Monday, July 20, 2009
பணம் இனிது! பொருள் இனிது! என்றோம் மழலைச் சொல் கேளாமல்...
மகனுக்கு வயசு 3 ஆக இன்னும் சில மாதங்கள் இருக்கு.. சேட்டையும் பேச்சும் அதிகமா இருக்காம்... :) இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப அவங்க அம்மாவோட நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு பிரிகேஜி மாதிரி அனுப்பலாமா? இல்ல மொத்தமா வரும் 2010 ஜூனில் எல்கேஜியில் சேர்க்கலான்னு யோசனையில் இருக்கோம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அங்க வீட்டுக்கு பக்கத்தில் மசூதி இருக்கு.. காலையும், மாலையும் அங்கே அரபிப் பாடம்(மதரஸா) நடக்கும். தினமும் சும்மாவாச்சியும் போய்ட்டு வருகிறான். சில நேரங்களில் போக அடம் பிடிக்கின்றான்.. அப்படித் தான் ஒரு மதரஸாவுக்கு போகாத நாளில் மதரஸாவில் பாடம் சொல்லித் தருபவர் (ஹஜரத்) தெருவில் இவனைப் பார்த்து “ஏன், காலையில் மதரஸாவுக்கு வரல.. நாளைக்கு வரல அடி பிச்சிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.. இவன் முழிச்சு இருக்கான். “நாளைக்கு ஒழுங்கா வரனும் என்ன?” என்று அவர் சொல்ல இவன் “ எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்” என்று சொல்லி இருக்கான்... :( ஹஜரத் வீட்டில் வந்து (ஜாலியாக) கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கார். மற்றவர்கள் சொல்வதை புரிந்து அதே பாணியில் பதில் சொல்லும் பழக்கம் அதிகமாகி விட்டது.. கொஞ்சம் பெரிதானால் புரியும் என்று நினைக்கிறேன்.
*******************************************************************
ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மழைத் தண்ணீர் விழும் பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டி இருக்கு.... மேலே போய் பார்த்தால், மேல்நிலைத் தொட்டியின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு PVC ஹோசைப் போட்டு, தண்ணீரை உறிஞ்சி மொட்டை மாடிக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தானாம்... இதே போல் ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.
**********************************************************************
பாட்டி(அவனது அம்மம்மா) தண்ணீர் அள்ளிக் (எங்க ஊரில் மெத்தி) கொடுக்கச் சொன்னால் நீங்களே போய் தண்ணி அள்ளிக்கங்க என்று சொல்கிறானாம்.
“ஒரு உதவி கூட செய்ய மாட்டியா” என்று கேட்டால் “என்னை செரப் படுத்தாதீங்க” என்று சொல்கின்றானாம். (செரப்படுத்ததல் என்றால் தங்கமணி ஊரில் கஷ்டப்படுத்துதல்) இதே போல் சாப்பாடு ஊட்டும் போது அவரை கஷ்டப்படுத்தக் கூடாதாம்.
இவையெல்லாம் அவ்வப்போது வரும் புகார்களின் தொகுப்பு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அங்கு ஆடு வளர்க்கிறார்கள்.. மதிய வேளைகளில் ஆடுகள் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வரும். வழக்கமாக வரும் வளவு(எங்க ஊரில்கொல்லைப் புறம்)க்கான பாதை மூடி இருக்கும் என்பதால் வீட்டுக்கு வெளியே நின்று கத்தும்.. உடனே இவன் வெளியே போய் “கத்தக் கூடாது .. அப்பா இப்ப வந்துடுவாங்க.. வந்து உங்களுக்கு கஞ்சி வைப்பாங்க” என்று ஆடுகளுடன் பேசிக் கொண்டு இருப்பானாம். (அப்பா என்பது தாத்தா)
**************************************************************
சமீபத்தில் தங்கமணிக்கும் மகனுக்கும் நடந்த உரையாடல்
மகன் : அம்மா, வயிறு ஏன் பெரிசா இருக்கு?
தங்கமணி : வயித்துக்குள்ள நம்ம குட்டி பாப்பா இருக்கு.
மகன் : குட்டிப்பாப்பா எப்பமா வெளியே வரும்?
தங்கமணி : இப்பதானே வளருது.. சீக்கிரமா வந்து உன்னோட விளையாடும்
மகன்: நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா?
**********************************************************************
மொழி வழக்கும் அவனுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. தங்கமணியின் பேச்சு வழக்கம் நெல்லை, நாஞ்சில் வழக்குகளின் கலவை. நாங்க வழக்கம் போல தேனி, மருத ஸ்லாங்கு.. பாண்டிய மண்ணின் மைந்தர்கள். கரிசல்காட்டுக்கு சொந்தக்காரர்கள்... ;-))
இதனால் தங்கமணியிடம் அடிக்கடி திட்டு வாங்க வைக்கும் ஒரு விடயம்.. எனது சித்தப்பா, அத்தை, அக்கா, அண்ணனை எல்லாம் ஒருமையில் கூப்பிடும் பழக்கம்.. மாற்ற முடியல.. :( அவர்களது ஊரில் இது ரொம்ப வித்தியாசமா பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
71 comments:
போட்டோவுக்கு அசத்தலா போஸ் கொடுத்திருக்கார் தலைவர்.
//எனது சித்தப்பா, அத்தை, அக்கா, அண்ணனை எல்லாம் ஒருமையில் கூப்பிடும் பழக்கம்.. மாற்ற முடியல.. :( //
அட அப்படியா!
கலக்கலா உணர்வுகளை கொட்டியிருக்கீங்க.. எப்ப ஊருக்கு கெளம்பறாப்போல :)
குழந்தையை விட்டு பிரிந்து இருக்கும் தந்தையின் ஏக்கம் ...
[[எனக்கு அப்படித்தான் தோனு...]]
என்னதான் தோலை உரித்து ஜன்னலில் காயப் போடப் போகிற தோரணையில் போஸ் கொடுத்தாலும் கள்ளம் இல்லா மழலை உள்ளத்தைக் கண்கள் காட்டிக் கொடுக்கிறதே! ஸ்வீட் பாய்!
குடும்பப் பொறுப்பு கூடுவதை தாய்மகன் சம்பாஷணையின் மூலம் அறிவித்திருப்பது அழகு. வாழ்த்துக்கள்:)!
குழந்தையினை பிரிந்திருக்கும் தந்தையின் ஏக்கம் தெரிகிறது. சேட்டைகள் செய்வது தான் குழந்தைகளுக்கு அழகு.. 3 வயதாச்சுல ஸ்கூலுக்கு அனுப்ப சொல்லுங்க.. செட்டை கொஞ்சம் குறையும்..
பிரிவின் வலியை மகனின் சின்னச்சின்ன குறும்புகளைப் பதிவு செய்வதிலேயே மிக அழகாக உணர்த்தி இருக்கிங்க. இப்படி ஃபோட்டோ போட்டுட்டிங்க, பொறவு நிலா நேர்ல பார்க்கிறப்போ கிண்டல் பண்ணினா நான் பொறுப்பில்லை :-)
ஜின்னா,
குழந்தைக் குறும்புகளை ரசிக்கத்தான் வேண்டுமே ஒழிய அவைகளில் சரி தவறு காணக்கூடாது.
விடுங்க அவனாவது நினைச்சதப் பேசட்டும்.
mm. nice !!!
தோல உரிச்சிடுவாரா??
அது சரி அப்பன மாதிரி தான இருப்பான்??
;-)))
தல
மழலை மொழி நிரம்ப ரசித்தேன்
பொடியன் செம சேட்டை!
வளர்ந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்.
இப்படிக்கு,
அப்படி நம்பிக் கொண்டிருக்கும் பல கோடி அப்பாவி அப்பாக்களில் ஒருவன்.
சூப்பர்ணா!
/
எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்”
/
அது சரி!
உங்க பையன் சோடை போவானா??
:))))))))))))
/
ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.
/
ஒரு வருங்கால விஞ்ஞானியின் முயற்சியை தடுத்திருக்கீங்க :(((((((((
தலைப்பு வருத்தத்தை தந்தாலும் உள்ளிருக்கும் விஷயம் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஜூனியருக்கு வாழ்த்துக்கள்
//நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா? //
இதுதாங்க குழந்தைகளோட உலகம். அது நிறைய வினோதங்கள வெச்சுருக்குற அற்புத குகை மாதிரி, என் மகள் வளர வள்ர நான் அதை உணர்கிறேன், அதே போல் வளர வளர அவர்கள் மழலை மாறி அவர்களும் சூழலுக்கு ஒப்ப மாறி!!!விடுவார்களோ என்ற கவலையும் சேர்ந்துவருகிறது.
இப்படி ஒரு சுட்டிப் பயல பிரிஞ்சு இருக்கிறது ரொம்பவே கஷ்டம்ங்க. தங்கமணி பாடு ரொம்ப திண்டாட்டம்தான்.
//வளர்ந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்.
இப்படிக்கு,
அப்படி நம்பிக் கொண்டிருக்கும் பல கோடி அப்பாவி அப்பாக்களில் ஒருவன்.//
இதையே
நானும் அம்மாக்களில் + ஒருத்தின்னு போட்டு ரிப்பீட்டிக்கிறேன்.
பையனின் குறும்புகளை அழகா எழுதிருக்கிங்க.ரசித்தேன்.பள்ளிக்கூடம் போனால் குறும்புலாம் குறைந்திடும்.
குழந்தைகளின் மழலைக் குறும்புகள் இருக்கே, அதுமாதிரி ஒரு சுவாரசியமான விசயம் ஒன்னுமிருக்காதுங்க.
தம்பி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே.
உங்களுக்காக காத்திருக்கும் இந்த விருதை ஏற்றுக்கொள்ளவும்.
http://azurillcrafts.blogspot.com/2009/07/blog-post_20.html
ஐயா... என்னை சீக்கிரம் கிளம்ப வைத்துவிடுவீர்கள் போல.. (என் மகன் நினைவு வந்துவிட்டது)
PREKG தானே என்று பார்க்காமல், நல்ல பள்ளியில் சேர்த்துவிடுங்கள். ஆரம்ப கல்வி மிக அவசியம். கல்வியை மனதில் ஏற்றவேண்டிய நுட்பம் அங்கிருந்துதான் ஆரம்பமாகும்.
சுள்ளானுக்கும் குட்டிபாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.
அழகானத் தொகுப்பு..தமிழ்பிரியன்! ரசித்தேன்...தங்கள் மகனின் சேட்டைகளை/ மழலைப் பேச்சுகளை! அட...மரியாதையா பேசலைன்னெல்லாம் கவலையேபடாதீங்க..ஏன்னா, மரியாதைன்னா என்னன்னே தெரியாதில்லையா...தெரிஞ்சபின்னும் சொல்லாம இருந்தாதான் கவலைப்படனும்!! ஓக்கே! அப்புறம், வாழ்த்துகள் - அடுத்த ரிலீஸுக்கு! :-)
சுவாரஸ்யமான அனுபவங்கள்
இன்னொன்னு..ப்ரீகேஜி சேர்த்துவிடுங்கள்.உங்கள் செல்லமகனுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்!ஆனால், எழுத விருப்பமில்லாவிட்டால் வற்புறுத்த வேண்டாமென்றும் சொல்லிவிடுங்கள்.
கொஞ்சம் குட்டிப் பயலையும் தூக்கி கிட்டு என் பதிவுப் பக்கம் வந்து போங்க. உங்களுக்கு விருது காத்துக்கிட்டிருக்கு. பி.கு:- இது ரெண்டாவது ரிலீசுக்கான விருது கிடையாது. அதுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் வரப்போகும் உறவுக்கு..
மகனின் பேச்சுகள்....ரசித்தேன்..
ஆகா தல...
அள்ளிக்கொட்டுறிங்க..
மருமகன் கலக்ல்ஸ்..!
:)
சூப்பர்! நம்ம மருமவன் கலக்குறான் போல!
வாழ்த்துக்கள் :))
இவண்
முத்துலெட்சுமி
-நம்ம்ம்ம்ம்பிக்கொண்டிருக்கும்
பெற்றோர் சங்கம்
குட்டி அட்டகாசம். ரசிச்சேன்.
நீங்க உணர்வது புரியுது. ஆனாலும் கொடிது கொடிது இளமையில் வறுமைன்னு பாட்டி சொல்லி வச்சுட்டுப்போயிருக்கே.
அவுங்க நல்லா இருக்கணுமுன்னுதானே நாம் இந்தப் பாடு படறோம்.
ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது வாழ்க்கையில் என்பதுதான் ....நிஜம்.
அழகழகான ஜூனியர் அப்டேட்ஸ்.! தோல உரிப்போம், பல்ல ஒடைப்போம்.. எங்கூர்க்காரன்னா அப்படித்தான் இருப்போம். (ஆனால் தலைப்பு கொஞ்சம் கஷ்டத்தைத் தந்தது தமிழ்)
வாழ்த்துக்கள்.. குழந்தை போட்டோ நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள் :))
பையன் அழகா இருக்கான். ஒரு குறும்பும் தெரிகிறதே கண்களில். வாழ்த்துக்கள்
:))) ரொம்ப சுட்டியா இருப்பார் போல...
///சென்ஷி said...
போட்டோவுக்கு அசத்தலா போஸ் கொடுத்திருக்கார் தலைவர்.
//எனது சித்தப்பா, அத்தை, அக்கா, அண்ணனை எல்லாம் ஒருமையில் கூப்பிடும் பழக்கம்.. மாற்ற முடியல.. :( //
அட அப்படியா!////
நன்றிங்க சென்ஷி!
///சென்ஷி said...
கலக்கலா உணர்வுகளை கொட்டியிருக்கீங்க.. எப்ப ஊருக்கு கெளம்பறாப்போல :)///
சீக்கிரமே கிளம்பறோம்ல... ;-))
///நட்புடன் ஜமால் said...
குழந்தையை விட்டு பிரிந்து இருக்கும் தந்தையின் ஏக்கம் ..
[[எனக்கு அப்படித்தான் தோனு...]]///
பாசம் எல்லாருக்கும் ஒன்னு தானுங்களே... அதான் சேம் சேம் ஃபீலிங்!
///ராமலக்ஷ்மி said...
என்னதான் தோலை உரித்து ஜன்னலில் காயப் போடப் போகிற தோரணையில் போஸ் கொடுத்தாலும் கள்ளம் இல்லா மழலை உள்ளத்தைக் கண்கள் காட்டிக் கொடுக்கிறதே! ஸ்வீட் பாய்!
குடும்பப் பொறுப்பு கூடுவதை தாய்மகன் சம்பாஷணையின் மூலம் அறிவித்திருப்பது அழகு. வாழ்த்துக்கள்:)!///
மழலை தானே... விபரம் புரிந்தால் சரியாகி விடும்.. பேசும் வரை பேசட்டும்.
வாழ்த்துக்களுக்கு நன்றிக்கோவ்!
/// Mrs.Faizakader said...
குழந்தையினை பிரிந்திருக்கும் தந்தையின் ஏக்கம் தெரிகிறது. சேட்டைகள் செய்வது தான் குழந்தைகளுக்கு அழகு.. 3 வயதாச்சுல ஸ்கூலுக்கு அனுப்ப சொல்லுங்க.. செட்டை கொஞ்சம் குறையும்..///
ஆமாம் ஃபாயிஷா! மாமி சொல்லிட்டாங்கன்னு சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பிடலாம்.. ;-))
//ராஜா | KVR said...
பிரிவின் வலியை மகனின் சின்னச்சின்ன குறும்புகளைப் பதிவு செய்வதிலேயே மிக அழகாக உணர்த்தி இருக்கிங்க. இப்படி ஃபோட்டோ போட்டுட்டிங்க, பொறவு நிலா நேர்ல பார்க்கிறப்போ கிண்டல் பண்ணினா நான் பொறுப்பில்லை :-)///
அவ்வ்வ்வ்வ்வ்வ் இடுப்பில் ஸ்டைலா துண்டு கட்டி இருக்காரே.. இதுக்கேவா? அப்ப தலைவரின் ரகசிய போட்டோக்களை எல்லாம் வெளியிட முடியாது போல இருக்கே.. ;-)))
///வடகரை வேலன் said...
ஜின்னா,
குழந்தைக் குறும்புகளை ரசிக்கத்தான் வேண்டுமே ஒழிய அவைகளில் சரி தவறு காணக்கூடாது.
விடுங்க அவனாவது நினைச்சதப் பேசட்டும்.////
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் அண்ணாச்சி! தங்கமணியிடம் நீங்க சொன்னதாவே சொல்லியாச்சு... :)
///gulf-tamilan said...
mm. nice !!!//
நன்றிங்ண்ணா!
///ராம் said...
தோல உரிச்சிடுவாரா??
அது சரி அப்பன மாதிரி தான இருப்பான்??///
அவ்வ்வ்வ்வ்வ் சித்தப்பு நீ என்ன யோக்கியமாய்யா?
///கானா பிரபா said...
;-)))
தல
மழலை மொழி நிரம்ப ரசித்தேன்///
நன்றி தல... அது இருக்கட்டும்.. நீங்க எப்ப இப்படி எல்லாம் எழுதப் போறீங்க???.. ;-)))
///Joe said...
பொடியன் செம சேட்டை!
வளர்ந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்.
இப்படிக்கு,
அப்படி நம்பிக் கொண்டிருக்கும் பல கோடி அப்பாவி அப்பாக்களில் ஒருவன்.///
கூட்டணிக்கு நிறைய ஆள் இருக்கு.. ஹைய்யா ஜாலி !
/// மங்களூர் சிவா said...
சூப்பர்ணா!///
நன்றிங்ண்ணா!
// மங்களூர் சிவா said...
/
எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்”
/
அது சரி!
உங்க பையன் சோடை போவானா??
:))))))))))))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..நாங்க எல்லாம் இப்படி எல்லாம் பேசலை.. சேட்டை செய்யல.. நாங்க ரொம்ப நல்லவிங்க
///மங்களூர் சிவா said...
/
ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.
/
ஒரு வருங்கால விஞ்ஞானியின் முயற்சியை தடுத்திருக்கீங்க :(((((((((////
ஓ... இது வேறயா? ;-))
///அமிர்தவர்ஷினி அம்மா said...
தலைப்பு வருத்தத்தை தந்தாலும் உள்ளிருக்கும் விஷயம் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஜூனியருக்கு வாழ்த்துக்கள்
//நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா? //
இதுதாங்க குழந்தைகளோட உலகம். அது நிறைய வினோதங்கள வெச்சுருக்குற அற்புத குகை மாதிரி, என் மகள் வளர வள்ர நான் அதை உணர்கிறேன், அதே போல் வளர வளர அவர்கள் மழலை மாறி அவர்களும் சூழலுக்கு ஒப்ப மாறி!!!விடுவார்களோ என்ற கவலையும் சேர்ந்துவருகிறது.////
நன்றி சகோதரி.. உங்களது எண்ணங்கள் தான் எனக்கும்..:)
///நிஜமா நல்லவன் said...
:)///
சிரிப்பானுக்கு நன்றி தல!
//// சுசி said...
இப்படி ஒரு சுட்டிப் பயல பிரிஞ்சு இருக்கிறது ரொம்பவே கஷ்டம்ங்க. தங்கமணி பாடு ரொம்ப திண்டாட்டம்தான்.
//வளர்ந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்.
இப்படிக்கு,
அப்படி நம்பிக் கொண்டிருக்கும் பல கோடி அப்பாவி அப்பாக்களில் ஒருவன்.//
இதையே
நானும் அம்மாக்களில் + ஒருத்தின்னு போட்டு ரிப்பீட்டிக்கிறேன்.//
வாங்க எல்லாருமா சேர்ந்து சங்கம் அமைச்சுடலாம்... ஹிஹிஹி
//Mrs.Menagasathia said...
பையனின் குறும்புகளை அழகா எழுதிருக்கிங்க.ரசித்தேன்.பள்ளிக்கூடம் போனால் குறும்புலாம் குறைந்திடும்.///
ஆமாம்.. பள்ளிக்கூடம் சென்றதும் ரொம்ப குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்... அதுவரை பேசித் தள்ளட்டும்.
///ஜோசப் பால்ராஜ் said...
குழந்தைகளின் மழலைக் குறும்புகள் இருக்கே, அதுமாதிரி ஒரு சுவாரசியமான விசயம் ஒன்னுமிருக்காதுங்க.
தம்பி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே.//
நன்றிங்க ஜோ அண்ணே! அப்புறம் எனக்கு அண்ணனா இருந்துகிட்டு இன்னும் கல்யாணம் முடிக்காம இருந்தா என்ன அர்த்தம்... ஹிஹிஹி
///Mrs.Faizakader said...
உங்களுக்காக காத்திருக்கும் இந்த விருதை ஏற்றுக்கொள்ளவும்.
http://azurillcrafts.blogspot.com/2009/07/blog-post_20.html///
நன்றி ஃபாயிஷா! ஏத்துக்கிட்டாச்சு.. பண முடிப்பெல்லாம் வேணாம்.. உங்க அன்பு இருந்தா போதும்.:)
///பீர் | Peer said...
ஐயா... என்னை சீக்கிரம் கிளம்ப வைத்துவிடுவீர்கள் போல.. (என் மகன் நினைவு வந்துவிட்டது)
PREKG தானே என்று பார்க்காமல், நல்ல பள்ளியில் சேர்த்துவிடுங்கள். ஆரம்ப கல்வி மிக அவசியம். கல்வியை மனதில் ஏற்றவேண்டிய நுட்பம் அங்கிருந்துதான் ஆரம்பமாகும்.
சுள்ளானுக்கும் குட்டிபாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.///
நன்றிகள் பீர்! இந்த வருடக் கடைசியில் ஸ்கூலில் சேர்த்துடலாம்..:)
///சந்தனமுல்லை said...
அழகானத் தொகுப்பு..தமிழ்பிரியன்! ரசித்தேன்...தங்கள் மகனின் சேட்டைகளை/ மழலைப் பேச்சுகளை! அட...மரியாதையா பேசலைன்னெல்லாம் கவலையேபடாதீங்க..ஏன்னா, மரியாதைன்னா என்னன்னே தெரியாதில்லையா...தெரிஞ்சபின்னும் சொல்லாம இருந்தாதான் கவலைப்படனும்!! ஓக்கே! அப்புறம், வாழ்த்துகள் - அடுத்த ரிலீஸுக்கு! :-)///
நன்றி ஆச்சி! உங்களுடைய கருத்தையும் மைண்ட்ல வச்சுக்கலாம்..:)
//அத்திரி said...
சுவாரஸ்யமான அனுபவங்கள்//
நன்றி அத்திரி!
///சந்தனமுல்லை said...
இன்னொன்னு..ப்ரீகேஜி சேர்த்துவிடுங்கள்.உங்கள் செல்லமகனுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்!ஆனால், எழுத விருப்பமில்லாவிட்டால் வற்புறுத்த வேண்டாமென்றும் சொல்லிவிடுங்கள்.////
ஓக்கே ஆச்சி! தங்கமணியிடம் இந்த விஷயத்தை கவனமா சொல்லி விடுகின்றேன்.
///சுசி said...
கொஞ்சம் குட்டிப் பயலையும் தூக்கி கிட்டு என் பதிவுப் பக்கம் வந்து போங்க. உங்களுக்கு விருது காத்துக்கிட்டிருக்கு. பி.கு:- இது ரெண்டாவது ரிலீசுக்கான விருது கிடையாது. அதுக்கு வாழ்த்துக்கள்.////
விருதுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சுசி அக்கா!
///பாச மலர் said...
வாழ்த்துகள் வரப்போகும் உறவுக்கு..
மகனின் பேச்சுகள்....ரசித்தேன்..///
நன்றிங்க பாசமலர்!
//தமிழன்-கறுப்பி... said...
ஆகா தல...
அள்ளிக்கொட்டுறிங்க..////
ஆகா.. இப்படி உசுப்பேத்தி உசிப்பேத்திதானய்யா உடம்பு புண்ணாகிப் போயி கிடக்கு.. ;-))
///தமிழன்-கறுப்பி... said...
மருமகன் கலக்ல்ஸ்..!
:)///
நன்றி மச்சான்!
// பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
சூப்பர்! நம்ம மருமவன் கலக்குறான் போல!///
ஆமாங்க பி.ப.பதிவரே!.. ;-)))
///முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள் :))
இவண்
முத்துலெட்சுமி
-நம்ம்ம்ம்ம்பிக்கொண்டிருக்கும்
பெற்றோர் சங்கம்////
வருக! வருக! சங்கத்தின் புது உறுப்பினரே வருக!
////துளசி கோபால் said...
குட்டி அட்டகாசம். ரசிச்சேன்.
நீங்க உணர்வது புரியுது. ஆனாலும் கொடிது கொடிது இளமையில் வறுமைன்னு பாட்டி சொல்லி வச்சுட்டுப்போயிருக்கே.
அவுங்க நல்லா இருக்கணுமுன்னுதானே நாம் இந்தப் பாடு படறோம்.
ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது வாழ்க்கையில் என்பதுதான் ....நிஜம்.///
ஆமாங்க டீச்சர்.. பதிவின் கடைசியில் இந்த வரிகளை சேர்க்க எண்ணினேன்.. ஆனால் நாம ஏதோ தியாகம் செய்ற மாதிரி காட்டுவது போல் இருந்ததால் விட்டுட்டேன்.. :)
///ஆதிமூலகிருஷ்ணன் said...
அழகழகான ஜூனியர் அப்டேட்ஸ்.! தோல உரிப்போம், பல்ல ஒடைப்போம்.. எங்கூர்க்காரன்னா அப்படித்தான் இருப்போம். (ஆனால் தலைப்பு கொஞ்சம் கஷ்டத்தைத் தந்தது தமிழ்)///
என்னது உங்க ஊர்க்காரனா? பாவம்ன்னு உங்க பட்டிக்காட்டுல வந்து பொண்ணு எடுத்தோம்ல.. இதுக்கு இதுவும்சொல்லுவீங்க.. இன்னமும் சொல்லுவீங்கய்யா... ;-))
///பொன்ஸ்~~Poorna said...
வாழ்த்துக்கள்.. குழந்தை போட்டோ நல்லா இருக்கு..///
தலைவீ........ நீங்க தானா அது? நம்ப முடியாம கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கிட்டேன்... அப்புறமா ஒரு டான்ஸூம் போட்டுட்டேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பூர்ணாக்கா!
///ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் :))//
நன்றி ஆயில்யன்!
///நையாண்டி நைனா said...
பையன் அழகா இருக்கான். ஒரு குறும்பும் தெரிகிறதே கண்களில். வாழ்த்துக்கள்///
நன்றி நையாண்டி நைனா!
///நாணல் said...
:))) ரொம்ப சுட்டியா இருப்பார் போல...///
ஆமா... அத்தைகள் மட்டும் கொஞ்சமாவா சுட்டித்தனம் செய்தீங்க... எல்லாம் உங்களை மாதிரி தான்... நாங்க எல்லாம் நல்ல பசங்க.:-)))
Post a Comment