Thursday, July 23, 2009

துர்காவுக்கு திருமண வாழ்த்துக்களும், எனக்கு வந்த சில விருதுகளும்...


முதலில் துர்கா விஸ்வநாத்துக்கு இனிமையான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். துர்கா விஸ்வநாத்?? யாருன்னு புரியாம இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. சில ஆண்டுகளுக்கு முன் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற பாடகர்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாடகர்களில் ஒருவர் தான் துர்கா விஸ்வநாத். போட்டியின் இறுதியில் இவரால் வெற்றி பெற முடியா விட்டாலும் தனது அழகிய கொஞ்சும் குரலில் பல பாடல்களைப் பாடி அசர வைத்தவர்.

அப்போட்டியில் இவர் என்னிஷ்டம் என விருப்பப் பாடலாக பாடிய “தும்பி வா தும்பக் குடத்தின்” பாடல் எனது விருப்பப்பட்டியலில் முதலில் உள்ள பாடல். என் செல்பேசியில் இருக்கும் இப்பாடல் மகிழ்ச்சியான, துக்கமான, எரிச்சலான, குழப்பமான எல்லா கணங்களில் என்னை வருடிச் சென்று இருக்கின்றது. சமீபத்தில் துர்கா விஸ்வநாத்துக்கு திருமணம் முடிந்து இருக்கின்றது. அவரது குரல் போலவே வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.

தும்பி வா பாடல் யூ டியூபில் இருந்து...

இப்பாடலை செல்பேசியில் கேட்க 3GP பார்மேட்டில் பதிவிறக்க

இவர் பாடியவைகளை யூடியூபில் தேட இங்கு செல்லலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்து விருதுகள் நமக்கு வழங்கி கெளரவித்தவர்களுக்கு நன்றி நவிலல். இந்த பட்டாம்பூச்சி விருது சில மாதங்களுக்கு முன்னால் வலையுலகில் பிரபலமா இருந்தது. நிறைய பேர் தங்கள் பதிவிலும் ஓரங்களில் போட்டுக் கொண்டார்கள்.. ஆனா நமக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கல.. ஏன் கரப்பான் பூச்சி விருது கூட கிடைக்கல.. அதனால் சீச்சீ இந்த பழம் புளிக்கும்ன்னு விட்டாச்சு.. ஆனா இப்ப எங்க ஸ்வீடன் சுசி அக்கா அந்த விருதை நமக்கு கொடுத்து கெளரவிச்சு இருக்காங்க... நன்றி சுசி அக்கா!

அதே போல் இப்ப வலம் வரும் சுவாரஸ்யமான பதிவர் விருதை சகோதரி ஃபாயிஷா கொடுத்து இருக்காங்க.. நன்றி ஃபாயிஷா! இப்ப இந்த விருதை நாமலும் ஐந்து பேருக்கு தந்துடலாமுன்னு இருக்கேன். காசு, பண முடிப்பெல்லாம் தர முடியாது.. ஒன்லி பாசம் மட்டுமே விருது.1. தேனியார் என்ற விஜயராஜா.. எங்க மாவட்டத்துக்காரர். அருமையா எழுதுவார். இப்ப ஆப்பிரிக்கா காட்டுக்குள் எங்கேயோ இருக்கார்ன்னு நினைக்கிறேன். இணைய தொடர்பு இல்லாததால் எழுதாம இருக்கார் போல... நல்ல சுவாரஸ்யமான எழுத்தாளர். அவருக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்கின்றேன்.

2. தமிழ் மகன்.. இணையத்தில் எழுதி வரும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ் மகனுக்கு இவ்விருதை அளிக்கின்றேன். அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுவதில் சிறந்தவர். கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுக்கு சொந்தக்காரர்.

3. விக்னேஷ்வரன் - மலேசியாவில் இருந்து வலை பதியும் சகோதரர் விக்கி.. நல்ல தேர்ச்சியடைந்துள்ளார். ஒரு பதிவுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை ஆச்சர்யப்பட வைக்கின்றது.

4. ஆயில்யன்... நம்ம சாதிசனம்.. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார். இவரை வெறும் ஆயில்யன் என்பதை விட கவிஞர் ஆயில்யன் என்று அழைக்கலாமா என்று எங்கள் சங்கம் ஆய்வு செய்து வருகின்றது. ஏன்னு கேள்வி கேட்கக் கூடாது.. அப்படிக் கேட்டா எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )

5. தமிழன் கறுப்பி வழக்கம் போல் தம்பிக்கு ஒரு விருது கொடுத்தாச்சு... அசட்டையாக எழுதுவார். ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கனும் என்பது என் கனவு. அம்புட்டு சுவாரஸ்யமான ஆளு.. ஆனா முடியுமான்னு தெரியல.

இந்த பட்டியலில் மகளிருக்கு இடம் இல்லாமப் போனது வருத்தமே.. சுவாரஸ்யமான பலர் இருந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இதை யாராவது கொடுத்து இருக்காங்க.. அதனால் யாருக்கும் கொடுக்காமப் போக முடியாது என்பதால் பதிவுலகை விட்டுக் காணாமல் போன கோகிலவாணி, மற்றும் வித்யா கலைவாணி ஆகிய இரு சுவாரஸ்யமான பதிவர்களுக்கும் இவ்விருதை கொடுக்கின்றேன்.

21 comments:

நட்புடன் ஜமால் said...

யாரென்று தெரியாவிட்டாலும்


சகோதரி துர்காவுக்கு வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

விருதுகளுக்கு வாழ்த்துகள்


தாங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :) எல்லாருக்கும்..
ஆமா இப்படி எழுதுவதைக் குறைத்துக்கொண்ட பெண்கள் சிலரை சத்தமே காணோமே.. அவ்வளவு பிசியா இருக்காங்களா.. ? :)

VIKNESHWARAN said...

அண்ணே விருதுக்கு நன்றி :)

ராமலக்ஷ்மி said...

துர்காவுக்கு வாழ்த்துக்கள்! ம்ம். நான் எல்லோருக்கும் பட்டாம்பூச்சி விருதைப் பகிர்ந்து கொடுத்ததில் நீங்களும் உண்டு. இப்படி ஃபீல் பண்ணிட்டீங்களே:(! ’பழம் புளிக்கும்’ என்று சொல்லாமல் நீங்கள் விருதுக்கு அப்பாற்பட்டவர் என காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்!

இப்போது தேடி வந்திருக்கும் சுவாரஸ்ய பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்:)! உங்களால் வழங்கப் பட்டவர்களுக்கும்!!

கோகிலவாணி நம்ம ஊர்தானேங்க?

நாணல் said...

துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்.. .

இரண்டு விருதுக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா..
விருது பெற்றவருக்கும் என் வாழ்த்துக்கள் ..

ஸ்ரீமதி said...

//எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )//

Girrrrrrrrrrrr.... :)))))))

வால்பையன் said...

விருது பெற்றவர்களுக்கும், துர்க்காவுக்கும் வாழ்த்துக்கள்!


துர்கா விஸ்வநாத் ப்ளாக்கரா!?

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...
விருது பெற்றவர்களுக்கும், துர்க்காவுக்கும் வாழ்த்துக்கள்!
துர்கா விஸ்வநாத் ப்ளாக்கரா!?///
இல்லீங்க வால்பையன்.. என் ஆத்மார்த்தமான பாடகர்.. அவ்வளவு தான்.
http://www.durgaviswanath.com/

சுசி said...

தமிழ் பிரியன்!
தப்பு ரிப்பீட்டு ரிப்பீட்டு. என்னதான் ஸ்வீடன் சுசி ரைமிங்கா இருந்தாலும்
நான் நார்வே சுசி ரிப்பீட்டு ரிப்பீட்டு .
அப்புறம் வாழ்த்துக்கள் உங்களுக்கு, துர்காவுக்கு, மற்றைய விருது பெற்றவர்களுக்கு.

தமிழ் பிரியன் said...

///நட்புடன் ஜமால் said...
யாரென்று தெரியாவிட்டாலும்
சகோதரி துர்காவுக்கு வாழ்த்துகள்
விருதுகளுக்கு வாழ்த்துகள்
தாங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
///

நன்றி ஜமால்!

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :) எல்லாருக்கும்..
ஆமா இப்படி எழுதுவதைக் குறைத்துக்கொண்ட பெண்கள் சிலரை சத்தமே காணோமே.. அவ்வளவு பிசியா இருக்காங்களா.. ? :)////
என்னங்க அக்கா செய்ய... அவங்க சூழலும் ஒத்துழைக்கனுமே..:(

தமிழ் பிரியன் said...

///VIKNESHWARAN said...

அண்ணே விருதுக்கு நன்றி :)///
ஓக்கே.. ஓக்கே.. இதுக்கெல்லாமா என்னை புகழ்வீங்க... ஹிஹிஹி

தமிழ் பிரியன் said...

////ராமலக்ஷ்மி said...

துர்காவுக்கு வாழ்த்துக்கள்! ம்ம். நான் எல்லோருக்கும் பட்டாம்பூச்சி விருதைப் பகிர்ந்து கொடுத்ததில் நீங்களும் உண்டு. இப்படி ஃபீல் பண்ணிட்டீங்களே:(! ’பழம் புளிக்கும்’ என்று சொல்லாமல் நீங்கள் விருதுக்கு அப்பாற்பட்டவர் என காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்!

இப்போது தேடி வந்திருக்கும் சுவாரஸ்ய பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்:)! உங்களால் வழங்கப் பட்டவர்களுக்கும்!!

கோகிலவாணி நம்ம ஊர்தானேங்க?////

அக்கா.. ஆனாலும் தம்பி மேல உங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ் அதிகமாகவே இருக்கு.. ;-)))

நன்றிகள்!

தெரியல.. நல்லா எழுதிகிட்டு இருந்தாங்க... ரீடரில் படிச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப எழுதுவதில்லை.. :(

தமிழ் பிரியன் said...

///நாணல் said...
துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்.. .
இரண்டு விருதுக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா..
விருது பெற்றவருக்கும் என் வாழ்த்துக்கள் /////
நன்றி நாணல்!

தமிழ் பிரியன் said...

////ஸ்ரீமதி said...

//எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )//

Girrrrrrrrrrrr.... :)))))))//

என்ன கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மச்சான் மேல இருக்கும் அக்கறையில் எழுதிட்டோம்.. இதுக்கு கூடவா உரிமை இல்ல எங்களுக்கு... ;-)))

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே இவங்க பாட்டு நீங்க முன்னாடியும் ஒருவாட்டி பதிவுல போட்டிருக்கிறிங்கல்ல?

துர்க்கா விஸ்வநாத்துக்கு வாழ்த்துக்கள்..!

தமிழன்-கறுப்பி... said...

தல பட்டாம்பூச்சி டைம்ல நீங்க ஊர்ல இருந்திங்க..

(நிஜ பட்டாம்பூச்சி பிடிச்சுட்டுன்னு நான் சொல்லல)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் தல...
கிடைத்த விருதுகளுக்கும், கொடுத்த விருதுகளுக்கும்!

தமிழன்-கறுப்பி... said...

//அசட்டையாக எழுதுவார்.//

அது சரி..!யாரும் அடிக்க வரைலைன்னா சரிதான் :)

\\
ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கனும் என்பது என் கனவு. அம்புட்டு சுவாரஸ்யமான ஆளு.. ஆனா முடியுமான்னு தெரியல.
\\

ஆஹா...!
நான் சுவாரஸ்யமான ஆளா என்னன்னு தெரில(பழகின எந்தப்பொண்ணுமே அப்படி சொல்லல)ஆனா பேசலாம் தல...

:)

சந்ரு said...

விருது பெற்றவர்களுக்கும், துர்க்காவுக்கும் வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails