Tuesday, August 19, 2008

நான் ஏன் தீவிரவாதியாக மாற வேண்டும்?

.
நாம் எப்போதும் பிரச்சினையை ஆராயாமல் பிரச்சினை செய்பவர்களை ஆராய்கின்றோம். பட்டினியைப் போக்க உற்பத்தியையும், வாங்கும் திறனையும் பெருக்குவதை விட்டுவிட்டு இலவசமாக, அல்லது மலிவு விலையில் அரிசி தரலாமா என்று யோசிக்கிறோம். தீவிரவாதிகளை ஒழிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டு தீவிரவாதம் உருவாகும் வேர்களை விட்டு விடுகின்றோம். இங்கு நான்கு தீவிரவாதிகளை பிடிக்கிறோம். அதை மீடியாக்கள் பிரபலப் படுத்துகின்றன. அந்த சாதாரண பிரஜைகள் ஏன் தீவிரவாதியாக மாற்றப்பட்டனர் என்பதை நாம் யோசிப்பதை மறந்து விட்டதால் தீவிரவாதம் தலை விரித்து ஆடுகின்றது. இதனால் தான் அய்யன் வள்ளுவன் தெளிவாக கூறினான்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இதற்கு கலைஞர் விளக்கம் எழுதிய போது 'நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)' என்று எழுதினார். அதே தான் இந்த குறைபாட்டு நோயின் மூலத்தை அறிந்து அதற்கு மருந்து பார்ப்பது தான் சரியான வழி.

ஒரு மனிதனை தீவிரவாதியாக மாற்றுவது மிக எளிது. ஒரு 'காதல்' படத்தையோ, 'சுப்ரமணியபுரம்' படத்தயோ பார்த்த உடன் நாம் எளிதாக உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றோம். 'சுப்ரமணியபுரம்' படத்தில் அந்த கனகு (சமுத்திரக்கனி) கதாபாத்திரத்தை கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுக்கும் போது, ரசிகர்கள் செய்த ஆரவாரம் இதற்கு உதாரணம். நமக்கு தெளிவாக தெரியும் இது பொய்யான காட்சி என்று. ஆனால் நாம் அதை உணர்வு பூர்வமாக பார்க்கிறோம்.

இதே போல் ஒரு மனிதன் தனது இனத்தைச் சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும், பச்சிளங் குழந்தையும் கொன்று குவிப்பதை பார்க்கும் யாரும் உணர்ச்சி வசப்படுவார்கள். இன்னொரு கர்ப்பிணி சகோதரியை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த கயவர்களைக் காணும் போது உணர்ச்சி வசப்படுவார்கள். ஏனெனில் பொய்யான காட்சிக்கே உணர்ச்சி வசப்படும் நாம் உண்மையில் நடந்ததற்கு? அப்படியானால் இதை எல்லாம் காணும் நானும் தீவிரவாதியாக மாறி உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டுமா? ஆம் நானும் தீவிரவாதிதான் மாறி விட்டேன். எந்த ஒரு மனிதரையும் கொல்வது, துன்புறுத்துவது இஸ்லாத்தில் கடுமையான குற்றம் என்ற தெளிவான போதனையால் ஜனநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் என்று கட்டுபாடுள்ள தீவிரவாதியாக மாறி விட்டேன்.

கோவை கலவரங்கள்,குண்டு வெடிப்புகள் நாம் அறிந்த ஒன்று. அதைத் தொடர்ந்து நடைபெற்ற , கைதுகள், விசாரணைகள், வரலாறு காணாத பாதுகாப்புகள் என நமது அரசு செலவு செய்த தொகை எவ்வளவு என்று கேட்க வேண்டியது இல்லை, ஆனால் இதற்கெல்லாம் எது மூல காரணமாக இருந்தது என்ற காரணத்தை நாம் மறந்து விட்டோம். அல்லது மீடியாக்கள் நம்மை மறக்கடிக்க வைத்துள்ளன. அந்த பிரச்சினை நிகழ்ந்த போதே அதை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாகி இருக்காது.

நக்சல்கள் உருவானதற்கு காரணங்கள் என்ன? சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளும், அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதுமே இதற்கு காரணம். இந்தியாவில் நம்மை அடிமை செய்து, வெள்ளையர்கள் ஆட்சி செய்த போது அதை எதிர்த்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் INA என்ற படையை நிறுவிய போது அதை சரி கண்டோம். நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் போராடிய போது அதையும் சரி கண்டோம்.

இதற்கும் நான் என்னுடைய முந்திய பதிவுக்கு போட்ட பின்னூட்டங்களுக்கும் கொஞ்சம் தொடர்பு இருக்கலாம்.முன் பதிவையும் படித்து விட்டு தொடருங்கள்.

சேவை மனப்பான்மையில் கிராமங்களுக்கு சேவை செய்வதில் போக்குவரத்து கழகங்களின் பங்கு அளப்பரியது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்க அரசுகளின் தெளிவில்லாத நடைமுறைகளும் தான் காரணம் என்பதுதான் என் குற்றச்சாட்டு. இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் அதே நேரத்தில், அதன் சுமையை அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும். போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்துக்கு இட்டு சென்று விட்டு (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் டீசல் தர முடியாது என்று சொல்லும் நிலைக்கு தள்ளி விட்டு) பின்னர் உதவி செய்வதை விட முன்னரே அந்த நிலையை எட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது தான் சாலச் சிறந்தது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமின்றி அனைத்து அரசு ஊழியர்களுமே வேலை நிறுத்தம் செய்கின்றனர். பஸ்கள் ஓடாத போதுதான் நமக்கு விஸ்வரூபமாக தெரிகின்றது. நேற்று ஸ்டேட் பாங்க ஊழியர்கள் ஸ்ரைக்ட் செய்தனர். வங்கிப் பணிகள் முடங்கின. அதைப் பற்றி நாம் யாரும் கவலைப்படவில்லை. ஏனெனில் இன்று இல்லையென்றால் நாளை பணம் எடுத்து, போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டோம். ஆனா பஸ் ஸ்டிரைக் என்றால் நாம் கொதித்து எழுந்து விடுகிறோம். நம்முடைய தேவையை வைத்து இது மாறுகிறது. இவ்வளவுதான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க கூடிய விடயங்களில் போக்குவரத்து கழகங்கள் முன்னணியில் இருக்கின்றன. அதற்கான செயல்திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

இலவச பஸ் பாஸில் வந்ததால் தான் அச் சிறுமிகள் கீழே தள்ளிவிடப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதற்கு தான் அந்த பதில். ஏனெனில் மனிதர்களில் மிருக சிந்தனை உள்ளவர்களும் உள்ளனர். பொதுவாக அந்த நடத்துனர் நடந்து கொண்ட மிருகத்தனமான செயலுக்கு கண்டனம் என்றால் அது வேறு விடயம். அதனால் தான் அப்படி செய்த அவருக்கு கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால் இலவ்சம் தான் காரணம் எனும் போது நிலைமை மாறுகின்றது. தலைப்பே அது தானே இலவசம் என்றால் இளக்காரமா?

அரசு இயந்திரங்களில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்களின் நிலையும் கடுகடுப்பாக இருப்பது தான். ஒவ்வொருவரும் அவரவர் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களை குறை சொல்வதில் ஏதும் பயனில்லை. ஏனெனில் அவர்களை அவ்வாறு வளர்த்தததே நமது குறை. இவைகளை மாற்ற வேண்டும் என்பது தான் இன்றைய குறிக்கோள். அரசு ஊழியர்களில் கனிவுடன் வேலை செய்யும் நல் இதயங்களும் உள்ளனர். விள்க்கெண்ணைய்களும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அரசு இயந்திரங்களில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்களின் நிலையும் கடுகடுப்பாக இருப்பது தான். ஒவ்வொருவரும் அவரவர் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களை குறை சொல்வதில் ஏதும் பயனில்லை. ஏனெனில் அவர்களை அவ்வாறு வளர்த்தததே நமது குறை. இவைகளை மாற்ற வேண்டும் என்பது தான் இன்றைய குறிக்கோள். அரசு ஊழியர்களில் கனிவுடன் வேலை செய்யும் நல் இதயங்களும் உள்ளனர். விளக்கெண்ணைய்களும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.


சேவை எண்ணமும் இரக்கமும் தானாக வர வேண்டியது. ரோட்டில் செல்லும் போது வழியில் நடந்து செல்லும், அறிமுகமில்லாத சிறுமியை அழைத்து கன்னத்தில் 'பளார்' என்று நீங்களோ நானோ அறைவோமா? 500 ரூபாய் கொடுத்தால் கூட செய்ய மாட்டோம். ஆனால் நான் சொல்வது இவ்வளது தூரம் மூர்க்கத்தனமாக அந்த நடத்துனர் நடந்து கொள்வதற்கான காரணம் என்ன என ஆராய வேண்டும் என்பது தான். வேறோன்றுமில்லை.

இது போன்ற காட்சிகள் தினந்தோறும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் நடைபெறுகின்றனர். ஒன்று, இரண்டு மட்டுமே வெளியே வருகின்றன. இந்த இரண்டு பேரை மட்டும் தண்டிப்பதால் தமிழகம் முழுவதும் நிலை மாறி விடுமா? நான் ஆராய சொல்வது பிரச்சினைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் களைய வேண்டும் என்பது தானே அன்றி வேறில்லை.

நான் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை இங்கு தெளிவாக கூறி விடுகிறேன். நான் சொல்வதெல்லாம் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான். ஏனெனில் நீங்கள் கூறிய காரணம் இலவசம் என்பதால் தான் தள்ளி விடப்பட்டனர் என்பதே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

23 comments:

ராமலக்ஷ்மி said...

//இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான்.//

தெளிவான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள், இப்பதிவிலும் முந்தைய பதிவிலும். வாழ்த்துக்கள்.

இப்பதிவை முதலில் வாசிக்க நேரும் அனைவரும் முந்தைய் பதிவையும் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

valar said...

இன்றைய அரசாங்கங்கள் தங்களது சுயநலத்துக்காகவே
ஆட்சியை நடத்திவருகின்றன
சென்னையின் பக்கிங்காம் (கூவம்) கால்வாய் வெட்டப்பட்ட வரலாறு
தெரியுமா பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் வருடம் சரியாக தெரியவில்லை
(அனேகமாக 1960 ) என்று நினைக்கிறேன் மக்களின் பசியை போக்குவதற்க்காக
ஆரம்பித்த வேலை
மக்களுக்கு வேலை குடுத்து அதன் மூலம் அவர்கள் சுய தேவைகளை பூர்த்தி கொள்வதற்காக உருவாக்கப்பட்டது
ஆனால் இன்று?

ஆயில்யன் said...

அருமையாய் கூறியிருக்கிறீர்கள் தமிழ்பிரியன் !

வடகரை வேலன் said...

நல்ல கருத்துக்கள்.

//எந்த ஒரு மனிதரையும் கொல்வது, துன்புறுத்துவது இஸ்லாத்தில் கடுமையான குற்றம் என்ற தெளிவான போதனையால் ஜனநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் என்று கட்டுபாடுள்ள தீவிரவாதியாக மாறி விட்டேன்.//

இஸ்லாம் மட்டுமல்ல வேறு எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. மதத்தலைவர்களும் அரசியல்வியாதிகளும்தான் நம்மை அவ்வாறு செய்யத் தூண்டுகிறார்கள்.

நாம்தான் விழிப்புடனிருக்க வேண்டும்.

ஜோசப் பால்ராஜ் said...

சமூகத்தை திருத்த வேண்டும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தால் ஒன்று நாம் தீவிரவாதியாகிவிடுவோம், இல்லை பைத்தியமாகிவிடுவோம். அதுதான் உண்மை.

சமூக கட்டமைப்புகளை திருத்த முயற்சித்தால் அவனை நிறுத்தச்சொல்லு, நான் நிறுத்துறேன், இவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லுவாய்ங்களே ஒழிய யாரும் நிறுத்த மாட்டாங்க. எங்க இருந்து ஆரம்பிக்கிறது? எப்டி செய்யிறதுனு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. முடிவு நான் மேல சொன்ன மாதிரி தீவிரவாதியா அல்லது பைத்தியமாத்தான் இருக்கும்.

தமிழ் பிரியன் said...

//ராமலக்ஷ்மி said...
//இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான்.
தெளிவான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள், இப்பதிவிலும் முந்தைய பதிவிலும். வாழ்த்துக்கள்

இப்பதிவை முதலில் வாசிக்க நேரும் அனைவரும் முந்தைய் பதிவையும் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்///

நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

தமிழ் பிரியன் said...

///valar said...

இன்றைய அரசாங்கங்கள் தங்களது சுயநலத்துக்காகவே
ஆட்சியை நடத்திவருகின்றன
சென்னையின் பக்கிங்காம் (கூவம்) கால்வாய் வெட்டப்பட்ட வரலாறு
தெரியுமா பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் வருடம் சரியாக தெரியவில்லை
(அனேகமாக 1960 ) என்று நினைக்கிறேன் மக்களின் பசியை போக்குவதற்க்காக
ஆரம்பித்த வேலை
மக்களுக்கு வேலை குடுத்து அதன் மூலம் அவர்கள் சுய தேவைகளை பூர்த்தி கொள்வதற்காக உருவாக்கப்பட்டது
ஆனால் இன்று?///

ஆம் வளர்! தங்களது கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

அருமையாய் கூறியிருக்கிறீர்கள் தமிழ்பிரியன் !///

நன்றி ஆயில்யன்!

தமிழ் பிரியன் said...

///வடகரை வேலன் said...
நல்ல கருத்துக்கள்.
//எந்த ஒரு மனிதரையும் கொல்வது, துன்புறுத்துவது இஸ்லாத்தில் கடுமையான குற்றம் என்ற தெளிவான போதனையால் ஜனநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் என்று கட்டுபாடுள்ள தீவிரவாதியாக மாறி விட்டேன்.//
இஸ்லாம் மட்டுமல்ல வேறு எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. மதத்தலைவர்களும் அரசியல்வியாதிகளும்தான் நம்மை அவ்வாறு செய்யத் தூண்டுகிறார்கள்.
நாம்தான் விழிப்புடனிருக்க வேண்டும்.///
ஆமாம் வேலன் சார். நாம் கொஞ்சம் அசந்தாலும் நம்மை கொத்திக் கொண்டு செல்ல காத்திருக்கின்றனர். நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும். அன்பையும், ஆசையை அறுப்பதையும் போதித்த புத்த மத பிக்குகள் செய்யும் அழிச்சாட்டியங்களைக் கண்கூடாக காண்கின்றோமே! எல்லா மதங்களும் நல்லதையே நாடுகின்றன. ஆனால் இடைத்தரகர்களின் எண்ணங்களாலேயே அனைத்தும் மாறி விடுகின்றன.

தமிழ் பிரியன் said...

///ஜோசப் பால்ராஜ் said...
சமூகத்தை திருத்த வேண்டும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தால் ஒன்று நாம் தீவிரவாதியாகிவிடுவோம், இல்லை பைத்தியமாகிவிடுவோம். அதுதான் உண்மை.
சமூக கட்டமைப்புகளை திருத்த முயற்சித்தால் அவனை நிறுத்தச்சொல்லு, நான் நிறுத்துறேன், இவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லுவாய்ங்களே ஒழிய யாரும் நிறுத்த மாட்டாங்க. எங்க இருந்து ஆரம்பிக்கிறது? எப்டி செய்யிறதுனு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. முடிவு நான் மேல சொன்ன மாதிரி தீவிரவாதியா அல்லது பைத்தியமாத்தான் இருக்கும்///

ஜோசப் சார், கொண்ட கொள்கையில் உறுதி இருந்தால் யாரும் பைத்தியமாக மாற இயலாது. மூட பழக்கங்களில் இருந்து மக்களை மாற்றிய இயேசுவும், முகமது நபியும், புத்தரும் இவ்வாறு மாறவில்லை. நாமும் மாற மாட்டோம். வெள்ளையர்களை எதிர்த்தும், இன வேறுபாட்டை எதிர்த்தும் போராடிய காந்தியும் பைத்தியமாக வில்லை. தீவிரவாதி என்பதற்கு நாம் வைத்திருக்கும் வரையறையில் தான் கோளாறு. காஷ்மீரில் போராடுபவர்கள் கஷ்மீர மக்கள் பார்வையில் விடுதலைப் போராட்ட வீரர்கள். நமது பார்வையில் திவிரவாதிகள்.

இதே நமது தமிழகத்தில் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் பிறபடுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். மற்ற 250 சாதிகளுடன் 27 சதத்தில் போரிட்டு வெல்ல இயலவில்லை. முஸ்லிம்களுக்கு ஒரு சதம் கூட கிடைக்கவில்லை. எனவே அதில் இருந்து முஸ்லிம்களுக்கு தனி ஓதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கையை நாங்கள் 2000 த்தில் எழுப்பிய போது எங்களை பைத்தியமாகவும், திவிரவாதியாகவும் தான் அரசியல் கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களும் பார்த்தன. ஆனால் கடுமையான போராட்டங்களுக்கு, ஒட்டுப் பொறுக்கி அரசியலில் அந்த ஓட்டையே துறுப்புச் சீட்டாக மாற்றி போராடிய போது தான் 3.5 சதம் கிடைத்தது. இயலாது, முடியாது, சாத்தியமில்லை என்பதெல்லாம் இவ்வுலகில் கிடையாது. பசிக்கும் மக்களுக்கு மீன் வாங்கிக் கொடுக்காதீர்கள், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் என்பது ஒரு மொழியின் வழக்கு!

தமிழன்... said...

அண்ணன் நல்ல பதிவுகள் கடந்த இரண்டு பதிவிலும் நீங்கள் ஆராய முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது..

தமிழன்... said...

தொடர்ந்து பிரச்சனைகளை எழுதுங்கள்...

தாமிரா said...

நல்ல சிந்தனை.. வாழ்த்துகள் தமிழ் பிரியன்!

நிஜமா நல்லவன் said...

//ராமலக்ஷ்மி said...

//இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான்.//

தெளிவான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள், இப்பதிவிலும் முந்தைய பதிவிலும். வாழ்த்துக்கள்.

இப்பதிவை முதலில் வாசிக்க நேரும் அனைவரும் முந்தைய் பதிவையும் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.//


வழிமொழிகிறேன்..!

குரங்கு said...

====
தீவிரவாதிகளை ஒழிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டு தீவிரவாதம் உருவாகும் வேர்களை விட்டு விடுகின்றோம்
====

உன்மைதான் சரியா சொல்லிருக்கிங்க... இன்னும் இதை பற்றி சொல்லி இருக்கலாம், தீவிரவாதிகளை மட்டும் ஒழிக்கும் அரசு, தீவிரவாதம் உருவாக்குபவர்க்கு பல்வேறு பாதுகாப்பு வழங்குகிறது.... உம், அத்வானி, ஏன் இவரை பிடித்து உள்ளே தள்ள முடியவில்லை? இதுதான் மதசார்பற்ற அரசு...
இந்திய அரசில் வியாதிகைலை நினைக்க நினைக்க விர்க்திதான் மிஞ்சும்.

புகழன் said...

மிக நல்ல பதிவு
முந்தைய பதிவும் அரிய கருத்துக்களை கொண்டிருந்தது.

புகழன் said...

//
ஜோசப் பால்ராஜ் said...
சமூகத்தை திருத்த வேண்டும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தால் ஒன்று நாம் தீவிரவாதியாகிவிடுவோம், இல்லை பைத்தியமாகிவிடுவோம். அதுதான் உண்மை.

//

இந்தக் கருத்து ரெம்பத் தவறானது.

இந்த வரையரைகளைத் தாண்டி சமூத்தைத் திருத்திய பலர் நமக்கு வரலாற்றில் உதாரணமாக உள்ளனர்.
அவர்களின் வழியைப் பின்பற்றுவோம்.

தமிழ் பிரியன் said...

/// தமிழன்... said...

அண்ணன் நல்ல பதிவுகள் கடந்த இரண்டு பதிவிலும் நீங்கள் ஆராய முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது..///
நன்றி தமிழன்!

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...
தொடர்ந்து பிரச்சனைகளை எழுதுங்கள்...///
நானாகவா எழுதுறேன்... அதுவா அமையிது.... :)

தமிழ் பிரியன் said...

///தாமிரா said...

நல்ல சிந்தனை.. வாழ்த்துகள் தமிழ் பிரியன்!///
நன்றி தாமிரா!

தமிழ் பிரியன் said...

/// நிஜமா நல்லவன் said...
//ராமலக்ஷ்மி said..///
வழிமொழிகிறேன்..!///
நன்றி அண்ணே!

தமிழ் பிரியன் said...

///குரங்கு said...
====
தீவிரவாதிகளை ஒழிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டு தீவிரவாதம் உருவாகும் வேர்களை விட்டு விடுகின்றோம்
====
உன்மைதான் சரியா சொல்லிருக்கிங்க... இன்னும் இதை பற்றி சொல்லி இருக்கலாம், தீவிரவாதிகளை மட்டும் ஒழிக்கும் அரசு, தீவிரவாதம் உருவாக்குபவர்க்கு பல்வேறு பாதுகாப்பு வழங்குகிறது.... உம், அத்வானி, ஏன் இவரை பிடித்து உள்ளே தள்ள முடியவில்லை? இதுதான் மதசார்பற்ற அரசு...
இந்திய அரசில் வியாதிகைலை நினைக்க நினைக்க விர்க்திதான் மிஞ்சும்.///

நிலைமை மாறும்! மாறவில்லையென்றால் மாறும் வரை பொறுக்க வேண்டியதில்லை. நாமே களம் இறங்கி மாற்றுவோம்.!

தமிழ் பிரியன் said...

///புகழன் said...

மிக நல்ல பதிவு
முந்தைய பதிவும் அரிய கருத்துக்களை கொண்டிருந்தது.///
நன்றி புகழன்!

LinkWithin

Related Posts with Thumbnails