Friday, July 18, 2008

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்...... இறுதிப் பகுதி

.


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் முதல் பகுதி
2006 மே மாதம் - மதுரை இரயில் நிலையம்

கையில் மகளைத் தூக்கிக் கொண்டு மற்றொரு கையில் சூட்கேஸூடன் நின்று கொண்டிருந்தேன். அருகிலேயே மனைவி பிராயணப் பையுடன் நின்று கொண்டிருந்தாள். சென்னை செல்லும் அனந்தபூரி எக்ஸ்பிரஸ் வேகமாக நுழைந்து கொண்டு இருந்தது. பெட்டி எண் நிற்கும் இடத்திற்கு நேரே நின்றிருந்தாலும் வழக்கம் போல் நான்கு பெட்டி தள்ளியே இரயில் நின்றது. இருவரும் ஓட்டமும் நடையுமாக எங்களது பெட்டியை அடைந்தோம்.

கீழ் மற்றும் நடு படுக்கைகளை முன்பதிவு செய்திருந்தோம். மனைவியையும், மகளையும் இருக்கையில் அமர வைத்து விட்டு பெட்டிகளை இருக்கைக்கு அடியில் தள்ளி விட்டேன். ஓடி வந்து ஏறியது மூச்சிறைத்தது. மனைவியை ஜன்னலோரத்தில் தள்ளி அமரச் சொல்லி விட்டு இருக்கையில் அமர்ந்தேன். எங்களது இருக்கைக்கு மேலே ஒரு பெரியவர் தூங்கிக் கொண்டிருந்தார். எதிர் வரிசையில் ஒரு தம்பதியினர் தங்களது மகனுடன் அமர்ந்திருந்தனர். எதிர் வரிசையின் ஜன்னலோரத்தில் இருந்த பெண் ஜன்னல் வழியாக எதையோ வாங்கிக் கொண்டிருந்தார்.

முன் இருக்கையில் இருந்தவர் சினேகமாக புன்னகைத்தவாரே “ஹலோ சார்! சென்னைக்கா?”
“ஆமாம் சார்! சீசன் நேரம் டிக்கெட் கிடைக்கலை. அதான் நடுஇராத்திரியில் ஓட்டப்பந்தயமா இருக்கு”
“நீங்க எங்க இருந்து வர்றீங்க?”
“நாங்க திருவனந்தபுரத்தில் ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வர்றோம். சென்னையில் தான் வாசம். நீங்க மதுரை தானா?”
“நாங்க ஒரு திருமணத்துக்கு தான் சென்னை போறோம். எங்க ஊர் இங்க பக்கம் தான்.... வதிலை”
“அப்படியா? என் ஒய்ப் கூட உங்க ஊர் தான்”
தினமும் என் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருந்த அந்த பெயரைச் சொல்லி அவர் அழைக்க ஜன்னலில் வாங்குதலை முடித்து அந்த பெண் திரும்பினார்.... “இவர் உங்க ஊர் தானாம். உனக்கு தெரியுமா?” அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து நெஞ்சை அடைத்தது. தாடியுடன் இருந்தாலும் என் முகத்தை அடையாளம் கண்டு கொண்டதை அவள் முகம் கூறியது. அந்த முகத்தைப் பார்த்தும் வழக்கம் போல் கண்கள் அந்த கண்ணுக்குள் எதையோ தேடியது. சட்டென்ற குலுக்கலுடன் இரயிலும் கிளம்பத் தொடங்கியது.

பதில் சொல்ல அவள் திணருவது தெரிந்தது. “இல்லைங்க என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நான் 12 வருடமா வெளியூர்களில் தான் சுத்திக் கொண்டிருக்கிறேன்”. இப்போது அவள் என் மனைவியையும் மகளையும் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவளது கணவரே தொடர்ந்தார் “ ஆமாம். அவங்க குடும்பமும் சென்னைக்கு குடி வந்திட்டாங்க” எனறு எனக்கு தெரிந்த மேலதிக தகவல்களை அவரே சொல்ல ஆரம்பித்தார். சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
வண்டி கொடை ரோடைத் தாண்டி சென்று கொண்டு இருந்தது. அவளது கணவர்
“ சரி எனக்கு தூக்கம் வருகின்றது. நான் மேலே சென்று படுக்கிறேன்” என்று சொல்லி விட்டு மேல் பெர்த்துக்கு சென்று ஏறிக் கொண்டார்.
எனது மனைவி “ என்னங்க சாப்பிடலாமா?” என்று கேட்டுக் கொண்டே பொட்டலங்களைப் பிரிக்க ஆரம்பித்தாள். உள்ளே லெமன் சாதம் வாசனையுடன் எட்டிப் பார்த்தது.
என் மனைவி எதிரே இருந்தவளிடம் “ நீங்க சாப்பிட்டீங்களா? லெமன் சாதம் இருக்கு. வாங்க சாப்பிடலாம்”
“நன்றிம்மா! நான் பிரயாணத்தில் சாப்பிட மாட்டேன். லைட்டா பிஸ்கட் மட்டும் தான்” இது அவள்.
நாங்க வெளியே எங்க போனாலும் லெமன் சாதம் அல்லது தயிர் சாதம் தான். அது தான் அவங்களுக்கு பிடிக்கும்” சொல்லி விட்டு என்னவள் என்னைப் பார்க்க எதிரே இருந்தவளும் என்னைப் பார்க்க என் கண்கள் கீழே பணித்தன.
இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். அவ்வப்போது அவள் என்னையும், எனது மகளையும் பார்த்துக் கொள்வது தெரிந்தது. ஆனாலும் அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் வரவில்லை. சாப்பிட்டு முடித்ததும் கீழ் பெர்த்தில் நான் உட்கார்ந்து கொள்ள மனைவியும், மகளும் அங்கேயே படுத்துக் கொண்டனர். மகளின் காலில் இருந்த ஷூ, சாக்ஸைக் கழட்டிய போது மகளின் காலில் இருந்த தங்கக் கொலுசு திண்டுக்கல் இரயில் நிலைய வெளிச்சத்த்தில் மின்னியது. அதே நேரத்தில் எதிரே இருந்தவளின் கண்களிலும் மின்னல் வெட்டி மறைந்தது. சற்று நேரத்தில் விளக்கை அணைத்து விட்டு தூங்கிப் போனேன்.

இருந்த அலுப்பில் நான் நன்றாகத் தூங்கிப் போனேன். இடையில் முழிப்பு வந்தாலும் அதையும் தாண்டிய களைப்பு தூங்கச் செய்து விட்டது. நன்றாக விடிந்து கொண்டிருந்தது. இரயில் விழுப்புரத்தை நெருங்குவது தெரிந்தது.
மேலே தூங்கிக் கொண்டிருந்தவர் கீழே வந்திருந்தார், அதற்குப் பிறகு கடைசி வரை அவளைப் பார்க்கவே இல்லை. தாம்பரத்தில் இறங்கிச் சொல்லும் போது அவளைப் பார்த்த போது கண்களால் என்னவொ சொல்ல நினைத்தாள். பின்னர் எனது மகளின் கையில் எதையோ திணித்தாள். சொல்ல வந்ததை சொல்ல இயலாமல் போன முக பாவத்துடன் போய் வருகிறேன் என்று மட்டும் சைகை செய்து விட்டு இறங்கி போய் விட்டாள்.

அவர்கள் கடந்ததும் என் மனைவி கூறினாள் “ எதிரே இருந்த பெண் இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அடிக்கடி உங்களையும், நம் மகளையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அடிக்கடி அழுது கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பாவம் என்னவென்று தெரியவில்லை?”

மனைவியிடம் சொல்லவா முடியும்? ... ஐந்து ஆண்டுகள் உள்ளத்தில் உள்ளதை வாயால் பேசாமல் கண்களால் மட்டுமே பேசிக் கொண்ட இரண்டு ஜோடிக் கண்கள் எட்டு ஆண்டு பிரிவுக்குப் பின் சந்தித்த போது பேச வேண்டியதை பேசவே இயலாத சந்தர்ப்பத்தில் இருந்ததை.....

எனது மகளின் கைவிரல்களைப் பிரித்து பார்த்த போது கழுத்தை ஒட்டி அன்று அவள் போட்டிருந்த மெல்லிய தங்க செயின் இருந்தது,

25 comments:

Thamiz Priyan said...

மனதில் இருந்ததை எழுத்தில் கொண்டு வர இயலாத என்னுடைய நிலைக்கு வருந்துகிறேன்... :(

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
மனதில் இருந்ததை எழுத்தில் கொண்டு வர இயலாத என்னுடைய நிலைக்கு வருந்துகிறேன்... :(
//

எங்களால் உங்கள் உணர்வினை புரிந்துக்கொண்டதே இந்த எழுத்திற்கு கிடைத்த வெற்றித்தானே தமிழ்!

குசும்பன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது.

குசும்பன் said...

//தமிழ் பிரியன் said...
மனதில் இருந்ததை எழுத்தில் கொண்டு வர இயலாத என்னுடைய நிலைக்கு வருந்துகிறேன்... :(//

இப்பொழுது எழுதி இருப்பதே நிறைவாக இருக்கிறது.

VIKNESHWARAN ADAKKALAM said...

டச்சிங்...

VIKNESHWARAN ADAKKALAM said...

சில இடங்களில் இருக்கும் வர்ணனைகளை மிக இரசித்தேன்... இதை தொடராக கொண்டு போனால் நன்றாக இருக்கும்.

புதுகை.அப்துல்லா said...

‌மனதில் இருந்ததை எழுத்தில் கொண்டு வர இயலாத என்னுடைய நிலைக்கு வருந்துகிறேன்... :(

//

காதலைப் பற்றி எழுதும் எல்லாருக்குமே உள்ள பிரச்சனை இது.அதுனால கவலைப்படாதீங்க. அதுபோக உங்க‌ எழுத்தெல்லாம் கலைஞரும்,வைரமுத்துமா படிக்கிறாங்க? அப்துல்லா மாதிரி மொக்கச்சாமிங்கதான படிக்கிறாங்க :))
உங்க‌ ஃபீலிங்ஸை எல்லாம் எங்க‌கிட்ட‌ கொட்டி எங்க‌ள‌ ஃபீலாகிட்டீங்க‌...
மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக‌ள்

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்,

நான்கு கண்கள் மட்டும் குளமாக வில்லை. இதைப் படிக்கும் அத்தனை கண்களும் குளமாகும். ஐந்து ஆண்டுகள் பேசிய கண்கள் - எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பேச இயலாத நிலையில் .............

தமிழ் பிரியன் - கலக்கிட்டீங்க போங்க

//எங்களால் உங்கள் உணர்வினை புரிந்து கொண்டதே இந்த எழுத்திற்கு கிடைத்த வெற்றி தானே தமிழ்! //

உண்மை - உடன்படுகிறேன்

நல்வாழ்த்துகள்

தமிழன்-கறுப்பி... said...

நீங்கள் சொல்ல வந்ததும், உங்கள் நினைவுகளில் இருப்பதும் எங்களுக்கு புரிகிறது அண்ணன் அதுவே உங்கள் எழுத்தின் வெற்றிதானே...!

தொடர்ந்து எழுதுங்க...:)

Ramya Ramani said...

நல்லா இருந்தது தமிழ் பிரியன் :))

Unknown said...

:-) Nalla irundhadhu anna..!!
Idhu unmai illayee?? :-( ;-)

புகழன் said...

அய்யோ தல ரெம்பவே டச்சிங்கா இருக்கு
லெமன் சாதம், தயிர் சாதம், தங்கச் செயின் எல்லாமே சூப்பர்

நிஜமாலுமேவா இல்லை புனைவா?

எப்படியிருந்தாலும் நல்லாயிருக்கு

Anonymous said...

மிகக்குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்திய உணர்வுகள் அருமை. கண்ணில் நீர் வரவழைத்து விட்டீர்கள்.

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
எங்களால் உங்கள் உணர்வினை புரிந்துக்கொண்டதே இந்த எழுத்திற்கு கிடைத்த வெற்றித்தானே தமிழ்!///
நன்றி ஆயில்யன்! அந்த அளவில் வெற்றி தானோ... :)

Thamiz Priyan said...

//குசும்பன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது.///
நன்றி சரவணன்... :)

Thamiz Priyan said...

///குசும்பன் said...
இப்பொழுது எழுதி இருப்பதே நிறைவாக இருக்கிறது.///
நன்றி! மகிழ்ச்சியாக இருக்கிறது... :)

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

டச்சிங்.../*//
சாரி! தள்ளி நின்னுக்கிறேன்... ;)

Thamiz Priyan said...

/// VIKNESHWARAN said...

சில இடங்களில் இருக்கும் வர்ணனைகளை மிக இரசித்தேன்... இதை தொடராக கொண்டு போனால் நன்றாக இருக்கும்.///
எதுக்கு இன்னும் முடிக்கலையான்னு கும்மி அடிக்கவா? வேணாம்ப்பா... ;)))

Thamiz Priyan said...

///புதுகை.எம்.எம்.அப்துல்லா said... காதலைப் பற்றி எழுதும் எல்லாருக்குமே உள்ள பிரச்சனை இது.அதுனால கவலைப்படாதீங்க. அதுபோக உங்க‌ எழுத்தெல்லாம் கலைஞரும்,வைரமுத்துமா படிக்கிறாங்க? அப்துல்லா மாதிரி மொக்கச்சாமிங்கதான படிக்கிறாங்க :))
உங்க‌ ஃபீலிங்ஸை எல்லாம் எங்க‌கிட்ட‌ கொட்டி எங்க‌ள‌ ஃபீலாகிட்டீங்க‌...
மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக‌ள்///
நன்றி அப்துல்லா! நமக்கு நாமே திட்டம் தானே இதுவும்... :))

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...
அன்பின் தமிழ் பிரியன்,
நான்கு கண்கள் மட்டும் குளமாக வில்லை. இதைப் படிக்கும் அத்தனை கண்களும் குளமாகும். ஐந்து ஆண்டுகள் பேசிய கண்கள் - எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பேச இயலாத நிலையில் .............
தமிழ் பிரியன் - கலக்கிட்டீங்க போங்க
//எங்களால் உங்கள் உணர்வினை புரிந்து கொண்டதே இந்த எழுத்திற்கு கிடைத்த வெற்றி தானே தமிழ்! //
உண்மை - உடன்படுகிறேன்
/
நல்வாழ்த்துகள்///
நன்றி சீனா சார்.... :)

Thamiz Priyan said...

///தமிழன்... said...

நீங்கள் சொல்ல வந்ததும், உங்கள் நினைவுகளில் இருப்பதும் எங்களுக்கு புரிகிறது அண்ணன் அதுவே உங்கள் எழுத்தின் வெற்றிதானே...!

தொடர்ந்து எழுதுங்க...:)///
நன்றி தமிழன்.... :)

Thamiz Priyan said...

/// Ramya Ramani said...

நல்லா இருந்தது தமிழ் பிரியன் :))///
நன்றி ரம்யா ரமணி!

Thamiz Priyan said...

///Sri said...

:-) Nalla irundhadhu anna..!!
Idhu unmai illayee?? :-( ;-)////
நன்றி ஸ்ரீ! கண்டிப்பா இல்லை... :)

Thamiz Priyan said...

///புகழன் said...

அய்யோ தல ரெம்பவே டச்சிங்கா இருக்கு
லெமன் சாதம், தயிர் சாதம், தங்கச் செயின் எல்லாமே சூப்பர்

நிஜமாலுமேவா இல்லை புனைவா?

எப்படியிருந்தாலும் நல்லாயிருக்கு///
நன்றி புகழன்... :)

Thamiz Priyan said...

///Anonymous said...

மிகக்குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்திய உணர்வுகள் அருமை. கண்ணில் நீர் வரவழைத்து விட்டீர்கள்.///
ஃபீல் ஆகாதீங்கப்பா... :)