சமீபத்தில் பார்த்த படம் ‘நாடோடிகள்’. பலரும் பல கோணங்களில் யோசித்து இருக்கலாம். கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று காதலுக்காக நண்பர்கள் செய்யும் தியாகம். பலத்த இழப்புகளுக்குப் பிறகு நண்பனின் காதலை ஒன்று சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள். பார்க்க அழகாகத் தான் இருக்கிறது.
காதல் என்பது அற்புதமான உணர்வு. காதல் என்ற வார்த்தைக்கு இன்றைக்கு சமூகம் கொடுத்துள்ள வியாக்கியானத்தில் நமக்கு உடன்பாடில்லை.
அது கல்யாணத்தில் முடிந்தால் தான் வெற்றி என்பதில் அர்த்தமில்லை. காதல் என்பதை வரையறுத்துக் கட்டமைக்கும் வேலையை தமிழ் சினிமாவிற்கு நாம் கொடுத்து பல காலமாகி விட்டது. அது தனது தேவைக்குத் தகுந்தாற் போல் மாற்றி மாற்றித் தருவதை நாமும் பே என்று ஏற்றுக் கொண்டு வருகின்றோம்.
உண்மையான நண்பனின் கடமை இதுவா? காதல் என்ற வியாதி வந்ததும் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவுகள் யாரும் தேவையில்லையா? நண்பர்கள் உதவியதும் கூட்டிக் கொண்டு ஓடுவது தான் உண்மையான காதலா? உயிரைக் கொடுத்தாவது உங்களை சேர்த்து வைப்பேன் என்று குருட்டாம் போக்கா உண்மையான நண்பன் எவனும் சொல்ல மாட்டான்.
காதல் என்பது இன்றைய சினிமாக்களில் டீன் ஏஜ் பருவத்தில் ஏதோ சிறுநீர் கழிப்பது போல் கட்டாயமாகிப் போய் விட்டது. பள்ளி மாணவன் முதல் கொண்டு தனது ஆள் என்று யாரையாவது அடையாளம் காட்ட வேண்டியது இன்றைய கெளரவப் பிரச்சினைகளில் ஒன்றாகிப் போய் விட்டது. இந்த சூழலில் நாடோடிகள் போன்ற படங்கள் ஓடிப் போகும் கலாச்சாரத்தை வழியுறுத்துகின்றது போன்ற பார்வையை ஏற்படுத்துகின்றது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. காதலர்களுக்கு மூளையும் இருப்பதில்லை. ஆம் காதலிக்கும் போது காதலன்/லி யின் பலவீனங்கள் எதுவும் கண்களுக்குத் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் நல்லவை மட்டுமே.. திருமணத்திற்குப் பின் வாழ்வின் அத்தியாசவசிய தேவைகளில் சிக்குண்டு திணறும் போதுதான் பலவீனங்கள் வெளிப்பட்டு காதல் என்ற நீர்க்குமிழி உடையும் போது வாழ்வும் சீர்கெடுகின்றது.
உண்மையான நண்பன் காதலர்களின் சமூக, பொருளாதார, மனோரீதியிலான விடயங்களை ஆராய்ந்து அவர்களால் மேற்கொண்டு எழும் சவால்களை எதிர்கொள்ள இயலுமா என்று சிந்திக்க வேண்டும். எந்த சவாலையும் சந்திக்க திறமில்லாதவர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை புண்ணாக்குவதை விட நண்பனின் இந்த காதல் என்னும் இனக்கவர்ச்சியை விட்டு அவர்களை விலக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது.
பொதுவாக தமிழ் சினிமாக்களில் வாழ்வின் ஒரு பகுதி தான் வழக்கமாகக் காட்டப்படும். காதல் படம் என்றால் காதலர்கள் இணைவது வரை மட்டுமே.. அதற்கு மேல் காட்ட இயலாது. அப்படியே காட்டுவதானாலும் அது ஹீரோயிச படமாகவோ, வி.சேகர், விசு வகை படங்களாகவோ தான் இருக்கும்.. இன்றைய வயதான ஹீரோக்கள் கூட அப்பா கேரக்டர்களில் நடிக்க விரும்புவதில்லை..
எனவே தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் மாயை ஒரு கானல் நீர் போலத் தான். உண்மையில் காதல் என்னும் அற்புதம் நமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் காதலியுங்கள். அதில் தான் சுகமே உள்ளது. அப்படியே டீன் ஏஜில் காதல் வர வேண்டும் என்றால் உங்கள் மதத்தில், உங்கள் ஜாதியில், உங்கள் வசதிக்குத் தகுந்தாற் போல் காதலியுங்கள்.
ஆங்ங்ங்.. படத்தைப் பற்றி சொல்லலியே.. படம் எடுக்கப்பட்ட விதம் மிக அருமை.. ஒவ்வொரு கட்டமும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. காதல், பாசம், அன்பு, பெற்றோர் என அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
காதல் செய்ய நினைப்பவர்களும், காதலிப்பவர்களும், காதல் செய்யும் வயதில் அல்லது அந்த வயதுக்கு வரப் போகும் குழந்தைகள் வைத்திருப்பவர்களும் பார்க்க வேண்டிய படம்.
12 comments:
மீ த ஃபஷ்ட்டேய் :)
எத்தனை கொடுமையான பப்படங்களயே பாத்த நாம , இந்த நல்ல படத்தை பாக்காம விட்டுடடலாமா.
//உயிரைக் கொடுத்தாவது உங்களை சேர்த்து வைப்பேன் என்று குருட்டாம் போக்கா உண்மையான நண்பன் எவனும் சொல்ல மாட்டான்//
சரியாத்தான் தோணுது நீங்க சொல்லறது
நல்ல கருத்து நண்பரே . படமும் நன்றாகத்தான் இருந்தது அந்த குத்து பாட்டை தவிர
நல்ல கருத்து நண்பரே . படமும் நன்றாகத்தான் இருந்தது அந்த குத்து பாட்டை தவிர
இன்றைய வயதான ஹீரோக்கள் கூட அப்பா கேரக்டர்களில் நடிக்க விரும்புவதில்லை..\\
சூப்பர் குத்து.
மற்றபடி ...
படம் பெர்ஃபார்மன்ஸ் நல்லாயிருக்கு.
குத்து பாட்டு தேவையே இல்லையே, ஏன் வச்சாங்கன்னு தெரியலை.
சசியின் தங்கையா நடித்தவர் ஊமையாமே !
படம் நல்லாயிருக்குன்னு பலரும் சொல்கிறார்கள். கண்டிப்பா பார்க்கணும்.
இப்போது வந்த படங்களில் இது தேவலாம்..!
குருவி போல் கொத்தாமலும்
வில்லு போல் குத்தாமலும்..
பார்க்குற மாதிரி எடுத்து இருக்காங்க
நல்ல கருத்துக்கள் தமிழ் பிரியன்!
//உண்மையில் காதல் என்னும் அற்புதம் நமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் காதலியுங்கள்.//
ஹ்ம்ம்ம் சரியா சொல்லி இருக்கீங்க...
நானும் பார்த்தாச்சு...!!!!!
\\
உண்மையில் காதல் என்னும் அற்புதம் நமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் காதலியுங்கள்
\\
சரி...
//அப்படியே டீன் ஏஜில் காதல் வர வேண்டும் என்றால் உங்கள் மதத்தில், உங்கள் ஜாதியில், உங்கள் வசதிக்குத் தகுந்தாற் போல் காதலியுங்கள்.//
தல, அப்படியெல்லாம் பாத்து காதலிக்க முடியாது தல..
ஆனா நண்பர்கள் கண்மூடித்தனமா இருக்கக்கூடாதுங்கிறது பலமா உரைக்கப்பட வேண்டிய விசயம்.
Post a Comment