சின்ன, சின்ன
தயக்கங்களுடன்
கலைந்து கிடந்த
என் நெற்றிப் பொட்டை
நீ சரி செய்த நாளில்
துவங்கிற்று
உனக்கும், எனக்குமான
பெயரிடப்படாத உறவு!
சரியா, தவறா...
நெறியா, பிழையா
எனும் எல்லா குழப்பங்களையும்
விழுங்கியது
உன் கள்ளமற்ற சிரிப்பு!
நியாமற்றதாய்
தோன்றினும்
நீண்டு கொண்டே
போகிறது
நம் நேசம்
வான் வெளி போல்...
காட்சிப் பிழை இது
கானல் சுகமென
உலகம் மறுப்பினும்
வானும் சுகமே!
உன்னோடு என்
வாழ்வும் சுகமே!
க. அகிலா, சென்னை.
நன்றி : வாரமலர்
கலைந்து கிடந்த
என் நெற்றிப் பொட்டை
நீ சரி செய்த நாளில்
துவங்கிற்று
உனக்கும், எனக்குமான
பெயரிடப்படாத உறவு!
சரியா, தவறா...
நெறியா, பிழையா
எனும் எல்லா குழப்பங்களையும்
விழுங்கியது
உன் கள்ளமற்ற சிரிப்பு!
நியாமற்றதாய்
தோன்றினும்
நீண்டு கொண்டே
போகிறது
நம் நேசம்
வான் வெளி போல்...
காட்சிப் பிழை இது
கானல் சுகமென
உலகம் மறுப்பினும்
வானும் சுகமே!
உன்னோடு என்
வாழ்வும் சுகமே!
க. அகிலா, சென்னை.
நன்றி : வாரமலர்
7 comments:
வாழ்த்துகள்!
அகிலா!
நன்றி பகிர்தலுக்கு தமிழ்பிரியன்.
வாழ்த்துகள் அகிலா!
வாழ்த்துகளை நட்புடன் பெற்றுக் கொண்டிருக்கும் ஜமால் அவர்களுக்கும், அதே நட்புடன் அகிலா அவர்கட்கும் வாழ்த்துகள்!
வாழ்த்துகள் அகிலா!
வாழ்த்துகள் அகிலா!
அகிலாவுக்கு வாழ்த்துக்கள்
நானும் பக்கத்து ஊர்காரனுங்க பிரியன்
வாழ்த்துகள் அகிலா!
பகிர்தலுக்கு நன்றி தமிழ்பிரியன்!
Post a Comment