"நம்மைப் போன்ற பலி மிருகங்களுக்கு
அவர்கள்
கடைசி உணவைப் பரிமாறுகிறார்கள்
இரவு முடியும்போது
கொலைக்கத்தியின் கூர்மையில்
சூரியக்கதிர்கள் வெளிப்படுகையில்
துடித்துச் சாக நாமிருக்கக் கூடாது
எனது காதலே!
நாமிந்த இரவின் மறைவில்
பரஸ்பரம் கொம்புகளால்
குத்திக்கொண்டு சாகலாம் "
மொழி பெயர்ப்பு : ஆசிப் மீரான்
கையொப்பு.. ஒரு அழகான கவிதையை படமாக்கி இருக்கிறார்கள். வழி நெடுக உயிரோட்டமான காட்சி அமைப்பு.. என்ன சொல்ல.. படம் பார்த்தேன். முடிவின் மிரட்சியில் சில நிமிடங்கள் செயலற்று போக மட்டுமே முடிந்தது.
அறிமுகம் செய்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு நன்னிகள். அவரது படம் பற்றிய கருத்து இங்கு
எனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையையும், பரிதவிப்பையும் இன்னும் அதிகமாக்கி விட்டது என்று மட்டும் சொல்ல முடிகின்றது.
நாளைக்கு ப்ளஸ்ஸி(Blessy)யின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த bhramaram படம் பார்க்கப் போகின்றேன். இவர்களது கூட்டணியில் வந்த தன்மாத்ரா என்னுடைய ஆல் டைம் பேவரைட்... நாளைக்கு எப்படி மூடு இருக்கும் என்பது தெரியாததால் உடனடிப் பதிவு இது.
கையொப்பு டிவிடி பிரிண்ட்டில் பார்த்தேன்.. இங்கிருந்து 1.36 GB அளவு.
8 comments:
1 வது நாந்தேன்.. விமர்சனத்துக்கு வெயிட்டிங்...
அக்கா, விமர்சனம் எல்லாம் எழுதும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை நாம.. படம் முடிந்ததும் தோணியதை பதிவாக்கிட்டேன்.. அவ்வளவு தான்.
அப்டீங்களா தம்பி. நீங்க சொன்னா சரிதான் தம்பி.
எனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையையும், பரிதவிப்பையும் இன்னும் அதிகமாக்கி விட்டது என்று மட்டும் சொல்ல முடிகின்றது.]]
நல்லாயிருக்கு நண்பரே!
நேற்று என் நண்பரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பார்க்கனும்... பதிவுக்கு நன்றி தமிழ்ப் பிரியன்...
இந்தப் படம் பற்றி சமீபத்தில் ஜெஸிலா அவர்கள் பதிந்தது: http://jazeela.blogspot.com/2009/07/blog-post.html
கையொப்பு படம் பார்க்கவில்லை. ஆர்வத்தைத் தூண்டியுள்ளீர்கள்!!
எனக்கும் சொல்லி இருந்திங்களே தல..அது இந்தப்படம்தான?
Post a Comment