Wednesday, August 20, 2008

கொஞ்சம் அசைவம் - வசந்தா மெஸ்

.
நாங்கள் அப்போது சென்னையின் புறநகரில் படித்துக் கொண்டிருந்த நேரம். படிப்புக்கான செலவை எங்கள் துபாய் நிறுவனமே ஏற்றுக் கோண்டிருந்தது. அதே போல் ஹாஸ்டல், மற்றும் சாப்பாடும் நிறுவனமே. இரண்டு சமையல்காரர்களை வைத்து சாப்பாடு கொடுக்கப்பட்டது. சமையல்காரர்களுக்கு ஞாயிறு இரவு மட்டுமே விடுமுறை. எங்களது படிப்புக்கும் ஞாயிறு விடுமுறை என்பதால், நண்பர்கள் சென்னையில் சுற்ற கிளம்பி விடுவார்கள். சொந்தக்காரர்கள் இருப்பவர்கள் அங்கே சென்று விடுவார்கள்.அதனால் அங்கேயே இரவு உணவு முடித்து ஹாஸ்டலுக்கு திரும்புவார்கள்.

என்னைப் போன்ற போக்கிடம் இல்லாதவர்களுக்கு ஹாஸ்டல் தான் கதி.அதுவும் நிறுவனம் தரும் மாத ஊக்கத் தொகை (Stipend) 300 க்குள் அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும். ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்கு செல்லும் பஸ் செலவு, மற்ற சுய தேவைகள் அனைத்தையும் அதற்குள் முடிக்க வேண்டும். இதில் நமக்கு சிக்கலாக அமைவது ஞாயிற்றுக் கிழமை தான். அன்று பஸ் செலவு கிடையாது என்றாலும் இரவு சாப்பாட்டுப் பிரச்சினை இருக்கும். அப்போது நமக்கு கை கொடுத்தது தான் 'வசந்தா மெஸ்'

அந்த ஓட்டலின் உரிமையாளருக்கு மதுரை பக்கம். அவரது மனைவி தான் வசந்தா அக்கா. மெஸ் என்ற பெயர் இருந்தாலும் அது ஒரு நெடுந்தூரப் பயணத் தூரத்தில் வரும் சிறு உணவகத்தைப் போன்றது தான். மதிய வேளைகளில் அளவு சாப்பாடு கிடைக்கும். இரவில் தோசை, ஊத்தாப்பம், இட்லி, புரோட்டா போன்றவை கிடைக்கும். அதோடு அசைவ உணவுகளும் கிடைக்கும்.

இரண்டு ரூபாய் ஐம்பது காசுகள் ஒரு புரோட்டா. மூன்று புரோட்டா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். புரோட்டாவிற்கு ஊற்றிக் கொள்ள கோழிக் கால் குழம்பு. நம்மோட பேச்சில் எப்பவும் மதுரை ஸ்லாங் தூக்கலாக இருக்குமாதலால் அவர்களுக்கு நம் மீது கொஞ்சம் ஊர்ப்பாசம் இருக்கும். அதன் பலன்?... சிக்கன் குழம்பும், சிக்கன் காலும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும். (சிக்கன் கால் என்றால் காணாமல் போன ஒரு அக்காவின் ஞாபகம் வரக் கூடாது)

உண்மையில் லெக் பீஸ் என்று நாம் சொல்வது சிக்கனும் தொடைப்பகுதி. ஒரு சிக்கன் லெக் பீஸை முழுவதும் வாங்கினால் குறைந்தது 25 ரூபாய் தேவைப்படும். அதை 2.50 புரோட்டாவுக்கு தர இயலாது... அப்ப கிடைப்பது... அதுதான் கொடுமை ... :( கோழிக் கறிக்கடையில் வெட்டித் தரும் போது கோழியின் கால் பகுதியை வெட்டி எறிந்து விடுவார்கள். ஏனெனில் அதை யாரும் உண்ண மாட்டார்கள். ஆனால் அதை இது போன்ற கடைக்காரர்கள் குறைவான விலைக்கு அதிகமாக வாங்கி வந்து, இது போன்ற புரோட்டா சால்னாக்களில் போட்டு விடுவார்கள்.


இதுதான் உண்மையில் கோழியின் கால்

நாங்கள் சாப்பிடப் போனால் நண்பர்கள் அந்த காய்ந்து போன கோழிக் காலுக்கு அடித்துக் கொள்வோம். கடைக்காரர் ஆளுக்கு இரண்டு துண்டு என்று கணக்கு பார்த்து தான் கொடுப்பார். நமக்கு எப்பவும் கணக்கு கிடையாது.

போன வாரம் ஒரு முழுக் கோழியையும் தனியாக அமர்ந்து உண்ண வேண்டிய கட்டாயம் (?) ஏற்ப்பட்ட போது, இந்த நினைவுகள் வந்ததை நிறுத்த இயலவில்லை.இது தான் கோழியில் தொடை...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

28 comments:

துளசி கோபால் said...

கோழிக்காலை நெசமாவா சமைக்கிறாங்க!!!!!

SurveySan said...

என்ன கொடுமைங்க இது?

கோழி கால அப்படியே போட்டு குர்மாவா?

ஹ்ம். இந்த மாதிரி படமெல்லாம் பாத்தா, சிக்கன் மேல இருக்கர மோகமே போயிடுமே எனக்கு :(

ஆயில்யன் said...

//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//


வேணாம் மனசுக்குள்ளயே வைச்சுக்கிறேன்!

VIKNESHWARAN said...

இதுக்குன் அஞ்சி ரன் படத்தில் வரும் 5 ரூபா பிரியாணிக்கும் சம்மந்தம் இருக்கா?

VIKNESHWARAN said...

இதுக்கும் ரன் படத்தில் வரும் 5 ரூபா பிரியாணிக்கும் சம்மந்தம் இருக்கா?

VIKNESHWARAN said...

நல்ல லெக் பீசா பார்த்து தானே போட்டிங்க...

வெண்பூ said...

சேலம் நகரப்பகுதிகளில் சிக்கன் கறிக்கடைகளில் தலை மற்றும் கால் தனியாக கிடைக்கும். லோக்கல் ஹோட்டல்கள் இதை வாங்கி சென்று "தலை கால் குழம்பு" என்ற பெயரில் தருவார்கள். நான் இது எல்லா பகுதிகளிலும் இருப்பது என்றே நினைத்தேன்.

வீட்டிலும் முழு கோழியை சமைக்கும்போது காலை வெட்டி எறிய மாட்டார்கள். நகத்தை மட்டும் வெட்டிவிட்டு குழம்பில் போடுவார்கள்.

நிஜமா நல்லவன் said...

:)

Thooya said...

//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//


வேணாம் மனசுக்குள்ளயே வைச்சுக்கிறேன்!

//அதே அதே...

Aruna said...

கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது...இப்பிடியெல்லாம் கஷ்டப் பட்டிருக்கீங்களான்னு நினைக்கும் போது..
அன்புடன் அருணா

வடகரை வேலன் said...

தேனிப்பக்கம் சிக்கன் விங்க்ஸ் கிடைக்கும் சாப்பிட்டிருக்கீகளா?

தமிழன்... said...

அண்ணன் பதிவை படிச்சிருக்கேன்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கட்டாயத்துல சாப்பிட்ட கோழியில் மிச்சம் வைக்காம சாப்பிடமுடிந்ததா..இல்ல மலரும் நினைவுகளால்.. வயிறு நிறைஞ்சுடுச்சான்னு சொல்லலயே..
அப்பறம் அது என்ன கட்டாயம்ன்னு சொல்லிடுங்க..

அப்பறம் அந்த கோழிக்காலைக்கூடவா சாப்பிடலாம்?

கயல்விழி said...

வருத்தமான பதிவு. :(

சீனாவில் கோழி காலை சாப்பிடுகிறார்கள்(சிக்கன் ஃபீட்)

தமிழன்... said...

அண்ணே எப்படி இருக்கும்ணே கோழிக்கால்..? :0

தமிழன்... said...

அது சரி நீங்க இருக்கிற இடத்துல கோழிகளுக்கா பஞ்சம்,
அவனவன் ஒரு அட்டை முழுசா வெட்டி மேசைல போட்டு சாப்பிடுற ஆட்களாச்சே இந்த நாட்டுக்காரங்க :)

தமிழன்... said...

அது சரி நீங்க இருக்கிற இடத்துல கோழிகளுக்கா பஞ்சம், அவனவன் ஒரு ஆட்டை முழுசா வெட்டி மேசைல போட்டு சாப்பிடுற ஆட்களாச்சே இந்த நாட்டுக்காரங்க...

தமிழன்... said...

கோழிக்கறி கொஞ்சம் அசைவம்னா முழுசா அசைவமா இருக்கிறது என்ன கறியண்ணே...:)

தமிழன்... said...

அப்ப அந்த விலைல தந்தாங்க இப்ப என்ன விலைன்னு கேட்டிங்களாண்ணே.. ?

தமிழன்... said...

///அந்த ஓட்டலின் உரிமையாளருக்கு மதுரை பக்கம்.///


அண்ணே அவருக்கு மதுரை பக்கம்னா அவரு எந்த ஊரண்ணே:)

TBCD said...

ஏழைகளின் கோழிக்கறி, அந்த கால்களும் ஈரலும் தான்...

தமிழன்... said...

\\\அவரது மனைவி தான் வசந்தா அக்கா.\\\

அப்ப மச்சினி பெயரைத்தான் மெஸ் பெயரா வச்சாரா...:)

தமிழன்... said...

அண்ணே கடைசி இரண்டு கமன்ட்டுகளும் 'சும்மா..' :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒன்னுமே சொல்லத்தோணலை.

மங்களூர் சிவா said...

/
போன வாரம் ஒரு முழுக் கோழியையும் தனியாக அமர்ந்து உண்ண வேண்டிய கட்டாயம் (?) ஏற்ப்பட்ட போது
/

என்ன கொடுமைங்க இது
:))

மங்களூர் சிவா said...

/
வெண்பூ said...

வீட்டிலும் முழு கோழியை சமைக்கும்போது காலை வெட்டி எறிய மாட்டார்கள். நகத்தை மட்டும் வெட்டிவிட்டு குழம்பில் போடுவார்கள்.
/

அண்ணன் சொன்னால் கரெக்டாதான் இருக்கும் தினமும் செய்யறவர் தப்பா சொல்ல மாட்டார்
:)))))

வெயிலான் said...

ஸ்...... யப்பா...... பசிக்குது.

cheena (சீனா) said...

அய்யோ இப்படி ஒரு பதிவா - தமிழ்பிரியன் - சில சமயங்களில் கடந்து வந்த பாதை மறக்க முடியாமல் நம்மைச் சுற்றிச் சுற்றி வரும். தவறில்லை - அசைபோடுவதும் சுகந்தான்

LinkWithin

Related Posts with Thumbnails