நவம்பர் 4 அமெரிக்க அதிபருக்கு நடந்த தேர்தலின் வாக்குகள் என்னும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஒபாமா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்கின்றார்.
கடைசி தகவல் படி ஒபாமா 333 இடங்களிலும் மெக்கெய்ன் 155 இடங்களிலும் நிச்சய வெற்றி பெறுகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெற்று 55 இடங்களை ஒபாமா கைப்பற்றியுள்ளார். மெக்கெய்ன் டெக்ஸாஸில் 34 இடங்களை வென்றுள்ளார்.
Ohio, New Mexico and Iowa போன்ற குடியரசு ஆதரவு இடங்களை ஜனநாயகக்கட்சி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா வென்றவை:
Vermont, New Hampshire, Pennsylvania, Illinois, Delaware, Massachusetts, District of Columbia, Maryland, Connecticut, Maine, New Jersey, Michigan, Minnesota, Wisconsin, New York, Rhode Island, Ohio, New Mexico and Iow.
மெக்கெய்ன் வென்றவை:
Kentucky, South Carolina, Oklahoma, Tennessee, Arkansas, Alabama, Kansas, North Dakota, Wyoming, Georgia, Louisiana, West Virginia, Texas, Mississippi, Utah.
பழைய அரசியல் தகிடுதத்தங்களால் காலத்தைக் கழித்த புஷ் வகையறாக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க மக்களுக்கு நன்றிகள்! வருங்காலங்களில் புதிய கொள்கைகளுக்கு ஒத்திசைவாக இருந்து செயல்படுவதன் மூலம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அமைதியை எதிர் பார்க்கலாம்.
மெக்கெய்ன் வெற்றி பெற்று இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் இருப்பார் என்று கவனிக்காமல் விட்டு விடலாம்.. ஆனால் ஒபாமா மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்களித்துள்ளார். இனி அவரால் உலக, அமெரிக்க அரசியல், பொருளாதாரங்களில் என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என பார்க்கலாம்... அனைத்திற்கும் காலமே பதில் சொல்லும்.
18 comments:
வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு வாழ்த்துகள்
இனி அமெரிக்கா மத்திய கிழக்கு பிரச்சினை எழும் போதெல்லாம் பத்திரிகைகளில் இப்படித்தான் செய்திவரும்.
OBAMA Vs OSAMA
ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்
நல்லதுதான் விஷயம்தான் இல்லையா..!
எப்படியோ
நினைச்சத சாதிச்சிடிங்க
ட்ரீட் கொடுங்க
வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு வாழ்த்துகள்
அப்புறம் தலைப்புல ஒரு “ட்” விட்டு போச்சின்னு நினைக்கிறேன்...
இந்த நேரத்துல இது ரொம்ப முக்கியமான்னு கேட்காதீங்க :)
தாமிரா said...
நல்லதுதான் விஷயம்தான் இல்லையா..!// என்ன தமிழ் இது.. சை.! அது "நல்ல விஷயம்தான் இல்லையா..!" என்றிருந்திருக்கவேண்டும்.
யார் வந்தாலும் இந்தியாவைப் பற்றிய அடிப்படை கொள்கைகளை மாற்ற மாட்டார்கள். கொள்கை அளவில் அரபு நாடுகளுக்கான பார்வை மாறலாம். அமரிக்க பொருளாதாரம் சீரடையலாம். ஆனால் எப்போதும் ந்ம்மை அவர்கள் ஒரே மாதிரிதான் பார்ப்பார்கள் [கர்நாடக முதல்வர்கள் தமிழகத்தை பார்ப்பதுபோல்] இது உலக அளவில் ஒரு சம்பவம். நமக்கு எல்லாம் ஒன்றுதான்
தாமிரா நோ ஃபீலிங்ஸ், நீங்க கரக்ட் பண்ணாட்டியும், நீங்க சொல்ல வந்தத கண்டுபிடிச்சிருப்போம்
கபீஷ்
SUREஷ் - ஐ மங்களூர்கிறேன்.
கபீஷ்
//பழைய அரசியல் தகிடுதத்தங்களால் காலத்தைக் கழித்த புஷ் வகையறாக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க மக்களுக்கு நன்றிகள்! //
:-) you are welcome! தலைப்பு நல்லா இருக்கு :)).
பத்தோடு பதினொன்று என்று சொன்னீங்க பத்திக்களா அது ரொம்பவே உண்மை, இந்த ஒபாமா வெற்றி ஒட்டு மொத்த உலகத்திற்குமே நல்ல செய்தி, நம்பிக்கையூட்டு நிகழ்வு.
இன்னொரு நாடும் இப்படி நினைக்கும் ""வச்சுட்டங்கய்யா ஆப்பூஊஊ...."" அது நம்ம பக்கத்து வீட்டுக்காரன் பாகிஸ் ;)).
பதிவிற்கு நன்றி!!
அண்ணே ட்ரீட்டை குடுங்க...:)
ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்...:)
மிக மோசமான நேரம் ஒன்றில் பதவிக்கு வருகிற ஒபாமாவுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்க வாழ்த்துக்கள்...
-
ஏதாவது ஐடியா வேணும்னா நம்ம தல தமிழ் பிரியனை கேளுங்க அண்ணே சொல்லித்தருவார்...:)
ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்...:)
ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்...:):):)
ஒபாமாவுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
இனி அடுத்து வரும் மாற்றங்களைப் பொறுத்து இருந்து பார்க்கணும் நாம்.
வெற்றிக் களிப்பு எல்லாம் ஓய்ஞ்சு, வேலையை ஆரம்பிக்கும்போதுதான் தெரியும் மக்களின் கனவுகள் நிறைவேறுமான்னு.
நல்லதே நடக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
நீங்க ஒரு போஸ்ட் தலை சுத்தற மாதிரி போட்டீங்க பார்த்தீங்களா..அது..அதுதான் இந்த மாற்றத்துக்கு காரணம்..வாழ்த்துக்கள்..ஒபாமாவிற்கும் உங்களுக்கும்
தங்களை புத்தக தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.மறக்காம எழுதிடுங்க
Post a Comment