Friday, August 15, 2008

தமிழ் மணத்துக்கு ஒரு அவசரக் கடிதம்

.
தமிழ் மண நிர்வாகத்திற்கு,
தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது.பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்கு நல்ல பெயரும் இருக்கின்றது. நாங்களெல்லாம் சில மாதங்களாக தமிழ் மணத்தில் பதிவுகளை இணைத்து எழுதி வருகின்றோம்.

தமிழ் மணத்தின் புதிய பீட்டா வடிவமும் மிகவும் நேர்த்தியாகவும், உபயோகிக்க எளிதாகவும் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அதிலும் முக்கியமாக அன்றைய தினத்தில் அதிக மறுமொழி அளித்தவர்கள் பட்டியல் இருந்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது. என்னைப் போன்ற கும்மி பதிவர்கள் அதில் வீக்கமுற இடம்பெற்றிருக்க பல புதிய, பழைய பதிவர்களுக்கும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வந்தோம். (கும்மி பதிவர் என்று என்னை சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். அதனால் தான் நான் ஒரு கும்மி பதிவர் என்ற லோகோ எனது பதிவின் ஓரத்தில் ஓடிக் கொண்டு இருப்பதைக் காணலாம்)

இந்நிலையில் தமிழ் மணத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த அதிக மறுமொழி இட்டோர் பட்டியல் தற்போது தூக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தமிழ் நிழல் என்ற புகைப்படத் தொகுப்புக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது என் போன்ற கும்மி பதிவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் வீக்கமுற இடம் பல புதிய பதிவர்களும் முயற்சி செய்து வந்து கொண்டிருந்த நிலையில் இது நீக்கப்பட்டுள்ளது பின்னூட்டாளர்களிடையே ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எங்களது இந்த நிலையை அவசரகால நிலையாக கருத்தில் கொண்டு உடனடியாக அதிக மறுமொழி இட்டோர் பட்டியலை தமிழ்மண முகப்பில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மேற்கண்ட படத்தில் இடுகைகளுக்கு கீழே காலியாக உள்ள வெள்ளைப் பரப்பில் எங்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

அன்புடன்

தமிழ் பிரியன் மற்றும் கும்மி பதிவர்கள்

36 comments:

வடகரை வேலன் said...

வழிமொழிகிறேன்

SurveySan said...

பின்னூட்டத்துக்கு ஆதரவாதான் நானும் ஒரு பதிவ இப்ப போட்டேன் :)

http://surveysan.blogspot.com/2008/08/mixture-phelps.html

தமிழன்... said...

ஆஹா... இது நம்ம ஏரியாவாச்சே!

தமிழன்... said...

நாம இத கவனிக்கவே இல்லையே...

தமிழன்... said...

ஒரு நாள் வரலைன்னா எத்தனை மாற்றங்கள் எத்தனை பதிவுகள்...

தமிழன்... said...

நானெல்லாம் பதிவு போடுறதுக்கு யோசிக்கறத விட
கும்மி அடிக்கறதுக்கும்
பின்னூட்டம் போடுறதுக்கும் தான் யோசிக்கறது கூட :)

தமிழன்... said...

பதிவுல்லாம் யோசிக்கறதே கிடையாது ஏதாவது வாயில வாறத எழுதிட்டு அதுக்கு தக்கா மாதிரி லேபிள் போட்டா போச்சு ;)

கோவி.கண்ணன் said...

குறி சொல்லில் 'மொக்கை' என்று போடுவதற்கு பதில் 'படு சீரியஸ்' என்று போட்டு இருந்தால் பதிவு 10 நிமிசத்தில் சூடாகி இருக்கும் !
:)

தமிழ் பிரியன் said...

///கோவி.கண்ணன் said...

குறி சொல்லில் 'மொக்கை' என்று போடுவதற்கு பதில் 'படு சீரியஸ்' என்று போட்டு இருந்தால் பதிவு 10 நிமிசத்தில் சூடாகி இருக்கும் !
:)////
நம்ம மக்களோட பதிவு சுனாமியில் நம்ம பதிவு சீக்கிரமா கீழே போயிடுது. தமிழ்மண முகப்பில் கீழ் பகுதியில் கொஞ்ச நேரமாச்சும் இருக்க இப்படி எல்லாம் லேபிள் கொடுக்க வேண்டி இருக்கு... :)

ஜெகதீசன் said...

:))

தமிழன்... said...

அண்ணன் சொல்ல மறந்துட்டேன்

சுதந்திர தின வாழ்த்துக்கள்....

SanJai said...

அடப்பாவிகளா :))

வால்பையன் said...

இதை நான் ஆமோத்திக்கிறேன்

மங்களூர் சிவா said...

/
எனவே எங்களது இந்த நிலையை அவசரகால நிலையாக கருத்தில் கொண்டு உடனடியாக அதிக மறுமொழி இட்டோர் பட்டியலை தமிழ்மண முகப்பில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/

வழிமொழிகிறேன். ஏற்காத பட்சத்தில் காலவரையற்ற கும்மி நிறுத்த போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறேன்!!

கிரி said...

:-)))

மது... said...

அண்ணா ஒரு முடிவோட கடிதமா எழுதிதள்ளறீங்க.

மது... said...

இதுக்கும் கமெண்ட் மாடுரேஷன் இல்லை இல்லை இல்லை

பரிசல்காரன் said...

கடிதப் போக்குவரத்துல கன்னாபின்னான்னு சிக்கீட்டதால இந்த மேட்டரைக் கவனிக்கல!

கவனிச்சு நம்ம சார்பா போட்டதுக்கு
உங்களுக்கு தனியா
ஒரு பகிரங்கக் கடிதம் எழுதிப் பாராட்டணும்!

நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
/
எனவே எங்களது இந்த நிலையை அவசரகால நிலையாக கருத்தில் கொண்டு உடனடியாக அதிக மறுமொழி இட்டோர் பட்டியலை தமிழ்மண முகப்பில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/

வழிமொழிகிறேன். ஏற்காத பட்சத்தில் காலவரையற்ற கும்மி நிறுத்த போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறேன்!!///

ரிப்பீட்டேய்....

cheena (சீனா) said...

பதிவின் கருத்துகளோடு உடன்படுகிறேன்

பதிவிற்கு ஒரு ரிப்பீட்டேய்

cheena (சீனா) said...

பதிவின் கருத்துகளோடு உடன்படுகிறேன்

பதிவிற்கு ஒரு ரிப்பீட்டேய்

தமிழ் பிரியன் said...

//வடகரை வேலன் said...

வழிமொழிகிறேன்///
வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் வேலன் சார்.

தமிழ் பிரியன் said...

///SurveySan said...

பின்னூட்டத்துக்கு ஆதரவாதான் நானும் ஒரு பதிவ இப்ப போட்டேன் :)

http://surveysan.blogspot.com/2008/08/mixture-phelps.html///
நன்றி சர்வேசன்... :)

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

ஆஹா... இது நம்ம ஏரியாவாச்சே!/*//
ஆமா தமிழன்.. ஆதரவுக்கு நன்றி!

தமிழ் பிரியன் said...

///ஜெகதீசன் said...

:))///

சிரிப்புக்கு நன்றிண்ணே!

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...
அண்ணன் சொல்ல மறந்துட்டேன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்....//
நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

///SanJai said...
அடப்பாவிகளா :))///
யாரை தமிழ் மணத்தை தானே? அதிக பின்னூட்டமிட்டவர்கள் பட்டியலை எடுத்ததற்கு தானே?

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...

இதை நான் ஆமோத்திக்கிறேன்///
நன்றி வால்பையன்.

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...

/
எனவே எங்களது இந்த நிலையை அவசரகால நிலையாக கருத்தில் கொண்டு உடனடியாக அதிக மறுமொழி இட்டோர் பட்டியலை தமிழ்மண முகப்பில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/

வழிமொழிகிறேன். ஏற்காத பட்சத்தில் காலவரையற்ற கும்மி நிறுத்த போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறேன்!!///

உங்களது பெருவாரியான ஆதரவுக்கு நன்றி!

தமிழ் பிரியன் said...

///கிரி said...

:-)))///
வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி!

தமிழ் பிரியன் said...

///மது... said...
அண்ணா ஒரு முடிவோட கடிதமா எழுதிதள்ளறீங்க.///
நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். அதற்காக எங்க ‘தல'யை தீக்குளிக்க வைக்கவும் தயங்க மாட்டோம்.

தமிழ் பிரியன் said...

///பரிசல்காரன் said...
கடிதப் போக்குவரத்துல கன்னாபின்னான்னு சிக்கீட்டதால இந்த மேட்டரைக் கவனிக்கல!
கவனிச்சு நம்ம சார்பா போட்டதுக்கு
உங்களுக்கு தனியா
ஒரு பகிரங்கக் கடிதம் எழுதிப் பாராட்டணும்!///
திரும்பவும் முதலில்; இருந்தா....... அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...
///மங்களூர் சிவா said...
/
எனவே எங்களது இந்த நிலையை அவசரகால நிலையாக கருத்தில் கொண்டு உடனடியாக அதிக மறுமொழி இட்டோர் பட்டியலை தமிழ்மண முகப்பில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/
வழிமொழிகிறேன். ஏற்காத பட்சத்தில் காலவரையற்ற கும்மி நிறுத்த போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறேன்!!///
ரிப்பீட்டேய்....///

மறுக்கா கூவுனதுக்கு நன்றி தல

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...
பதிவின் கருத்துகளோடு உடன்படுகிறேன்
பதிவிற்கு ஒரு ரிப்பீட்டேய்///
நன்றி! நன்றி! நன்றி!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஆமாண்ணே! நம்ப பேரு வருகிற ஓரே இடம் அதுதான். சூடான இடுகையில எல்லாம் வருகின்ற அளவிற்கு நம்ப நல்ல பதிவரோ, பிரபலமான பதிவரோ இல்லை.இப்ப இதுவும் போச்சு :((

நல்லதந்தி said...

நானும் உளமாற வழிமொழிகிறேன்!..

LinkWithin

Related Posts with Thumbnails