Friday, August 1, 2008

தமிழ்மண முகப்பில் உங்கள் படம் வர வைப்பது எப்படி?

.
தமிழ் மணத்தில் தங்களது பதிவை இணைத்துள்ள பதிவர்களில் பலரும் பல பதிவுகளிலும், கூட்டுப் பதிவுகளிலும் எழுதுகின்றனர். ஆனால் பலருக்கும் தமிழ் மண முகப்பில் பதிவு வரும் போது எந்த பதிவில் எழுதி உள்ளனர் என்பது பார்வையாளர்களுக்கு உடனடியா தெரிவதில்லை. தமிழ் மண முகப்பில் பதிவுக்கான படத்தை தெரிய வைப்பதன் மூலம் இந்த குறையை நீக்க முடியும்....

எடுத்துக்காட்டுக்கு எங்கள் வேடந்தாங்கல் பதிவிலும், என்னோட இடம் என்ற இடத்திலும் கூட எழுதுகிறேன். இரண்டில் எதில் பதிவிட்டாலும் அதற்கான தனியான படம் தெரியும்.

ஓரத்தில் படத்தில் உள்ள இரண்டும் நான் எழுதிய பதிவாக இருந்தாலும் இரண்டுக்கும் தனித் தனி படம் இருப்பதால் பதிவர்களுக்கு சுலபமாக விளங்கும்.




பெரும்பாலானவர்கள் இதை விரும்பினாலும் இதற்காக தமிழ் மண கருவிப்பட்டையில் செய்ய வேண்டிய மாற்றங்களின் சிரமத்தைக் கருதி செய்யவில்லை. என்னால் முடிந்த அளவு சுலபமாக அதை விளக்குகிறேன்....

அதற்கு முன் உங்கள் பதிவில் தமிழ் மணக் கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் பூர்ணாக்காவின் இந்த பக்கத்திற்கு சென்று சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறைகளுடன் சிறந்த இடமிது
http://poorna.rajaraman.googlepages.com/home

இனி......... இதற்கு செய்ய வேண்டிய மாற்றத்தை இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.

1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்


1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்

முதலில் நீங்கள் எந்த படத்தை தமிழ் மண முகப்பில் வர வைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அந்த படத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அது உங்களது புகைப்படமாகவோ, அல்லது உங்கள் பதிவின் பெயர் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இதை இணையத்தில் upload செய்ய வேண்டும்.

இணையத்தில் upload செய்ய..... http://www.imageshack.us/ இங்கு செல்லுங்கள்.





படத்தில் உள்ளபடி இந்த இணையதளம் திறக்கும்.
1. Browse பொத்தானை அழுத்தி உங்களது படத்தைத் தேர்ந்தெடுங்கள்
2. Resize Image என்று உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும்
3. அதை அடுத்து உள்ள DropDown List ல் 100 x 75 (Avatar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. Host it என்பதை அழுத்தவும்....

சற்று நேரத்தில் நாம் அளித்த படம் http://www.imageshack.us/ தளத்தில் ஏற்றப்பட்டு நமக்கு அதற்கான URL கள் தரப்படும். (கீழே உள்ளவாறு) அதில் கடைசியாக உள்ள URL ஐ நாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

(எ.கா) http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png


இப்போது முதல் கட்டம் முடிந்தது.

2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்

இனி உங்கள் Blogger கணக்கில் Login செய்து நுழைந்து கொள்ளுங்கள். அங்கு
Dash Board, Layout, Edit HTML பகுதிக்கு செல்லுங்கள். Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.


முதலில் இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிரதி எடுத்து பாதுகாப்பாக ஒரு நோட்பேட் பைலில் வைத்துக் கொள்ளுங்கள்


இனி அதில் தமிழ் மண கருவிப்பட்டை இரண்டுக்கு செல்லுங்கள்.... அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1
(c)2005 thamizmanam.com -->
<b:if cond='data:blog.pageType == "item"'> <script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&amp;posturl=" + data:post.url + "&amp;cmt=" + data:post.numComments + "&amp;blogurl=" + data:blog.homepageUrl + "&amp;photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1
(c)2005 thamizmanam.com -->


மேற்கண்ட கருவிப்பட்டை இரண்டில் சிவப்பு எழுத்தில் உள்ள பகுதியை நீக்குங்கள். கீழே தரப்பட்டுள்ள நீல வண்ணப்பகுதியை காப்பி செய்து சரியாக அதே இடத்தில் கவனமாக பேஸ்ட் செய்யுங்கள்....


<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1
(c)2005 thamizmanam.com -->

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png &quot; ' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1
(c)2005 thamizmanam.com -->


உங்கள் கருவிப்பட்டையில் தமிழ்மண முகப்பிற்கான புகைப்படம் இணைக்கப்பட்டு விட்டது. ஆனால் இதில் இருப்பது எனது புகைப்படம். எனவே உங்கள் புகைப்படத்தை மாற்றம் செய்ய வேண்டும். புதிதாக பேஸ்ட் செய்த நீல நிற Code ல் உள்ள http://img201.imageshack.us/..................................... .png என்பது வரையிலான பகுதியை அழித்து விட்டு சரியாக அதே இடத்தில் முதல் பகுதியில் நாம் தயார் செய்து வைத்துள்ள imageshack URL ஐ இடுங்கள்.


அவ்வளவு தான் இனி Save பொத்தானை அழுத்துங்கள். ஓரிரு தினங்களில் நீங்கள் பதிவு போடும் போது உங்களது படம் தமிழ் மண முகப்பில் அழகாக வரும்......


Save செய்யும் போது ஏதும் Error வருகின்றதா? கவலையில்லை நோட்பேடில் சேமித்து வைத்துள்ள பழைய HTML CODE ஐ அப்படியே மீண்டும் மாற்றி விடுங்கள். பழைய நிலைக்கு திரும்பி விடலாம்..... Best Of Luck


ஒன்னும் தெரியாத நாங்களே இம்புட்டு செய்யும் போது உங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி...

27 comments:

பரிசல்காரன் said...

ஆஹா.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. இதுவரைக்கும் ஒரு இருபது, முப்பது பேர்கிட்டயாவது இதப் பத்தி கேட்டிருப்பேன்.
இன்னைக்கே பண்ணீடறேன்!

நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!

நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!


நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!


நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!

நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!


நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!


நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!

நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!


நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!

ஜியா said...

:))) சூப்பருங்க... என்னோட சாதரண பதிவுக்கே தமிழ்மணத்துல படம் வர மாட்டேங்குது.... அதையே இப்பத்தான் கவனிச்சேன்... இந்த வாரம் அத கொஞ்சம் நோண்டி பாக்குறேன் :)))

சித்தன் said...

நன்றிங்க தமிழ் பிரியன், இந்த வழிமுறையதான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தேன்.உங்களோட எளிமையான வழிகாட்டல்லே இன்னிக்கு ஒரு புது விஷயம் கத்துகிட்டேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆ.. பதிவே போட்டாச்சா... உண்மைதான் ஆசையிருந்தும் இதெல்லாம் செய்ய பொறுமையில்லாததும் தான் ஒரு காரணம்.. ஒருத்தங்க கிட்ட கேக்கனும் அது புரியனும் அப்பறம் செய்யனும் .. அது சரியாவரனும்..

புதுகை.அப்துல்லா said...

நண்றி வாத்தியாரே!

தமிழன்-கறுப்பி... said...

///
ஓரிரு தினங்களில் நீங்கள் பதிவு போடும் போது உங்களது படம் தமிழ் மண முகப்பில் அழகாக வரும்......
///

நம்ம மங்களூர் அண்ணன் படத்தை போட்டாலுமா...;)

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நம்ம படம்லாம் போட்டா தமிழ் மண முகப்பையே பாக்காம விடுற கஷ்டம் வந்துடும் அப்புறம் நம்ம பதிவுகளை திரட்டாம விட்டிடுவாங்க...;)

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே எனக்கும் சில தொழில் நுட்ப உதவிகள் தேவைப்படுது செஞ்சு தருவிங்களா....

தமிழன்-கறுப்பி... said...

பதிவுக்கு நன்றி தல...
முயற்சி பண்ணி பாத்துடலாம்...

இராம்/Raam said...

தமிழ்மணம் Gravator உபயோகிக்கிறாங்க... நீங்க தமிழ்மணத்திலே சேர்க்கிறப்போ கொடுத்த மெயில் ஐடி'ய உபயோகப்படுத்தி உங்க அவதார் படத்தை மாத்திக்கலாம்...

இந்த லிங்'ஐ பாருங்க...

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இதை விட இலகுவான குறுக்கு வழி ஒன்னு இருக்கு.

http://en.gravatar.com போய் தமிழ்மணத்தில் நீங்கள் கொடுத்த மின்மடல் முகவரியைத் தந்து உங்கள் படத்தைச் சேருங்கள். நீங்கள் எத்தனை பதிவுகள் தமிழ்மணத்தில் வைத்திருந்தாலும் எல்லாவற்றிலும் படம் தானாய் தெரியும்.

NewBee said...

தமிழ் பிரியன்,

உதவிகரமானப் பதிவு. வாழ்த்துகள்.:)

நானும் செய்தேன், ஆனால் வேறு ஏதோ பிரச்சனை வந்தது. ரிவெர்ட் செய்துவிட்டேன். என்ன பிரச்சனை என்று நினைவில்லை.

மறுபடியும் ஆராய்ச்சி செய்கிறேன்.:)

சின்னப் பையன் said...

ஓ. இன்னிக்கே செய்து பார்க்கிறேன்... தகவலுக்கு மிக்க நன்றி...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நன்றி
இது போல் பலமுறை செய்து விட்டேன்
இப்போதாவது படம் வருகிறதா என்று பார்ப்போம் .
இந்த முறை சரியாக செய்தது போல் ஒரு உணர்வு

கயல்விழி said...

மிக்க நன்றி தமிழ் பிரியன் :)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தமிழ்ப்பிரியன்,

எனக்கு ஏற்கனவே ஒழுங்காத்தான் தெரியுது. ஆனா மற்றவங்களுக்கு மிக உபயோகமான தகவல். தொடருங்கள்...

மதுவதனன் மௌ.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நீங்கள் சொன்னது போல் செய்தேன் !
ஆனால் என் படம் வரவில்லையே ?
தயவு செய்து உதவவும் !

Thamiz Priyan said...

///ARUVAI BASKAR said...
நீங்கள் சொன்னது போல் செய்தேன் !
ஆனால் என் படம் வரவில்லையே ?
தயவு செய்து உதவவும் !///
சில நேரங்களில் தமிழ் மண வழங்கியில் அப்டேட் செய்வதில் தாமதம் இருக்கலாம்... வெயிட் பண்ணிப் பாருங்கள்

Anonymous said...

//ஒன்னும் தெரியாத நாங்களே இம்புட்டு செய்யும் போது உங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி...//

இதைத்தான் தன்னடக்கம் என்று சொல்லுவாங்க. நிறைகுடம் தளும்பாது... சரி நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

நல்லதந்தி said...

நொம்ப நன்ன்ன்ன்றி வாத்திய்யாரே!.இன்னீக்கே முயற்சி செஞ்சி பாக்குறேன்!

Anonymous said...

attakasmana vilakkam .. aalntha karuthukkal.inthanga 1000 porkasukal.super thalaivaaa

Thamiz Priyan said...

///பரிசல்காரன் said...

ஆஹா.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. இதுவரைக்கும் ஒரு இருபது, முப்பது பேர்கிட்டயாவது இதப் பத்தி கேட்டிருப்பேன்.
இன்னைக்கே பண்ணீடறேன்!
நன்றி! நன்றி! நன்றி!///
பரிசலாரே! நன்றி.. நன்றி... :)

Thamiz Priyan said...

/// ஜி said...
:))) சூப்பருங்க... என்னோட சாதரண பதிவுக்கே தமிழ்மணத்துல படம் வர மாட்டேங்குது.... அதையே இப்பத்தான் கவனிச்சேன்... இந்த வாரம் அத கொஞ்சம் நோண்டி பாக்குறேன் :)))///
வாங்க ஜி! நோண்டி பாருங்க... நம்ம வசதிக்கு தானே.... :)

Unknown said...

பதிவுக்கு மிக்க நன்றி.
செயற்படுத்தினேன், கைமேல் பலன் கிடைத்து விட்டது.

சின்னப் பையன் said...

//நீங்கள் சொன்னது போல் செய்தேன் !
ஆனால் என் படம் வரவில்லையே ?
தயவு செய்து உதவவும் //

ரிப்பிட்டே!!!

நான் அப்டேட் செய்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் என் படம் முகப்பில் வரமாட்டேங்குது.... :-(((

குரங்கு said...

நன்றிகள். :)

நாணல் said...

நன்றி... :)
நீங்கள் சொன்னது போல் templatye மாற்றி உள்ளேன்... இரண்டு தினங்களில் தமிழ் மணத்தில் புகை படம் வருகிறது என்று பார்ப்போம் :)