பொதுவாக நாம் அனைவருக்கும் அவரவர் தாத்தாவோட பெயர் தெரியும். தாத்தாவோட அப்பா பெயர் தெரியுமா? நம்மில் நிறைய பேர் இந்த கேள்விக்கு முழிப்போம். இதே போல் தான் நான் பள்ளியில் படிக்கும் போது எனது ஆசிரியை ஜெயசீலி அவர்கள் இந்த கேள்வியைக் கேட்டார்கள். வகுப்பில் யாருக்குமே இதற்கு பதில் தெரியவில்லை. வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா இருந்தால் கேட்டு வரும் படி ஆசிரியை சொல்லி அனுப்பினார்.
நான் எனது தாத்தாவிடம் சென்று கேட்க முடிவு செய்தேன். எனது தாத்தா நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர். படிப்பு இல்லையென்றாலும் ஆழ்ந்த அனுபவசாலி. வீரமானவர். அதே நேரம் மிகுந்த பொறுமைசாலி. சிலம்பாட்டம் நன்றாக ஆடுவாராம். நான் கற்றுக் கொள்ளவில்லை... :( தாத்தா கதையை அப்புறம் சொல்கிறேன். விடயத்திற்கு வருகிறேன்.
தாத்தாவிடம் சென்று கேட்ட போது தாத்தாவின் தந்தையின் பெயரையும், தாத்தாவின் தாத்தாவுடைய பெயரையும் கூறினார். ஆனால் அதற்கு மேல் அவருக்கே தெரியவில்லை. தனது அம்மாவின் பெயரைக் குறிப்பிட்ட தாத்தாவால் தனது பாட்டியின் பெயரை நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை.
தாத்தாவின் மூலம் கிடைத்த மேலதிக தகவல்கள்
எனது தாத்தாவின் தாத்தாவுடைய அப்பா தான் முதலில் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியுள்ளார். 1750 + களில் முதலில் நெல்லை மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் இருந்துள்ளனர்.பிறகு பஞ்சத்தின் காரணமாக வாசுதேவநல்லூர் என்ற ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். பிறகு பஞ்சம் பிழைக்க இப்போது இருக்கும் ஊருக்கு வந்துள்ளனர். இப்போதும் வாசுதேவநல்லூரில் சொந்த பந்தங்கள் உள்ளன.
தாத்தா கூறியவற்றில் ஒரு ஆச்சரியமான விடயம்.... எங்களது வம்சத்தின் வழியில் வெள்ளையரை எதிர்த்த, ஆனால் வரலாறுகள் மறைக்கப் பட்ட பிரபலமில்லாத ஒரு சிறந்த போர் வீரரும் இருந்துள்ளார்.
சரி எங்களது வம்சத்தைப் பற்றிய விடயங்களை நான் தெரிந்து கொண்டேன். அதே போல் உங்களுக்கு உங்கள் பரம்பரையைப் பற்றி எவ்வளவு தெரியும் எனத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியவில்லையெனில் உங்கள் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..
தெரிந்தவர்கள் ஓட்டுப் போட்டு விட்டுச் செல்லுங்கள்.... நன்றி!
51 comments:
பக்கத்து வீட்டுக்காரர் முகம் கூட அறியாத, உறவு முறைகள் மறந்து போன சமுதாய சூழ்லில் தாத்தாக்களை
நினைவு கூற வைத்துவிடீர்கள்....
நல்ல பதிவு....
nallasudar@gmail.com -- டைம் கிடைத்தால் ச்சாட்டலாம்...
அப்பா வழில தாத்தாவோட அப்பா பேர் வரைக்கும் தெரியும் நைனா!!
அம்மா வழி தாத்தா பேர்வரைக்கும்தான் தெரியும்!
:)))
ஓட்டு போட்டாச்சு!
நல்ல பதிவு!!
முன்னோர்களைப்பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்...
அந்த காலத்து தாத்தாக்கள் படா கில்லாடிகள், குறைந்தது 2 பெரியவீடும் என்னற்ற சின்ன வீடும் வைத்திருப்பவர்களாவே பெரும்பாலானோர் இருப்பர். வாரிசுகளுக்கு அதுதான் சொத்து !
:)
ஓட்டைப்போட்டுப் பார்த்தபோது முதல் ஓட்டு என்னுடையதாக இருந்தது. ஆகவே மீ த முதல் ஓட்டு.! ஆனால் அதற்கு போவதற்கும் அதிலிருந்து திரும்பி வருவதற்கும் விடிந்துவிட்டது. மேலும் இரண்டாவது ஓட்டுக்கும் வாய்ப்பு திறந்தபடியிருக்கிறது. என் கணிணியில்தான் கோளாறா?
நான் 3வது ஆப்சனுக்கு வோட்டு போட்டேன்... :)
///தாமிரா said...
ஓட்டைப்போட்டுப் பார்த்தபோது முதல் ஓட்டு என்னுடையதாக இருந்தது. ஆகவே மீ த முதல் ஓட்டு.! ஆனால் அதற்கு போவதற்கும் அதிலிருந்து திரும்பி வருவதற்கும் விடிந்துவிட்டது. மேலும் இரண்டாவது ஓட்டுக்கும் வாய்ப்பு திறந்தபடியிருக்கிறது. என் கணிணியில்தான் கோளாறா?///
தாமிரா! உங்க ஓட்டு விழும் போது ஏற்கனவே 6 ஓட்டுகள் போடப்பட்டிருந்தது. இரண்டாவது ஓட்டு போட இயலாது. (குக்கீஸ் மடக்கும்). கணிணி எல்லாம் சரிதான்.
அருமையான பதிவு!
ஒரு முறை ”ஓ” ஞானியின் எழுதுங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டு வரலாறினை என்ற கருத்தில் ஒரு பதிவு டிராப்டியிருந்தேன் பட் என்னமோ போட மனசு வரவில்லை! உங்களின் பதிவில் மனம் நிறைவு பெற்றேன்!
//டைம் கிடைத்தால் ச்சாட்டலாம்...
//
அது எங்களுக்கு நிறையவே இருக்கிறது சுடர்!
நாங்க ரெடி!
நீங்க ரெடியா????
அப்பாவுக்குத் திதி செய்யும் போதுதான் தாத்தாவோட அப்பா பெயர், தாத்தாவோட தாத்தா பெயர் எல்லாம் தேவைப்படுகிறது.
கூட்டுக் குடும்பத்திலிருந்து விலகித் தனிக்குடித்தனங்கள் ஆகிவிட்டோம். மேலும் சொந்த ஊர் பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடத் தெரியவில்லை.
அவமானமாகத்தானிருக்கிறது. பொருள் தேடியலையுமிந்த வாழ்க்கையில் இழந்தது மிகுதி, பெற்றது மீதி.
அவனவன் தன் பெயரையே மறந்துவிட்டது திரியும் காலத்தில் இப்படி ஒரு பதிவு,
அப்புறம் பெருசுகள் சொல்லும் வரலாற்றை முழுவதும் நம்பாதீர்கள்.
சாகும் நேரம் கூட தம்மையும் தன் வம்சத்தையும் உயர்த்தி பொய் பேசும் இழி மனித வம்சத்தில் பிறந்திருக்கிறோம் நாம்
இரண்டு வழியிலும் தாத்தாவோட அப்பா பேர் வரை தெரியும். இந்த பதிலுக்கு 40% வோட்டு விழுந்திருக்கிறது இது வரை:)!
எங்கள் குடும்பங்களில் தாத்தா பாட்டி பெயர்கள்தான் பேரக் குழந்தைகளுக்கு வைப்பார்கள் முதலில் அப்பா வழியில் பின் அம்மா வழியில். இப்போது அந்தப் பழக்கமும் வழக்கொழிந்து வருகிறது பெயர்கள் மாடர்னாக இல்லையென! எனக்கு என் அப்பா வழி பாட்டியின் பெயர்:))!
:)))))))
நபிசா அர்ஷியா
த/பெ.புதுகை.அப்துல்லா
த/பெ. முகமது இஸ்மாயில்
த/பெ.காதர் பாட்சா
த/பெ.முகமது இப்றாகிம்
த/பெ.நத்தர் சாகிப்
த/பெ.சையது அப்துல்காதர்
த/பெ.கருப்பையாத் தேவர் (எ) கருப்பையா ராவுத்தர்
அண்ணே உங்களால நாளைய பதிவிற்கு நல்ல மேட்டர் கிடைத்து விட்டது. டீட்டெயிலா நாளைக்கு பதிவு போடுறேன்.
1750 + களில் //
thamil thappu. 1800 kalin thuvakkaththilthaan islaam maatram natakkath thuvangiyathu
///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
1750 + களில் //
thamil thappu. 1800 kalin thuvakkaththilthaan islaam maatram natakkath thuvangiyathu///
1750 களில் கயத்தாறில் இருந்துள்ளனர். பின்னர் வாசுதேவநல்லூருக்கு வந்தனர். அப்போது முஸ்லிமாக மாறினார்களா என தெரியவில்லை. எனது தாத்தாவின் தாத்தாவுடைய தந்தை தான் முஸ்லிமானவர். எனது தாத்தா 1920 என்றால் அவரது தாத்தா ஒரு 1870 ஆக இருக்கலாம். அவரது தந்தை 1840 ஆக இருக்கலாம்.... அவ்வளவு தான்... எனது தாத்தாவின் தாத்தா வரை முஸ்லீம் பெயர் தான் உள்ளது.
அதிகபட்ச வோட்டில் நானும்!
அம்மா சைடுலே தெரியும். ஆனா அப்பா ஸைடுலே அதிகம் தெரியாது(-:
///சுடர்மணி said...
பக்கத்து வீட்டுக்காரர் முகம் கூட அறியாத, உறவு முறைகள் மறந்து போன சமுதாய சூழ்லில் தாத்தாக்களை
நினைவு கூற வைத்துவிடீர்கள்....
நல்ல பதிவு..////
நன்றி சுடர்மணி!
///மங்களூர் சிவா said...
அப்பா வழில தாத்தாவோட அப்பா பேர் வரைக்கும் தெரியும் நைனா!!
அம்மா வழி தாத்தா பேர்வரைக்கும்தான் தெரியும்!
:)))////
அம்மா வழியில் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனக்கும் தெரியலை... :(
///மங்களூர் சிவா said...
ஓட்டு போட்டாச்சு!///
நன்றிண்ணே!
///விஜய் ஆனந்த் said...
நல்ல பதிவு!!
முன்னோர்களைப்பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்...///
ஆம். தெரிந்து வைத்திருப்பது நல்லது. வரலாறு முக்கியம் அமைச்சரே!/... :)
///கோவி.கண்ணன் said...
அந்த காலத்து தாத்தாக்கள் படா கில்லாடிகள், குறைந்தது 2 பெரியவீடும் என்னற்ற சின்ன வீடும் வைத்திருப்பவர்களாவே பெரும்பாலானோர் இருப்பர். வாரிசுகளுக்கு அதுதான் சொத்து !
:)////
கோவி அண்ணே! அப்ப பெரிய லிஸ்ட்டே போட வேண்டி இருக்கும் போல இருக்கே.....அவ்வ்வ்வ்வ்
///இராம்/Raam said...
நான் 3வது ஆப்சனுக்கு வோட்டு போட்டேன்... :)///
நன்றி இராம் அண்ணே! சங்கமெல்லாம் நல்லா இருக்கா... ;))))
///ஆயில்யன் said...
அருமையான பதிவு!
ஒரு முறை ”ஓ” ஞானியின் எழுதுங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டு வரலாறினை என்ற கருத்தில் ஒரு பதிவு டிராப்டியிருந்தேன் பட் என்னமோ போட மனசு வரவில்லை! உங்களின் பதிவில் மனம் நிறைவு பெற்றேன்!///
உங்க மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சது பாருங்க... அதான்.. நன்றி அண்ணே!
///ஆயில்யன் said...
//டைம் கிடைத்தால் ச்சாட்டலாம்...
//
அது எங்களுக்கு நிறையவே இருக்கிறது சுடர்!
நாங்க ரெடி!
நீங்க ரெடியா????///
ஊர்க்காரர் என்றதும் நாங்க ரெடி! நீங்க ரெடியாவா! பிளாக்கில் இருந்து உங்க எல்லாரையும் தடைசெய்யப் போறோம்...;))))
///வடகரை வேலன் said...
அப்பாவுக்குத் திதி செய்யும் போதுதான் தாத்தாவோட அப்பா பெயர், தாத்தாவோட தாத்தா பெயர் எல்லாம் தேவைப்படுகிறது.
கூட்டுக் குடும்பத்திலிருந்து விலகித் தனிக்குடித்தனங்கள் ஆகிவிட்டோம். மேலும் சொந்த ஊர் பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடத் தெரியவில்லை.
அவமானமாகத்தானிருக்கிறது. பொருள் தேடியலையுமிந்த வாழ்க்கையில் இழந்தது மிகுதி, பெற்றது மீதி.//
திதி கொடுக்கும் போது கேட்பார்களோ? புதிய செய்தி... மற்றவை உண்மைதான் வேலன் சார்! நன்றி!
// தமிழ் பிரியன் said...
///விஜய் ஆனந்த் said...
நல்ல பதிவு!!
முன்னோர்களைப்பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்...///
ஆம். தெரிந்து வைத்திருப்பது நல்லது. வரலாறு முக்கியம் அமைச்சரே!/... :) //
க க க்க ப்ப்போ!!!!
///வால்பையன் said...
அவனவன் தன் பெயரையே மறந்துவிட்டது திரியும் காலத்தில் இப்படி ஒரு பதிவு,
அப்புறம் பெருசுகள் சொல்லும் வரலாற்றை முழுவதும் நம்பாதீர்கள்.
சாகும் நேரம் கூட தம்மையும் தன் வம்சத்தையும் உயர்த்தி பொய் பேசும் இழி மனித வம்சத்தில் பிறந்திருக்கிறோம் நாம்///
இருக்கலாம்! ஆனால் பஞ்சத்தாலும், பசி பட்டினியாலும் ஊர் ஊராக மாறியதை என் தாத்தா கவலையுடன் தான் சொன்னார். மேலும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கும் கற்றுக் கொடுத்து விட்டு சென்றார். அவர் இறக்கும் வரை விறகுக்கு செல்வார். எங்களுக்கும் கற்றுக் கொடுத்தார். பெருமை அடிப்பவராக நான் அவரைக் கண்டதில்லை... நன்றி வால் பையன்
///ராமலக்ஷ்மி said...
இரண்டு வழியிலும் தாத்தாவோட அப்பா பேர் வரை தெரியும். இந்த பதிலுக்கு 40% வோட்டு விழுந்திருக்கிறது இது வரை:)!
எங்கள் குடும்பங்களில் தாத்தா பாட்டி பெயர்கள்தான் பேரக் குழந்தைகளுக்கு வைப்பார்கள் முதலில் அப்பா வழியில் பின் அம்மா வழியில். இப்போது அந்தப் பழக்கமும் வழக்கொழிந்து வருகிறது பெயர்கள் மாடர்னாக இல்லையென! எனக்கு என் அப்பா வழி பாட்டியின் பெயர்:))!///
அப்பா, அம்மாவிடம் அவர்களது பாட்டி பெயரை சுலபமாக கேட்டு அறிந்து கொள்ளலாம். அதற்கு மேல் தான் கடினம்... வருகைக்கு நன்றி அக்கா!
///மங்களூர் சிவா said...
:)))))))///
அண்ணே! என்ன கொடும இதெல்லாம்... அண்ணிகிட்ட சொல்லிடுவோம்... அப்பூறம் சாட்டிங்கும் கிடையாது.. ஆர்குட்டும் கிடையாது... ;)))
நான் பொதுவாக தான் கூறினேன்,
மற்றபடி விதி என்று ஒன்றிருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றிருக்கனுமே.
அந்தகாலத்துல நாங்கல்லாம் என்று ஆரம்பித்தால்,
அதில் காலத்தில் படித்த புனைவு கதைகளில் தம்மை பொருத்தி இன்பம் அடைவார்கள்.
தவறுகளை மறைத்து நல்லவற்றை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லும் குணம் சராசரி மனிதனுடையது, உங்களையும் ,என்னையும் சேர்த்து
/ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்/
நான் எதுவும் சொல்ல வரலைங்க...:)
ராமலக்ஷ்மி சொன்னது போலவே எங்கள் குடும்பங்களில் தாத்தா பாட்டி பெயரை வைப்பதால் அது கொஞ்சமேனும் ரொட்டேஷனில் இருக்கும்.. இப்ப என் பேரான முத்துலெட்சுமி இரண்டு வழி பாட்டிகளின் பெயரின் கலவையாக்கும்.. :)
///வால்பையன் said...
நான் பொதுவாக தான் கூறினேன்,
மற்றபடி விதி என்று ஒன்றிருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றிருக்கனுமே.
அந்தகாலத்துல நாங்கல்லாம் என்று ஆரம்பித்தால்,
அதில் காலத்தில் படித்த புனைவு கதைகளில் தம்மை பொருத்தி இன்பம் அடைவார்கள்.
தவறுகளை மறைத்து நல்லவற்றை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லும் குணம் சராசரி மனிதனுடையது, உங்களையும் ,என்னையும் சேர்த்து///
ஆமாம்! அப்படியும் நிறைய பேர் இருக்கலாம்... :) நானும் பில்டப் மன்னன் தான்... :)
///நிஜமா நல்லவன் said...
/ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்/
நான் எதுவும் சொல்ல வரலைங்க...:)///
அதுதான் என்னன்னு கேட்டேன்? சொல்லிட்டுப் போங்களேன்
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
ராமலக்ஷ்மி சொன்னது போலவே எங்கள் குடும்பங்களில் தாத்தா பாட்டி பெயரை வைப்பதால் அது கொஞ்சமேனும் ரொட்டேஷனில் இருக்கும்.. இப்ப என் பேரான முத்துலெட்சுமி இரண்டு வழி பாட்டிகளின் பெயரின் கலவையாக்கும்.. :)///
கொசுவர்த்தி ஸ்டார்ட் ஆகியாச்சா? :))) கண்டினியூ பண்ணுங்க அக்கா!
ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இது நானு.
அடைக்கல சாமி இது எங்க அப்பா.
தோமாஸ் இது எங்க தாத்தா.
அடைக்கலம் இது எங்க அப்பாவோட தாத்தா.
செபாஸ்டின் இது எங்க தாத்தாவோட தாத்தா
சவரிமுத்து இது தாத்தாவோட தாத்தாவோட அப்பா.
எங்கா அம்மா வீட்டு வழி, அப்பா வீட்டு வழின்னு எல்லாம் ரொம்ப பிரிச்சு கஷ்டப்பட வேண்டியதுல்ல நாங்க. எங்க ஆளுங்க எல்லாம் எங்க அப்பா வரைக்கும் மாமா பொண்ணு, அத்தை பையன் அல்லது அத்தை பொண்ணு மாமா பையன்னு ரொம்ப சுலபமா சம்பந்தம் பண்ணி முடிச்சுருக்காங்க. எங்க தலைமுறையிலத்தான் சொந்தத்துல கல்யாணம் செய்யிறதுல இருந்து வெளில வந்துருக்கோம்.
எங்க குடும்பத்துல எப்ப கிறிஸ்தவ மதத்த தழுவுனாங்கங்கிற வரலாறு எனக்கு தெரியாது. எங்க அப்பாவோட தாத்தாவும், என் தாத்தாவும் ஆர்மோனியம் வாசிக்கிறவங்க. எங்க அப்பாவோட தாத்தா ஒரு சிறந்த பாடகரும் கூட. சிலோன், மலேயா என பல நாடுகளுக்கு போய் இசை நிகழ்சிகள் செய்து சம்பாதித்து வந்தவர். சுமார் 200 ஏக்கருக்கு மேல் எங்களுக்கு நிலம் இருந்தது, அதில் பல நிலங்களை பிறருக்கு இனாமாக கொடுத்து என் தாத்தா வெறும் 18 ஏக்கர் மட்டுமே என் தந்தையாருக்கு விட்டு சென்றார். என் தந்தையார் தனது உழைப்பால் குடும்பத்தை மீண்டும் விரிவுபடுத்தினார் என்ற குடும்ப வரலாறு மட்டுமே எனக்கு தெரியும்.
மூன்று தலைமுறைக்கு ஒரு முறை ஒவ்வொரு பேரரசும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது அரசர்கால வரலாற்று உண்மை. அது ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருந்தும் என்பதும் எங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் தற்கால நடைமுறைக்கு அது எந்தளவுக்கு பொருந்தும் எனத் தெரியவில்லை.
இதற்கு சொல்லப்பட்ட காரணம் முதல் தலைமுறை கஷ்டத்தை அனுபவித்து மேலே வரும் போது இரண்டாவது தலைமுறை அதை ஓரளவு உணர்ந்து அந்த வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும். ஆனால் மூன்றாம் தலைமுறை எந்த கஷ்டத்தையும் உணராமல் செல்வச் செழிப்பில் பிறக்கும். இது தலைகால் புரியாமல் ஆடி அனைத்தையும் வீணாக்கும். அதற்கு அடுத்த தலைமுறை அதைவிட ஆடும். பின் இந்த சுழற்சி மீள வரும்.
உதாரணம் சோழப்பேரரசு. தன் தமையன் ஆதித்த கரிகாலன் அநியாயமாய் கொல்லப்பட்டு, தனது ஆட்சி உரிமையை மதுராந்தகசோழருக்கு விட்டுக்கொடுத்துப், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு பின் சோழ அரசராய் ராஜராஜ சோழன் முடிச் சூட்டியதன் விளைவுதான் மாபெரும் சேழப்பேரரசும், இன்றளவும் தன் பெயரைச் சொல்ல தஞ்சையில் பிரமாண்டமாய் நிற்கும் பிரகதீஸ்வரர் ஆலயமும்.
ராஜராஜச் சோழரின் மகன் ராஜேந்திரச் சோழன் தன் தந்தை அரசராவதற்கு முன்னரே பிறந்தவர், தனது இளம் வயது முழுவதையும் இளவரசாரகவே கழித்தவர். தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தன் தந்தை முதல்வராக இருப்பதால் தனக்கு உரிய வயது வந்தும் இன்னும் முதல்வராக முடியாமல் இருப்பது போல் ராஜேந்திர சோழனும், ராஜராஜன் பேரரசராய் இருந்தமையால் அரசராக முடியாமல் பல காலம் இளவரசராகவே இருந்தவர், இவர் அரசரான போது, தனது தந்தையை விட பலமடங்கு வெற்றிகள் குவித்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதையும் சோழப்பேரரசின் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்தவர்.
ஆனால் இவரது மகன் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் முதலாம் ராஜராஜன் காலத்து வெற்றிகளோ அல்லது ராஜேந்திரன் காலத்து வெற்றிகளே இல்லை. ஏனென்றால் இரண்டாம் ராஜராஜன் ஓரளவு செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்.
அவரது மகன் வீர ராஜேந்திர சோழன் காலம் இன்னும் மோசம். ஏனென்றால் வீர ராஜேந்திர சோழர் செல்வச் செழிப்பில், சோழப்பேரரசு வெற்றியின் உச்சத்தில் இருந்த காலத்தில் தோன்றியவர்.
இவருக்கு அடுத்து வந்த எல்லா சோழ அரசர்களும் தஞ்சை சோழர்கள் அல்ல. சோழ அரசர்கள் பெண் கொடுத்து சம்பந்தம் செய்து வந்த சாளுக்கிய வம்சத்தை சேர்ந்தவர்களே. அவர்கள் தான் சாளுக்கிய சோழர்கள் என்று அழைக்கப்பட்டனர். குலோத்துங்கச் சோழன் (தசாவதாரத்தில் வருவாரே அவர்தான்) எல்லாம் சாளுக்கிய சோழர்களே.
இப்படி ஒவ்வொரு பேரரசையும் பார்த்தால் அதன் முழு வல்லமையும் மூன்று தலைமுறைக்கு ஒரு முறை தேய்ந்து வளர்ந்து தேய்ந்து வளர்ந்து தான் வரும்.
ஆனால் கார்பரேட் கலாச்சாரக் காலமாகிய இந்த காலகட்டத்தில் இது முற்றிலும் உண்மையாக இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் கல்வி என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தனிப்பதிவே போடும் அளவுக்கு எழுதிக்கொண்டேப் போகலாம். ஆனால் தமிழ்பிரியனின் தலைப்பை விட்டு வெகு தொலைவிற்கு வந்துவிட்டதால் இத்துடன் விட்டுவிடுகிறேன். ( எல்லாரும் புழைச்சு போங்க.)
எப்பவும் பதிவுகளைவிட அதன் பின்னூட்டங்கள் சில அப்படியே அள்ளிக்கிட்டுப்போயிரும்.
இந்தப் பதிவில் நம்ம ஜோசப் பால்ராஜ்
வெளுத்துக் கட்டிட்டார்.
அட்டகாசம். மிகவும் ரசித்துப் படிச்சேன்.
அண்ணே எனக்கு தாத்தாவோட அப்பா பெயர் தெரியும் அம்மா வழி அப்பா வழி ன்னு இரண்டு சைடுலயும்...
இது பத்தி எனக்கு நெடுநாட்களாகவே ஆராய்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கு நான் ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன் ஆனா நீங்க போட்டுட்டிங்க. வீட்டுக்காரங்க கிட்ட இரண்டு மாசத்துக்கு முன்னரே பலமுறை சொல்லிட்டேன் உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு விபரங்களை சேகரிச்சு தரச்சொல்லி...
ஆனா அவங்க யாரும் இது பத்தி யோசிக்கவே இல்ல, நான் சண்டையும் போட்டிருக்கேன் வீட்டுல...
நல்ல பதிவு தல வரலாறுகள் தனி மனிதர்களிடம் இருந்துதான் எழுதப்படுகிறது....
தாத்தாவையும் தாத்தாவின் தாத்தா பெயரையும் நினவு கூற வைத்த நல்ல பதிவு.
////ஜோசப் பால்ராஜ் said...///
ஜோசப் சார், நிறைய படிக்கிறிங்கன்னு நினைக்கிறென்,.... வாழ்த்துக்கள்.
எல்லாம் அரச வம்சங்களும் இது போல் இருப்பதற்கு காரணம் இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து, சோம்பேறியாக மாறி கோட்டை விட்டதால் இருக்கலாம்.
///துளசி கோபால் said...
எப்பவும் பதிவுகளைவிட அதன் பின்னூட்டங்கள் சில அப்படியே அள்ளிக்கிட்டுப்போயிரும்.
இந்தப் பதிவில் நம்ம ஜோசப் பால்ராஜ்
வெளுத்துக் கட்டிட்டார்.
அட்டகாசம். மிகவும் ரசித்துப் படிச்சேன்.///
ஆமாம் டீச்சர், ஜோசப் சார் ரசித்து எழுதியுள்ளார்!
///தமிழன்... said...
அண்ணே எனக்கு தாத்தாவோட அப்பா பெயர் தெரியும் அம்மா வழி அப்பா வழி ன்னு இரண்டு சைடுலயும்...///
நல்லது அண்ணே!
/// தமிழன்... said...
இது பத்தி எனக்கு நெடுநாட்களாகவே ஆராய்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கு நான் ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன் ஆனா நீங்க போட்டுட்டிங்க. வீட்டுக்காரங்க கிட்ட இரண்டு மாசத்துக்கு முன்னரே பலமுறை சொல்லிட்டேன் உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு விபரங்களை சேகரிச்சு தரச்சொல்லி...
ஆனா அவங்க யாரும் இது பத்தி யோசிக்கவே இல்ல, நான் சண்டையும் போட்டிருக்கேன் வீட்டுல.///
அண்ணே! சண்டை எல்லாம் போடாதீங்க... ஊருக்கு போகும் போது சேகரித்துக் கொள்ளலாம்.
/// தமிழன்... said...
நல்ல பதிவு தல வரலாறுகள் தனி மனிதர்களிடம் இருந்துதான் எழுதப்படுகிறது...///
நானும் இந்த தடவை ஊருக்கு போகும் போது நிறைய விவரங்களைக் கேட்டும், புகைப்படம் எடுத்தும் ஆவணப்படுத்த உள்ளேன்... :)
///ஸயீத் said...
தாத்தாவையும் தாத்தாவின் தாத்தா பெயரையும் நினவு கூற வைத்த நல்ல பதிவு.///
ஸயீத் பாய்! வஸ்ஸலாம்... நன்றி!
எனது மகனுக்கு தந்தை வழியில் 7 தலைமுறையும் தாய்வழியில் 8 தலைமுறையும் சொல்லிக் கொடுத்து விட்டேன். எனது குடும்பத்தினரில் கிட்டதட்ட 250 நபர்களின் விபரங்களை தொகுத்து வைத்துள்ளேன்.
Post a Comment