Tuesday, November 25, 2008

ஒரு கொலவெறி (கவுஜ) கவிதாயினியும், நன்றி அறிவித்தலும்

முதலில் நன்றியைச் சொல்லி விடலாம். நன்றி யாருக்கு, எப்படி சொல்வது என்று தெரியாவிட்டாலும் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. பொதுவாக நமக்கு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களைப் பற்றியே அக்கறை இருக்காது. நாம வழக்கமா போடும் கட்சிக்கோ, இல்லைன்னா அப்ப வீசுகின்ற ‘அலை’க்கு தகுந்தாற் போலோ ஓட்டுப் போட்டுட்டு போய்டுவோம். தேர்தல் முடிந்ததும் யார் ஜெயித்தார்கள் என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்.

ஆனால் பிற நாடுகளில் நடக்கும் தேர்த்ல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் நடந்தாலும், அதன் முடிவை மட்டும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவோம். அவ்வளவு தான்.... ஆங்கிலம் அறிந்த ஒரு சிலர் மட்டும் இணையத்தின் வாயிலாக, குறிப்பாக அமெரிக்க தேர்தல் பற்றி, தேர்தல் பிரச்சாரங்கள், உத்திகள், வாக்குறுதிகள், கணிப்புகள், மக்களின் உணர்வுகள் போன்றவற்றை கவனிப்பார்கள். எங்களைப் போன்று ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அதுவும் முடியாது.

தமிழ் பதிவர்களின் வசதிக்காக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலை கிட்டத்தட்ட நேரடியாக தமிழில் வெளியிட்ட தளம் தான் http://uspresident08.wordpress.com/. நமது தமிழ் பதிவர்கள் பலர் இணைந்து அமெரிக்க ஊடகங்களில் வரும் தேர்தல் செய்திகளை தமிழில் வெளியிட்டனர். வெறும் கட் பேஸ்ட்டாக மட்டும் இல்லாமல், அமெரிக்க வாழ் பதிவர்கள் பலருடைய கருத்துக்கள், கேலிச் சித்திரங்கள், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த விவாதங்கள், கருத்துக் கணிப்புகள் என தமிழ் மீடியாக்களால் செய்ய இயலாததை சிறப்பாக செய்து காட்டினார்கள். அமெரிக்காவின் சிக்கலான தேர்தல் முறையை நமக்கு தெளிவாக விளக்கி, தேர்தலை நேரடியாக வழங்கிய அக்குழுவினருக்கு மிக்க நன்றிகள்.

குறிப்பாக அந்த குழுவில் முக்கிய பங்காற்றிய நண்பர் bsubra அவர்களுக்கு எங்களது நன்றிகள்.

***********************************************************

ஒவ்வொரு காலகட்டமும் மாறும் என்று சொல்வார்கள். தமிழ் மணத்தில் பதிவுகள் எழுதி வந்த சகோதரி கவிதாயினி ’பாலைத்திணை’ காயத்ரி அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. முதலில் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் பாலைத்திணையில் எந்த கவுஜயும் வருவதில்லை. இது இயற்கைதான். இனி விரைவில் ரங்கமணியை சமாளிப்பது எப்படி, குழந்தை வளர்ப்பு போன்ற பதிவுகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் மணத்தில் ஏற்ப்பட்டுள்ள அந்த கொல வெறி கவுஜாயினியின் இடத்தை நிரப்ப இரண்டு பேரை இப்போது நாமினேட் செய்கின்றோம். அதில் முதல் இடத்தில் இருப்பவர் பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி. கரையோரக் கனவுகள் என்ற பெயரில் புரியாத பெயரில் கவுஜகளும், கதைகளும் எழுதி வருகின்றார். அதுமட்டுமின்றி பின்ன நவீனத்துவ சொல்லாடல்களும் அவரது பதிவில் காணக் கிடைக்கின்றது. (அவரது பி.ந. பதிவை தமிழில் மொழி பெயர்த்தால் 100 டாலர் பரிசு) எனவே வருங்கால கவுஜ கவிதாயினி பட்டத்தை அவருக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

போட்டியில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நாணல் அக்கா. கவிதைகளாக எழுதித் தள்ளுகின்றார். ஆனால் இவரது ஒரே குறை இவரது கவிதைகள் புரிகின்றதாம்.. ஆனால் நன்றாக கவிதை எழுதுகின்றார். இவர்கள் இருவரில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ கவுஜ கவிதாயினி என்ற பட்டத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

(நமக்கு கவித புரியாது என்பது ரகசியம்... அங்கெல்லாம் போய் கலக்கல், சூப்பர், நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் மட்டும் போடுவோம்.. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..:) )

சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

**********************************************************************

நேற்றைய பதிவில் நண்பர் பாபு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். நீங்களெல்லாம் இது போன்ற பதிவுகள் எழுத வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோளுடன்... நன்றி நண்பரே. நான் இது போன்ற விஷயங்களைப் பதிவில் எழுதுவதை விட நேரிடையாகவே செய்வதையே விரும்புகின்றேன். தீவிரவாதம், ஒரு சிறு உயிருக்குக் கூட தீங்கு விளைவிப்பதையோ நாங்கள் விரும்புவதில்லை. எங்கள் சமூகத்தை தீவிரவாதிகள் என மீடியாக்கள் பொய் கூறிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் போதும் நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்து செல்வோம். அதன் வெளிப்பாடு தான் அந்த பதிவு. குண்டு வைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்... அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே...இதுதான் எங்களது கோரிக்கை.

இன்னொரு விடயமும் நினைவுக்கு வருகின்றது. பொதுவாக முஸ்லிம்கள் திருமணம் ஆனதும் 40 நாட்களுக்கு வெளியே தேவையில்லாமல் விட மாட்டார்கள். (அதில் நமக்கு நம்பிகையில்லை). முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வைத்து நடத்தப்பட்ட ஒரு பேரணிக்காக, திருமணம் ஆன சில தினங்களில் என் குடும்பத்துடன் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து பேரணி நடந்து பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம். அவைகளின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் வேலை, மற்றும் கல்வியில் 3.5 சதவீதம் என்ற பாதிக் கிணற்றைத் தாண்டியுள்ளோம்.

இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

64 comments:

Unknown said...

ஹை என்னப்பத்திக்கூட பதிவு வருது... நானும் பெரிய ஆள் தான் போல... ;)) நன்றி அண்ணா..:))))) ஆனா, நீங்க போடற பின்னுட்டம் எல்லாம் நிஜம்ன்னு நினைச்ச என் நினைப்புல மண்ணள்ளி போட்டு பூச்செடி நட்டு வெச்சிருக்கீங்க நன்று... :P

Anonymous said...

கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள். பதிவு கலக்கல்

Unknown said...

கரையோர கனவுகள்- நிறைவேறாத, நிஜத்தில் நடக்காத, அல்லது செய்ய விருப்பமில்லாத சில நல்ல விஷயங்கள செய்யனும்ன்னு ஆசை இருக்கும்... ஆனா, அதெல்லாம் நிஜத்துல சில சமயங்கள் இல்ல பல சமயங்கள் அல்லது எப்பவுமே செய்யமுடியாத,அல்லது பறிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருக்கும்... அப்படிப்பட்டத கனவுல மட்டும் பார்த்து செய்து சந்தோஷப்பட்டுப்போம்.. (கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்).. அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை கனவாக கண்டு தீர்த்துக்கறது மாதிரி தான் இதுவும்.. அதனாலதான் என் ப்ளாக் பேரு கரையோர கனவுகள் (ஹை ஆரம்பிச்ச மாதிரியே முடிச்சிட்டேன்) ;))))))) இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னு கேட்கறீங்களா?? நானும் பேர வெச்சிட்டேன்.. சரி யாராவது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டீங்களா?? இல்லையே.. அதான் இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்.. ;))))))))

Unknown said...

//(அவரது பி.ந. பதிவை தமிழில் மொழி பெயர்த்தால் 100 டாலர் பரிசு) //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

தமிழன்-கறுப்பி... said...

பாலைத்திணையின் கவிதைகள் அற்புதமாயிருப்பவை...!

தமிழன்-கறுப்பி... said...

என்னதான் சோகங்களை கொண்டாடினாலும்...அவருடைய பின்னூட்டங்களும் மொக்கைகளும் செம கலாய்த்தலோடு இருக்கும் முனைவர்னா சும்மாவா...:)

தமிழன்-கறுப்பி... said...

இனிமையானதொரு வாழ்வுக்கு வாழ்த்துக்கனைள இங்கேயும் சொல்லிக்கறோம்...

தமிழன்-கறுப்பி... said...

\\
பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி. கரையோரக் கனவுகள் என்ற என்ற பெயரில் புரியாத பெயரில் கவுஜகளும், கதைகளும் எழுதி வருகின்றார். அதுமட்டுமின்றி பின்ன நவீனத்துவ சொல்லாடல்களும் அவரது பதிவில் காணக் கிடைக்கின்றது
\\
ஆமா ஆமா இந்தப்பொண்ணு ரொம்ப பீல் பண்ண வைக்குது தல...

கொஞ்சம் கொலைவெறியோட இருக்கறாமாதிரித்தான் தெரியுது...;)

தமிழன்-கறுப்பி... said...

நாணல் அவங்க ஸ்டைல்ல அசத்துறாங்க...!

தமிழன்-கறுப்பி... said...

\\
தமிழ் பதிவர்களின் வசதிக்காக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலை கிட்டத்தட்ட நேரடியாக தமிழில் வெளியிட்ட தளம் தான் http://uspresident08.wordpress.com/. நமது தமிழ் பதிவர்கள் பலர் இணைந்து அமெரிக்க ஊடகங்களில் வரும் தேர்தல் செய்திகளை தமிழில் வெளியிட்டனர்.
\\

அட இதுவேற இருக்கா அப்ப நன்றி சொல்லித்தானே ஆகணும் ஏன்னா எங்களுக்கும் இங்கிலீசு ரொம்ப பிடிச்ச மொழியில்ல...:)

தமிழன்-கறுப்பி... said...

நேற்றய பதிவின்னும் படிக்கவில்லை,
ஆனாலும் அதை நீங்கள் எழுதியதில் எந்த வித்தியாசமும் எனக்கு தோன்றவில்லை...

ராமலக்ஷ்மி said...

//இனி விரைவில் தங்கமணியை சமாளிப்பது எப்படி,//

திருத்தம்:), ‘ரங்க’மணியை !

*****

உண்மைதான் தமிழ் பிரியன், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் எவராயிருப்பினும் பாராபட்சமின்றி விசாரிக்க தண்டிக்க பட வேண்டியவர்களே.

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!

//கரையோர கனவுகள்- நிறைவேறாத, நிஜத்தில் நடக்காத, அல்லது செய்ய விருப்பமில்லாத சில நல்ல விஷயங்கள செய்யனும்ன்னு ஆசை இருக்கும்... ஆனா, அதெல்லாம் நிஜத்துல சில சமயங்கள் இல்ல பல சமயங்கள் அல்லது எப்பவுமே செய்யமுடியாத,அல்லது பறிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருக்கும்... அப்படிப்பட்டத கனவுல மட்டும் பார்த்து செய்து சந்தோஷப்பட்டுப்போம்.. (கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்).. அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை கனவாக கண்டு தீர்த்துக்கறது மாதிரி தான் இதுவும்.. அதனாலதான் என் ப்ளாக் பேரு கரையோர கனவுகள் (ஹை ஆரம்பிச்ச மாதிரியே முடிச்சிட்டேன்) ;))))))) இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னு கேட்கறீங்களா?? நானும் பேர வெச்சிட்டேன்.. சரி யாராவது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டீங்களா?? இல்லையே.. அதான் இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்.. ;))))))))//

கவிதயே பரவால்ல போலிருக்கே! யப்பா!

☀நான் ஆதவன்☀ said...

//கரையோர கனவுகள்- நிறைவேறாத, நிஜத்தில் நடக்காத, அல்லது செய்ய விருப்பமில்லாத சில நல்ல விஷயங்கள செய்யனும்ன்னு ஆசை இருக்கும்... ஆனா, அதெல்லாம் நிஜத்துல சில சமயங்கள் இல்ல பல சமயங்கள் அல்லது எப்பவுமே செய்யமுடியாத,அல்லது பறிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருக்கும்... அப்படிப்பட்டத கனவுல மட்டும் பார்த்து செய்து சந்தோஷப்பட்டுப்போம்.. (கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்).. அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை கனவாக கண்டு தீர்த்துக்கறது மாதிரி தான் இதுவும்.. அதனாலதான் என் ப்ளாக் பேரு கரையோர கனவுகள் (ஹை ஆரம்பிச்ச மாதிரியே முடிச்சிட்டேன்) ;))))))) இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னு கேட்கறீங்களா?? நானும் பேர வெச்சிட்டேன்.. சரி யாராவது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டீங்களா?? இல்லையே.. அதான் இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்.. ;))))))))
//

வர வர பின்னூட்டமும் புரியமாட்டேங்குது....

நாணல் said...

//(நமக்கு கவித புரியாது என்பது ரகசியம்... அங்கெல்லாம் போய் கலக்கல், சூப்பர், நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் மட்டும் போடுவோம்.. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..:) )//

:(( எங்க இப்படி... நீங்களே இப்படி சொன்னா எப்படி.... ?

நாணல் said...

நாமினேட் பண்ணதுக்கு நன்றிங்க அண்ணா.... :) இனி புரியாத மாதிரி கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன்.. ;)

வாழ்த்துக்கள் ஸ்ரீ.... :)

புதுகை.அப்துல்லா said...

இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

//

இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்.

பாபு அண்ணே தீவிரவாதத்திற்கு எதிரான என்னுடைய கடுமையான விமர்சனங்களை அண்ணன் கோவியார் பதிவுகளிலும், மோகன்கந்தசாமி பதிவிலும் பல இடங்களில் காணலாம். நாங்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. உங்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பதைப் போல எங்களிலும் சிலர் இருக்கின்றார்கள். அவ்வளவே...

புதியவன் said...

//இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.//

நம்பிக்கை தாங்க வாழ்க்கை.

//புதுகை.அப்துல்லா said...
இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

//இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்.//

நண்பர் புதுகை.அப்துல்லா உணர்வுப்பூவமாக சொல்லியிருக்கிறார். ஆனா, உண்மைய சொல்லியிருக்கிறார்.

நம்புங்கள் நல்லதே நடக்கும்.

நாமினேட் செய்யப்பட்டுள்ள
கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்.

rapp said...

கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்:):):)

rapp said...

என்னைய மாதிரி சாகித்திய அகாதமி கவிஞர்கள் பத்தில்லாம் ஒன்னும் எழுதறதில்லையா நீங்க:):):)

rapp said...

//கவிதயே பரவால்ல போலிருக்கே! யப்பா!//

வழிமொழிகிறேன்:):):) நான் ஒருத்தி உண்மைத்தமிழன் சாருக்கு டப் கொடுக்கறது பத்தாதா,நீங்க வேற எதுக்கு இப்டி பின்னூட்டத்துல பீதியக் கெளப்புறீங்க:):):)

rapp said...

//புதுகை.அப்துல்லா said...

//இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.//

இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்.//

super:):):)

rapp said...

//என்னதான் சோகங்களை கொண்டாடினாலும்...அவருடைய பின்னூட்டங்களும் மொக்கைகளும் செம கலாய்த்தலோடு இருக்கும் முனைவர்னா சும்மாவா//

வழிமொழிகிறேன்:):):)

rapp said...

me the 25th:):):)

ஆயில்யன் said...

நல்லா இருக்குங்க தமிழ்பிரியன்!

ஆயில்யன் said...

//அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை //

இதுக்குத்தான் அந்த அக்காகிட்ட கடன் வாங்காதீங்கன்னு சொன்னேன் பாஸ்! கேட்டாத்தானே இப்ப சோகப்பட்டு சோகப்பட்டு போறீங்க:((((((

ஆயில்யன் said...

//கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்///

கவலை கூட ஒருவிதமான கனவுதானே பாஸ்!

(என்னங்க நான் சொல்றது கரீக்ட்ங்களா?)

ஆயில்யன் said...

//இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்///

அடப்பாவி பாஸ்!

பின்னூட்டப்பொட்டியை பார்த்தா உமக்கு சாக்கு மாதிரி தெரியுதா? இம்புட்டு பெரிய பின்னூட்டமெல்லாம் போடுறீங்க!

வண்ணான் said...

:)

நட்புடன் ஜமால் said...

\\
ஜனநாயக ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்து செல்வோம். அதன் வெளிப்பாடு தான் அந்த பதிவு. குண்டு வைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்... அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே...இதுதான் எங்களது கோரிக்கை.\\

ஆம் இதுவே அனைவர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டும் என் நம்பிக்கையோடு கேட்க்கிறேன்.

கபீஷ் said...

//புதுகை.அப்துல்லா said...

//இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.//

இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்//

kudos to Abdulla

தேவன் மாயம் said...

என்னென்னமோ எழுதுராங்க,
ஒன்னும் புரியலயேன்னு
மண்டையைப்போட்டு
கொழப்பிக்கிட்டு இருந்தேன்
உங்கள் ப்ளாக் படிச்சதும்
எல்லாம் வெளங்கிப்போச்சு!!!

குப்பன்.யாஹூ said...

ஸ்ரீமதி, நாணல் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

காயத்ரி (பாலை திணை) யின் நண்பி ஜீ (அழஅகான ராட்சசி) யும் இந்த தேர்தலில் பங்கு கொள்ளலாமே.

திருமணம் முடிந்து இன்னும் சிறப்பான பதிவுகள் வரும் சகோதரி காயத்ரி இடம்
இருந்து.

குப்பன்_யாஹூ

Thamiz Priyan said...

///ஸ்ரீமதி said...

ஹை என்னப்பத்திக்கூட பதிவு வருது... நானும் பெரிய ஆள் தான் போல... ;)) நன்றி அண்ணா..:))))) ஆனா, நீங்க போடற பின்னுட்டம் எல்லாம் நிஜம்ன்னு நினைச்ச என் நினைப்புல மண்ணள்ளி போட்டு பூச்செடி நட்டு வெச்சிருக்கீங்க நன்று... :P///

ஏம்மா ஸ்ரீமதி... நல்லா மண்ணைப் போட்டு பூச்செடி வைக்கிறது கூட தவறா?... என்ன கொடும இது தங்கச்சி..:)

Thamiz Priyan said...

// சின்ன அம்மிணி said...

கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள். பதிவு கலக்கல்///
நன்றிங்கம்மணி!...:)

Thamiz Priyan said...

///ஸ்ரீமதி said...

கரையோர கனவுகள்- நிறைவேறாத, நிஜத்தில் நடக்காத, அல்லது செய்ய விருப்பமில்லாத சில நல்ல விஷயங்கள செய்யனும்ன்னு ஆசை இருக்கும்... ஆனா, அதெல்லாம் நிஜத்துல சில சமயங்கள் இல்ல பல சமயங்கள் அல்லது எப்பவுமே செய்யமுடியாத,அல்லது பறிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருக்கும்... அப்படிப்பட்டத கனவுல மட்டும் பார்த்து செய்து சந்தோஷப்பட்டுப்போம்.. (கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்).. அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை கனவாக கண்டு தீர்த்துக்கறது மாதிரி தான் இதுவும்.. அதனாலதான் என் ப்ளாக் பேரு கரையோர கனவுகள் (ஹை ஆரம்பிச்ச மாதிரியே முடிச்சிட்டேன்) ;))))))) இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னு கேட்கறீங்களா?? நானும் பேர வெச்சிட்டேன்.. சரி யாராவது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டீங்களா?? இல்லையே.. அதான் இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்.. ;))))))))/////

தங்கச்சி.. உண்மையிலேயே சின்ன விளக்கம் என்று ஒரு அரிய உண்மையைச் சொல்லிட்டீங்க... உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்மா...:)

Thamiz Priyan said...

///ஸ்ரீமதி said...
//(அவரது பி.ந. பதிவை தமிழில் மொழி பெயர்த்தால் 100 டாலர் பரிசு) //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))////
அமெளண்ட் கம்மியா இருக்கோ... அப்ப 500 டாலர் சொல்லிடலாமா?

Thamiz Priyan said...

/// தமிழன்-கறுப்பி... said...

பாலைத்திணையின் கவிதைகள் அற்புதமாயிருப்பவை...!///
சில வரிகளில் அசத்தலான கவிதைகள் எழுதுவாங்க தல.. அற்புதம் தான்.

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

என்னதான் சோகங்களை கொண்டாடினாலும்...அவருடைய பின்னூட்டங்களும் மொக்கைகளும் செம கலாய்த்தலோடு இருக்கும் முனைவர்னா சும்மாவா...:)///
அதே தான்... என்னமோ படிச்சி இருக்காங்களாம்.. என்னன்னவோ பட்டமெல்லாம் வாங்கி இருக்காங்களாம்.. திறமைசாலிகள் நம்மோடு இருப்பது நமக்குத் தானே பெருமை!

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

இனிமையானதொரு வாழ்வுக்கு வாழ்த்துக்கனைள இங்கேயும் சொல்லிக்கறோம்...///
அனைவரும் சேர்ந்து இன்னும் சொல்லலாம்...:)

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...
\\
பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி. கரையோரக் கனவுகள் என்ற என்ற பெயரில் புரியாத பெயரில் கவுஜகளும், கதைகளும் எழுதி வருகின்றார். அதுமட்டுமின்றி பின்ன நவீனத்துவ சொல்லாடல்களும் அவரது பதிவில் காணக் கிடைக்கின்றது
\\
ஆமா ஆமா இந்தப்பொண்ணு ரொம்ப பீல் பண்ண வைக்குது தல...
கொஞ்சம் கொலைவெறியோட இருக்கறாமாதிரித்தான் தெரியுது...;)///

நம்ம தங்கச்சி எல்லாம் ஒரு கொல வெறியோட தான் அலையுதுக... மச்சான்களின் பாடு தான் பாவமா இருக்கு... எந்த அப்பாவியோ தெரியல...;))

Thamiz Priyan said...

/// தமிழன்-கறுப்பி... said...

நாணல் அவங்க ஸ்டைல்ல அசத்துறாங்க...!///
ஆமா தல... அழகான ஸ்டைல் அவங்களோடது..:)

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

\\
தமிழ் பதிவர்களின் வசதிக்காக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலை கிட்டத்தட்ட நேரடியாக தமிழில் வெளியிட்ட தளம் தான் http://uspresident08.wordpress.com/. நமது தமிழ் பதிவர்கள் பலர் இணைந்து அமெரிக்க ஊடகங்களில் வரும் தேர்தல் செய்திகளை தமிழில் வெளியிட்டனர்.
\\

அட இதுவேற இருக்கா அப்ப நன்றி சொல்லித்தானே ஆகணும் ஏன்னா எங்களுக்கும் இங்கிலீசு ரொம்ப பிடிச்ச மொழியில்ல...:)///

ரொம்ப பிடிச்ச மொழியா? புரியாத மொழியான்னு தெளிவா சொல்லிப் போடுங்ண்ணா...:))

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

நேற்றய பதிவின்னும் படிக்கவில்லை,
ஆனாலும் அதை நீங்கள் எழுதியதில் எந்த வித்தியாசமும் எனக்கு தோன்றவில்லை...///

நன்றி தல!

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
//இனி விரைவில் தங்கமணியை சமாளிப்பது எப்படி,//
திருத்தம்:), ‘ரங்க’மணியை !
*****
உண்மைதான் தமிழ் பிரியன், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் எவராயிருப்பினும் பாராபட்சமின்றி விசாரிக்க தண்டிக்க பட வேண்டியவர்களே.///

ஹிஹிஹி அவசரத்தில் தவறிடுச்சுக்கா.. மாத்திட்டேன்..

ஆமாம் அக்கா! தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட்டாலே தவறு செய்பவர்கள் திருந்தி விடுவார்கள்!

Thamiz Priyan said...

///சந்தனமுல்லை said...
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!
//கரையோர கனவுகள்- நிறைவேறாத, நிஜத்தில் நடக்காத, அல்லது செய்ய விருப்பமில்லாத சில நல்ல விஷயங்கள செய்யனும்ன்னு ஆசை இருக்கும்... ஆனா, அதெல்லாம் நிஜத்துல சில சமயங்கள் இல்ல பல சமயங்கள் அல்லது எப்பவுமே செய்யமுடியாத,அல்லது பறிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருக்கும்... அப்படிப்பட்டத கனவுல மட்டும் பார்த்து செய்து சந்தோஷப்பட்டுப்போம்.. (கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்).. அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை கனவாக கண்டு தீர்த்துக்கறது மாதிரி தான் இதுவும்.. அதனாலதான் என் ப்ளாக் பேரு கரையோர கனவுகள் (ஹை ஆரம்பிச்ச மாதிரியே முடிச்சிட்டேன்) ;))))))) இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னு கேட்கறீங்களா?? நானும் பேர வெச்சிட்டேன்.. சரி யாராவது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டீங்களா?? இல்லையே.. அதான் இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்.. ;))))))))//
கவிதயே பரவால்ல போலிருக்கே! யப்பா!///

சந்தனமுல்லையக்கா... இந்த பிள்ளயோட கவிதையைவிட இது தலை சுத்த வைக்குதோ?

Thamiz Priyan said...

///நான் ஆதவன் said...

//கரையோர கனவுகள்- நிறைவேறாத, நிஜத்தில் நடக்காத, அல்லது செய்ய விருப்பமில்லாத சில நல்ல விஷயங்கள செய்யனும்ன்னு ஆசை இருக்கும்... ஆனா, அதெல்லாம் நிஜத்துல சில சமயங்கள் இல்ல பல சமயங்கள் அல்லது எப்பவுமே செய்யமுடியாத,அல்லது பறிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருக்கும்... அப்படிப்பட்டத கனவுல மட்டும் பார்த்து செய்து சந்தோஷப்பட்டுப்போம்.. (கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்).. அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை கனவாக கண்டு தீர்த்துக்கறது மாதிரி தான் இதுவும்.. அதனாலதான் என் ப்ளாக் பேரு கரையோர கனவுகள் (ஹை ஆரம்பிச்ச மாதிரியே முடிச்சிட்டேன்) ;))))))) இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னு கேட்கறீங்களா?? நானும் பேர வெச்சிட்டேன்.. சரி யாராவது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டீங்களா?? இல்லையே.. அதான் இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்.. ;))))))))
//
வர வர பின்னூட்டமும் புரியமாட்டேங்குது....///

அப்ப நிறைய பேரை தலை சுத்த வைக்குதுன்னு சொல்லுங்க

Thamiz Priyan said...

///நாணல் said...
//(நமக்கு கவித புரியாது என்பது ரகசியம்... அங்கெல்லாம் போய் கலக்கல், சூப்பர், நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் மட்டும் போடுவோம்.. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..:) )//
:(( எங்க இப்படி... நீங்களே இப்படி சொன்னா எப்படி.... ?////

ஹிஹிஹிஹி உண்மையைச் சொன்னா நம்ப மாட்டீங்க.. பொய் சொன்ன நம்புறிங்க... இன்னுமாய்யா எங்களை இந்த உலகம் நம்புது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///நாணல் said...
நாமினேட் பண்ணதுக்கு நன்றிங்க அண்ணா.... :) இனி புரியாத மாதிரி கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன்.. ;)
வாழ்த்துக்கள் ஸ்ரீ.... :)////

நீயுமாம்மா... சரி சரி.. முயற்சி செய்ங்க வந்து பார்க்கிறோம்..:))

Thamiz Priyan said...

///புதுகை.அப்துல்லா said...
இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
//
இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்.

பாபு அண்ணே தீவிரவாதத்திற்கு எதிரான என்னுடைய கடுமையான விமர்சனங்களை அண்ணன் கோவியார் பதிவுகளிலும், மோகன்கந்தசாமி பதிவிலும் பல இடங்களில் காணலாம். நாங்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. உங்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பதைப் போல எங்களிலும் சிலர் இருக்கின்றார்கள். அவ்வளவே...///

மிகச் சரியா சொல்லி இருக்கீங்க அண்ணே! நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் உங்கள் வாசகம் இன்னும் வீரியமாக இருப்பதை உணர முடிகின்றது... நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

/// புதியவன் said...

//இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.//

நம்பிக்கை தாங்க வாழ்க்கை.

//புதுகை.அப்துல்லா said...
இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

//இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்.//

நண்பர் புதுகை.அப்துல்லா உணர்வுப்பூவமாக சொல்லியிருக்கிறார். ஆனா, உண்மைய சொல்லியிருக்கிறார்.

நம்புங்கள் நல்லதே நடக்கும்.

நாமினேட் செய்யப்பட்டுள்ள
கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்.////

நன்றி புதியவன்!

Thamiz Priyan said...

///Thooya said...

:)///
நன்றி தூயாக்கா!

Thamiz Priyan said...

/// rapp said...

என்னைய மாதிரி சாகித்திய அகாதமி கவிஞர்கள் பத்தில்லாம் ஒன்னும் எழுதறதில்லையா நீங்க:):):)////
யக்கா... உங்களுக்கு வேற லிஸ்ட் இருக்கு.. தளபதியின் படத்திற்கு உங்க கவிதைகள் பாடல்களாக வரும்!

Thamiz Priyan said...

///rapp said...

//கவிதயே பரவால்ல போலிருக்கே! யப்பா!//

வழிமொழிகிறேன்:):):) நான் ஒருத்தி உண்மைத்தமிழன் சாருக்கு டப் கொடுக்கறது பத்தாதா,நீங்க வேற எதுக்கு இப்டி பின்னூட்டத்துல பீதியக் கெளப்புறீங்க:):):)///
ஹா ஹா ஹா

Thamiz Priyan said...

///rapp said...

//என்னதான் சோகங்களை கொண்டாடினாலும்...அவருடைய பின்னூட்டங்களும் மொக்கைகளும் செம கலாய்த்தலோடு இருக்கும் முனைவர்னா சும்மாவா//

வழிமொழிகிறேன்:):):)////
அதே!

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...

நல்லா இருக்குங்க தமிழ்பிரியன்!////
நன்றி ஆயில் அண்ணே! டெம்ப்ளேட்டோ??

Thamiz Priyan said...

/// ஆயில்யன் said...

//அந்த மாதிரியான நதியோரம் இருக்கும் நாணலுக்கு (ஹை அக்கா பேரு) நதியோடு போகமுடியாத சோகத்தினை //

இதுக்குத்தான் அந்த அக்காகிட்ட கடன் வாங்காதீங்கன்னு சொன்னேன் பாஸ்! கேட்டாத்தானே இப்ப சோகப்பட்டு சோகப்பட்டு போறீங்க:((((((///
அச்சச்சோ... இது வேறயா?

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்மைத் தின்றுவிடும்///
கவலை கூட ஒருவிதமான கனவுதானே பாஸ்!
(என்னங்க நான் சொல்றது கரீக்ட்ங்களா?)///
ஆமாங்ண்ணா...:))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//இது தான் சாக்குன்னு இங்க சொல்லிட்டேன்///
அடப்பாவி பாஸ்!
பின்னூட்டப்பொட்டியை பார்த்தா உமக்கு சாக்கு மாதிரி தெரியுதா? இம்புட்டு பெரிய பின்னூட்டமெல்லாம் போடுறீங்க!////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

//வெடிகுண்டு முருகேசன் said...

:)///
நன்றி வெ.மு.

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...

\\
ஜனநாயக ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்து செல்வோம். அதன் வெளிப்பாடு தான் அந்த பதிவு. குண்டு வைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்... அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே...இதுதான் எங்களது கோரிக்கை.\\

ஆம் இதுவே அனைவர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டும் என் நம்பிக்கையோடு கேட்க்கிறேன்.////

ஆமாம் அதிரை ஜமால்!

Thamiz Priyan said...

///கபீஷ் said...
//புதுகை.அப்துல்லா said...
//இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.//
இந்த வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.காரணம், "நாங்கள் என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று இருக்க வேண்டும்//
kudos to Abdulla///
நன்றி கபீஷ்!

Thamiz Priyan said...

///thevanmayam said...

என்னென்னமோ எழுதுராங்க,
ஒன்னும் புரியலயேன்னு
மண்டையைப்போட்டு
கொழப்பிக்கிட்டு இருந்தேன்
உங்கள் ப்ளாக் படிச்சதும்
எல்லாம் வெளங்கிப்போச்சு!!!///
என் பதிவுக்கு வந்ததும் புரிந்து போச்சா? காமெடி கீமெடி இல்லியே???...;)))

Thamiz Priyan said...

///குப்பன்_யாஹூ said...
ஸ்ரீமதி, நாணல் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
காயத்ரி (பாலை திணை) யின் நண்பி ஜீ (அழஅகான ராட்சசி) யும் இந்த தேர்தலில் பங்கு கொள்ளலாமே.
திருமணம் முடிந்து இன்னும் சிறப்பான பதிவுகள் வரும் சகோதரி காயத்ரி இடம்
இருந்து.
குப்பன்_யாஹூ////

நிச்சயமாக பாலைத் திணையில் இனியும் சிறப்பான பதிவுகளைப் பார்க்கலாம்... நன்றி குப்பன்_யாஹூ!