இன்றைய உலகின் முக்கிய சவாலாகக் கருதப்படுவது தீவிரவாதம் தான். இந்த கருத்தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக பரவியுள்ளது எனலாம். இந்தியா முழுவதும் அவ்வப்போது ஒரு கால இடைவெளியில் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் 2003 க்குப் பிறகு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் அனைத்தையும் இங்கு வரிசைப் படித்தியுள்ளோம்.
21-11-2003 ரஹ்மத் நகர் மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு
23-08-2003 மும்ப்பை கார் குண்டு வெடிப்பு 60 பேர் பலி
2003 சாய்பாபா கோவிலில் குண்டு வெடிப்பு
15-8-2004 மும்பை கார் குண்டு வெடிப்பு 16 பேர் பலி
15-8-2004 அஸ்ஸாம் குண்டு வெடிப்பு 6 பேர் பலி
27-8-2004 மஹாராஷ்டிரா பூர்ணா மசூதி குண்டு வெடிப்பு
27-8-2004 மஹாராஷ்டிரா ஜால்னா நகர் குண்டு வெடிப்பு
29-10-2005 தில்லி குண்டு வெடிப்பு 66 பேர்
2006 மாலேகான் ஜூம்மா தொழுகை நேரம் 38 பேர் மரணம், 150 பேர் படுகாயம்
11-07-2006 இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு 180 பேர் மரணம்
07-03-2006 காசியில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி
2006 அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிப்பு
25-08-2007 ஹைதராபாத் பூங்கா 11 பேர் பலி
18-05-2007 ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை ஒரு பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு
19-02-2007 ல் பாகிஸ்தான் செல்லும் இரயிலில் குண்டு வெடிப்பு 66 பேர் பலி
29-09-2008 மாலேகான் ஊரில் சிமி ஆபிஸில் குண்டு வெடித்து 6 பேர் பலி. அதே நேரத்தில் குஜராத்தில் ஒரு ஊரிலும் குண்டு வெடித்தது. இதில் ஒரு சிறுவன் பலியானான்.
25-07-2008 பெங்களூருவில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியானார்கள்.
13-05-2008 ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் குண்டு வெடிப்பு 63 பேர் பலி
26-07-2008 குஜராத் அஹமதாபாத் 55 பேர் பலி, அதே நாளில் குஜராத் சூரத்தில் ஒரு குண்டு வெடிப்பு பலர் காயமடைந்தனர்.
2008 செப்டம்பர் தில்லியில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி
30-10-2008 கவுகாத்தியில் குண்டு வெடிப்பு 70 பேருக்கும் மேல் பலி
இதுபோல் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 40 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இது தவிர இன்னும் சில குண்டு வெடிப்புகளும் நடைபெற்றன.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று கணக்கிட்டால் முஸ்லிம்கள் தான் என தெளிவாக சொல்லி விடலாம். இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக அதை ஏதாவது முஸ்லிம் அமைப்புடன் இணைத்து, நான்கு முஸ்லிம்களை கைது செய்து மீடியாவுக்கு காட்டி விடுவார்கள். போலிஸ் உயரதிகாரிகளும் மீடியாக்களுக்கு , குண்டு வெடிப்பைப் பற்றி மேல் தகவல் சொல்ல வேண்டும் என்று வரும் போது உடனே ஒரு முஸ்லிம் அமைப்பின் மீது அதை போட்டு விடுவதை சகஜமாகக் காணலாம்.
இதனால் என்னவாகின்றது என்றால் இந்தியாவில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போன்றே உள்ளது. எங்காவது வேலை கேட்டுச் சென்றால் முஸ்லிம் என்றதும் வேலை கொடுக்க யோசிக்கின்றனர். வாடகைக்கு வீடு தேடிச் சென்றால் பிற மதத்தவர்களாக இருந்தால் முஸ்லிம்களுக்கு வீடு தர யோசிக்கின்றனர். பொது இடத்தில் ஒரு கடையில் ஏதாவது பையை வைத்து விட்டு, டாய்லெட் போய்ட்டு வருகிறேன் என்று கூட சொல்ல முடியவில்லை. ஏன்? முஸ்லிம்கள் எடுத்தவுடன் தீவிரவாதியாகத் தான் பார்க்கப்படுகின்றனர்.
மீடியாக்களும் எந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், போலிஸ் விசாரிப்பதற்கு முன்பே இவர்களே நன்றாக ஜோடனை செய்யக் கற்றுக் கொண்டு விட்டனர். இவை போன்றவை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்பது போலவே காட்டத் தொடங்கி விட்டன.
ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் இந்த விஷயங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது தெளிவாக விளங்கும். 2003 க்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் பற்றிய விபரங்களையும் அதன் விசாரணைகள் குறித்தும் பார்த்தாலே இந்த விஷயங்கள் புரியும்.
குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் காவல் துறை உயரதிகாரிகள் வாயில் வராத ஏதாவது ஒரு அரபிப் பெயரில் ஒரு அமைப்பின் பெயரைக் கூறி, அது தான் காரணம் என்று கூறி விடுவர்.
இந்தியா டிவி போன்ற புழுகு செய்திகளை வெளியிடும் தொ(ல்)லைக் காட்சிகளும் தங்களுக்கு மின்னஞ்சல், பேக்ஸ் வந்ததாக ஏதாவது கட்டி விடும்... உடனே இந்தியா டுடே, தினமல(ம்)ர் போன்ற சாக்கடைகளும் அதை வாரி எடுத்து முதல் பக்கங்களில் வெளியிட்டு சொறிந்து கொள்ளும்.
உண்மையில் இந்த குண்டு வெடிப்புகள் குறித்தெல்லாம் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலே உள்ள குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததும் முஸ்லிம்களின் மீது உடனடியாக பழி போடப் பட்டது. அதற்குப் பிறகு மேல் விசாரணை ஏதுமின்றி வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. இதில் மாலேகான் குண்டு வெடிப்பு மட்டும் தோண்டி துருவப்பட்டுள்ளது. அதில் ஒரு சங் பரிவார் பெண் சாமியாருக்கு நேரடி தொடர்பு இருப்பதும், இராணுவ உயரதிகாரிகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பதும் அப்பட்டமாக வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த விசாரணையை மற்ற குண்டுவெடிப்புகளை விசாரிக்கும் போலிஸ் விசாரிக்காமல் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு விசாரணை செய்ததாலே கண்டுபிடிக்கப்பட்டது.
போலிஸ் விசாரணை செய்திருந்தால் வழக்கம் போல் பதத்துப் போய் இருக்கும். மாலேகானில் குண்டு வெடித்ததும் 8 முஸ்லிம் இளைஞர்கள் தான் இதைச் செய்தது என்று கூறி, அவர்களுக்கும் சிமிக்கும் தொடர்பு உண்டு என்று கதை கட்டி, முகத்தில் முக்காடு போட்டு கைது செய்து காமெடி செய்தது போலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திக்கு
அந்த பெண் சாமியார் பிரக்யா சிங்குடன் இணைந்து இராணுவ உயரதிகாரிகள் சிலரும் RDX உள்ளிட்ட வெடிப் பொருட்களை கடத்திக் கொணர்ந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தியது அம்பலமாகி இருக்கின்றது. என்னதான் அம்பலமானாலும் இவர்களை தண்டிக்க மட்டும் முடியாது. ஏனெனில் சட்டமும், நீதிபதியும், வக்கீல்களும், போலிசாரும் இவர்களுக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.
இதில் சில நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்தியையும் குறிப்பிடுவது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சமீபத்தில் எதிர்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான அத்வானியை சந்தித்து சில விளக்கங்கள் அளித்தார். பாதுகாப்பு ஆலோசகரே நேரடியாக வந்து ஏன் அத்வானியை சந்திக்க வேண்டும்?
ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க ஆலோசனையா? என்றால் இல்லை.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவதைத் தடுப்பது தொடர்பாகவா? என்றால் இல்லை
நாட்டில் நடக்கும் லஞ்ச லாவண்யங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலா? என்றால் இல்லை
மாலேகான் குண்டு வெடிப்புக்கான காரணகர்த்தாவான பெண் சாமியாரை போலிசார் விசாரணையில் வைத்துள்ளனர். அந்த பெண் சாமியாரே குண்டு வைத்ததை ஒத்துக் கொண்டுள்ளார். சங் பரிவாரின் முக்கிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளதால் கலக்கம் அடைந்துள்ள அத்வானி அதைக் கண்டித்து குரல் கொடுக்கின்றார். இதனால் பதறிப் போன மத்திய காங்கிரஸ் அரசு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரை அனுப்பி அவரை தாஜா செய்கின்றது. இந்த நிலை இருந்தால் நீதி விசாரணை எப்படி நடக்கும்?
இன்னும் சில செய்தி துணுக்குகளைப் பார்க்கலாம்.
மத்தியபிரதேசம் சோப்தா குலாப்சிங் என்ற RSS பிரமுகர் வீட்டில் அம்மோனியம் நைட்ரேட் 7 மூட்டைகளில் பாக்கெட் பாக்கெட்டாக கைப்பற்றப்பட்டது.
2002 மோவ் என்ற ஊரில் உள்ள கோவிலில் குண்டு வெடித்தது. முதலில் முஸ்லிம்களின் மீது பழி போட்டு விட்டார்கள். பின்னர் போலிஸார் விசாரணையில் அந்த குண்டுவெடிப்புக்கும் விஸ்வஹிந்த் பரிஷத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
19-10-2008 கேரளாவில் உள்ள தளச்சேரி RSS தலைவர் விபின்தாஸ் அவர்களின் வீட்டில் வெடிக்கும் தயார் நிலையிலான 20 வெடி குண்டு கைப்பற்றப்பட்டன.
கர்நாடகாவில் தேவாலயம் தாக்குதல் நடத்தப்பட்டது. அது தொடர்பாக ஒரு சங் பரிவார் தலைவர் சுரேஷ் காமத் வீட்டில் தேடிப் போனது போது 397 ஜெலட்டின் 1200 டெட்டர்னேட்டர்களும் கைப்பற்றப்பட்டன. (பெங்களுரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இந்த ஆதாரங்களையும் கணக்கில் கொண்டு விசாரனை ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
கோத்ரா சபர்மதி இரயிலில் தீக்கிரையாக்கியதும் சங் பரிவார் தான். அதைப் பற்றிய விசாரணைகளில் இரயிலின் வெளியில் இருந்து தீப்பற்ற வைக்கவில்லை. உள்ளேயே இருந்து தான் தீப்பற்றியுள்ளது என்றும் விசாரணை அறிக்கை கூறியுள்ளது. ரெயில் நிறைய சங் பரிவார் கூட்டமாக இருக்கும் போது வெளியில் இருந்து சிலர் சேர்ந்து தீ வைக்க முடியுமா என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை.
குஜராத் கலவரம் நிகழ்ந்த பிறகு டெஹல்கா பத்திரிக்கை விசாரணை நடத்தி, கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் அனைவரையும் ரகசிய பேட்டி கண்டது. அனைவரும் தாங்கள் செய்த கொலைகள், கொள்ளைகள் குறித்து பெருமிதமாக பேட்டி கொடுத்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு உதவிய மோடி, மற்றும் அரசு அதிகாரிகள் குறித்தும், உதவிய விதம் குறித்தும் தெளிவாகக் கூறினர். இதன் வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன.
சமீபத்தில் குஜராத்தில் ஒரு இடத்தில் குண்டு வெடித்தது. உடனே அது தொடர்பாக முஸ்லிம்கள் அமைப்பு தான் காரணம் என்று குற்றம் சாட்ட்ப்பட்டது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் மோடி அரசு குண்டுகளைக் கைப்பற்றியது. இது முழுக்க முழுக்க நாடகம் என்று நிரூபிக்கப்பட்டது. குண்டு செயல் இழக்கச் செய்வதை தொலைக்காட்சியில் காட்டும் போது ஏதோ பக்கோடா பொட்டலத்தைப் பிரிப்பது போல் போலிசார் பிரித்துக் காட்டினர்.. என்ன கொடுமடா இதெல்லாம்...
மேற்சொன்னவை அனைத்தும் அப்பட்டமான உண்மைகள். ஆனால் இதில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகள் அனைத்தும் சரியான முறையில் விசாரணை செய்யப்பட்டால் அதில் முஸ்லிம்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகும்....
உண்மையான முறையில் விசாரணைகள் மேற்கொண்டு, நீதியுடன் விசாரிக்கப்பட்டால் சங் பரிவார்களின் முஸ்லிம்களின் மீது பழி போடுவதற்காக நடததப் பெற்ற குண்டு வெடிப்பு சதிகள் அனைத்தும் அம்பலமாகும்... நீதி தேவதையின் கண் கட்டு அவிழ்க்கப் படுமா? என்பதற்கு காலமே பதில் சொல்லும்.
இது பதிவர்களுக்காக...
குண்டு வெடிப்புகள் ஏது நடந்தாலும், மீடியாக்களுக்கு சிறிதும் சளைக்காமல் நம் பதிவர்களும் முஸ்லிம்கள் மீது சுலபமாக பழி போடுவதைக் காணலாம். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலவும், தீவிரவாதத்திற்கு முழு ஆதரவு தருவது போலவும் ஒரு மாயையை திணிக்க முயல்கின்றனர். இஸ்லாமோ, முஸ்லிம்களோ தீவிரவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் கிடையாது.
தமிழ்நாட்டில் தீவிரவாதத்தையோ, குண்டு வெடிப்புகளையோ முஸ்லிம்கள் எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்புவதில்லை என்றும் சக நண்பரும் குற்றம் சாட்டினார். கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், புதுவை முஸ்லிம் பெண்களுக்கு ஜவுளிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், சுற்றுலாத் தளங்களிலும் சுற்ற மட்டும் தான் தெரியும் என்று நினைத்துக் கொள்பவர்கள் இந்த தீவிரவாத கண்டன ஆர்ப்பாட்டப் படங்களையும் பாருங்கள். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் தீவிரவாத எதிர்ப்பு, மற்றும் அனைத்து குண்டு வெடிப்புகளையும் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும் என்று வழியுறுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
29 comments:
தமிழ்பிரியன்
பாராட்டுகள்.
உங்கள் வருத்தம் நியாயமானதே..இவை எல்லாமே அரசியல் காரணமாக நிகழ்வது தானே..சாதரணமக்கள் இன்னும் முன்பு போலவே தான் இருக்கிறார்கள்.. எனக்கு பள்ளி கல்லூரியில் முஸ்லீம் நட்புகள் உண்டு.. குடும்ப நண்பர்கள் உண்டு.. அறியாத எந்த மதத்தினரிடம் ஏற்படுகிற பய உணர்வு என்று தான் உண்டே தவிர ..மதத்தின் காரணத்தால் இதுவரை முஸ்லீம் களைக்கண்டு பயந்ததில்லை.
நீங்கள் சொல்வது போன்ற ஒரு தோற்றம் நாடு முழுக்கவே ஏற்படுத்தப் பட்டிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் முத்துலெட்சுமி சொல்வது போல அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்கள் இன்றும் ஒருவருக்கொருவர் நட்பு பாவித்துதான் வருகிறார்கள்.
உங்க கிட்ட இருந்து இதை எதிர் பார்க்கல,
நீங்களே கூட , இது போன்ற பதிவை இதற்கு முன் எழுத முடிந்ததா?
குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஹிந்து அமைப்பினர் சிலர் கைது செய்யப்பட்டதுமே,
உடனே இதுவரை நடந்த எந்த விசாரணையும் சரியில்லை என்ற நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்.
மற்றவர்கள் எப்படி எல்லோவற்றிற்கும் முஸ்லீம் அமைப்பினரை குற்றம் சாட்டியது தவறு என்றீர்களே,அதே தவறைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடந்த விசாரணையை உண்மை என்று சொல்லும் நீங்கள் ,மாற்ற விசாரணை எல்லாம் தவறு என்று சொல்வது ந்யாயமா?
வேண்டாம் ,இந்த அரசியலுக்குள் உங்களை போன்றவர்கள் எந்த பக்கமும் சாயாமல் இருப்பதே நல்லது.
மற்றபடி நண்பர்களுக்குள் யாரும் மதம் பார்ப்பதில்லை.
நம்முடைய பயம் எல்லாம்,நாம் அறிந்திராதவர்கள் சம்பந்தப்பட்டதே
இதில் ஹிந்து,முஸ்லீம் என்ற பாகுபாடு இல்லை
அருமையான பதிவு, பாராட்டுகள்
READ
உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்
http://vanjoorvanjoor.blogspot.com/2008/11/blog-post_23.html
தமிழ் பிரியன்,
நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.
நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.
தமிழ் பிரியரே கலக்கிட்டீங்க.
நிறைய சொல்ல நினைக்கிறேன்.
சமயம் அமைந்தால் மீண்டும் வருகிறேன்.
//வல்லிசிம்ஹன் said...
தமிழ் பிரியன்,
நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.
நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.
//
அருமையான் சொல்லியிருக்காங்க வல்லி அம்மா!
ரிப்பிட்டிக்கிறேன்!
தமிழ்பிரியன் நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர்
பாராட்டுக்கள்.
///நண்பன் said...
தமிழ்பிரியன்
பாராட்டுகள்.///
நன்றிகள் நண்பரே!
///VIKNESHWARAN said...
:(///
என்ன செய்ய விக்கி! அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்..:(
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
உங்கள் வருத்தம் நியாயமானதே..இவை எல்லாமே அரசியல் காரணமாக நிகழ்வது தானே..சாதரணமக்கள் இன்னும் முன்பு போலவே தான் இருக்கிறார்கள்.. எனக்கு பள்ளி கல்லூரியில் முஸ்லீம் நட்புகள் உண்டு.. குடும்ப நண்பர்கள் உண்டு.. அறியாத எந்த மதத்தினரிடம் ஏற்படுகிற பய உணர்வு என்று தான் உண்டே தவிர ..மதத்தின் காரணத்தால் இதுவரை முஸ்லீம் களைக்கண்டு பயந்ததில்லை.///
அரசியலில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களின் சதியே அன்றி வேறில்லை... அது எந்த சமூகமாக இருந்தாலும்... அனைவரும் சுமுகமாக வாழக் கூடிய நமது நாட்டில் இது போன்று செய்து பேதமையை ஏற்படுத்த நினைக்கின்றனர்.... அது தோல்வியில் முடிவது திண்ணம்.
///ராமலக்ஷ்மி said...
நீங்கள் சொல்வது போன்ற ஒரு தோற்றம் நாடு முழுக்கவே ஏற்படுத்தப் பட்டிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் முத்துலெட்சுமி சொல்வது போல அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்கள் இன்றும் ஒருவருக்கொருவர் நட்பு பாவித்துதான் வருகிறார்கள்.///
ஆமாம் அக்கா! இன்றும் நான் ஊருக்கு சென்றால் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவுகள்(இந்துக்கள்) அன்புடனே என்னை வரவேற்பார்கள். அவர்களை தமது வீட்டு பிள்ளையாகவே பார்க்கின்றனர். நாங்களும் மாமா, மச்சான், அத்தை, அக்கா என்று தான் பழகுகின்றோம். நமக்குள் மதத்தால் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சமூகத்தை பிரிக்க வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். அவர்களில் சூழ்ச்சி தான் இது போன்றவைகள் எல்லாம்... அச்சூழ்ச்சிகளை சரியான முறையில் முறியடிக்க வேண்டுமென்பது தான் கோரிக்கை.
///பாபு said...
உங்க கிட்ட இருந்து இதை எதிர் பார்க்கல,
நீங்களே கூட , இது போன்ற பதிவை இதற்கு முன் எழுத முடிந்ததா?
குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஹிந்து அமைப்பினர் சிலர் கைது செய்யப்பட்டதுமே,
உடனே இதுவரை நடந்த எந்த விசாரணையும் சரியில்லை என்ற நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்.
மற்றவர்கள் எப்படி எல்லோவற்றிற்கும் முஸ்லீம் அமைப்பினரை குற்றம் சாட்டியது தவறு என்றீர்களே,அதே தவறைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடந்த விசாரணையை உண்மை என்று சொல்லும் நீங்கள் ,மாற்ற விசாரணை எல்லாம் தவறு என்று சொல்வது ந்யாயமா?
வேண்டாம் ,இந்த அரசியலுக்குள் உங்களை போன்றவர்கள் எந்த பக்கமும் சாயாமல் இருப்பதே நல்லது.
மற்றபடி நண்பர்களுக்குள் யாரும் மதம் பார்ப்பதில்லை.
நம்முடைய பயம் எல்லாம்,நாம் அறிந்திராதவர்கள் சம்பந்தப்பட்டதே
இதில் ஹிந்து,முஸ்லீம் என்ற பாகுபாடு இல்லை///
பாபு வருகைக்கு நன்றி! இந்த பதிவை ஒரு சமூக நோக்கிலேயே எழுதியுள்ளேன். முதலில் நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள். அதே நேரத்தில் எவனோ குண்டு வைத்து, எவனோ சாகிறான் என்று இருக்கவும் விரும்பவில்லை.
நான் வெறுமனே பதிவு எழுதி போட்டு விட்டு மறைந்து கொள்பவனல்ல... எங்கள் வீட்டில் அனைவரும் அரசியல் ரீதியான கட்சிகளில் இல்லை. ஆனால் சமூக போராட்டங்களில் குடும்பத்துடன் பங்கேற்போம். தீவிரவாதத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பல நேரங்களில் களத்தில் வேலை செய்துள்ளோம்.. அதனால் வந்த உணர்வு தான்.
மாலேகான் மட்டுமல்ல.. மற்றவற்றையும் துருவி விசாரணை செய்து உண்மைக் குற்றவாளீகள் அடையாளம் காணப்பட வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே..
இந்த நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்கின்றேன். மும்பை, கோவை குண்டு வெடிப்புகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கப் பட்டததை வரவேற்கின்றேன். அதே நேரத்தில் மாபரி மஸ்ஜிதை இடித்தவர்களும், குஜராத்தில் படுகொலை புரிந்ந்தவர்களும் யார் என்று அனைவருக்கும் தெரிய அவர்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது? ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு நீதியா?
///nagoreismail said...
அருமையான பதிவு, பாராட்டுகள்///
நன்றி!
///VANJOOR said...
READ
உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்
http://vanjoorvanjoor.blogspot.com/2008/11/blog-post_23.html///
நன்றி வாஞ்சூராரே!
///வல்லிசிம்ஹன் said...
தமிழ் பிரியன்,
நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.
நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.///
ஆமாம் அம்மா! சரியா சொன்னீங்க... உறவுகளாகப் பழகும் நம்மை பிரிக்க சில சக்திகள் நினைக்கின்றன. அவைகள் அழிக்கப்படவேண்டும்.
///அதிரை ஜமால் said...
தமிழ் பிரியரே கலக்கிட்டீங்க.
நிறைய சொல்ல நினைக்கிறேன்.
சமயம் அமைந்தால் மீண்டும் வருகிறேன்////
நன்றி ஜமால்! அடிக்கடி வாங்க!
/// ஆயில்யன் said...
//வல்லிசிம்ஹன் said...
தமிழ் பிரியன்,
நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.
நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.
//
அருமையான் சொல்லியிருக்காங்க வல்லி அம்மா!
ரிப்பிட்டிக்கிறேன்!///
ஆயில் அண்ணே! நானும் ரிப்பீட்டிக்கிறேன்..:)
///தமிழ் தோழி said...
தமிழ்பிரியன் நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர்
பாராட்டுக்கள்.////
நன்றி தமிழ் தோழி!
யார கண்டிக்கிறிங்க
குண்டு வைக்கிறவங்கலையா?
குண்டு வைக்கிறது முஸ்லீம்னு சொல்றவங்களையா?
சபாஷ் அண்ணே, நம்ம உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியதற்கு
அண்ணா, நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க!
//இஸ்லாமோ, முஸ்லிம்களோ தீவிரவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் கிடையாது.//
இதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்! என் பள்ளிக்காலத்தில் எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள்தான்! ஆனால் மனதால் எந்தப் பாகுபாடும் கிடையாது! பயமும் இல்லை! மிகுந்த கடவுள் பக்தியும், கடமை உணர்வும் கொண்டவர்களாகத்தான் என் மனதில் பதிர்ந்திருக்கிறார்கள் நான் பழகிய/சந்தித்த முஸ்லிம் அன்பர்கள்!
அன்பின் தமிழ் பிரியன்,
நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.
நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.
இது சகோதரி வல்லிசிம்ஹன் கூறி நண்பர் ஆயில்ஸ் வழி மொழிந்தது
இதனையே நானும் மறுக்கா கூவிக்கறேன்
///வால்பையன் said...
யார கண்டிக்கிறிங்க
குண்டு வைக்கிறவங்கலையா?
குண்டு வைக்கிறது முஸ்லீம்னு சொல்றவங்களையா?////
இரண்டுக்குமே பாரிய தொடர்பு இருக்கு. குண்டு வைத்து விட்டு முஸ்லிம்களின் மீது போடுபவர்களையும், குண்டு வைப்பவர்களையும், தவறு செய்யும் அனைவரையும் கண்டிக்கின்றேன்.
///புதுகை.அப்துல்லா said...
சபாஷ் அண்ணே, நம்ம உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியதற்கு////
நன்றி அண்ணே!
///சந்தனமுல்லை said...
அண்ணா, நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க!
//இஸ்லாமோ, முஸ்லிம்களோ தீவிரவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் கிடையாது.//
இதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்! என் பள்ளிக்காலத்தில் எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள்தான்! ஆனால் மனதால் எந்தப் பாகுபாடும் கிடையாது! பயமும் இல்லை! மிகுந்த கடவுள் பக்தியும், கடமை உணர்வும் கொண்டவர்களாகத்தான் என் மனதில் பதிர்ந்திருக்கிறார்கள் நான் பழகிய/சந்தித்த முஸ்லிம் அன்பர்கள்!///
நன்றி சந்தனமுல்லை... எனக்கும் அதிகமான உயிர் நண்பர்கள் முஸ்லிம்கள் அல்லர்... இதுதான் நமது உறவே..:)
///cheena (சீனா) said...
அன்பின் தமிழ் பிரியன்,
நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.
நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.
இது சகோதரி வல்லிசிம்ஹன் கூறி நண்பர் ஆயில்ஸ் வழி மொழிந்தது
இதனையே நானும் மறுக்கா கூவிக்கறேன்////
நானும் அதையே மறுக்கா மறுக்கா கூவிக்கிறென்ன்ன்ன்ன்..:)
Post a Comment