் கொண்டிருக்கின்றார் தம்பி. கறுப்பியின் செல் பேசி இசைக்கின்றது.
“ஹலோ! யார் கதைக்கிறீயள்”
“ஹலோ அண்ணி! நான் சவுதி அரேபியாவில் இருந்து தமிழ் பிரியன் பேசுறேன்”
“என்னது அண்ணியா? உங்களை எனக்குத் தெரியாதே?”
“உங்களுக்கு என்னைத் தெரியாது.. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்”
“காதல் கறுப்பி தம்பி ரொம்ப நல்லவருங்க.. அவரு உங்களுக்கு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்”
“என்னங்க ஒன்னுமே புரியல.. யாருங்க அந்த காதல் கறுப்பி?”
“உங்க முன்னாடியே நிக்கிறாரு பாருங்க.. அவர் தான் காதல் கறுப்பி.. ப்ளீஸ் அவரை லவ் பண்ணுங்க”
“எனக்கு முன்னாடி யாருமில்லயே”
“தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் தான்”
போனைக் கட் செய்து விட்டு கீழே குனிந்து பார்க்கிறார்.. சட்டை ஒளியில் கண்கள் கூச உற்றுக் கவனிக்கிறார்.. அதிர்ச்சியடைகிறார் கறுப்பி.
“அடப்பாவி நீயா? மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு கொடியில் காயப்போட்ட தாவணியைத் திருடி மூணாவது தெரு மல்லிகாகிட்ட மூணு ரூபாய்க்கு வித்துட்டு, துபாய்க்கு ஓடிப் போனவன் தானே நீ?”
தம்பி தனது பழைய காதலியை வெகுநாட்கள் கழித்து சந்தித்த அதிர்ச்சியில் வாயடத்தைக் நிற்க்கிறார். மீண்டும் செல் பேசி இசைக்கின்றது. எண் +0061 ல் தொடங்குகின்றது.
“நான் ஆஸ்திரேலியாவில் இருந்து கானா பிரபா பேசுகிறேன்”
“உங்க முன்னாடி இருக்குற தம்பி ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு.. மலைகளை எல்லாம் நல்லா தெரிஞ்சவரு அந்த நாலு பேரை மலைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி உங்களையும் கூட்டிக் கொண்டு போவார்”
கறுப்பி போனை கட் செய்து விட்டு கோபமா பார்க்கிறார்.
“அடப்பாவி தமிழா.. நீ இப்படியெல்லாமா செஞ்சு இருக்கா?”
தம்பி ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்.. மீண்டும் செல் அழைக்கிறது.. “ஹலோ நான் சிங்கையில் இருந்து நிஜமா நல்லவன் பேசுறேன்” என ஆரம்பிக்கிறது.. அதை அடுத்து சம்போ சிவசம்போ தீம்(நாடோடிகள் பட சேஸிங்) தீம் மியூஸிக் பிண்ணணியில் கறுப்பி பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் லண்டன், பெர்லின், KL, பாரிஸ், சென்னை, டெல்லி, பெங்களூர் என்று வரிசையாக செல் பேசி அலறுகின்றது.
கறுப்பியை தம்பி காதலுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கறுப்பியோ டென்சனில் உச்சத்தில் குமுறிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. இப்போது செல் பேசியை அணைத்து விட்டு, “ஏண்டா படுவா? இப்படி உளறுவாயா இருந்து இருக்கியே.. என் தாவணியை திருடியத்தை தவிர உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னப் பற்றி என்ன என்னவோ எழுதி வச்சு இருக்க நீ.. உன்னை.. ” கோபத்தில் பல்லை நறநறவென கடிக்கும் நேரம் மீண்டும் செல் பேசி அழைக்கிறது.. எண் +974 என்று ஆரம்பிக்கிறது.
“நான் ஆயில்யன் பேசுகிறேனுங்க...”
“ஆயில்யனா?...” கறுப்பியை பேச விடாமல் ஆயில்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்கிறார். கறுப்பி பேசுவதற்கு மைக்ரோ வினாடி நேரம் கூட தராமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.. களைத்துப் போன கறுப்பி மயங்கி சரிகின்றார்.. தனது உயிர்க்காதலி மயங்குவதைக் கண்ட தம்பி அவரை தனது கரங்களில் சிறு குழந்தையைப் போல வாங்கிகின்றார்... அய்யகோ... கறுப்பியின் கனம் தாளாமல் தம்பி கீழே சரிகிறார். தம்பியின் மேலே கறுப்பி மயங்கி விழுகிறார்.. ஆயிரத்தில் ஒருவன் ஜெயலலிதா மாதிரி தம்பி கீழே கிடக்க .. அவருக்கு மேலே கறுப்பி கிடக்கிறார்.. கறுப்பியை தள்ளி எழ இயலாமல் தம்பி விழி பிதுங்கி கிடக்கிறார்.. பழைய தூர்தசனின் இரவு நேர ரீங்ரீங் மியூசிக் இசைக்கிறது.. கேமரா மெல்ல எழும்பி தூரமாகி கொண்டே செல்கின்றது... தம்பியும் கறுப்பியும் புள்ளியாகத் தெரிகிறார்கள்..
ஸ்கிரீன் ஸ்லைட் வருகிறது.. “ நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த காதல் ஜோடிகள் தங்கள் பழைய கதைகளைப் பேசி மகிழட்டும்.. வாருங்கள் நாங்கள் கிளம்பலாம்.. அன்புடன் தமிழ் பிரியன்”
டிஸ்கி 1 : இது காதல் கறுப்பியைக் கலாய்ப்பவர்கள் சங்கத்திற்கான பதிவு.. (கா.க.க.ச)
டிஸ்கி 2 : தம்பியின் புகைப்படத்தை இணைக்க முடிவு செய்த போது, அதைப் பார்க்கும் ரசிகைகள் தம்பியை தொல்லை செய்வார்கள் என்பதால் முகத்தை மட்டும் கொஞ்சம் அழகு குறைந்த கமலின் முகத்தை மாற்றி வைத்துள்ளோம். இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
//அன்புடன் தமிழ் பிரியன்”//
நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு..இது எதுக்கு??
//சந்தனமுல்லை said...
//அன்புடன் தமிழ் பிரியன்”//
நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு..இது எதுக்கு??//
படாத பாடு பட்டு சங்கத்தை வளர்க்கும் முயற்சியை ஜஸ்ட் லைக் தட் பின்னூட்டத்தின் வழி கெடுக்க நினைப்பவர்களை எதிர்த்து அற வழி போராட்டம் அண்ணன் கறுப்பி முன்னிலையில் நடைபெறும்.
(கறுப்பி மாத்திரம்தான் போராட்டத்துல கலந்துக்குவாரு)
தம்பி காதலி எப்படி அண்ணி ...
அளவிளா சந்தேகத்துடன் ...
இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள்.\\
ஆ(gh)கா அவருதானா
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு :)))
// நட்புடன் ஜமால் said...
தம்பி காதலி எப்படி அண்ணி ...
அளவிளா சந்தேகத்துடன் ...//
அதெல்லாம் அப்புடித்தான்!
தம்பி இவுரு ரொம்ப கொஸ்டீன் போடுறாரு தூக்கிடுவோமா??? :)))
//தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க//
யோவ் கறுப்பட்டி இதுக்குத்தான் மீட் போடாதீங்க போடாதீங்கன்னு சொன்னேன்
தம்பி டோட்டல் டேமேஜ்ஜ்ஜ்ஜ் :(
//முகத்தை மட்டும் கொஞ்சம் அழகு குறைந்த கமலின் முகத்தை மாற்றி வைத்துள்ளோம். இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள். //
மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வும்கூட போயும் போயும் கமல் படத்தை அங்க ரீப்ளேஸ் பண்றோமேன்னு ஒரு மணி நேரம் அழுது அப்புறம் செஞ்சேன் :(
எங்க ரொம்ப நாளா காணமேன்னு பார்த்தேன். இதுக்குத்தானா... இப்டி கொழுத்தி போட்டிருக்கீக? இதுக்கு நீங்க ஒரு மாசத்துக்கு தூங்கலாம்.
நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு..இது எதுக்கு??
Repeataeeeeeeeee!!!
kadhal karuppi innum pathivai parkavillaiyaa!!!
அடேய் எங்க நான் செஞ்ச போனை பத்தி எந்த விவரமும் இல்லை????
நீ நல்லவன் வல்லவன்னு நானும்தானே ஏழெட்டு பிட்டு போட்டேன்!
:)))
தமிழ்பிரியன் அண்ணே இதுக்கு மேல போட்டிருக்க கமெண்ட் தமிழன் கறுப்பிக்காக.
என்ன தமிழ், கறுப்பி மேல ஏன் இந்த கொலவெறி.? அவர ரொம்ப நல்லவருன்னு ஊருக்குள்ள சொல்றாங்க..
//
படாத பாடு பட்டு சங்கத்தை வளர்க்கும் முயற்சியை//
ஒரு படையே இருக்கா....
கவிதை எழுதினவரை கறுப்பட்டியாக்கிட்டீங்களே!! அவ்வ்வ்!
அட பாவிகளா...
ஒரு இளவரசனைப்போய் இப்படி ஆக்கிட்டிங்களோய்யா...
//தெரிவில் இருக்கும் நாய்கள் எல்லாம் தம்பியைப் பரிதாபமாக பார்க்கின்றன.//
அவ்வ்வ்வ்வ்வ் :))
நல்ல வேளை கடிச்சு குதறாம விட்டுதே!
//“அடப்பாவி நீயா? மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு கொடியில் காயப்போட்ட தாவணியைத் திருடி மூணாவது தெரு மல்லிகாகிட்ட மூணு ரூபாய்க்கு வித்துட்டு, துபாய்க்கு ஓடிப் போனவன் தானே நீ?” //
அவ்வ்வ்வ்வ்...
//அந்த நாலு பேரை மலைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி உங்களையும் கூட்டிக் கொண்டு போவார்”//
கிழிஞ்சுது கதை.. :))
//தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் தான்”//
ஏன்யா ஏன்.. :)
//தம்பியின் புகைப்படத்தை இணைக்க முடிவு செய்த போது, அதைப் பார்க்கும் ரசிகைகள் தம்பியை தொல்லை செய்வார்கள் என்பதால்//
இது மட்டும்தான்யா உண்மை...!
:)))
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு :))).//
repeatu
ஓகோ - இன்னிக்கு கும்முறதுக்கு இவர் கிடைச்சாரா - ஒரு படயே திரண்டு வந்து கும்மி இருகீங்க
ம்ம்ம்ம்
:))
/நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு..இது எதுக்கு??/
Repeattuuuuu...
Post a Comment