.
கலவை 1
உலகம் முழுவதும் எய்ட்ஸ் என்ற கொடுமையான வியாதி பரவி வருகின்றது. வந்து விட்டதை போக்க மருந்து இல்லாததால் அரசுகள் அதை வராமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவைகள் தற்காப்பு நடவடிக்கைகளாகத் தான் இருக்கின்றனவே அன்றி தடுப்பு நடவடிக்கையாக இருப்பதில்லை. ஆணுறை அணிவது, இரத்தம் கொடுக்கும் போது சோதிப்பது எனவே உள்ளன.கலவை 1
சமீபத்தில் பத்திரிக்கையில் படித்த செய்தி.... சின்னமனூர் என்ற ஊரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதற்கு முன் மணமகனுக்கும், மணமகளுக்கும் எய்ட்ஸ் இரத்தப் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கி வைத்துள்ளனர். சென்ற வாரம் இதே போல் ஒரு திருமணம் நடைபெறுவதற்கு முன் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்து திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த குடும்பம் பெரும் பிரச்சினைகளில் இருந்து காக்கப்பட்டுள்ளது.....
பல கோடி ரூபாய்களை விழிப்புணர்வுக்கு செலவு செய்யும் அரசு திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு அரசு பொது மருத்துவமனை மூலம் இலவசமாக இரத்தப் பரிசோதனை செய்து சான்றிதழ் தரலாம். மணமக்களிடம் NOC கேட்கும் பழக்கம் சர்ச், மசூதிகளில் திருமணம் செய்யும் போது கேட்கும் பழக்கம் உள்ளது. அதே போல் எய்ட்ஸ் இரத்தப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால் தான் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று கோவில், சர்ச், மசூதிகளுக்கு வலியுறுத்தலாம்.
துபாயில் இது போல் மணமக்களுக்கு இரத்தப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால் தான் திருமணம் செய்துவிக்கப்படும் என்ற முறை உள்ளது.
கலவை 2
இந்தியாவின் தேசிய கீதம் ரவிந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமண எனத் தொடங்கும் பாடல். இந்தியர்கள் ஒவ்வொருவரும் இதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் இந்த பாடல் ஒவ்வொரு நாள் முடிவிலும் பாடப் பெறுவது வழக்கம். இப்போது பல பள்ளிகளில் இந்த பழக்கம் வழக்கத்தில் இல்லை. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பதிவு இட்டேன். பார்வையாளர்களை தேசிய கீதத்தை பாடி அதன் முடிவை நமது சர்வேயில் தெரிவிக்க வேண்டி இருந்தேன். நல்ல முடிவுகளே வந்துள்ளது. இறுதி முடிவுகள் கீழே.....
ஆனால் இங்கு நான் நேரடியாக சர்வே செய்ததில் இந்தியர்கள் 30 சதமும், பாகிஸ்தானிகள் 25 சதமும், பிலிப்பைன்ஸ்காரர்கள் 40 சதமும், பங்களாதேசிகள் 75 சதமும் வெற்றி பெற்றனர்.
கலவை 3
சவுதி அரேபிய நாடு ஒரு மன்னராட்சி நடக்கக் கூடிய நாடு. சவுத் என்ற வம்சாவழியினர் இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். இப்போதைய மன்னர் இரு புனித தளங்களின் பணியாளர் அப்துல்லா அவர்கள் நான்கு நாள் பயணமாக நாங்கள் இருக்கும் தாஃயிப் நகருக்கு வருகை புரிந்திருந்தார். எங்களது நிறுவனம் முழு பராமரிப்பு பொறுப்பை ஏற்றி செயல்படுத்தி வரும் மன்னரின் ஹவியா அரண்மனையில் தங்கி இருந்தார்.
சவுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடுகளை போக்கும் விதத்தில் மேற் கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் பாலஸ்தீன பிரச்சினைகளுக்கு தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் விவாதித்தார். தாஃயிப் நகர பிரமுகர்களையும் சந்தித்து விருந்தளித்தார்.
கடந்த வாரம் முழுவதும் எங்களது வேலை உச்சத்தில் இருந்தது. ஹெலிகாப்டர் சத்தங்களுடனும், அதி நவீன ஆயுதங்களுடன் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்தியில் பணி செய்ய வேண்டி இருந்தது. மன்னர் புனித மெக்காவுக்கு சென்றதும் தான் பழைய சகஜ நிலைக்கு திரும்ப முடிந்தது.
கலவை 4
திரும்ப முடிந்தது. சமீபத்தில் எனது நண்பனுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒலிம்பிக் பற்றிய பேச்சு எழுந்தது. இந்தியா வாங்கிய, வாங்கத் தவறிய மெடல்களைப் பற்றி பேசிக் கொண்டோம். அவன் திடீரென்று 'எனக்கு ஒலிம்பிக் ஒரு விஷயம் தான் ரொம்ப வருத்தமாகி விட்டது' என்றான்.
நானும் பையனுக்குள்ள ஒரு உண்மையான இந்தியன் ஒளிந்து கொண்டு இருக்கான் போல... அஞ்சு ஜார்ஜ் தடுக்கி, திடுக்கி, தடுக்கி விழுந்தது, லியாண்டர் பயஸ் தோத்தது, சானியா மிர்சாவோட காயத்தால் விலகல், இல்லீனா அகிலின் தோல்வி இப்படி ஏதாவது துக்கமா இருக்கும்னு நினைச்சு கேட்டேன். அவன் சொல்றான் “ ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் போது இந்திய வீரர், வீராங்கணைகள் சம்பிரதாய முறைப்படி உடை அணிவார்கள். சானியா மிர்சாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதால் அவர் சேலை அணிந்து வரும் கண்கொள்ளாத காட்சியைப் பார்க்க டிவி பெட்டி முன்னாடி உட்கார்ந்து இருந்தான். கடைசியில் பார்த்தால் டிராக் சூட்டில் வந்து என்னை ஏமாத்திட்டாங்க”
என்னத்த சொல்ல மக்கா! நல்லா இருந்தா கண்ணுக்கு அழகு! இது நண்பனின் ஆசைக்காக கிராபிக்ஸ் படம்!
இது மக்காவில் சானியா மிர்சா உம்ராவுக்கு வந்த போது எடுத்த படம்
37 comments:
சானியா புடவையில் அம்சமா அழகா இருக்காங்க. அதான் நண்பருக்குத் தேடலா இருந்துருக்கு:-)
வி.வி.ஐ.பி. விஸிட்ன்னா அது முடியும்வரை டென்ஷந்தாங்க.
:-)))..
நல்ல கலவை!!!
கிரா'பிக்ஸ்' ஆக இருந்தாலும் சானியா புடைவையில் நல்ல பிக்ஸ் ஆகி இருக்காங்க !
கலவை 1
திருமணத்தின் போது மட்டுமல்ல, ஒவொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ரேசன் கார்டு கொடுப்பதை போல சோதனை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மறந்து விட வேண்டாம்
கலவை 2
இன்னும் கிராம புறங்களில் தேசியகீதம் என்றாலே அர்த்தம் புரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள், அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாதது தான் அதற்கு காரணம்,
படிப்பறிவு வந்துவிட்டால் கூடவே நாட்டு பற்றும் வந்துவிடும்.
கலவை 3
இந்திய அரசியலையே கவனிப்பதில்லை நாங்கள், சவூதி அரசியல் எங்களுக்கு எதற்கு?
கலவை 4
கிராபிக்ஸ் படம் நல்லாருக்கு
நல்லா இருக்குப்பா காக்டெய்ல்
:)
அண்ணே கலவை சரியா கலந்திருக்கிறிங்க..:)
மன்னர் கிட்ட ஆட்டோகிராப் வாங்கினதா சொன்னிங்க...!
அப்ப அது ரீலா...:)
வர வர யாரையுமே நம்ப முடியல..:)
//கடந்த வாரம் முழுவதும் எங்களது வேலை உச்சத்தில் இருந்தது. ஹெலிகாப்டர் சத்தங்களுடனும், அதி நவீன ஆயுதங்களுடன் //
அட ஒரு வாரம் மட்டும்தானே பிசியோ பிசியா இருந்தீக ! :)))
கிராபிக் சானியா போட்டோ ஜூப்பரூ!
சானியா அழகுதான் எனக்கு புடிச்சதே அந்த மூக்குத்திதான் தல...
அண்ணே கலவைல உங்க மிஞ்ச யாரும் இல்லைண்ணே! நீங்க ஏற்கனவே கலந்த திரிகடுகம் கூட சூப்பர் தான்....இப்ப அடுத்த கலவையை போட்டுட்டீங்க:)
அண்ணே நல்லா அடிச்சி ஆடுறிங்க போங்க.... சூப்பரா இருக்கு கலவை. சானியா புடவையில் கலவைதான் எனக்கு பிடிச்சிருக்கு. ஸ்ரேயாவவிட்டு சானியாவுக்கு மாறிடுவேன் போல இருக்கே....
///துளசி கோபால் said...
சானியா புடவையில் அம்சமா அழகா இருக்காங்க. அதான் நண்பருக்குத் தேடலா இருந்துருக்கு:-)
வி.வி.ஐ.பி. விஸிட்ன்னா அது முடியும்வரை டென்ஷந்தாங்க.///
வாங்க டீச்சர், அப்ப அவன் நல்லவந்தான்னு சொல்றீங்க.... ஓகே!
இந்த நாடே அவங்களுக்குத் தான் சொந்தம். உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்கவர்களில் ஒருவர்.
திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்வதுதான் நலம். பின்னால் தேவையில்லாத பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்கலாம்.
கல்யாணமண்டபத்தை பொதுவாக பெண் வீட்டுக்காரர்கள் தான் முடிவு செய்வார்கள்.. அந்த மண்டபத்தில் அப்படி ஒரு கட்டாயம் என்றால் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மறுப்பெதுவும் சொல்லாம டெஸ்ட் செய்துகிட்டதே பெரிய விசயம் தான்..
///விஜய் ஆனந்த் said...
:-)))..
நல்ல கலவை!!!///
நன்றி விஜய் ஆனந்த அண்ணே!
///கோவி.கண்ணன் said...
கிரா'பிக்ஸ்' ஆக இருந்தாலும் சானியா புடைவையில் நல்ல பிக்ஸ் ஆகி இருக்காங்க !///
நல்ல போட்டோவா தேடிப் போடுவதற்குள் தாவு தீர்ந்துடுத்து கோவி அண்ணே!
பிக்ஸ் ஆனதுக்கு நன்றி!
///வால்பையன் said...
கலவை 1
திருமணத்தின் போது மட்டுமல்ல, ஒவொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ரேசன் கார்டு கொடுப்பதை போல சோதனை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மறந்து விட வேண்டாம்///
நான் சொன்னது குறைந்தபட்சமாக ஒரு பெண் மற்றும் அவள் குடும்பத்தினரின் நிம்மதி காக்கப்படலாம்... ஆனாலும் அடிக்கடி செக் பண்ண வேண்டிய கட்டத்தில் தான் உள்ளோம்
///வால்பையன் said...
கலவை 2
இன்னும் கிராம புறங்களில் தேசியகீதம் என்றாலே அர்த்தம் புரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள், அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாதது தான் அதற்கு காரணம்,
படிப்பறிவு வந்துவிட்டால் கூடவே நாட்டு பற்றும் வந்துவிடும்.///
ஆமாம் வால் பையன்! கல்வியறிவு வந்து விட்டால் மக்கள் ஓரளவு சரியாகி விடுவார்கள்!
///வால்பையன் said...
கலவை 3
இந்திய அரசியலையே கவனிப்பதில்லை நாங்கள், சவூதி அரசியல் எங்களுக்கு எதற்கு?///
அவ்வ்வ்வ்வ் :)))
இதில் ஏதும் அரசியல் இல்லீங்கோ... ஒன்லி நிகழ்ச்சிக் குறிப்புதான்
///வால்பையன் said...
கலவை 4
கிராபிக்ஸ் படம் நல்லாருக்கு//
நன்றி அதெல்லாம் அந்த ப்டத்தை தயாரித்தவருக்கே சாரும். நாம ஒன்லி கட் பேஸ்ட் தான்.
///மங்களூர் சிவா said...
நல்லா இருக்குப்பா காக்டெய்ல்
:)////
நன்றி அண்ணே!
///தமிழன்... said...
அண்ணே கலவை சரியா கலந்திருக்கிறிங்க..:)//
நன்றி தமிழன்!
///தமிழன்... said...
மன்னர் கிட்ட ஆட்டோகிராப் வாங்கினதா சொன்னிங்க...!///
மன்னரைப் பார்க்கக் கூட விடலியேப்பா.. ;(
///தமிழன்... said...
வர வர யாரையுமே நம்ப முடியல..:)///
நான் நிஜ்மாவே நல்லவன்ப்பா.. நம்புங்க!
///ஆயில்யன் said...
//கடந்த வாரம் முழுவதும் எங்களது வேலை உச்சத்தில் இருந்தது. ஹெலிகாப்டர் சத்தங்களுடனும், அதி நவீன ஆயுதங்களுடன் //
அட ஒரு வாரம் மட்டும்தானே பிசியோ பிசியா இருந்தீக ! :)))
கிராபிக் சானியா போட்டோ ஜூப்பரூ!///
ஆமா அண்ணே! இனி ஒரே தூக்கம் தான்... ஜாலி!
///தமிழன்... said...
சானியா அழகுதான் எனக்கு புடிச்சதே அந்த மூக்குத்திதான் தல..///
நல்ல ரசனைய்யா உங்களுக்கு.,..:)
ரசனையான கலவை..
சரி தமிழ்! உங்களுக்கு ஓரு கேள்வி...
நம்ம தேசியகீதம் எத்தனை மணித்துளிகளுக்குள் பாடி முடிக்கப்பட வேண்டும் என்று உங்களுத் தெரியுமா?
(நம்ம இஷ்டத்துக்கெல்லாம் நீட்டி முழக்கிப் பாடக்கூடாதுங்க. சரியாக அந்த கால அளவுக்குள் முடிக்கனும்.)
/// நிஜமா நல்லவன் said...
அண்ணே கலவைல உங்க மிஞ்ச யாரும் இல்லைண்ணே! நீங்க ஏற்கனவே கலந்த திரிகடுகம் கூட சூப்பர் தான்....இப்ப அடுத்த கலவையை போட்டுட்டீங்க:)////
அண்ணே! என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே? அவ்வ்வ்வ்வ்
///VIKNESHWARAN said...
அண்ணே நல்லா அடிச்சி ஆடுறிங்க போங்க.... சூப்பரா இருக்கு கலவை. சானியா புடவையில் கலவைதான் எனக்கு பிடிச்சிருக்கு. ஸ்ரேயாவவிட்டு சானியாவுக்கு மாறிடுவேன் போல இருக்கே...///
விக்கி! நீங்க ஸ்ரேயா மாறுனா என்ன? சானியாவுக்கு மாறினா என்ன? நாங்க கவலைப்படமாட்டோமே!...;)
///வடகரை வேலன் said...
திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்வதுதான் நலம். பின்னால் தேவையில்லாத பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்கலாம்.///
ஆமாம்! வேலன் சார்! கருத்துக்கு நன்றி!
////முத்துலெட்சுமி-கயல்விழி said...
கல்யாணமண்டபத்தை பொதுவாக பெண் வீட்டுக்காரர்கள் தான் முடிவு செய்வார்கள்.. அந்த மண்டபத்தில் அப்படி ஒரு கட்டாயம் என்றால் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மறுப்பெதுவும் சொல்லாம டெஸ்ட் செய்துகிட்டதே பெரிய விசயம் தான்..///
அந்த திருமண மண்டபம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உரியது. எனவே அவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இரு குடும்பத்தாரும் மறுப்பு தெரிவித்தால் மண்டபத்தினர் வலியுறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.
Post a Comment