Friday, July 17, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....மக்களே நல்லா இருக்கீங்களா? நேரம் இல்லாம திணறிக்கிட்டு இருக்கேன்..நைட்டு லேட்டா வேலையில் இருந்து வந்து கொஞ்சமா யார்கிட்டயாவது மொக்கையைப் போட்டுட்டு தூங்கப் போயிடுறேன்... நேத்து மட்டும் சீக்கிரம் வந்து ஒரு ப்டம் பார்த்தாச்சு.. அதைப் பற்றி எழுதியாச்சு..ஆனாலும் நம்ம சுசி அக்கா ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விட்டுட்டாங்க.. அக்கா சொல்லைத் தட்டக் கூடாதுன்னு காலையில் எழுந்து பதிவு எழுதி போட்டாச்சு..:)

இனி விடயத்திற்குப் போகலாம்... நாம படிச்சது ஒரு அரசு நடுநிலைப்பள்ளி.. அப்ப எங்க ஏரியாவுக்குள் எல்கேஜி, யூகேஜி எல்லாம் தெரியாது.. முதலில் அரைக் கிளாஸ் தான்.. முதல் வகுப்பில் முதல் வகுப்புப் பசங்களுடன் அடுத்த ஆண்டுக்கான பசங்க உட்கார்ந்து இருப்பாங்க... முதன் முதலில் போன அந்த நாள் நினைவில் இருக்கு.

எங்க சித்தப்பா தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றது.. ஒரே அடம் பிடிச்சு அழுகை.. என்னோட முதல் வகுப்பு ஆசிரியை திருமதி.ஞானம்மாள் டீச்சர். அழுகையை நிப்பாட்ட கையில் சாக்பீஸ் கொடுத்து உட்கார வச்சாங்க.. அங்கயே அரை கிளாஸ், ஒண்ணாப்பு படிச்சாச்சு... ஒரு ஆசிரியையிடன் இரண்டு ஆண்டுகள் படிச்சது அவங்க ஒருவரிடம் தான்...:) யார் கேட்டாலும் ஒண்ணாப்பு D செக்சன் என்று சொல்வேன்.
என்னோட சதீஸ், அப்பாஸ்,கமல், கோபால், வீரர் எல்லாம் படிச்சாங்க... முதல் வகுப்பில் 500 க்கு 500 மார்க் வாங்கியது இன்னும் நினைவில் இருக்கு..:))

இரண்டாவதுக்கு திருமதி.மும்தாஜ் டீச்சர்.. அது மட்டும் தான் நினைவில் இருக்கு. மத்தபடி இந்த முறை கூட ஊரில் இருக்கும் போது அவர்களை பார்த்தேன்.

மூன்றாம் வகுப்புக்கு திரு.கோபாலகிருஷ்ணன் சார்... ஆட்டோகிராபில் ஒரு வாத்தியார் வருவாரே அது மாதிரி ஆனா.. ரொம்ப நல்ல டைப்.. கோபம் வந்தா அடி பிச்சுடுவார்..:) என்னோட பிரண்டு காமராஜ் (அவனுக்கு பட்டப் பெயர் கொல்லைப்பீ) கொண்டு வந்த புளியங்காய்களைப் பிடுங்கி கிளாஸூக்கு வெளியே விட்டு எறிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நினைவில் இருக்கு.

நாலாப்புக்கு திருமதி.சந்திரா டீச்சர்... நல்ல டீச்சர்.. நாலாப்பு படிக்கும் போது நல்ல மழையில் மரம் சாய்ந்து கிளாஸின் மீது விழுந்து சுவர் எல்லாம் இடிந்து கிளாஸ் எல்லாம் ஒரே மழைத் தண்ணீர்..

ஐந்தாம் வகுப்புக்கு த கிரேட் திரு.தனுஷ்கோடி. தனுஷ்கோடி ஆசிரியரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. இங்கு அதீத திறமைசாலியான ஆசிரியர்.

இந்த ஆண்டைப் பற்றி நிறைய நினைவில் இருக்கு... எங்க அப்பா அப்பொழுது திண்டுக்கல் - கம்பம் பஸ்ஸில் நடத்துனர்.. (பாத்திமா ரோடு வேஸ்). இந்த இரண்டு ஊருக்கும் இடையில் எங்க ஊர்.. நைட் 7:30 மணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டில் எங்க தாத்தாவோட போவோம். அங்கேயே பஸ் வரும் வரை விளையாடிக்கிட்டு இருப்பது இன்னும் நினைவில் இருக்கு.

அப்புறம் ஒரு முக்கியமான, யாருக்கும் சொல்லாத அழியாமல் உறுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வும் இருக்கு... சொல்லிடவா? ம்ம் சொல்லிடலாம். அஞ்சாப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் போட்டி எல்லாம் வைத்து பரிசளிப்பார். குறிப்பா கட்டுரைப் போட்டியில் எழுத்து அழகா இருக்கனும்.. நமக்கு தான் எழுத்து செம டேமேஜா இருக்குமே.. அதனால் பிரைஸ் கிடைக்காது.. ஆனாலும் தேர்வுகளில் நல்ல ரேங்க் வாங்கிடுவேன்..

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மட்டும் நான்கு, ஐந்து மாதங்கள் டியூசன் படிச்சேன்.. அதுக்கே வீட்டில் செம சண்டை போட்டாச்சு.. மாதம் 5 ரூபாய் என்று நினைக்கிறேன்.. அதற்குப் பிறகு படிச்சி கிழிச்சது போதும்ன்னு நிப்பாட்டியாச்சு.

அப்படித் தான் காலாண்டுத் தேர்வில் இரண்டாம் ரேங்க் வாங்கியாச்சு.. ஒரு அழகான வெள்ளைக் கலர் பேனா பரிசாவும் கிடைச்சது.. அதை வாங்கிக் கொண்டு நான் டியூசன் படிக்கும் ஆசிரியையிடம் காட்டி பாராட்டும் வாங்கியாச்சு.. அவங்க பேர் திருமதி.ஆனி இளங்கோ. அவங்க வேற “உன் எழுத்து மட்டும் அழகா இருந்தா நீதான் முதல் ரேங்க் வாங்குவ” என்று சூட்டேத்தி விட்டுட்டாங்க..

ஆங்கிலத்துக்கு நான்கு கோடு போட்ட நோட்டும், தமிழுக்கும் இரண்டு கோடு போட்ட நோட்டும் வாங்கிக் கொண்டு வரும்படி கூறி விட்டார்கள்.. இரண்டும் வாங்கக் குறைந்தது 5 ரூபாயவது வேணும்.. வீட்டில் வழக்கம் போல பணம் தான் hurdle..

அன்றைக்கு ஆயுத பூஜை நாள்... வழக்கம் போல் ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு பேக்கரி(PNC) அருகில் 10 ரூபாய் நோட்டு ரோட்டில் கிடக்கு.. நைசா எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்து விட்டேன்.. அப்புறமென்ன வீட்டில் பஞ்சாயத்து பேசி 5 ரூபாய்க்கு இரண்டு நோட்டும்.. மீதி 5 ரூபாய்க்கு ஆயுத பூஜையைக் கொண்டாட பொரி, கடலை எல்லாம் வாங்கிக் கொண்டாடினோம்..

இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.

அப்புறம் எங்க ஆனந்தி அக்கா பற்றியும் சொன்னால் நிறைய சொல்லலாம். இங்கேயே அவங்களைப் பற்றி சொல்லி இருக்கேன். இப்ப கெங்குவார்பட்டியில் வேலை செய்கிறார்கள்.சரி இனி மேட்டருக்கு வரலாம்.. இது தொடர் பதிவு என்பதால் இன்னும் மூணு பேரை அழைக்கனுமாம்..:)

விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இனி நான் அழைப்பது

கயல்விழி முத்துலட்சுமி அக்கா : எங்களோட பாசக்கார குடும்பத்து அக்கா... நல்லா சுவாரஸ்யமா எழுதுவாங்க.. ஜூனியர் துளசி டீச்சர்.. :)

சென்ஷி : அண்ணனைப் பற்றி சொல்ல வேண்டியதில்ல... புனைவு நிறைய எழுதுவார்ன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொன்னா இவரோட எழுத்துக்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவு வளரலை..:)

காதல் கறுப்பி : தம்பி சுவாரஸ்யங்களுக்குச் சொந்தக்காரர்.. ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..:) பேய் மாதிரியான தேவதைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பவர்.

வாங்க மக்களே. எழுதுங்க... :)

34 comments:

சந்தனமுல்லை said...

வாவ் கொசுவத்தி! செம ஜாலி...:-)

அது ஒரு கனாக் காலம் said...

நல்லா இருந்தது... கை நிறைய பணம், வாங்குவதற்கு தான் பொருள் இல்லை

சந்தனமுல்லை said...

//ஒரு ஆசிரியையிடன் இரண்டு ஆண்டுகள் படிச்சது அவங்க ஒருவரிடம் தான்...:) //


ஒருதடவைன்னு சொல்லி எஸ்கேப் ஆகறீங்க..அவ்வ்வ்!
உண்மைய கண்டறிய வேண்டுமென ஆயில்ஸைக் கேட்டுக் கொள்கிறேன்! :-)

சந்தனமுல்லை said...

//மத்தபடி இந்த முறை கூட ஊரில் இருக்கும் போது அவர்களை பார்த்தேன்.//

ஹிஹி..பார்த்தீங்க சரி..அவங்க என்ன சொன்னாங்கன்றதை மறைச்சுட்டீங்களே....!!! :-)

சந்தனமுல்லை said...

//இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.//

அவ்வ்வ்வ்வ்!

ராம் said...

//இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.//


So Sad.. Its ok be happy.. athanala thaan naan varam orumurai beer vaangi sapidukiren..

ஜீவன் said...

ஆஹா ! சூப்பர் மேட்டர் ! நம்மள யாராச்சும் கூப்பிடுராங்களா ன்னு பாப்போம்!

சென்ஷி said...

//இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.//

எனக்கும் கண்ணு கலங்கிடுச்சுண்ணே..! அந்த பர்ஸ் என்கிட்ட இல்லையேன்னு :)

சென்ஷி said...

//ஜீவன் said...

ஆஹா ! சூப்பர் மேட்டர் ! நம்மள யாராச்சும் கூப்பிடுராங்களா ன்னு பாப்போம்!//

ஹி.ஹீ. லிஸ்ட்ல ஒருத்தர் எனக்கு மாட்டிக்கிட்டாரே :)))

சென்ஷி said...

//ஒரு ஆசிரியையிடன் இரண்டு ஆண்டுகள் படிச்சது அவங்க ஒருவரிடம் தான்...:)//

எங்க ஊர்ல பெயிலாகி பெயிலாகி படிச்சாத்தான் மாறாம இருப்பாங்கண்ணே :(

சென்ஷி said...

கண்டிப்பாக தொடர் பதிவை எழுதிடுவேன் அண்ணே :)))

வண்ணத்துபூச்சியார் said...

அருமை..

நட்புடன் ஜமால் said...

முதல் வகுப்பில் 500 க்கு 500 மார்க் வாங்கியது இன்னும் நினைவில் இருக்கு..:))]]

அப்பத்திலேர்ந்தா பாஸூ

நட்புடன் ஜமால் said...

இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.]]

உண்மை தான் ‘தல’.

-- அதனினும் கொடிது முதுமையில் செல்வம்

சுசி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தமிழ் பிரியன். கொஞ்சம் ஸ்ரமப் படுத்தீட்டேனோன்னு லைட்டா பீலிங்க்ஸ். ஆனா பதிவ படிச்சதும் தப்பில்ல தொடரலாம்னு கன்பார்ம். கடைசீல மனசு வலிச்சது.
//இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.//
சூப்பர்.

//இனி விடயத்திற்குப் போகலாம்...//
சரி போய்ட்டோம்....

மாத்திக்கோங்க மக்கா, இனிமே டில்லிக்கு ராசான்னாலும் //அக்கா சொல்லைத் தட்டக் கூடாதுன்னு//

//கையில் சாக்பீஸ் கொடுத்து உட்கார வச்சாங்க.. //
அத அப்டியே சாப்டீங்கங்கிரதையும் எழுதணும்.

//திருமதி.மும்தாஜ் டீச்சர்.. //
யாரு கலையரசனோட டீச்சரா?

//திருமதி.மும்தாஜ் டீச்சர்.. அது மட்டும் தான் நினைவில் இருக்கு. //
உங்க பீலிங்க்ஸ் புரியுதுங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கோபல் வந்தா அடி பிச்சுடுவார்..:) //

த கிரேக் திரு.தனுஷ்கோடி//

ரெண்டாவது வாட்டி வாசியுங்க.. பிரதர்.! அனுபவம் அழகு.!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டீச்சர் பேரெல்லாம் சொல்லனுமா..ஆகா.. நான் ஒரு மறதிக் கேஸாச்சே.. சரி அதைத்தவிர மத்ததை நானே சுத்த்றேன்.. பேரை மட்டும் எங்கம்மாட்ட கேட்டு எழுதறேன்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் அந்த பர்ஸ் என் கையில் இருந்தான்னு ஒரே அழுவாச்சியா வருது. எனக்கு பெரிய லிஸ்ட் இருக்கு தமிழ்பிரியன்.. :))

நிஜமா நல்லவன் said...

அப்பாடா...இந்த தடவை தல என்னைய தொடர் பதிவுக்கு கூப்பிடலை....பதிவுலகம் ஏதோ புண்ணியம் செய்திருக்கும் போல...:)

நிஜமா நல்லவன் said...

/பேய் மாதிரியான தேவதைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பவர்./


ரிப்பீட்டேய்....


கறுப்பட்டி ரசிகர் மன்றம்
சிங்கப்பூர்

நிஜமா நல்லவன் said...

/உண்மையைச் சொன்னா இவரோட எழுத்துக்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவு வளரலை..:)/

கடைசியா ஸ்மைலி போட்டு இருக்கிறது இனிமேலும் வளர வாய்ப்பே இல்லைன்னு சொல்லுறதுக்கு தானே..:)

நிஜமா நல்லவன் said...

/மக்களே நல்லா இருக்கீங்களா? நேரம் இல்லாம திணறிக்கிட்டு இருக்கேன்/

நாங்க நல்லாத்தான் இருக்கோம்...நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு வந்து நேரம் இல்லைன்னு கதை விடுறீங்களா??

நிஜமா நல்லவன் said...

/நாம படிச்சது ஒரு அரசு நடுநிலைப்பள்ளி/


என்னாதிது? நானெல்லாம் பல அரசு நடுநிலைப்பளியில படிச்சிருக்கேன் தல....உங்க லெவலுக்கு ஒரு பள்ளியில படிச்சது நல்லாவா இருக்கு:)

நிஜமா நல்லவன் said...

/முதலில் அரைக் கிளாஸ் தான்.. /

சரி தான் தல....எடுத்த எடுப்பில் முழு கிளாஸ் எல்லாம் சான்ஸ் இல்லை தல...:)

ராமலக்ஷ்மி said...

சுருக்கமா அழகாய் சொல்லி விட்டீர்கள்!

வெள்ளைப் பேனா போல சின்ன வயதில் பரிசாக வாங்கிய எந்தப் பொருளும் தந்த பரவசம் இப்போது கிடைக்கிறதா என்றால் இருக்காது.

ராமலக்ஷ்மி said...

விகடன் Good Blogs-ல் இப்பதிவு! வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்!

அன்புடன் அருணா said...

நல்லா பதிஞ்சுருக்கீங்க....பூங்கொத்து!

தமிழன்-கறுப்பி... said...

good post!

gulf-tamilan said...

விகடன் Good Blogs-ல் இப்பதிவு! வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்

வாழ்த்துக்கள் !!!

கானா பிரபா said...

ஆகா ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கய்யா, இப்படி ஆளாளுக்கு சங்கிலி, வளையல் பதிவுகளை போட ஆரம்பிச்சா என்னாவுறது ;)

சும்மா சொல்லக்கூடாது உங்க இளமைக்கால நினைவுகள் கலக்கல்

தேவன் மாயம் said...

இளமைக்கால நினைவுகள் அருமை>>>கலக்குங்க!!

மங்களூர் சிவா said...

சூப்பர்ணா!

jothi said...

அழகாய் இருக்கிறது உங்கள் பள்ளி வாழ்க்கை

Meena said...

துல்லியமாக நினைவு வைத்து இருக்கிறீர்கள் .
பாராட்டுக்கள் . எனக்கும் இளமை காலத்து நினைவுகள்
இன்றும் வாழ்வில் மேருகேட்டுகின்றன .

என்னுடைய ஆசிரியர்கள் வேட்டி அணிந்து வந்தனர். காண்போமோ
இன்று ? என்னுடைய ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு சில தினங்களில் பாடியும்
காட்டினர். குசேலர் மற்றும் கண்ணப்பர் கதைகளும் கூறினர்
என்னை ஸ்கேலில் அடித்தும் இருக்கின்றனர்
இவர்கள் என் வாழ்விலும் நினைவிலும் அழியாத இடம்
பெட்டரு இருக்கின்றனர்

LinkWithin

Related Posts with Thumbnails