.
எனக்கு இந்த விஷயத்தைப் பதிவாக போடும் எண்ணம் ஏதும் இருந்ததில்லை. ஆனாலும் இது இதயத்தில் ஒரு அரிப்பாகவே மாறி விட்டது. எனவே தான் இந்த பதிவு.
ஜெ.மோ வை அனைவரும் பலவாறு அழைத்தாலும், குறிப்பாக பதிவர்கள் செல்லமாக ** என்றே அழைக்கின்றனர். நான் மட்டும் அண்ணன் என்று அழைப்பதையே விரும்புவேன். இணையத்தில் சிறந்த படைப்புகளை வடித்த முன்னோடிகளில் ஒருவர். கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவைப் பதிவுகள் என்று கலக்குவார். அவருக்கென தனியான முத்திரை படைப்பதில் வல்லவர்.
நிறைய நண்பர்களுக்கு அவரைப் பற்றித் தெரியாத விஷயம், அவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர். நான் ஊருக்கு வரும்போது என்னையும் புகைப்படங்கள் எடுத்து தருவதாக கூறியுள்ளார். அவரிடம் விளையாட்டாக நான் சொன்னது “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்”. குறைவாக சிரித்து அதிகமாக கலாய்க்கும் அண்ணன் அன்று நிறைய சிரித்து விட்டார்.
நட்பைப் பற்றி அவர் சொன்ன “தூய்மையானது, ஆழமானது, எதிர்ப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!” என்ற வாசகங்கள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன.
அண்ணனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற நம்பிக்கையில் சமீபத்தில் எனக்கு வந்த குழப்பத்தை சாட்டில் கேட்டேன். சீரியஸாக அதைப் பற்றிக் கேட்டு விட்டு அவர் சொன்ன பதில் “திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள்”. என்னால் அண்ணனின் ஹாஸ்யத்தை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அதே போல் என்னிடம் திருப்பி திரிகடுகம் பற்றிக் கேட்ட போது நான் “விஸ்கி, பிராந்தி, ரம் இது மூன்றையும் சம அளவில் கலந்து அடிக்கும் காக்டெய்ல் தான் திரிகடுகம்” என்றேன். 'என்னப்பா நல்ல பையனா இருந்து கொண்டு இதை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க' என்று கேட்டு விட்டார்.
அண்ணன் நிறைய எழுதக்கூடியவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அண்ணன் ஜெ.மோ. வுக்கு இவ்வளவு அறிமுகம் போதும் என்றே நினைக்கிறேன். அண்ணனின் கருத்துக்களை பார்க்க
24 comments:
உங்களின் நட்புக்கு என் வாழ்த்துக்கள்!
கவிதைகள் அருமையாக இருக்கிறது :)
//என்னப்பா நல்ல பையனா இருந்து கொண்டு இதை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க//
எப்படி கை கூசாமல் டைப்படித்தீர்கள் :P
நான் நினைத்த அதே ஜெ.மோ. தான் இவரா?
சரி சரி.
ஆனாலும் இது கொன்ஞ்சம் ஓவருண்ணே.
என்னா பில்டப்பூ?
//இதயத்தில் ஒரு அரிப்பாகவே மாறி விட்டது//
சில விஷயங்களைப் பத்தி எழுதணும்ன்னு நெனச்சுட்டு விட்டுட்டா, இப்படித்தான் இல்ல?
சரியாச் சொல்லியிருக்கீங்க!
அதென்ன புனைவு மாதிரி?????
ஜெ.மோ அருமையாத்தானே எழுதறார்.
ரெண்டு விஷயம் அவரிடம் எனக்குப் பிடிச்சிருக்கு.
எழுத்தில் பாசாங்கில்லாதது.
அந்த ரெண்டு பசங்கள், டாபர்மேன் & ஜெர்மன்ஷெப்பர்ட்
அண்ணே வணக்கம்......புனைவா?????மாதிரியா???????ஒண்ணுமே புரியல:)
அந்த திரிகடுகம் சூப்பர் அண்ணே....
உங்க நண்பர் ஜெமோவை இன்னும் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை...
பகிர்வுக்கு நன்றி...
\\\'என்னப்பா நல்ல பையனா இருந்து கொண்டு இதை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க' என்று கேட்டு விட்டார்.///
அண்ணே நீங்க வரவர பொய்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க...
அண்ணே உண்மையா திரிகடுகம்னா என்னண்ணே...
நிஜமா நல்லவன் said...
\\
அந்த திரிகடுகம் சூப்பர் அண்ணே....
\\
நிஜமா நல்லவன் நீங்க இந்த விசயத்துல ரொம்ப நல்லவர்னு வலைச்சர கும்மில சொல்லியிருக்காங்க...:)
//அண்ணனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற நம்பிக்கையில்//
//என்னப்பா நல்ல பையனா இருந்து கொண்டு//
உங்களை நல்ல பையன்னு நெனைச்சிட்டு இருக்கிறதுலயே தெரியுது .. அவருக்கு பல விஷயங்கள் தெரியாதுனு.. :D
அப்போ.. இது ஜெயமோகன் பத்தி இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
//நிஜமா நல்லவன் said...
அந்த திரிகடுகம் சூப்பர் அண்ணே...//
அண்ணே.. ஆனாலும் உங்க வேகம் புல்லரிக்க வைக்கிது.. அதுக்குள்ள திரிகடுகம் கலக்கி அடிச்சி ருசி பாத்துட்டிங்களா? நீங்க மட்டும் தனியா குடிச்சிங்களா?:D.. இந்த மேட்டர் எல்லாம் அண்ணிக்கு தெரியுமா? :)))
//தமிழன்... said...
நிஜமா நல்லவன் said...
\\
அந்த திரிகடுகம் சூப்பர் அண்ணே....
\\
நிஜமா நல்லவன் நீங்க இந்த விசயத்துல ரொம்ப நல்லவர்னு வலைச்சர கும்மில சொல்லியிருக்காங்க...:)//
அட...அப்படியா....நான் பார்க்கலையே.....லிங்க் ப்ளீஸ்:))
///ஆயில்யன் said...
உங்களின் நட்புக்கு என் வாழ்த்துக்கள்!
கவிதைகள் அருமையாக இருக்கிறது :)///
நாம எல்லாருக்கும் நட்பானவர் தானுங்கோ
/// VIKNESHWARAN said...
//என்னப்பா நல்ல பையனா இருந்து கொண்டு இதை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க//
எப்படி கை கூசாமல் டைப்படித்தீர்கள் :P///
உண்மை தானாவே வருதுப்பா என்ன செய்ய?
///புகழன் said...
நான் நினைத்த அதே ஜெ.மோ. தான் இவரா?
சரி சரி.///
அது மாதிரி ஆனா அவரில்லை
///வடகரை வேலன் said...
ஆனாலும் இது கொன்ஞ்சம் ஓவருண்ணே.
என்னா பில்டப்பூ?///
ஹிஹ்ஹிஹ்ஹி
///பரிசல்காரன் said...
//இதயத்தில் ஒரு அரிப்பாகவே மாறி விட்டது//
சில விஷயங்களைப் பத்தி எழுதணும்ன்னு நெனச்சுட்டு விட்டுட்டா, இப்படித்தான் இல்ல?
சரியாச் சொல்லியிருக்கீங்க!///
சரியா சொன்னீங்க அண்ணே!
///துளசி கோபால் said...
அதென்ன புனைவு மாதிரி?????
ஜெ.மோ அருமையாத்தானே எழுதறார்.
ரெண்டு விஷயம் அவரிடம் எனக்குப் பிடிச்சிருக்கு.
எழுத்தில் பாசாங்கில்லாதது.
அந்த ரெண்டு பசங்கள், டாபர்மேன் & ஜெர்மன்ஷெப்பர்ட்///
டீச்சர், நம்மளை நம்பிட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ் நீங்க லிங்கை கிளிக் பண்னலை...
இனி சீரியஸா....
ஜெ மோவின் எழுத்துகளுக்கு நானும் ரசிகன் தான். தங்களுடைய கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு தான். மற்றபடி அவருக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை டீச்சர்.
:)
Post a Comment