Saturday, November 1, 2008

US Election 08 - ஒபாமா தோற்கடிக்கப்பட பிரார்த்திக்கலாம்! வாருங்கள்!

முதலில் அனைவரும் ஒரு நிமிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா தோல்வியடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்!

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி!]

ஏன் ஒபாமா தோற்கடிக்கப்பட வேண்டும்?

விபத்தில் அடிபட்டு கோரமாகி கோமாவில் இருக்கும் போது, அவரைப் பார்க்க வருபவர்கள் கூறுவார் “ இதுக்கு பேசாமல் அந்த விபத்துலயே ஒரேயடியாய் போய் இருந்தாலாவது நிம்மதியா ஆகி இருக்கும்” ஊரில் சில நேரங்களில் இது போல் விரக்தியில் சொல்வார்கள்.

இதே நிலையில் தான் அமெரிக்காவின் பொருளாதார சூழல் இருக்கின்றது. கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் நாளை (நவம்பர் 4) அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சார்பில் பராக் ஒபாமாவும், ஜான் மெக்கய்னும் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் கடைசி கட்டத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களின் முடிவைப் பொறுத்தை இறுதி வெற்றி அமையும்.

ஒபாமா தோற்கடிக்கப்பட ஏன் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

1. ஒபாமா வெற்றிபெற்றால் ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள்.

2. பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என் ஒபாமாவின் பேச்சின் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.

3.அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.

4. ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் (வடிவேலுவை புஷ்ஷூடன் ஒப்பிட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

5. ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)


6.ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமா வெற்றி பெறுவதன் மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.




டிஸ்கி : மக்களே உங்கள் ஓட்டுக்களை பராக் ஒபாமா மற்றும் பிடேனுக்கே செலுத்துங்கள். (மனசாட்சி என்ற மண்ணாங்கட்டி : நீ சொல்லித் தான் ஓட்டுப் போடப் போறாங்களாக்கும்?) என்னடா ஒபாமா தோற்க வேண்டும் என்று சொல்லி விட்டு ஒபாமாவுக்கு ஓட்டு கேட்டு வருகிறான் என்று யோசிக்காதீர்கள். நமது ஓட்டு வீணானால் நம்மை இந்த வரலாறு மன்னிக்காது. அதே சமயம் அந்த ஓட்டு மெக்கெய்னுக்கு போய் விட்டால் அவர் அடுத்து செய்யப் போகும் அனைத்து படுகொலைகளுக்கும் நீங்களே பொறுப்பு.

புஷ்ஷூக்கு ஓட்டுப் போட்ட பாவம் தான் அமெரிக்காவின் பொருளாதார சீரழிவுகளும், வேலையில்லா திண்டாட்டங்களும் அதிகமாக காரணம் என கஞ்சாக்குடி சித்தர் தனது ஞான திருஷ்டியில் பார்த்து கூறியுள்ளார்.

20 comments:

Senthil said...

me the first
good post

ராமலக்ஷ்மி said...

தலைப்பு ஒண்ணைச் சொல்லுது.
டிஸ்கி ஒண்ணைச் சொல்லுது.
தலையே சுத்தற மாதிரி இருந்தாலும் நீங்க சொல்ல வந்தது புரிந்த மாதிரிதான் இருக்கிறது:)!

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு! ஆனா எனக்குதான் தலை சுத்துது!!

கானா பிரபா said...

thala

yean intha kola veri?

enakku ulagame suttuthu

வெண்பூ said...

நல்ல பதிவு தமிழ்.. 30ம் தேதி ஜிடிபி டேட்டா வந்தாச்சி, நெகட்டிவ் க்ரோத்.. அநேகமா அடுத்த க்வாட்டரும் அப்படியேத்தான் இருக்கும்.. யார் ஜெயிச்சி வந்தாலும் பொருளாதார பிரச்சினைதான் பெரிய மலையா இருக்கப் போவுது.. யாருக்கு தெரியும், கடைசி நேரத்துல மெக்கெய்ன் வந்தாலும் வந்துடுவாரு.. :(

Unknown said...

அண்ணா எனக்கு அரசியல் தெரியாது... உங்கள தான் தெரியும்.. சோ நீங்க சொன்னதுக்காக பிரார்த்தனை பண்ணிகிட்டேன்.. அவ்ளோ தான்...:)))

ஆயில்யன் said...

என்ன தம்பி ஏன் என்னாச்சு?

அதான் லீவு கிடைச்சுடுச்சுல்ல!

ஊருக்கு போறதுக்கு ஆயத்தமாகியாச்சுல்ல?

அப்புறம் ஏன் என்னாச்சு?

(பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையப்பா!)

கபீஷ் said...

// ராமலக்ஷ்மி said...
தலைப்பு ஒண்ணைச் சொல்லுது.
டிஸ்கி ஒண்ணைச் சொல்லுது.
தலையே சுத்தற மாதிரி இருந்தாலும் நீங்க சொல்ல வந்தது புரிந்த மாதிரிதான் இருக்கிறது:)!
//
Repeateeeeeeey

Anonymous said...

எனக்கு புரியலை..புரியுது..புரியலை..

Ram said...

நீங்கள் சொன்ன காரணத்திற்காக ஒபாமா தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் அவர் வெற்றி கொள்வதையே நான் விரும்புகிறேன்.

King... said...

ஏன் எதற்கு எப்படி...

வால்பையன் said...

நம் மக்களூக்கு எதைவாது கொண்டாடவேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது.
முதலில் யார் வருகிறார்கள்.
என்ன செய்ய பொகிறார்கள் என்று பார்ப்போம்.
இது வேற மட்டையா இல்லை
அதே குட்டையில் ஊறியதா என்று

ஜோசப் பால்ராஜ் said...

இன்டர்நேசனல் பாலிட்டிக்ஸ்ஸூ??? க்ம்ம் , நடக்கட்டும் நடக்கட்டும்.

ஆனா நீங்க எழுதிய கருத்துக்கள் அனைத்திலும் உண்மையிருப்பது போல் தோன்றினாலும் உங்களுக்கு சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கைகள் அவ்வளவு எளிதில் மாறிவிடாது. எனவே அமெரிக்கா பிற நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் பெரிய அண்ணண் செயல்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நின்றுவிடாது. வேண்டுமானால் ஈராக், ஆப்கான் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறலாம்.

அமெரிக்கால ஒபாமா வந்தாலும் பாகிஸ்தானுக்கும் அவருதான் சனாதிபதியா இருப்பாரு, இந்தியாவுக்கும் அவருதான் ராச குருவா இருப்பாருண்ணே.

சின்னப் பையன் said...

நல்ல பதிவு தமிழ்..

Joe said...

ஒபாமா வெற்றி பெற போராடுவோம்னு சொல்ல தான் நினைக்கிறேன், ஆனால் இப்படிதான் Al Gore ஜெயிக்கனும்னும், John Kerry ஜெயிக்கனும்னும், வேண்டிகிட்டேன், ஒரு மண்ணும் நடக்கல!

அட போங்கடா! அமெரிக்க மக்கள் யாருக்கு வோட்டு போட்டா நமக்கு என்ன?

நமக்கு இந்தியா-ல இருக்கிற வோட்டை ஒழுங்கா போடுங்கடா டேய்! ;-)

Thamira said...

ஒருவழியாக புரிந்துகொண்டாலும், வஞ்சப்புகழ்ச்சியணி சரியாக கையாளப்படவில்லையோ என்றும் தோன்றுகிறது. பாராட்டுகளை விட்டு விட்டு தொடர்ந்து விமர்சனம் பண்ணிக்கொண்டேயிருப்பது போல தோன்றுகிறது.. அடிக்கவராதீர்கள்..! தவறு இருந்தால் ஸாரி.!

Sanjai Gandhi said...

//(வடிவேலுவை புஷ்ஷூடன் ஒப்பிட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)//

கொய்யால. என்னா நக்கலுய்யா இந்தாளுக்கு? :))

... அண்ணே.. தம்பிசெட்டிபட்டிகாரனுக்கு அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு ஓட்டு போடற உரிமை இருக்கான்னு கேட்டு சொல்லுங்க.. போய் போட்டுத் தள்ளிட்வோம்.. :))

.. அதுவும் கருமாந்திரம் புடிச்ச அந்த ஓட்டை நேரடியா அதிபருக்கு போட முடியாதாம்ல.. எதோ ஊர் ஊருக்கு தேர்வு குழு உறுப்பினரா யாரோ போட்டியிடுவாங்களாம்ல.. அவங்களுக்கு தான் மக்கள் ஓட்டு போடனுமாம்ல.. அந்த பயலுவ நம்ம ஓட்ட கரீட்டா நாம விரும்பற அதிபருக்கு போடுவாங்கன்னு என்ன நிச்சயம் அண்ணே?

டிபிசிடி.. அட அதாங்க புதசெவி :))

Sanjai Gandhi said...

...

ILA (a) இளா said...

நமக்கு வாக்குரிமை இல்லான்னாலும் ஒபாமாயா நமஹா...

அது சரி said...

உங்கள் விருப்பபடியே அகில உலக மீட்பர் அண்ணன் ஓபாமா வந்தாச்சி..வாழ்த்துக்கள் அவருக்கு..இனிமே என்ன பண்றாருன்னு பார்க்கலாம்..

(BTW,I dont live in America..if I do, I would've voted for McCain.Just like many other people I supported McCain..I am glad to say, I STILL DO!).